இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 21, 2012

TNPSC-VAO Exam Hall Ticket

அக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும் எழுத ஐகோர்ட்டு அனுமத

  தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமும், இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.   கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை நடத்தி நியமனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக அரசும், ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அதன்பின் நடக்கும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டோ, பதிவு மூப்பு அடிப்படையிலோ நியமனம் பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.  இதற்கு ஆசிரிய பட்டதாரிகள் (பி.எட். பட்டம் பெற்றவர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு நியமனமே போட்டித் தேர்வின் மூலம் நடக்கும் போது, மற்றொரு தேர்வு எதற்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதையடுத்து ஆசிரிய பட்டதாரிகள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வெழுதினர். இதில் பாடத்திட்ட குளறுபடி, தேர்வு எழுத கொடுக்கப்பட்ட காலஅவகாசம் போன்ற காரணங்களால் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில் 1,735 பேர் இடைநிலை ஆசிரியர்கள், 713 பேர் பட்டதாரிகள் ஆவார்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 3-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த கூடாது, புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களையும் அனுமதிக்க கோரி சென்னையை சேர்ந்த யாமினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு என்று மட்டும் தனியாக தேர்வு நடத்த முடியாது. எனவே இதுகுறித்த விரிவான பதிலை வரும் 17-ந்தேதிக்குள் அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்குழு வாரியத் தலைவர் ஐகோர்ட்டில் இன்று விரிவான பதிலை தாக்கல் செய்தார். அதில், புதிய விண்ணப்பதாரர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்கலாம்.

இதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு எழுதுபவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். எனவே, இந்த வழக்கு சுமூகமாக முடிந்தது.

அக்டோபர் 14-ல் ஆசிரியர் தகுதி தேர்வு: புதியவர்களும் எழுத ஐகோர்ட்டு அனுமத

  தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமும், இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.   கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை நடத்தி நியமனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக அரசும், ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அதன்பின் நடக்கும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டோ, பதிவு மூப்பு அடிப்படையிலோ நியமனம் பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டது.  இதற்கு ஆசிரிய பட்டதாரிகள் (பி.எட். பட்டம் பெற்றவர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு நியமனமே போட்டித் தேர்வின் மூலம் நடக்கும் போது, மற்றொரு தேர்வு எதற்கு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதையடுத்து ஆசிரிய பட்டதாரிகள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வெழுதினர். இதில் பாடத்திட்ட குளறுபடி, தேர்வு எழுத கொடுக்கப்பட்ட காலஅவகாசம் போன்ற காரணங்களால் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில் 1,735 பேர் இடைநிலை ஆசிரியர்கள், 713 பேர் பட்டதாரிகள் ஆவார்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் வருகிற அக்டோபர் மாதம் 3-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த கூடாது, புதிதாக தேர்வு எழுத விரும்புபவர்களையும் அனுமதிக்க கோரி சென்னையை சேர்ந்த யாமினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு என்று மட்டும் தனியாக தேர்வு நடத்த முடியாது. எனவே இதுகுறித்த விரிவான பதிலை வரும் 17-ந்தேதிக்குள் அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வுக்குழு வாரியத் தலைவர் ஐகோர்ட்டில் இன்று விரிவான பதிலை தாக்கல் செய்தார். அதில், புதிய விண்ணப்பதாரர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்கலாம்.

இதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு எழுதுபவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். எனவே, இந்த வழக்கு சுமூகமாக முடிந்தது.

Online Application for HSC Supplementary Exam ( Tatkal ) Oct 2012

Thursday, September 20, 2012

வி.ஏ.ஓ., தேர்வு : இன்று "ஹால் டிக்கெட்'  

வரும், 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையிலான தேர்வு என்பதால், போட்டி போட்டுக் கொண்டு, தினமும் 50 ஆயிரம், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 30ம் தேதி, மாநிலம் முழுவதும் 4,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடக்கிறது. 1,870 பணியிடங்களுக்கு, 9.55 லட்சம் பேர், தேர்வை எழுத உள்ளனர்; ஒரு இடத்திற்கு, 570 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது

பிளஸ் 2 தனித்தேர்வு: "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு  

பிளஸ் 2 தனித் தேர்வு எழுதத் தவறியவர்கள், "தத்கால்' திட்டத்தில், இன்றும், நாளையும், "ஆன்-லைனில்' விண்ணப்பிக்கலாம். பள்ளிக் கல்வித் துறையின், www.dge.tn.nic.in என்ற இணைய தள முகவரியில், வழங்கப்பட்டுள்ள அறிவுரைப்படி, இன்றும், நாளை மாலை 5:45 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்-லைனில், பதிவிறக்கம் செய்யப்பட்ட, "சலான்' மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை - 6' என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பாடம் மட்டும் எழுதுவோர், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய், இதர கட்டணம், 35 ரூபாய்; அனைத்துப் பாடங்களையும் எழுதுவோர், 187 ரூபாய், மற்றும், "தத்கால்' திட்டத்திற்கு, 1,000 ரூபாயை, செப்., 24க்குள் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன், செப்., 28, 29ல், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, "ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை  

   மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மே 5ம் தேதி என்.இ.இ.டி நுழைவுத்தேர்வு

    மருத்துவப் படிப்பில் சேர என்.இ.இ.டி எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு வரும் கல்வியாண்டில் 2013-14 மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது.

எனவே இதனை தவிர்க்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களின் விவரம் பற்றிய முழு தகவல்களை அறிய www.mciindia.org, www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY -MSU UG&PG result

ஆதி திராவிடர் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்

   சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாதமே இந்தப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பயிற்சிக்கு Assessment of Speaking and Listening Skills எனப் பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிமிடங்கள் இதற்கான தேர்வு நடத்தப்படும் என்றும், ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பேச்சு மற்றும் கவனிப்புத் திறமையை கண்டறிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் முதற்கட்டமாக மாணவர்களுக்கு புரியும் வகையிலான இடம், பொருள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். அடுத்ததாக, மாணவ, மாணவிகளே தேர்வு செய்யும் வகையில் தலைப்புகள் வழங்கப்பட்டு, அதன் மீது அவர்கள் பேச வேண்டும். கடைசியாக, படக் காட்சி அல்லது தலைப்பு கொடுக்கப்பட்டு அதன் மீது மாணவர்கள் குழுவாக 3 நிமிடத்திற்கு விவாதிக்க வேண்டும். ஒருவேளை மாணவர்கள் பேச முடியாமல் திணறினால், அந்த மாணவருக்கு கூடுதல் அவகாசம் வழங்கி ஆசிரியர் தயார்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் கவனிப்புப் பயிற்சி, வரும் காலங்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படலாம் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, September 19, 2012

UGC Result Release

மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., உயர்வு?  

  மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது.

மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப் புதல் அளிக்கும் என, தெரிகிறது. இந்த உயர்வு, கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து, அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். கடந்த மார்ச் மாதம், அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்தது.

பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் வ. ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் இளநிலை கல்வியியல் (பி.எட்.) படிப்பில் நிகழ் கல்வியாண்டில் சேர விரும்புவோர் உடன் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அக்டோபர் 7-ம் தேதிக்குள் தொலைநிலைக் கல்வி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அக்.14-ம் தேதி நடைபெறும். தொடர்புக்கு 0431-240704, 0431-2407027.

20.9.2012.Gentral strike-Trs&Staffs present/Absent detail-Director Proceedings

DEE Cancel Leave.20.9.2012 All schools working day

Teachers particular Form

பிளஸ் 2 தனித்தேர்வு "தட்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

  பிளஸ் 2 தனித்தேர்வர்கள் "தட்கல்' திட்டத்தின் கீழ் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) இணையதளத்தில் (www.dge.tn.nic.in)  விண்ணப்பிக்கலாம்.  செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு விண்ணப்பிக்க முடியாது.

"தட்கல்' முறையில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ரூ. 1,000 கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.  பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து அனுமதிச் சீட்டை பெறலாம். இதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் அனுப்புவதற்கு ரூ. 30-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையைச் சமர்ப்பிக்கவேண்டும்.

2ம் பருவ பாடபுத்தகங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும

   இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.

Tuesday, September 18, 2012

TNOU B.Ed Tamil&English Medium Entrance Results

ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி  

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.

இம் மாதம் 27ல், வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,

28ல் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும்,

29ல் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் துறை அறிவிப்பு

    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.  

முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.  ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுக்கவில்லை எனவும், விடுமுறை தொடர்பான அறிவிப்பு தவறாக வெளியாகியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் மறுப்பு தெரிவித்தனர்.

 டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி, இந்தத் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் அனுப்பப்பட்டது.  அதன் விவரம்: அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 20-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.  

அந்த வகுப்புகளுக்கு வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வை, இறுதி தேர்வு நாளுக்கு மறுநாள் நடத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வை எந்த தேதியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

திடீர் திருப்பம்:

இதையடுத்து, சில மாவட்டங்களில் மாற்று தேர்வு தேதிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துவிட்டனர். இந் நிலையில், பள்ளி கல்வித் துறை செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென விடுமுறை அறிவிப்பை மறுத்தது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்துப்பள்ளிகளும் செப். 20ல் செயல்படும்: முதன்மை கல்வி அதிகாரி

    அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம் போல் செயல்படும் .

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு ஆகிய மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து எதிர்கட்சிகளும் வரும் வியாழக்கிழமை (செப். 20) நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந் நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் காலண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அன்றைய தினம் தேர்வு நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்ததது.

இதற்கிடையில் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என்பதால், வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பு அறிவிக்காத நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமை விடுமுறை என்றும் வியாழக்கிழமை நடைபெறும் தேர்வு வேறொரு நாளில் நடைபெறும் என்றும் அறிவித்தனர்.
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வியாழக்கிழமை (செப். 20) வழக்கம் போல் இயங்கும். அன்றைய தினம் நடைபெறும் காலாண்டுத் தேர்வுகள் அந்தந்த அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு

   டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குரூப்-4 தேர்வு, கடந்தாண்டு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களை, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட துறைகளில் பணியமர்த்தாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுத்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,யிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலர் குற்றாலிங்கம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த, 12ம் தேதி, கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதி 22ன் படி, பணியாளர் தேர்வாணையம் மூலம், தேர்வு செய்யப்பட்ட பார்வையற்றவர்களை பணியமர்த்த மறுப்பது, அரசு விதிகளுக்கு எதிரானது.

எனவே, உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, September 17, 2012

40% Physically Challenged? No profession tax from 01.10.2012

From October 1, persons living with 40 per cent disability in Tamil Nadu would be exempted from paying profession tax.

“The Tamil Nadu Municipal Laws (Third Amendment) Act, 2012, which provides for the exemption will come into force from October

1. We have also suitably amended the respective Municipal Corporation Acts of Chennai, Madurai and Coimbatore to give effect to this privilege for disabled employees and traders,” a Municipal Administration and Water Supply Department official said.

“At present, differently-abled persons with total disability in one or both hands or legs, spastics, totally speech-impaired or hearing-impaired persons or totally visually-impaired persons alone are exempted from the payment of profession tax, as per the provisions of the Urban Local Bodies Acts.

In the absence of specific definition of disability in the said Acts, all the differently-abled persons are not in a position to avail the said benefit,” an official quoting the TN Municipal Laws (Third Amendment) Bill said.

According to the official, the Act had to be amended as the present law was ambiguous on exempting differently abled from paying the half-yearly profession tax. Now, “persons with disability, suffering from not less than 40 per cent of such disability, as certified by a Medical Practitioner in service of the Government not below the rank of Civil Surgeon, shall be exempt from profession tax,” he added.