இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, June 09, 2013

தேர்வு முறை

இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட். மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2 மதிப்பெண் தகுதிக்கு அதிகபட்சம் 10 மார்க்கும், இளங்கலை பட்டப்படிப்புக்கு 15 மார்க்கும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஆக மொத்தம் 40 மார்க் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இரண்டையும் சேர்த்து 100–க்கு ‘கட் ஆப் மார்க்’ எவ்வளவு? என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு ரையுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 23.8.2010 முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழக அரசு, தகுதித்தேர்வை கட்டாயமாக்கி உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 150 மதிப்பெண் கொண்ட தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்கள்.

தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். 12 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17–ந்தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 18–ந்தேதியும் நடத்தப்படுகிறது. தகுதித்தேர்வை இந்த முறை 7 லட்சம் ஆசிரியர்கள் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.இதை கருத்தில் கொண்டு 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பங்கள் விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன.

எப்போது கிடைக்கும்? தகுதித்தேர்வு விண்ணப்ப படிவங்கள் 17–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை விற்பனைக்கு கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வுகட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 1–ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தற்போதைய தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 13 ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடுநிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு தேர்வுக்கு முன்பாக அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அந்த காலி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை


வ.எண் நாள் கிழமை தேர்வு
1 24.06.2013 திங்கள் மொழித்தாள் - I
2 25.06.2013 செவ்வாய் மொழித்தாள் - II
3 26.06.2013 புதன் ஆங்கிலம் முதல் தாள்
4 27.06.2013 வியாழன் ஆங்கிலம் இரண்டாம் தாள்
5 28.06.2013 வெள்ளி கணிதம்
6 29.06.2013 சனி அறிவியல்
7 01.07.2013 திங்கள் சமூக அறிவியல்
தேர்வுகள் காலை 10 மணி முதல் 12:45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன

கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இப்போது கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன. பள்ளி தொடங்கும் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. ஆன்-லைன் மூலம் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாறுதல்களைப் பெற்றுள்ளனர்.

தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

   "முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, போட்டித் தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மே, 31ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 2 லட்சம் பேர் வரும், 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வு எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்கும்போதே, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் முன்அனுபவம் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றி வரும் பள்ளியில், தங்களது வருகைப்பதிவேடு, வகுப்பு எடுத்த கால அட்டவணை ஆகியவற்றின் நகலுடன், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கையெழுத்து மற்றும் மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் கையெழுத்து, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கையெழுத்து பெற்று, இணைத்து வழங்க வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

இந்த புது நிபந்தனையால், விண்ணப்பத்தாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனியார் பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: வழக்கமாக, அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு செய்யப்பட்ட பின் தான், வருகைப்பதிவேடு நகல், கால அட்டவணை, சம்பளப் பட்டியல், பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்து போன்றவை கேட்பர். நடைமுறை சிக்கல் அவற்றை சரிபார்த்த பின், "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவர். அதன்பின், ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவர். முன்கூட்டியே இவற்றைக் கேட்பதால், நடைமுறை சிக்கல் உருவாகும் நிலை உள்ளது. முன்அனுபவத்தின் அடிப்படையில், ஓராண்டுக்கு, 1, மூன்று ஆண்டுக்கு, 2, ஐந்து ஆண்டுக்கு, 3, 10 ஆண்டுக்கு, 4 என, "வெயிட்டேஜ்' மதிப்பெண், வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பதில், காலதாமதத்தை தடுக்க, டி.ஆர்.பி., இந்த புதிய நிபந்தனையை விதித்துள்ளது நல்ல விஷயம் தான். ஆனால், தனியார் பள்ளியில், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தும், ஒருவேளை தேர்ச்சி பெறவில்லையென்றால், அந்த தனியார் பள்ளியில், மீண்டும் அந்த ஆசிரியருக்கு பணி வாய்ப்பு வழங்கப்படுமா, என்பது சந்தேகம்.

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் முயற்சிக்கிறார் என்பது தெரிந்தால், தனியார் பள்ளி நிர்வாகம், வேண்டுமென்றே சான்றுகளை வழங்காமல் இழுத்தடிக்கும். இது போன்று, ஏற்கனவே தமிழகத்தில், பல பள்ளிகளில் நடந்து ள்ளது. தற்போது சில பள்ளிகளில், வருகைப்பதிவேடு சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்துகின்றன. குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால், இந்த சான்றுகளை தயாரிப்பதில், பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. மாவட்டம் விட்டு, மாவட்டம் வேலை பார்ப்பவராக இருந்தால், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், பள்ளியிலும் இதற்கான சான்றிதழ்களை வாங்கி வரவேண்டும். குறையும் இதனால், சிலர் விண்ணப்பிக்க தயங்குகின்றனர். எனவே, இந்த புது நிபந்தனையை டி.ஆர்.பி., தளர்த்தினால், பயனுள்ளதாக இருக்கும். இல்லை யென்றால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். இவ்வாறு, அவர் கூறினார். தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

Saturday, June 08, 2013

ஆசிரியர்களின் பொறுப்புகளும் கடமைகளும்

*நான் செல்லும் ஆலயம் பள்ளிக் கூடம்,அங்கு பயிலும் மாணவர்கள் என் தெய்வங்கள் என்ற பொன்மொழியை செயல் படுத்துன்ங்கள்
*நேரத்துடன் பள்ளி செல்லுங்கள்

*தகுதியை வளர்க்க தினசரி நாளிதழ்,புத்தகம் படியுங்கள்

*நம்முடைய ரெக்கார்ட் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்
*தகவல்களை சரியாக கொடுக்க வேண்டும்
*உடன் பணியாற்றுவோரை மதித்தல்
*படிக்க வசதியில்லாத குழந்தைக்கு உதவுங்கள்
*விடுப்புகளை தவிருங்கள்
*அனைவருக்கும் வாழ்த்துக்கள்

-ப.மணிகண்டபிரபு
திருப்பூர் வடக்கு

சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அதிக கல்விச்சுமை திணிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனைக் கருத்தில்கொண்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. அதில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தனித்தனியாக மாணவர்கள் பிரித்து படிக்கும் வகையில் முப்பருவப் பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கு பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கடந்த கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறையில் முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட மாணவர்களின் தனித்திறனுக்கும் 40 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.இந்த முறை நடப்பாண்டும் தொடரும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜமுருகன் கூறியது:

மாணவர்கள், தங்களது சராசரி உடல் எடையில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே புத்தகத்தை எடுத்து செல்ல வேண்டும் என்ற அரசு தீர்மானத்தின்படி சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 9-ம் வகுப்புக்கும் முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். மேலும் முதல் நாளன்று தொடங்கிய பாடத்தை அந்த ஆண்டு முடியும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றார் அவர்.

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்

அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12, 2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு முடிந்தபின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த, 3ம் தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பதை, 10ம் தேதிக்கு தள்ளி வைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும், நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளும், நாளை திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் அனைவரும், பள்ளிகளுக்குச் செல்ல, உற்சாகத்துடன் தயாராக உள்ளனர். ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் அமலில் இருக்கும், முப்பருவ கல்வி திட்டம், இந்த ஆண்டு, 9ம் வகுப்பிலும் அமலுக்கு வருகிறது. எனவே, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், மூன்று பகுதிகளாக பிரித்து, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். பாடப் புத்தகங்கள் தயார

்: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, நாளை காலை பள்ளி திறந்ததும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள

Friday, June 07, 2013

சம்பளம் வழங்க தாமதம்:ஆசிரியர் கூட்டணி அதிருப்தி

மே மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததால், துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க செயலாளர் கனகராஜ் கூறியதாவது

:திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களின் கீழ் பணியாற்றும், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, இதுவரை மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை.கருவூல அதிகாரிகளிடம் கேட்டால், சம்பள பில்லை 20ம் தேதிக்குள் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாத இறுதியில் ஒப்படைக்கக் கூடாதுஎன்கின்றனர்.மே மாத சம்பள பில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், 20ம் தேதிக்கு முன்பே, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

  கோடை விடுமுறைக்குபின், வரும் 10ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள் பலரும், தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். மே மாத சம்பளத்தை விரைவில் வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டு இருந்த கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள

சிறப்பு அனுமதி திட்டம் முதல் ஆண்டு, 2–ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டய தேர்வுகள் (இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு) இந்த மாதம் 24–ந் தேதி தொடங்கி ஜூலை 11–ந் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டு இருந்த கடைசி தேதிக்குள் (ஏப்ரல் 29) விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 2008–2009–ல் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு முன்னர் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், புதிய பாடத்திட்டத்தின்படி முதல் ஆண்டு 7 பாடங்களுக்கும், இரண்டாம் ஆண்டு 7 பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் உரிய தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ஆயிரம் ரூபாயை சிறப்பு அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பம் தேர்வுக்கான விண்ணப்பங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tn.gov.in/dge) 10–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை (6 பக்கங்கள்) டவுன்லோடு செய்துகொள்ளலாம். பக்கம் 4 முதல் 6 வரை உள்ள அறிவுரைகளின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) 12–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற முதல் ஆண்டு, 2–ஆம் ஆண்டு பாடங்களுக்கான அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை மேற்குறிப்பிட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 12–ந் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுதலாம். உடனடியாக ஹால்டிக்கெட் சென்னை நகர தனித்தேர்வர்கள் உள்பட அனைத்து தனித்தேர்வர்களும் தேர்வுக்கட்டணத்தை, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட கருவூல செலுத்துச்சீட்டு (செலான்) மூலமாக அரசு கருவூலங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களும், தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே ஹால்டிக்கெட் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்

Thursday, June 06, 2013

eம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்புவோருக்கு ஜுன் 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

2013-2014-ஆம் கல்வியாண்டிற்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600006 கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பொறியியற் கல்லூரிகள் / கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் 10.6.2013 முதல் 29.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (டிடி -  9.6.2013-க்கு பின் பெறப்படும் வகையில்)  “தி செகரட்ரி, தமிழ்நாடு எம்பிஏ / எம்சிஏ அட்மிஷன்ஸ் 2013 கவர்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்பத்தூர் 641013”  என்ற பெயரில் கோயம்புத்தூரில் காசாக்கும் வகையில்  எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை  மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.   தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் (அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (எஸ்சிஏ/எஸ்சி/எஸ்டி)  இனத்தவர் ரூ.150/-க்கான கேட்பு வரைவோலையினை சான்றிடப்பட்ட ஜாதிச் சான்றிதழின் நகலுடன் ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பப்  படிவங்களை   ““தி செகரட்ரி, தமிழ்நாடு, எம்பிஏ / எம்சிஏ அட்மிஷன்ஸ் 2013, கவர்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்பத்தூர் 641013” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 29.6.2013. எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2013 இரண்டாவது வாரத்தில் “அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூரில்” நடைபெறும்.  இதற்கான அறிவிப்பு உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Wednesday, June 05, 2013

இணைய தள சர்வர் பிரச்னை: சிறப்புத் தேர்வு விண்ணப்பதாரர்கள் பாதிப்ப

தேர்வுத்துறை இயக்ககத்தால் நடத்தப்படும் 10 ம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களுக்கான சிறப்பு தேர்வின் 'ஆன் - லைன் ' விண்ணப்பத்திற்கான இணையதள 'சர்வர் ' மெதுவாக இயங்கியதால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் தவித்தனர். ஏப்ரலில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத மாணவ,மாணவிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஜூனில் சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் dge.tn.nic.in என்ற இணையதளத்தில் "ஆன் லைன் ' ல் விண்ணப்பிக்கவும், ஜூன் 3 முதல் 5 ம்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பலரும் ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கத் துவங்கினர்.

இரண்டு நாட்கள் எளிதாக "ஆன்லைனில்' விண்ணப்பித்தனர். கடைசி நாளான நேற்று விண்ணப்பித்தவர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். நேற்று காலை முதல் இணையதளத்தின் "சர்வர்' மிகவும் குறைவான வேகத்தில் இயங்கியதால், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க இயலாமல் தவித்தனர். நூற்றுக்கணக்காக மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் உள்ளனர். கவலையடைந்துள்ள பெற்றோர் சிறப்புத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதியையும், வங்கியில் பணம் கட்டும் தேதியையும் நீட்டிக்கக் கோரியுள்ளனர். இதே போன்று 12 ம் வகுப்பிற்கான மறு தேர்விற்கான ஆன்- லைன் விண்ணப்பதிற்கான கடைசி நாளன்றும், இதே பிரச்னையால் மாணவ, மாணவிகள் பலர் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மாணவர்கள் நகர் பகுதிக்கு வந்து விண்ணப்பிப்பதற்குள் நேரம் முடிவடைந்து விடும். எனவே கூடுதலாக இரண்டு நாட்கள் அதிகரித்தால் தான் மாணவர்கள் முழுமையாக விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படும்.