Click below
https://drive.google.com/file/d/0B35sUpVujcAdU085V3FhZXpRTVE/view?usp=drivesdk
10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் https://t.co/so4eLn2Stm என்ற இணையதளத்தில் வெளியீடு - தேர்வுத்துறை..
#10-ம் வகுப்பு தனித்தேர்வு : மறுகூட்டலுக்கு வரும் 31, நவ.1 ஆகிய தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..
தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 6–ந்தேதி உத்தரவு வெளியிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை இணைப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகளை தொலை தொடர்புத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்களை (ஓ.டி.பி.) பயன்படுத்தியும், செயலி மூலமாகவும் அல்லது ஐ.வி.ஆர்.எஸ். என்ற குரல் மறுமொழி கலந்துரையாடல் முறை மூலமாகவும் பதிவு செய்ய முடியும். இந்த எளிய முறை மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் ஆதார் எண்களை இணைக்க முடியும்.
மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு அவதிப்படுவோருக்கு வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று மறு சரிப்பார்ப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொலை தொடர்புத்துறை பரிந்துரை செய்துள்ளது. தொலைபேசி நிறுவனங்களின் முகவர்கள், வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரியை மட்டுமே பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை கட்டளை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் அந்தரங்கம் பாதிக்கப்படாது.
வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் செல்போன் சேவையை பெற்று இருந்தாலும் தங்கள் செல்போன் எண்களை நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் சரிபார்க்கவோ, மறு சரிபார்க்கவோ இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள், வரும் 30-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் வரும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவில் இத்தேர்வு வரும் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆயிரம் பேருக்கு ஆராய்ச்சிப் படிப்பு வரை மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இத்தேர்வு எழுத விண்ணப்பித்தோர், அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகி, இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம் செலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் அக்.,1ல் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும். இதன் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமான உபரி ஆசிரியர்கள், தேவை உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். இதற்காக மாநில அளவில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தற்போது கணக்கெடுக்கப்படும் உபரி ஆசிரியர்களை எந்த அடிப்படையில் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெளிவான வழிகாட்டுதல் இல்லை.
மேலும் அந்தந்த சி.இ.ஓ.,க்களே ஆசிரியர் தேவை உள்ள மற்றொரு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி என கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் வாரியாக அதாவது அறிவியல், கலை, மொழி பாடங்கள் என்ற வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் உபரி ஆசிரியர் விவரம் தயாரிக்கப்பட்டு மாநில கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் அவ்வாறு தெளிவான வழிகாட்டுதல் உத்தரவு இல்லை. பள்ளி நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ.,க்கள் பார்த்து அவர்களை ஆசிரியர் தேவை உள்ள எந்த பள்ளிக்கும் மாற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள் போல் உதவிபெறும் பள்ளிக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும், என்றார்.
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு' நிறுவனத்திற்கிடையே, நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் முன்னிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், 'ஸ்பீடு' நிறுவனம் மேலாண் இயக்குனர், விநாயக் செந்தில் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கொள்கை முடிவு : பின், செங்கோட்டையன் கூறியதாவது: 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. எனினும், தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, போட்டித் தேர்வுகளை சந்திக்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். 'ஸ்பீடு' நிறுவன நிர்வாகிகள், இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தனர். இந்நிறுவனத்தினர், ஆங்கிலம் மற்றும் தமிழில், பயிற்சி வகுப்பு நடத்த உள்ளனர். முதலில், 100 மையங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஜனவரியில், 412 மையங்களில் பயிற்சி அளிக்கப் படும்.
ஒரு மையத்தில் இருந்து, அதை சுற்றி உள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். அதேபோல், சிறந்த ஆசிரியர்களை, பாடவாரியாக தேர்வு செய்து, அவர்களுக்கு, போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி என, பயிற்சி அளிக்க உள்ளோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மையங்களில், அவர்களுக்கு நான்கைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். முதல்வருடன் கலந்தாலோசித்து, பயிற்சி வகுப்பு துவங்கும் தேதி அறிவிக்கப்படும். இது தவிர, 3,000 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்க உள்ளோம். பயிற்சி வகுப்பில் சேர, இதுவரை, 13 ஆயிரத்து 740 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவகாசம் : இந்த மாதம் இறுதி வரை, அவகாசம் வழங்கப்படும். குறைந்தபட்சம், 20 ஆயிரம் மாணவர்கள் இடம் பெறுவர். பயிற்சி நேரம் பற்றிய அட்டவணை, விரைவில் ெவளியிடப்படும். ஸ்பீடு நிறுவனத்துடன், மூன்று ஆண்டு பயிற்சி அளிக்க, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரே மையத்தில் இருந்து, செயற்கைக்கோள் வழியே, அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தனி அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கையேடு வெளியீடு : அரசுப் பள்ளி மாணவ - மாணவியரை, போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய, 'ஸ்பீடு' நிறுவனம், வினா - விடை அடங்கிய புத்தகத்தை தயார் செய்துள்ளது. மொத்தம், 30 புத்தகங்கள், தயார் செய்யப்பட உள்ளன. முதல் புத்தகத்தை, அமைச்சர், செங்கோட்டையன் ெவளியிட்டார். மாணவ - மாணவியருக்கு, இலவசமாக வழங்கப் படும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்தார்.
பல்வேறு அரசு திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், 2018, மார்ச், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு அரசு திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணைப் பதிவு செய்வதற்கான அவகாசம், டிச., 31 வரை உள்ளது. இருப்பினும் இந்த அவகாசத்தை, 2018, மார்ச், 31 வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஷியாம் திவான், 'கால நீட்டிப்பு செய்தால் மட்டும் போதாது. காலக்கெடு முடிந்தபிறகு, பதிவு செய்யாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற உறுதியை அளிக்க வேண்டும்' என்று வாதிட்டார். இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 50 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும். இதற்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்டணத்தை 50 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
வழக்கமாக பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் 2 ரூபாய் தாமதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் ரூ.100 ஆக, அதாவது 50 மடங்காக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வசூலிக்கப்பட்டு வந்த தாமதக்கட்டணம் ரூ.5, தற்போது ரூ.200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல், பதிவு செய்யப்பட்டால் அதற்கு ரூ.10 வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க ஓராண்டுக்கு மேல் விண்ணப்பித்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதைத் தவிர, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்தால், ஒவ்வொரு நகலுக்கும் தேடுதல் கட்டணமாக முதல் ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் ஆண்டுக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 என்பது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5க்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் நகலைப் பெற இனி ரூ.200 செலுத்த வேண்டும். இதுவரை கூடுதல் நகல் பெற கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஒவ்வொரு நகலுக்கும் ரூ.200 கொடுக்க வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இல்லை என்ற தகவலை பெற இதுவரை ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கான அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
பிறப்பு, இறப்பு பதிவாளர் நியமனம்: தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரகப்பகுதிகளில் உள்ள மாவட்ட அரசு தலைமையக ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், தாலுகா அல்லது தாலுகா நிலை அல்லாத ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றுக்கு பல்நோக்கு சுகாதார கண்காணிப்பாளர்களை (ஆண்கள், முன்னாள் சுகாதார இன்ஸ்பெக்டர்) பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நகர்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள சுகாதார இன்ஸ்பெக்டர் அல்லது செயல் அதிகாரிகளை அங்குள்ள மாவட்ட அரசு தலைமையக ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், தாலுகா அல்லது தாலுகா நிலை அல்லாத ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குதல், ஸ்மார்ட் வகுப்பறைகளைத் தொடங்குதல், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் கணினி மயமாக்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், பொது நூலகத் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், சென்னை மாவட்ட மைய நூலகர் இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீட் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய காலம் நீட்டிப்பு தமிழகத்தில் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக 442 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக கடந்த அக்.16-ஆம் தேதி முதல் வரும் 26-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பல பள்ளிகளுக்கு பயனாளர் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமைச்சர், ' அதிக மாணவர்கள் பயன்பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
மாணவர்களின் நலன் கருதி பயிற்சி மையத்தில் சேருவதற்கான பதிவு நவம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்கப்படும். போட்டித் தேர்வு தொடர்பாக 54 பேராசிரியர்கள் ஆந்திர மாநிலம் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்குவர். மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் தொடங்கும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள ஏதுவாக பள்ளிகளில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் பயிற்சி பெற மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த பயிற்சியில் சேருவதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களின் ஊதியம், அடிப்படை கட்டமைப்பு செலவுகள், தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துதல் போன்ற வற்றுக்கு, மத்திய அரசின் சார்பில், நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் செலவுகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியையும், அதற்கான திட்டங்களையும், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், மாதம்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், பள்ளியின் நிர்வாக பணிகள், அதற்காக பெற்ற நிதி, செலவு செய்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி செலவுக்கு, அரசிடமும், மற்ற அமைப்புகளிடமும் பெறப்பட்ட நிதியில், எந்த முறைகேடும் இல்லாமல், பள்ளி மேலாண்மை குழு கண்காணிக்க வேண்டும்.
பள்ளியை சுற்றிய குடியிருப்புகளில், பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, பெற்றோருடன் பேசி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
கந்து வட்டி சட்டம் சொல்வது என்ன?
2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
18% மேல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம்.
தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் வசூலுக்கு தடை.
2013 - கந்து வட்டி கொடுமைகள் பற்றி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு நீதிபதி கிருபாகரன் கடிதம்.
கந்து வட்டி கொடுமையை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி நியமனம்.
கந்து வட்டி கொடுமையை தடுப்பதற்கான பரிந்துரைகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.
கந்துவட்டி கொடுமைகளை அறிவதற்கு மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.
காவல் துறையில் புகார் அளிக்கும் போது அதன் நகலை கண்காணிப்பு குழுவிடம் வழங்க வேண்டும்.
புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
சட்டம் குறித்த தகவல்களை திரையரங்குகளில் ஒளிபரப்ப வேண்டும்.
கந்துவட்டி தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும்.
2014 - கந்துவட்டிகாரர்களை கைது செய்ய கேரளா பின்பற்றிய ஆப்ரேஷன் குபேராவை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தல்.
2014ம் ஆண்டு கந்துவட்டி விடுபவர்களை கைது செய்ய கேரளாவில் ஆப்ரேஷன் குபேரா திட்டம் அமல்.
கேரளாவில் 773 பேர் கைது, 1448 பேர் மேல் வழக்கு.
கந்து வட்டி வசூலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் M.B.C பிரிவு மாணவர்களுக்கான கிரீமிலேயர் வருமான உச்சவரம்பு ரூ8லட்சமாக உயர்வு. வரும் கல்வியாண்டு முதல் அமல்
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, பொது தேர்வுக்கான பல்வேறு புதிய திட்டங்களை, கல்வித்துறை அறிவித்து வருகிறது
இதன்படி, ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'எலைட்' சிறப்பு பயிற்சி திட்டம், 'பெஸ்ட்' மாதிரி தேர்வு திட்டம், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், தினமும் மாதிரி தேர்வு திட்டம் போன்றவை, பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, மாணவர்களை தயார் செய்வதற்கு, அரையாண்டு தேர்வுக்கு முன், அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு, நவ., 13ல் துவங்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை, தேர்வு அட்டவணையை தயாரித்து உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நவ., 13ல் துவங்கும் தேர்வு, நவ., 24ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, நவ., 15ல் தேர்வு துவங்கி, நவ., 24ல் முடிகிறது. இதற்கேற்ப, பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்கவும், மாணவர்களை தயார்படுத்த வும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.