இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 27, 2017

இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவு


இந்தியாவின் நிதியாண்டு கணக்கை, ஜன., - டிச., ஆக மாற்றுவதற்கு, மத்திய அரசுக்கு, உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. உயர்மட்டக் குழு: இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், பிரிட்டன் வழக்கப்படி, 1867ல், ஏப்., - மார்ச் நிதியாண்டை அறிமுகப்படுத்தினர்.

இந்நிலையில், 'நிடி ஆயோக்' அமைப்பு, 'நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, வேளாண் துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிதியாண்டை, ஜன., - டிச., ஆக மாற்றுவது நல்லது' என, தெரிவித்தது. இது குறித்து ஆராய, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பரிந்துரை: இது குறித்து, சங்கர் ஆச்சார்யா கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் நிதியாண்டு, ஏப்., - மார்ச் ஆக உள்ளது. வேளாண் துறையில், ஜன., - மார்ச் வரை, ரபி பருவம்; ஏப்., - அக்., வரை, கரீப் பருவம்; ஜூலையில் அறுவடை துவக்கம் என்ற நடைமுறைகள் உள்ளன. பங்குச் சந்தைகளில், தீபாவளியை தொடர்ந்து கார்த்திகையில் துவங்கும், 'சம்வாட்' ஆண்டு, நிதியாண்டாக கடைபிடிக்கப்படுகிறது. அவற்றின் அடிப்படையில், நிதியாண்டை மாற்றுவதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்பட்டன. முடிவில், நிதியாண்டை, ஜன., - டிச., ஆக மாற்றுவதில் உள்ள, பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு, அதை செயல்படுத்த, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பரில் பட்ஜெட் தாக்கல்: மத்திய அரசு, 150 ஆண்டுகளாக பின்பற்றி வரும் நிதியாண்டை மாற்றினால், நவம்பரில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். பார்லி., கூட்டத்தொடர்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும். மத்திய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும் புதிய நிதியாண்டு நடைமுறைக்கு மாறும். ம.பி., அரசு, சமீபத்தில், நிதியாண்டை, காலண்டர் ஆண்டுக்கு மாற்றி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, ரஷ்யா, மெக்சிகோ உள்ளிட்ட, 156 நாடுகளில், ஜன., - டிச., நிதியாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

Monday, June 26, 2017

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்


மத்திய அரசின் அனைத்து வித போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய பயிற்சித் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில் சி.எஸ்.ஐ. மண்டல கூட்டுக் கல்விக் குழு சார்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கியும், ஒரு லட்சம் பழமரக் கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தும் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழைக் குழந்தைகளுக்கும் அடிப்படை உயர் கல்வி கிடைக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன; மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துவித போட்டித் தேர்வுகளையும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வதற்கு அவர்களின் திறனை வளர்க்கும் வகையில், புதிய பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு கல்வியுடன், மனிதநேயத்தை வளர்க்கும் வகையில் பாடவேளைகள் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

9}ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கணினி வழிக் கல்வியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோவை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்காக, இதுவரை 41 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவிடும் வகையில் 54,000 வினா}விடைகள், வரைபடங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்வித் துறையைச் சார்ந்தவர்களிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகள் பெறப்படுகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஏழைப் பெற்றோர் கடனாளிகளாக மாறும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக மாநில கல்வித் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை விரும்பிச் சேர்க்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் புகார் அளிக்கலாம் என்றார்.

மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு


சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்காக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை தலைவராகவும், அவரால் நியமனம் செய்யப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலரை செயலராகவும், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய இருவரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்க வேண்டும்.

சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்க, குறைந்தபட்சம் ஐந்து காரணங்களுடன், எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காத வகையில், மாவட்டத்துக்கு, மூன்று பள்ளிகளை தேர்ந்தெடுத்து, பட்டியலை ஜூலை 5ம், தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த பள்ளிகளுக்கான தரக்குறியீடுகளின் மொத்த மதிப்பெண்ணான, 100ல் 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பீடு பெற்ற பள்ளிகளையே, ஆய்வுக்குழுவினர் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். மேலும், ஆய்வுக்குழுவினர் ஒரு நாளில், இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை பார்வையிட்டு, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

புதிய குழு

💥TNPTF MANI💥

புதிய கல்விக்கொள்கை வரைவுக்கு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு!

- ஞா. சக்திவேல் முருகன்

புதிய கல்விக்கொள்கை வரைவுக்காக, இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், திட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்விக்கொள்கை

2015-ம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு, தனது அறிக்கையைக் கடந்த ஆண்டு மத்திய அரசின் மனிதவளத்துறையிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மூலம் கல்வியாளர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. இதில், சில கொள்கைகளுக்கு சில மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனால், மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதிய கல்விக்கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்குப் புதிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தற்போது, விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் எட்டுப் பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Sunday, June 25, 2017

5 ஆண்டு பி.ஆர்க் படிக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்


அண்ணா பல்கலைக்கழகம் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் நேற்று தொடங்கியது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://barch.tnea.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதற்காக உபயேகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி, செல்போன் எண் பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் அந்த இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பப்படும். எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினர் ரூ.250ம், பிற பிரிவினர் ரூ.500ம் விண்ணப்ப கட்டணமாக இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும். மாநில அரசின் இடஒதுக்கீடு சலுகை கோருவோர் விண்ணப்ப கட்டணத்துடன் ரூ.100 செலுத்த வேண்டும். பி.ஆர்க் படிப்புக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பித்தால் மட்டுமே அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பித்தலின்போது மாணவர்கள் இருப்பிட சான்று, முதல் பட்டதாரிக்கான சலுகைக்காக கோருபவர் என்றால் அதற்கான சான்றிதழை தயாராக வைத்திருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்காக விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அண்ணா பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியீடு


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், பல வகை போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 விதமான பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

இதன்படி,

* இன்ஜினியரிங் சர்வீஸ் முதல்நிலை தகுதி தேர்வு, ஜன., 1ல் நடக்கும்; அதற்கு செப்., 27ல் அறிவிக்கை வெளியாகும்

* சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதி தேர்வு மற்றும் இந்திய வனத்துறை முதல்நிலை தகுதி தேர்வு, ஜூன், 3ல் நடக்கும்; அதற்கு, பிப்., 7ல் அறிவிக்கை வெளியாகும். மார்ச், 6ல் விண்ணப்ப பதிவு துவங்கும்

* இன்ஜி., சர்வீசஸ் பிரதான தேர்வு, ஜூலை 1; ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வு, ஜூலை, 22; சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு, அக்., 1; இந்திய வனத்துறை பணி பிரதான தேர்வு டிச., 2ல் நடக்கும். இந்த விபரங்களை, www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Friday, June 23, 2017

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்


இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.

நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு முதல் 25 பேரில் ஒரு தமிழக மாணவர்கூட இல்லை


நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்க மத்திய உள்துறைக்கு அனுப்பியது.

குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்லை. இந்நிலையில், மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஜூன் 8ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. தேர்வில் குளறுபடி உள்ளதாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. அதில் ஜூன் 26ம் தேதிக்குள் சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை நேற்று காலை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbseneet.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை அளித்து நீட் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக நீட் தேர்வுக்கான சிபிஎஸ்இ இணை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு எழுத, இந்த ஆண்டு 11,38,890 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் 4,97,043 பேர் மாணவர்கள், 6,41,839 பேர் மாணவிகள், 8 பேர் மூன்றாம் பாலினத்தவர். நாடு முழுவதும் 103 நகரங்களில், 1,921 மையங்களில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடந்தது. அதிகபட்சமாக 9,13,033 பேர் ஆங்கிலத்திலும் குறைந்தபட்சமாக 452 ஒரியா மொழியிலும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழில் நீட் தேர்வு எழுத 15,206 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 மொழிகளில் 10,90,085 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 6,11,739 பேர் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி நாடு முழுவதும் 470 மருத்துவ கல்லூரிகளும், 308 பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அதில் உத்தேசமாக 65,170 எம்பிபிஎஸ் இடங்களும், 25,730 பிடிஎஸ் இடங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநில மருத்துவ கல்வி இயக்ககங்கள் தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையுடன் வௌியிடப்பட்டுள்ள முதல் 25 ரேங்க் பெற்ற மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழக மாணவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலை அறிவிப்பு

Thursday, June 22, 2017

பாடத்திட்ட மாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு


பாடத்திட்ட மாற்றம் குறித்த பணிக்குப் பதிவு செய்ய ஜூலை 2 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் -இல் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ர்ய் ஊர்ழ் பங்ஷ்ற் ஆர்ர்ந் ரழ்ண்ற்ண்ய்ஞ் என்ற படிவத்தில் தங்களது விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பதிவுக்கான காலம் ஜூலை 2 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா

பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில், சுற்றுலா துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நடராஜன் கூறியதாவது:

* கன்னியாகுமரி, தஞ்சை, திருச்சி, திருச்செந்துார், ஏற்காடு, ஒகேனக்கல், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும், ஓட்டல் தமிழ்நாடு வளாகங்களில், 'வை - பை' சேவை, 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்

* சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஏதேனும், ஒரு சுற்றுலா தலத்திற்கு, ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்துக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 64 லட்சம் ரூபாய் செலவிடப்படும்

* இந்த ஆண்டு, உலக சுற்றுலா தின விழாவை, மாநில அளவில், திருச்சியில் கொண்டாட, 25 லட்சம் ரூபாய் நிதி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.

இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறை-எஸ்.எஸ்.ஏ.,க்கு 'லடாய்'


தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.