இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 24, 2015

டி.இ.டி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இணையதளத்தில்:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டது. இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர். பெரும்பாலும் தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று சான்றிதழ் பதிவிறக்கம் செய்தனர். அப்போது, இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒருசில தவறுகளால், பலருக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. இதனால், டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தற்போது டி.இ.டி., தேர்ச்சி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி.,க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.

மீண்டும் வாய்ப்பு:

இதன்பின் சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், ஜன., 19 முதல், பிப்., 14 வரை அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்க, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், அதிலும் பலருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: டி.ஆர்.பி., இணையதளத்தில், ஒரு முறை மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற முறை பலர், தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்தனர். தற்போது, டி.ஆர்.பி., அனுப்பிய சான்றிதழ்களில் அவர்களுக்கான சான்றிதழ் வரவில்லை. இணையதளத்தில் அவர்கள் விண்ணப்பித்தால், 'பதிவிறக்கம் செய்யப்பட்டது' என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.பி., கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்:

பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி.,யின் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தால் தான், இந்த குழப்பம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்று வழங்குவதுபோல் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் குழப்பம் ஏற்படாது' என்றார்.

தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழுப்பறை வசதியே இல்லை

தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித் தகவல் முறையின் கீழ் இந்த தகவல் கிடைத்ததும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு ஆண்டில் 6,000த்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள், தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல், பயன்படுத்தப்படாத, 300 கழிப்பறைகளிலும், சிறிய அளவிலான பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணையும் சேர்க்க முடிவு

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டத்தில், மாணவர்களின் ஆதார் எண் விபரங்களையும் சேர்க்க, கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.

பல்வேறு காரணங்களால் ஏற்படும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், மாணவர்களின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய, ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டம், கல்வித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்படி, மாணவர்களின் எடை, உயரம், ரத்த வகை, பள்ளி விவரம், குடியிருப்பு, பெற்றோர், வயது, உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பணியை, பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

இந்த பட்டியலில், மாணவர்களின் ஆதார் எண்களை சேர்க்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் ஆதார் எண்களை சேகரித்து வைக்கவும், கல்வித்துறை கேட்கும்போது உடனடியாக வழங்குவதற்கு, தலைமையாசிரியர்கள் தயாராக இருக்க வேண்டுமென, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், மாணவர்களின் ஆதார் எண் சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Thursday, January 22, 2015

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு: மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

இதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைகிறது. 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு வரை, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலில் முதன்மை விடைத்தாள் கட்டு (மெயின் ஷீட்) கொடுக்கப்படும். கூடுதல் விடைத்தாள் தேவைப் படும் மாணவர்கள் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கூடுதல் விடைத்தாள்களை தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் ஒவ்வொரு முறையும் கேட்டு வாங்குவதற்கு நேரம் வீணாகும் என்பதையும், அதேசமயம் ஒரேநேரத்தில் பல மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளருக்கும் கடினமாக இருக்கும் என்பதாலும் தேர்வுத்துறை கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்வில் புதிய முறையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் எழுதியுள்ள விடைத்தாள் பக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு 32 பக்க விடைத்தாள் கட்டும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 40 பக்க விடைத்தாள் கட்டும் வழங்கப்பட்டது.

இதனால், மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் கேட்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால், குறிப்பிட்ட பாடங் களில் ஏராளமான மாணவர்கள் பல பக்கங்களை எழுதாமல் விட்டிருந்தனர். குறைவான பக்கத்துக்குள்ளே அவர்கள் விடைகளை எழுதி முடித்து விட்டனர்.

மாணவர்கள் பதில் எழுதாமல்விட்ட பக்கங்களால் காகிதம் வீணானது. இதன்மூலம் கணிசமான அளவு இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. எனவே இந்த குறைபாட்டைப் போக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் ஒரு சில பாடங்களுக்கு விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு தேர்வுத்துறை முடிவுசெய்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வு களுக்கு கோடுபோட்ட (ரூல்டு பேப்பர்) விடைத்தாள்கள் வழங் கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் பக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப சில பாடங் களுக்கு மட்டும் விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாகவும், காகிதம் வீணாவதை தடுப் பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு: மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

இதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைகிறது. 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு வரை, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதலில் முதன்மை விடைத்தாள் கட்டு (மெயின் ஷீட்) கொடுக்கப்படும். கூடுதல் விடைத்தாள் தேவைப் படும் மாணவர்கள் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கூடுதல் விடைத்தாள்களை தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் ஒவ்வொரு முறையும் கேட்டு வாங்குவதற்கு நேரம் வீணாகும் என்பதையும், அதேசமயம் ஒரேநேரத்தில் பல மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது தேர்வுக்கூட கண்காணிப்பாளருக்கும் கடினமாக இருக்கும் என்பதாலும் தேர்வுத்துறை கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்வில் புதிய முறையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் எழுதியுள்ள விடைத்தாள் பக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு 32 பக்க விடைத்தாள் கட்டும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 40 பக்க விடைத்தாள் கட்டும் வழங்கப்பட்டது.

இதனால், மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் கேட்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால், குறிப்பிட்ட பாடங் களில் ஏராளமான மாணவர்கள் பல பக்கங்களை எழுதாமல் விட்டிருந்தனர். குறைவான பக்கத்துக்குள்ளே அவர்கள் விடைகளை எழுதி முடித்து விட்டனர்.

மாணவர்கள் பதில் எழுதாமல்விட்ட பக்கங்களால் காகிதம் வீணானது. இதன்மூலம் கணிசமான அளவு இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. எனவே இந்த குறைபாட்டைப் போக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் ஒரு சில பாடங்களுக்கு விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு தேர்வுத்துறை முடிவுசெய்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வு களுக்கு கோடுபோட்ட (ரூல்டு பேப்பர்) விடைத்தாள்கள் வழங் கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் பக்கங்களை ஆராய்ந்து அதற்கேற்ப சில பாடங் களுக்கு மட்டும் விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாகவும், காகிதம் வீணாவதை தடுப் பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015 - Tentative Key

Click below

http://trb.tn.nic.in/PG2014/22012015/msg1.htm

Wednesday, January 21, 2015

NMMS ADMISSION card. TIRUPPUR

Click below

http://www.tndge.in/dge/nmmscentreallot.aspx?mode=1

NMMS - EXAMINATION ADMISSION CARD (SCHOOL / AEO LEVEL)

Click below

http://www.tndge.in/login.aspx

தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் கழிவறை கட்டித்தர என்.எல்.சி முடிவு

தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் கட்டித்தர என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தூய்மை பள்ளித்திட்டம்
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சி காரணமாக, தூய்மை இந்தியா திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்கும்படி மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவன திட்டம் மற்றும் செயலாக்க இயக்குனர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

2,500 பள்ளிகளில் கழிவறை வசதி
என்.எல்.சி. நிறுவனம் இந்த திட்டத்தில் தனது பங்களிப்பாக தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 2 ஆயிரத்து 500 கழிவறைகளை அமைத்து தர திட்டமிட்டுள்ளது.

இதற்காக அந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கணிசமான தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 599 அரசு பள்ளிகளில் 1,118 கழிவறைகள் கட்டப்பட உள்ளன.

சுகாதாரம்
இதற்காக தமிழக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் காலதாமதம் இன்றி முடியும். குறிப்பாக மாணவ–மாணவிகளின் சுகாதாரத்தில் தனது பங்கை அளிப்பதில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெருமிதம் அடைகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் இயக்குனர் பூபதி தெரிவித்துள்ளார்.

ப்ளஸ் -2 செய்முறை தேர்வு மார்ச் 5ல் துவக்கம்

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு தேர்வு மார்ச் 5–ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

முன்னதாக பிளஸ்–2 செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவுபடி நடைபெற உள்ளது. பிப்ரவரி 5–ந்தேதி முதல் பிப்ரவரி கடைசிக்குள் தேர்வை நடத்தி முடித்து, மாணவ–மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை தரும்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 5–ந்தேதி முதல் பிப்ரவரி 12–ந்தேதி வரையிலும் 50 சதவீத மாணவர்களும், பிப்ரவரி 13–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை 50 சதவீத மாணவர்களும் செய்முறை தேர்வு செய்ய உள்ளனர்.

ஆங்கில மொழி உச்சரிப்பு குறுந்தகடு

ஆங்கில மொழி உச்சரிப்பு தொடர்பான குறுந்தகடுகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதில் கற்றுக்கொள்வதற்கானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தைச் சிறந்த முறையில் உச்சரிப்பதற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் 43 பாடங்களைக் கொண்ட 2 குறுந்தகடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குறுந்தகடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்காக வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இந்த குறுந்தகட்டினைப் பதிவேற்றம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வள மேற்பார்வையாளருடன் இணைந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள டிவி, கம்ப்யூட்டர், எல்சிடி புரஜெக்டர் ஆகிய கருவிகள் மூலம் இந்தக் குறுந்தகடுகளை அனைத்துப் பள்ளிகளிலும் பயன்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இந்த குறுந்தகடுகளைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தைச் சிறந்த முறையில் கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VAO பணிக்கான கலந்தாய்வு

கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான வி.ஏ.ஓ., எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது; டிசம்பரில், முடிவுகள் வெளியானது. இதில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன., 27 முதல், பிப்., 12ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின், தரவரிசை அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு. கலந்தாய்வு அழைப்பு, விரைவு அஞ்சல் மூலம், தனியாக அனுப்பப்பட்டு உள்ளது. அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால், மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Tuesday, January 20, 2015

பொதுத்தேர்வில் ரூல்ட் பேப்பர்

மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கு மட்டும் ரூல்டு பேப்பர் பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

அரசு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களை எழுதும்போது, சில மாணவர்கள் நேர்க்கோட்டில் சரியான முறையில் எழுதாததால், அவற்றை மிதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டும், மாணவர்களின் கையெழுத்து மேம்படும் வகையிலும், திருத்தும்போது ஆசிரியர்கள் சரியாக விடைகளை மதிப்பீடு செய்வதற்காக வரும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடங்களுக்கு மட்டும் வழக்கமாக வழங்கப்படும் 'அன் ரூல்ட்' விடைத்தாள்களுக்கு பதிலாக 'ரூல்ட்' விடைத்தாள்கள் வழங்கப்படும் என்று அரசு பொதுத்தேர்வு இயக்குனர் தேவராஜன் அறிவித்துள்ளார்.

மேலும், சோதனை முயற்சியாக கடந்த வருடம் தனித்தேர்வு எழுதிய ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூல்டு பேப்பர் கொண்ட விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது மாணவர்கள் அதிக விடைத்தாள்கள் பயன்படுத்துவதை குறைப்பதற்கான நடவடிக்கை என்று கூறப்படுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு.அரசுக்கு நோட்டீஸ்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வி.மணிவாசகன் உள்பட ஆசிரியர்கள் வி.வரதன், பி.ராஜேந்திரன், ஜி.கே.ஐயப்பன் ஆகிய நான்கு பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூன்று வகைகளில் பிரிக்கப்படுகின்றனர். அதில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பவர்கள். இவர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஒரே ஒரு பதவி உயர்வு மட்டும்தான் பெறுவார்கள். இதுவும் பணி மூப்பு அடிப்படையில் மட்டும்தான். இதில் பெரும்பாலான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெற்றுவிடுவர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையேயான ஊதிய விகிதம் 3:2 என்ற அளவில் அடிப்படை சம்பளத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைந்துள்ளது. இதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியத்துக்கு சமமான நிலைக்கு மாறி உள்ளது. 6-வது ஊதியக் குழுவின் படி முதுநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 6500 ஆகவும், பட்டதாரி ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 5500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதியிட்ட அரசாணைக்குப் பிறகு இருவருக்கும் இடையேயான அடிப்படை சம்பளத்தில் ரூ. 200 மட்டுமே வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் படி 2009-ஆம் ஜூன் மாதம் 1-ஆம் தேதி பணியில் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம், பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது. எனவே, 2009-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 616 பணியிடம் காலி

தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014 பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர் என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Voters day camp page two

Click below

https://app.box.com/s/huquwit9f3kgqnc0mpl3yj6jl431wxua

VOTERs day camp page 1

Click below

https://app.box.com/s/npooewen6aef21l91yct8obzdt0p9c7s

To know your salary details

Click below

http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx

DEE, June 2015 - Application & Instructions for Private candidates

Click below

http://www.tndge.in/docs/DEE%20June%202015%20Private%20Application.pdf

Monday, January 19, 2015

பள்ளிக்கல்வி உடற்கல்வி பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம்

பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியப் பதவி உயர்வுக்காக சார்நிலை அலுவலர்களுக்கானக் கணக்குத் தேர்வு பாகம்-1-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. இந்த விதியை திருத்தம் செய்து தமிழக அரசு அண்மையில் கடிதம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக இந்தத் தேர்வை இனி எழுத வேண்டியதில்லை. இந்த நடைமுறையை அகற்றியதற்காக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

டி.இ.டி மதிப்பெண் பட்டியலுக்கு முதன்மை கல்வி அலுவலகத்தை நாடலாம்

ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டி.ஆர்.பி.,யால், 2012 - 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேர்வர்கள், தேர்வு எழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட, முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

அந்த தேர்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி, பிப்., 14ம் தேதி வரை, அனைத்து வேலை நாட்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். டி.இ.டி., 2013 தேர்வில், குறைந்த பட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய வருவாய் தேர்வு இன்று முதல் ஹால் டிக்கெட்

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு: இந்த தேர்வு, இம்மாதம் 24ம் தேதி நடக்கிறது. இதற்காக, ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்களின், 'ஹால் டிக்கெட்'டை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், இன்று முதல் துறையின், 'www.tndge.in' என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்காக, ஏற்கனவே பள்ளிக்கு வழங்கப்பட்ட, 'யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு' மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்க, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, தொடர்ந்து கல்வி உதவித்தொகை கிடைக்கும். தமிழகத்தில், இத்தேர்வை எழுத, 1.43 லட்சம் மாணவர் பதிவு செய்துள்ளனர்.

கற்றல் திறன் குறித்து கல்வித்துறை ஆய்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து, ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்திஉள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பள்ளி களில், வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு நடக்கும். இதற்கான பொறுப்பு, தேர்வுத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான கேள்வித் தாள்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் வழங்கிஉள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.