இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 13, 2013

தேர்வாணைய பாடத் திட்டங்கள் மாற்றம்: தமிழ்ப் பகுதி நீக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் பாடப் பகுதிகள் கடினமாக இருப்பதாகவும், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்துக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) இரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்திக்கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

தற்போது புதிய பாடத்திட்டத்தின்படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 2 தேர்வில் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப் பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்திக் கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றங்கள் குறித்து தேர்வர்கள் கூறியது:

புதிய மாற்றங்களின்படி, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் தமிழ் மொழியில் இருந்து இனி கேள்விகள் அதிகம் இடம்பெறாது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அதை தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப்படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஈடு செய்ய முடியும். சிந்தித்து விடை எழுதுதல், புத்திக் கூர்மையை சோதிக்கும் பகுதிகள் வரவேற்கத்தக்க அம்சங்களாகும். தமிழ் மொழிப் பகுதி நீக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் 1000 தொடக்க பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி

தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அனைவருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000 ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 10 அரசுப் பள்ளிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து உயர் மட்டக்குழு தேர்வு செய்த பள்ளிகளில், முதற்கட்டமாக ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்க அரசு உத்தரவிட்டது.

வி.ஏ.ஓ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்: டி.என்.பி.எஸ்.சி அதிரடி

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளதோடு, குரூப் 4 தேர்வுகளில் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்ணும் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவர் இன்று பொறுப்பேற்பு

் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.)புதிய தலைவராக நவநீதகிருஷ்ணன் பொறுப்பேற்க உள்ளார். பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தனது பொறுப்புகளை அவர் ஏற்றுக் கொள்கிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஆர்.நடராஜ் நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் அதிரடி மாற்றங்கள்

புதிய முறை

ஆரம்ப கட்ட தேர்வு (2 தாள்கள்)

1. பொது அறிவு-  200 மதிப்பெண் 2. பொது அறிவு-  200 மதிப்பெண்       -----                          மொத்தம்    400       ----- முதன்மை தேர்வு  (8 தாள்கள்)

1.  பொ. அ., தாள் 1 - 250
2. பொ.அ.,  தாள் 2  - 250
3. பொ.அ., தாள் 3   - 250
4 பொ . அ ., தாள் 4- 250
5.பொது ஆங்கிலம்   -100
6. கட்டுரைத்தாள்     - 200
7. விருப்ப பாடம் முதல் தாள்            - 250
8 விருப்ப பாடம்
இரண்டாம் தாள்      -250       ------ மொத்தம்                1800       ------ நேர்காணல் தேர்வு: நேர்காணல் தேர்வு -- 275 தரப்பட்டியல்  = முதன்மை தேர்வு +  நேர்காணல்       1800            +       275 புதிய முறைப்படி ஆங்கில மொழிக்கும், பொது அறிவுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இத்தேர்வில் தமிழக மாணவர்கள் 15 முதல் 20 சதவீத அதிக வெற்றியை பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதல் தரத்தை பெற்றுள்ளனர். தற்போது ஆங்கிலம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது சற்று கடினம். அதிக விடாமுயற்சி அவசியம். இந்த மாற்றத்திற்கு ஏற்ப கல்வியாளர்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும். ஆங்கில அறிவு, மென்திறன், திறன் அறிவு, தலைமைப் பண்புகள், தகவல்தொடர்பு திறமை, குழு மனப்பான்மை போன்றவகளை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு கல்வியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு

  "தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: கற்றலில் குறைபாடுள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது.

புதிய வார்த்தைகளை கற்க முடியாது. உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதே நிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அனைத்துப் பள்ளிகளிலும், மருத்துவக்குழு ஆய்வு செய்ய வேண்டும். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பிறமொழிகளில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒளி - ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பள்ளிக் கல்வி செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநல செயலாளர் மனுவை பரிசீலிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு ஒளி-ஒலிகாட்சி மூலம் கற்பிக்க நடடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tuesday, March 12, 2013

குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4, 2 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் முதன்மை பணிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி முதல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வரையிலான அனைத்து பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை டிஎன்ப¤எஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான 72 பக்க புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேற்று இரவு வெளிய¤டப்பட்டது.இதில் குறிப்பாக எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப் 4 பணியிடங்கள், விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும், 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழை மட்டும் நன்றாக படித்து விட்டு தேர்வுக்கு செல்பவர்களின் நிலைமை சிக்கலாகி உள்ளது.இதேபோல விஏஒ தேர்வுக்கும் ஏற்கெனவே குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது விஏஒ தேர்வுக்கு 150 வினாக்கள் (225 மதிப்பெண்கள்) பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகியவற்றிற்கும், 50 வ¤னாக்கள் (75 மதிப்பெண்கள்) கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள் ளது.

பொதுத்தமிழ் பகுதிக்கு இதுவரை 100 வினாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகள் எழுத வேண்டு¢ம். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது. குருப் 2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக குரூப் 1 முதல் குரூப் 7 வரையிலான தேர்வுகள், விஏஒ தேர்வு, தொழில்நுட்ப தேர்வுகள் 1, 2 ஆகிய 10 தேர்வுகளுக்கு 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிட்டது.

ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்., கணக்கு விபரம் கோரும் அரசு கடிதம

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 4 வகை கட்டணம் வலியுறுத்தல

  "அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்" என, வலியுறுத்தி, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணயக்குழு தலைவரிடம், மனு கொடுத்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகள், நேற்று, டி.பி.ஐ., வளாகத்தில் திரண்டனர். கட்டண நிர்ணய குழு அலுவலகம் முன் திரண்ட அவர்கள்,
"அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்" என வலியுறுத்தி, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலுவிடம், மனு அளித்தனர். சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறுகையில், "தற்போது, பல வகைகளில், கட்டணங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இதை மாற்றி, 1 முதல், 5ம் வகுப்பு வரை, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய்; 6, 7, 8 வகுப்புகளுக்கு, 20 ஆயிரம்; 9, 10 வகுப்புகளுக்கு, 25 ஆயிரம்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்க வேண்டும்" என்றார். மனுக்களை பெற்றுக் கொண்ட சிங்காரவேலு,

"சட்டத்திற்கு உட்பட்டு, உரிய கட்டண உயர்வை அளிப்பேன்" என தெரிவித்தார். கட்டண உயர்வு கோரிக்கை மனுவை, கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வனிடமும், பள்ளி நிர்வாகிகள் அளித்தனர். ்

பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள்

  ஆர்.டி.இ., எனப்படும் 14 வயதுக்குட்பட்ட ‘அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி சட்டம்’, 2010 ஏப்.1ம் தேதி செயல்பாட்டுக்கு வந்த பின் , 2012 செப்., வரை இச்சட்டத்தின் கீழ், புதிதாக 3,34,340 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சேர்ந்துள்ளன, என இது குறித்த ஆய்வு நடத்திய ‘எகனாமிக் சர்வே’ தெரிவித்துள்ளது. இது தவிர, தேசிய அளவில் 2,80,000 பள்ளிகளில் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் 12,46,000 ஆசிரியர்கள் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் சர்வே தெரிவிக்கிறது.

2011 -2012 கணக்கின் படி, 10 கோடியே 50 லட்சம் மாணவர்கள் ‘மதிய உணவு திட்டத்தின்’ கீழ் பயனடைகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 11, 2013

திறந்தநிலை பல்கலை.யில் புதிதாக உயிரியல், வேதியியல், இயற்பியல் பட்டப் படிப்புகள்: துணைவேந்தர் சந்திரகாந்தா தகவல்

் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் புதிதாக பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய படிப்புகள் தொடர்பாகவும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

மொழியியல், மொழிபெயர்ப்பு படிப்புகள், மேலாண்மை தொடர்பான போலீஸ் நிர்வாகம், ஃபேஷன் டிசைன் மற்றும் பெண்கள் படிப்பு ஆகியவற்றில் முதுநிலைப் படிப்புகள் புதிதாகத் தொடங்கப்படும். அக்குபஞ்சர் தொடர்பாக இளநிலைப் பட்டப்படிப்பும்,  ஆங்கிலத்தில் எழுதுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஆகியவற்றில் முதுநிலை பட்டயப் படிப்பும், கனரக வாகனங்கள் பராமரிப்பில் டிப்ளமோ படிப்பும் புதிதாக வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு

   மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் முறையாக அறிவிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியானது, ACPIN-ன் குறியீட்டு கணக்கின் படி 8% ஆக இருக்கும் எனவும், ஜனவரி 2013 முதல் கணக்கீட்டு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துவக்கப் பள்ளி மாணவர் வாசிப்புத்திறன் குறைவு: இணை இயக்குனர் ஆய்வில் அதிர்ச்சி

"துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல் மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2004ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், குறிப்பிட்ட சில பள்ளிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, 2007ம் ஆண்டு முதல், அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், செயல்வழிக் கற்றல் முறை, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையின் கீழ், மாணவர்கள், தாங்களாகவே முன்வந்து பாடம் கற்க வேண்டும். தேர்வு, புத்தகம் எதுவும் இல்லை. புத்தகப் படிப்பு இல்லாததால், மாணவர்களது வாசிப்புத் திறன் படிப்படியாக குறையத் துவங்கியது. இந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் தொடக்க கல்வித் துறை இணை இயக்குனர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் ஒன்றியத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன், வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிக்கப்படுத்த, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் மாதத்திற்குள், மாணவர்களது வாசிப்புத் திறன் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடக்க கல்வித் துறை இணை இயக்குனர் உத்தரவையடுத்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள், துவக்கப் பள்ளிகளுக்கு அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து, மாணவர்களது வாசிப்புத் திறன் குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

"செயல்வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. எனினும், 2007ம் ஆண்டு முதல் புத்தகமும் வழங்கப்படுகிறது. அதனால், ஆறு ஆண்டுகளாக துவக்கப் பள்ளியில் இரட்டை வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. இது, துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, செயல்வழிக் கற்றல் முறையில், மாணவர்களுக்கு புத்தகம், தேர்வு கிடையாது. பள்ளி ஆசிரியர்களாக பார்த்து, தேர்வு நடத்திக் கொள்ளலாம். குறைந்த மதிப்பெண் பெற்றாலும், அடுத்தடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுப்பப்படுவர். புத்தகம், தேர்வு இல்லாததால், மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் வெகுவாக குறைந்தது. அதனால், ஐந்தாம் வகுப்பு பின், உயர்நிலை வகுப்பு செல்லும் மாணவர்கள், பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இச்சூழலில், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாசிப்புத்திறன் மேம்படுத்தாத வகுப்பு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருகின்றனர். அப்போது, எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றி, மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என, தெரிவிக்கின்றனர். இணை இயக்குனர், செயல்வழிக் கற்றல் முறையை பின்பற்றி, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டுமென உத்தரவிடுகிறார். ஆனால், மாவட்ட அதிகாரிகளோ, எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்கின்றனர். இந்த உத்தரவுகள், துவக்கப் ஆசிரியர்களை குழப்பமடையச் செய்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.