இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 29, 2017

டெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன. மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பாட புத்தகத்தில் முரண்பாடு : பொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வினாத்தாளில், சில வினாக்களுக்கு, விடையை கண்டறிவதில், தமிழ், ஆங்கில வழி மாணவர்களுக்குள் முரண்பாடு ஏற்படுகிறது. 'பொருத்துக, கோடிட்ட இடத்தை நிரப்புக' பகுதிகளிலும், பிரச்னை ஏற்படுகிறது. இந்த ஆண்டு தேர்வில், பல குளறுபடிகள் இருந்தாலும், 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், 'பொருத்துக' பகுதியில், விடையை மாற்றி கொடுத்ததால், அதிகபட்சம், ௫ மதிப்பெண்களுக்கு, மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, 5 மதிப்பெண்ணுக்கான, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் பகுதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கான விடைகளை, வினாத்தாளில் உள்ள குறிப்புகளில் இருந்து, சரியாக தேர்வு செய்ய வேண்டும். இந்த கேள்விக்கு, சரியான விடையாக, 'ஷில்லாங்' என்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பலருக்கு இந்த விடை தெரியவில்லை. அதற்கு, பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த குளறுபடியான அம்சமே காரணம். தமிழ் வழி பாட புத்தகத்தில், அதிக மழை பொழியும் பகுதியாக, 'மவ்சின்ராம்' என்ற கிராமத்தின் பெயர் உள்ளது. ஆங்கில வழியில், 'ஷில்லாங் பீடபூமி பகுதியில் உள்ள மவ்சின்ராம் கிராமம், உலகில் அதிக மழை பெறும் பகுதி' என கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தகத்தின் அடிப்படையில், வினா தயாரிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை சிந்திக்க வைத்து, பதில் எழுத வைப்பதற்காக, மவ்சின்ராம் என்பதற்கு பதில், 'ஷில்லாங்' என்ற விடையை, வினாத்தாளில் இடம்பெற வைத்துள்ளனர்.

தமிழ் வழி மாணவர்களுக்கு, மவ்சின்ராம் மட்டுமே, பாட புத்தகத்தில் படித்ததால், ஷில்லாங் என்ற விடையை தவிர்த்து, தவறான விடைகளை தேர்வு செய்துள்ளனர்.இந்த தவறால், மற்ற நான்கு கேள்விகளுக்கும், தவறான விடை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், ஒட்டுமொத்த பொருத்துக பகுதியும், தவறான விடையாகி, ஐந்து மதிப்பெண் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tuesday, March 28, 2017

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்


நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது.

ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், 'நீட்' தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்' என, பெற்றோர் தெரிவித்தனர்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'டெட்' தேர்வு குழப்பம் நீடிப்பு


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.

'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர்
சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது.

அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

*பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

Monday, March 27, 2017

3rd Term - Model Questions மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0THFoeXBCTzRlVVU/view?usp=sharing

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் இருப்புத்தொகை ரூ.5000/- பராமரிப்பு செய்ய வேண்டுமா? இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா? என்பது குறித்து கருவூல அலுவலகத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்துள்ள பதில்..


நலத்திட்ட உதவிகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது


அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.இருந்த போதிலும், வங்கி கணக்குகள் போன்ற பிற திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்பதை தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆதார்  தொடர்புடைய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் கூறும் போது, “ அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்ற எங்கள் முந்தைய உத்தரவு தெளிவாக உள்ளது. சலுகை அல்லாத பிற திட்டங்களான வருமான வரி, வங்கி கணக்குகள் போன்ற திட்டங்களுக்கு அரசு ஆதார் எண் கேட்பதை தடுக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் எனினும் இது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பள்ளி சத்துணவு, ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு போன்ற 12-க்கும் மேற்பட்ட மத்திய அரசு திட்டங்களை பெற ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளது.

Sunday, March 26, 2017

நீட் தேர்வு மையத்தை மாற்ற இன்று கடைசி நாள்


நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்துவதற்கு கூடுதலாக 23 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம்.நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு பிப்ரவரி 1ம் தேதி மசோதா நிறைவேற்றியது. ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 80 மையங்களில் (தமிழகத்தில் 5 மையங்கள்) கடந்த ஆண்டு நீட் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதால், நாடு முழுவதும் புதிதாக 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அந்த நகரங்களின் பட்டியல் http://cbseneet.nic.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்வு


நடப்பாண்டில் "நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 41.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய இடைக்கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு நாடு முழுவதும் "நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 2594 பேர். தற்போது 2017 ஆம் ஆண்டில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை "நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை விட இது மிக அதிகம். நடப்பாண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7 -ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இந்தத் தேர்வு 80 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 23 நகரங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 2,200 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களோடு தற்போது வேலூர், நாமக்கல், திருநெல்வேலியிலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூலுவபட்டி மாணவர் ஓவியம்-வண்ணக்கதிரில்

Saturday, March 25, 2017

2016-17 Transfer form



பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு


பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.

இதற்கு, 45.57 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Friday, March 24, 2017

ஆய்வக உதவியாளர் பணிக்கு 'வெயிட்டேஜ் மதிப்பெண்' வெளியீடு


ஆய்வக உதவியாளர்கள்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தல்

சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும்.

மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:-

‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம்

வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

கல்வித்தகுதிக்கு மதிப்பெண்

கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

கருத்தில் கொள்ளப்படும் தேதி

இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிப்படையான நியமனம்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்? பேரவையில் அரசு தகவல்


ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக்கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பரிந்துரைக்கும்போதுதான் நிதிச் சுமை எவ்வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப்பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங்களும் அப்போது கண்டறியப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் 'ஜாக்பாட்' : ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டம்


பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை, கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thursday, March 23, 2017

Lab assistant 2015 results

Click below

http://dge1.tn.nic.in/

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு


ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4400 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விடைதாள்களை திருத்தம் செய்து வெளியிட இருந்தது. ஆனால், கடந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தற்போது 23ம் தேதி மாலை முடிவுகள் அரசு தேர்வு துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் www.dge.tn.nic என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை நிறுத்தம்


ரத்தசோகையை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரும்புச்சத்து மாத்திரை 4 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு ரத்தசோகையால் கர்ப்பக் காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு இரும்புசத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை 2014 ல் சுகாதாரத்துறை துவங்கியது. வாரந்தோறும் வியாழக்கிழமை மதிய உணவிற்கு பின் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பத்து முதல் 19 வயதுள்ள பள்ளிச் செல்லா குழந்தைகளுக்காக அங்கன்வாடி மையங்களில் நர்சுகள் மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. எந்த அறிவிப்பும் இல்லாமல் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரும்புச்சத்து மாத்திரை பல மாதங்களாக வரவில்லை; இதனால் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டோம். குடற்புழு மாத்திரை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கி வருகிறோம்,' என்றார்.

ஐந்து பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி உயரும்?!'' - கொதிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஒரு வேதனையான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 'தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்காக, நாடு முழுக்க ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. அந்தக் கல்லூரிகளில் படித்த ஆசிரியர்களின் தரமும் மோசமாக இருக்கிறது. இதனால், மாணவர்கள் தங்கள் பெயரைக்கூட எழுதமுடியாத அளவுக்கு, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருக்கிறது' என வேதனையாகக் கூறியுள்ளார்.

நீதிபதியின் இந்தக் கருத்து மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் நிலை குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

"நீதிபதி என்.கிருபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள், பின்னர் பி.எட்., எம்.எட். முடித்து, ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் தரமான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் பல மாணவர்கள், கல்லூரிக்குச் சரியாக செல்லாமல், பணம் கொடுத்து வருகைச் சான்றிதழை பெறுகிறார்கள். இப்படியான மாணவர்கள் ஆசிரியர்களானப் பின்னர், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தங்கள் பெயரையே எழுதத் தெரிவதில்லை. இதுதான் நீதிபதியின் வேதனையும்கூட.

2012- 13-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியான தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். விதிவிலக்காக, அரசுப் பள்ளிகளில் பணம் கொடுத்தும், மனப்பாட திறனால் தகுதியானதுமான ஆசிரியர்கள் சிலரைத் தவிர்த்து, மற்ற அனைவருமே திறமையான ஆசிரியர்கள்தான். ஒவ்வோர் ஆசிரியரும் தான் படித்த ஒரு துறை பாடத்தில்தான் திறமை மிக்கவராக இருப்பார். ஆனால், தமிழக அரசுதான் அரசுப் பள்ளிகளில் போதிய பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இதனால், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியரே மாணவர்களுக்கு ஐந்து பாடங்களையும் எடுக்கும் நிலை இருக்கிறது. ஓர் ஆசிரியரால், எப்படி ஐந்து பாடங்களையும் நல்ல முறையில் கற்பித்து, திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? இத்தகைய அரசு பள்ளிகளின் தரமும் எப்படி உயரும்? என ஆவேசமாக கேள்வியை எழுப்புவதுடன்  பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியார் பள்ளிகளில் இருக்கும் நிலையையும் கூறுகிறார்.

தனியார் பள்ளிகளிலோ குறைந்த ஊதியத்துக்குத் தகுதி குறைவான ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு கடுமையான பணிச்சுமையும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் இத்தகைய தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படிப்பதற்கே தொடர்ந்து ஊக்கம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும், தங்கள் பிள்ளை அதிக மார்க் எடுத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, பிள்ளையின் கற்றல் திறனைப் பார்ப்பதில்லை. சி.வி.ராமன், ராமானுஜம், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என எந்த அறிஞரையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. இன்றைக்கும் சமூகத்துக்கு உதவும்படியாக பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாணவரைத் திறமையானவராகவும் எதிர்காலத்தின் நல்ல குடிமகனாகவும் மாற்றுவது, பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், ஆசிரியர்களே வெறும் டிகிரி மட்டும் பெற்று, அந்த டிகிரிக்கு பொருத்தமான கல்வி அறிவுடன் இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய நிலை. இதனால், ஏராளமான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, அடிப்படை வசதிகள், கல்வி கற்கும் தகுதியில்லாத கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தி, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்கிறர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

- கு.ஆனந்தராஜ்