இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 03, 2012

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர

     சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, வரும், 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக, தற்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, அல்தாமஸ் கபீரை நியமிக்கும்படி, பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளே, தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த அடிப்படையில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, ஓய்வு பெறும் தலைமை நீதிபதியின் பரிந்துரையை கேட்கும் சட்ட அமைச்சர், அவர் பரிந்துரைத்த பெயரை, பிரதமரின் ஒப்புதல் பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்.

தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, புதிய தலைமை நீதிபதியாக, அல்தாமஸ் கபீரை நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.

அல்தாமஸ் கபீர், 2005ம் ஆண்டிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர், தன், 65வது வயது வரை, அதாவது, 2013, ஜூலை 18 வரை பதவியில் தொடர்வார்.

12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களுக்கு அழைப்பிதழ்: கவுரவமாக விருது தர அரசு ஏற்பாடு  

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜனின், வாழ்த்து கடிதத்துடன், தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, அழைப்பிதழ் அனுப்பப்படும் முறை, 12 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு தான் நடந்துள்ளது.

பள்ளியின் வளர்ச்சியிலும், கல்வித் தர வளர்ச்சியிலும், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சிறப்பாக செயல்படும் ஆசிரியருக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் உள்ள, எம்.சி.சி., பள்ளியில், நாளை நடக்கும் விழாவில், 363 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சிவபதி, விருதுகளை வழங்குகிறார்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்து கடிதத்துடன் கூடிய அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறும் ஆசிரியருக்கு, 12 ஆண்டுகளுக்கு முன், இதுபோல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதன்பின், இந்த ஆண்டு தான், அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவை தெரிவித்தன. ராதாகிருஷ்ணன் விருது பெறுவதை, ஒவ்வொரு ஆசிரியரும், தம் வாழ்நாள் சாதனையாக கருதுகின்றனர்.

எனவே, விருது பெறும் நிகழ்ச்சியைக் காண, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் என, பலரையும் அழைத்து வருவர். விழா நடக்கும் அரங்கிற்குள், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தவிர, வேறு யாரையும் விடுவதில்லை. உடற்பயிற்சி ஆசிரியர்களை, அரங்க நுழைவாயிலில் நிறுத்தி, அதிக கெடுபிடிகளை செய்வதே, பள்ளிக்கல்வித் துறையின் வாடிக்கையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, அதுபோல் எவ்வித அவமரியாதைக்குரிய செயலும் நடக்காது என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "விருது பெறுபவர், உடன் வருபவர் என, அனைவரையும் கணக்கிட்டு, 2,500 சாப்பாட்டிற்கு, "ஆர்டர்' வழங்கியுள்ளோம். ஆசிரியருக்கான போக்குவரத்து பயணப்படி உள்ளிட்டவற்றை, உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்' என்றார்.

அரசு பள்ளிகளில் நியமனம் பெற சி.பி.எஸ்.இ., தகுதித்தேர்வு பொருந்தாது

"சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது,' என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

"தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்' என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது. கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்:

சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசு பாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது. தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத் தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம், நாமக்கல், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

          தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,  வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக இருந்த எல். சித்திரசேனன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹனிஷ் சஹாப்ரா வேளாண்மைத் துறையின் கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

பி. ஷங்கர் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், அஜய் யாதவ், முனிசிபல் நிர்வாகத்தின் இணை ஆணையராகவும்,

டி. ஜகன்நாதன் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும், ஜே. குமரகுருபரன் தகவல் மற்றும் பொதுத் தொடர்பு இயக்குநராகவும்,

பி. செந்தில்குமார் அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், அனு ஜார்ஜ், பொதுப்பணித் துறை இணைச் செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TNPSC – Departmental Exam Dec 2012 – Online Registration

Sunday, September 02, 2012

பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகள் : தமிழக அரசு தாக்கல்

பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. தாம்பரத்தில் உள்ள சீயோன் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து ஜூலை 25ம் தேதி சிறுமி சுருதி பலியானதை அடுத்து, தானாக முன்வந்து இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அது உத்தரவிட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்காக இயங்கும் வாகனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கி, அதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி பெற்று இன்று தாக்கல் செய்தது.

நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.

அதில், பள்ளி வாகனங்களுக்கான மாநிலம் முழுவதுமான விதிமுறையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி,

* பள்ளி வாகனத்தில் ஓட்டுநருடன், உதவியளர் ஒருவரும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
* பள்ளி வாகனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
* கல்வி நிறுவன வாகனங்களை மாவட்டந்தோறும் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
* பள்ளிகள் அளவில் பள்ளி வாகனங்களைக் கண்காணிக்க குழுவை  அமைக்க வேண்டும்
. * அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஒருவர் பள்ளி வாகனக் கண்காணிப்புக் குழுவிலும் இருக்க வேண்டும்
. * வாகன பராமரிப்புக்காக பள்ளிகளில் சிறப்பு பிரிவு இயங்க வேண்டும் -

இவை உள்ளிட்ட 11 விதிமுறைகள் அடங்கிய அறிக்கை தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை அனைத்து பள்ளிகளிலும் ஒட்ட வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.

ஆசிரியர் விருதுக்கு ஆளுங்கட்சியினர் பரிந்துரை:தேர்வு குழுவுக்கு தர்மசங்கடம்

சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எதையும் எதிர்பாராமல், பள்ளியின் வளர்ச்சிக்கும், கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடும் ஆசிரியரை கவுரவிக்கும் வகையில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. சிறந்த ஆசிரியர், மாநில அள விலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது.

கல்வித்துறை மவுனம்:

விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகள், 100 சதவீதம் கடைபிடிக்கப்படுகிறதா என்று விசாரித்தால், கல்வித் துறையின் பதில், மவுனமாகத் தான் இருக்கிறது.வரும் 5ம் தேதி, தமிழக அரசு சார்பில், சென்னையில் நடக்கும் விழாவில், 360 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000த்திற்கும் அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள், சென்னையில் ஆய்வு செய்யப்பட்டன. பரிந்துரைகள் ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், அவர்களுடைய அருமை, பெருமைகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என, பலவற்றையும் சேர்த்து, பெரிய புத்தகம் அளவிற்கு, ஒவ்வொருவரும் கோப்புகள் தயார் செய்து அனுப்பினர்.ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முதல், மாவட்டம், தொகுதி என, பலரும், "இவர், எனக்கு மிகவும் தெரிந்தவர்; திறமையானவர். பள்ளி வளர்ச்சிக்காக, அரும்பாடு பட்டுள்ளார். உள்ளூரில், ஏற்கனவே பல விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்' என, அதில் தெரிவித்துள்ளனர்.

இறுதி கட்டம்:

இந்த பரிந்துரை கடிதங்களை, விருதுக்குரிய விண்ணப்பத்துடன் இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனாலும், ஆளுங்கட்சியினரின் பரிந்துரை கடிதங்களை எடுக்காமல், அப்படியே மாவட்ட அதிகாரிகள், மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி விட்டனர். விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. கல்வி நடைமுறையை ஒழுங்குபடுத்தி, சிறப்பாக இயங்கும் கல்வி நிலையங்கள் உருவாகி வரும் சூழ்நிலையில், இதற்கான அடிப்படை வரன்முறைகளும் வரும் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை கருதுகிறது.அதன் மூலம் இத்துறையில் மேலோங்கி இருக்கும் ஆசிரியர் மட்டுமே இந்த விருதைப் பெற வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது; இருந்தாலும், இது, நடைமுறைக்கு வராது என்பதே, சிறந்த ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.

ஏ.டி.எம்.,மில் பணம் ரிசர்வ் வங்கி புது உத்தரவ

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை, கையில் எடுக்கத் தவறினால், அப்பணத்தை மீண்டும், இயந்திரம் உள்ளிழுத்துக் கொள்ளும் வசதியை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள், தேவையான தொகையை இயந்திரத்தில் பதிவு செய்ததை அடுத்து, சில வினாடிகளில், ரூபாய் நோட்டுகள் வெளிவரும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வாடிக்கையாளர்கள் அவற்றை கையில் எடுக்காவிட்டால், அந்த ரூபாய் நோட்டுகளை இயந்திரம் மீண்டும் உள்ளிழுத்துக் கொள்ளும். அனைத்து வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களிலும் இந்த நடைமுறையே அமலில் இருந்தது.

இந்நிலையில், பணத்தை இயந்திரம் இழுத்துக் கொண்டதாக ஏராளமான புகார்கள், வங்கிகளுக்கு வந்த வண்ணம் இருந்தன.இப்புகார்களை பரிசீலித்த, தேசிய பணப்பட்டுவாடா கமிஷன், ஏராளமானவை பொய் புகார்களாக இருப்பதை கண்டுபிடித்தன. இதையடுத்து, ஏ.டி.எம்., மையங்களில் இந்த வசதியை நீக்க உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, வங்கி ஏ.டி.எம்.,களில், வாடிக்கையாளர்களால் எடுக்கப்படாத ரூபாய் நோட்டுகளை இயந்திரம் உள்ளிழுக்கும் வசதியை ரத்து செய்து, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும் கடைபிடிக்கத் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டும் வருகின்றன.

Saturday, September 01, 2012

தேர்வு மையத்திற்கு ஆன்-லைனில் வினாத்தாள்: டி.என்.பி.எஸ்.சி

வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள்கள் ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டது. சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணிக்கான தேர்விற்கு வினாத்தாள்களை முன்கூட்டியே அச்சிட்டுக் கொடுக்காமல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக தேர்வு மையத்திற்கு வினாத்தாள் அனுப்பப்பட்டது.

கம்ப்யூட்டர் கிளவுட் டெக்னாலஜி என்ற அதிநவீன தொழில்நுட்பம் மூலம், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அனுப்பப்பட்ட வினாத்தாள், பின்னர் தேர்வு மையத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வர்களுக்கு விநியோகப்பட்டது.

நூலகர் தேர்வை தொடர்ந்து, இனி படிப்படியாக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக வினாத்தாள்கள் குறிப்பிட்ட அச்சகங்களில் ரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்ட மற்றும் தாலுகா கருவூலங்கள் வழியாக தேர்வு மையங்களைச் சென்றடையும்.அவ்வாறு செல்லும்போது இடையில் வினாத்தாள் கட்டுகளை பிரித்துப் பார்க்கவும் அதன் மூலம் வினாத்தாள் அவுட் ஆகவும் அதிக அபாயம் உள்ளது.

தற்போதைய புதிய முறையில் ஆன்லைனில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கு சென்றுவிடுவதால் கேள்வித்தாள் அவுட் ஆகும் பேச்சுக்கே இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பல்கலைக்கழகங்களில் இதுபோன்றுதான் ஆன்லைன் மூலமாக வினாத்தாள் அனுப்பப்பட்டு, பின்னர் பிரிண்ட் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி குரூப்௨ தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆனது. இதையடுத்து, குரூப்௨ தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புது நடைமுறை : நட்ராஜ் பேட்டி  

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நட்ராஜ் ‌தெரிவித்தார்.

கடந்த மாதம் குரூப் -2 தேர்வுகள் நடந்தன. இதில் கேள்வித்தாள் அவுட்டானதாக புகார் எழுந்தது .இ‌து‌தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேள்வித்தாள் அவுட்டானதை தடு்க்க டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்ளையில் நிருபர்களிடம் கூறியதாவது:

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இனி தேர்வு மையங்களில் தான் ‌கேள்வித்தாள்களை ஆன்லைனின் பதிவிறக்கம் செய்யமுடியும். இதன் மூலம் இனி முறைகேடுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தபால் துறையின் அறிவிப்பு விபரம்

Tamilnadu Postal Circle - Recruitment of Postal Assistants / Sorting Assistants http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm


புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் மக்கள் தொகை பதிவு ரசீது அவசியம

"புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன், தேசிய மக்கள் தொகை பதிவுக்கான ரசீதை இணைக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், புதுக்கோட்டை உட்பட, 16 மாவட்டங்களில் தேசிய மக்கள் தொகை பதிவுப் பணிகள் நடக்கின்றன. இதில், மத்திய அரசின் மக்கள் தொகை, கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று, குடும்ப தலைவர், உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் விபரங்களை சேகரிப்பர். அத்துடன், ஒவ்வொருவரின் இரண்டு கைகளில் உள்ள விரல்கள், கண் புருவம், முழு உருவத்தை புகைப்படமாக எடுத்து, பதிவு செய்வர்.

இந்த பதிவிற்கு பின், தேசிய மக்கள் தொகை பதிவு செய்வதற்கு ஆதாரமாக, குடும்பத்திற்கு ஒரு ரசீது வழங்கப்படும். அந்த ரசீதை பத்திரமாக வைத்திருக்க, தேசிய மக்கள் தொகை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில், ஒரே குடும்பத்தில் பல ரேஷன் கார்டுகள், ஒரு நபர் ரேஷன் கார்டுகள் வைத்திருப்போரை கண்டறிந்து, ஒரு நபர் கார்டு குடும்பத்துடன் சேர்க்கப்படுகிறது. இதனால், அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.மேலும், புதிய கார்டுகள் கேட்டு, வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பிப்போர், இனி விண்ணப்பத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுக்கான ரசீது "ஜெராக்ஸ்' பிரதியை கட்டாயம் முக்கிய ஆவணமாக இணைக்கவேண்டும் என, உணவு பொருள் வழங்கல் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசு இது போன்ற முடிவை எடுத்துள்ளது. தற்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு செய்யும் 16 மாவட்டங்களில், இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின், 32 மாவட்டங்களிலும் இந்த உத்தரவு, அமலுக்கு வரும் என, சென்னையில் நடந்த வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தில், கமிஷனர் தெரிவித்தார், என்றார்.

பிரிவு வாரியாக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும்'

     தமிழகத்தில், செப்., 5ம் தேதி ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு, நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறையில் கல்வி மாவட்டத்திற்கு இருவர் வீதமும், துவக்கக் கல்வித்துறையில் 3 பேர் வீதமும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் பெறும் ஆசிரியர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது.

அதேபோல தேசிய அளவில், மாவட்டத்திற்கு ஒருவர் நல்லாசிரியர் விருது பெறுகிறார். அவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை, ஆசிரியர்களின் பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. தமிழக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியிருப்பதாவது:

தற்போது பள்ளிக் கல்வித்துறை, துவக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதை, தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் என பிரிவு வாரியாக விருது வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பை உயர்த்தும் வகையில், தற்போது மாநில அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு ரூ. 5 ஆயிரம் என்பதை, ரூ. ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் ஊக்கஊதியம், பஸ்களில் இலவச பாஸ் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

தபால் துறையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்ப

தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக தபால் வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு ஆக., 11 ல், வெளியிடப்பட்டது.

தகுதி உள்ள தேர்வர்கள் இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில், நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக, 50 ரூபாயும், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும். மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர், ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பணம் செலுத்தியதற்கான ரசீதை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணை, ரசீதின் பின்புறம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம

ஏழு காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் சனிக்கிழமை பிறப்பித்தார். அதன் விவரம்:

(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
அமித் குமார் சிங் - திருப்பூர் மாவட்ட எஸ்.பி. (தருமபுரி மாவட்ட எஸ்.பி.)

அஸ்ரா கர்க் - தருமபுரி மாவட்ட எஸ்.பி. (திருப்பூர் மாவட்ட எஸ்.பி.)

சுமித் சரண் - கோவை சரக டி.ஐ.ஜி. (மத்திய புலனாய்வுப் பிரிவில் இருந்து மாநிலப் பணிக்குத் திரும்புதல்)

எச்.எம்.ஜெயராம் - தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. (கோவை சரக டி.ஐ.ஜி.)

ஆர்.ஆறுமுகம் - ரயில்வே போலீஸ் ஐ.ஜி. (பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.)

சரோஜ்குமார் தாக்கூர் - ஏ.எஸ்.பி., சேலம் புறநகர் பகுதி (மதுரை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி., பயிற்சி)

ஜெ.லோகநாதன் - திருநெல்வேலி நகர சட்டம்-ஒழுங்கு பிரிவு உதவி ஆணையாளர் (கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏ.எஸ்.பி., பயிற்சி).

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் ஆணையர்களாக ஐவர் குழு நியமித்து தமிழக அரசு ஆணை