வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்
வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல்ரூ 4800
வாக்குச்சாவடி அலுவலர் 2 &3- தரஊதியம் ரூ 1800முதல் 2800 வரை
வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்
வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல்ரூ 4800
வாக்குச்சாவடி அலுவலர் 2 &3- தரஊதியம் ரூ 1800முதல் 2800 வரை
கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 11ம் வகுப்பு 16.06.2014 அன்று துவக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது .
, பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
நான், ஆங்கில பாடத்தில் பி.ஏ முடித்து விட்டு எம்.ஏ படித்தேன். அதன்பின்பு, பி.எட் முடித்தேன். என்னுடன் ஸ்ரீகாந்த் என்பவர் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், பி.ஏ தமிழ் படித்த போது இரு பட்டங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பி.ஏ ஆங்கில பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின்பு, எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு, 3.10.2013 அன்று ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. நியாயமற்றது இந்த பதவி உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. ஒரே பாடத்தை எடுத்து பி.ஏ, எம்.ஏ படித்தவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழ் பாடத்தில் பி.ஏ படித்து விட்டு ஆங்கில பாடத்தில் எம்.ஏ படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது நியாயமற்றது.
எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனரிடம் மனு கொடுத்தேன். ஆனால், அவர் எனது கோரிக்கையை 27.2.2014 அன்று நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, எனக்கு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தன்னுடைய அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அகவிலைப்படி உயர்வினை 10 சதவீத அளவுக்கு அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. அரசு அலுவலர்கள் மீது அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கிறதோ, அதற்கு ஓரிரு நாள்களிலேயே தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வினை அறிவித்து வந்தது என்று அவர் கூறியுள்ளார்.
அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள், தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, துணை மாநில கணக்காயர் (நிதி), வாஷினி அருண் விடுத்துள்ள அறிக்கை: மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், இது நாள் வரை பராமரிக்கப்பட்டு வந்த, 'அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' தொடர்பான பணிகள் (புதிய எண் வழங்கல் மற்றும் கணக்கு பராமரிப்பு) அனைத்தும், ஜனவரி, 1 முதல், தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி, 2013 - 14 ஆண்டு கணக்கு முதல், இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும்.
மேலும், 2012 - 13ம் ஆண்டிற்கான சந்தாதாரர்கள், அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள், அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம், வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்புவதற்காக, சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி, அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த விவரங்களுக்கு, சந்தாதாரர்கள், 'ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை' என்ற முகவரியில், தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக் கழக, தொலைத் தூரக் கல்வி தேர்வு முடிவுகள், இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன. சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழக தொலைத்தூரக் கல்வி இயக்கம், டிசம்பர் - 2013ல் நடத்திய, அனைத்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள், எம்.பி.ஏ., டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in; www. chennaionline.com; www. indiaresults.com; www.kalvimalar.com; www.schools9. com; www.innovaindia.com ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இனி 2013, 14ம் ஆண்டு கணக்கு முதல் இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும். தொடர்பு கொள்ள….. மேலும் 2012-13ம் ஆண்டுக்கான சந்தாதாரர்கள் அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள் அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம் வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பும் பொருட்டு, சென்னை கருவூல கணக்கு இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இனி அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த அனைத்து விவரங்களுக்கும், சந்தாதாரர்கள், ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை 600025 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழக அரசு ஊழியர்களுக்கான 2011-12ம் ஆண்டின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு அறிக்கை, குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு, கருவூல அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சந்தாதாரர்கள் டி.டி.ஓ.,வை அணுகி அவரவர் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 04424314477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் நிரந்தரக் கணக்கு எண் வழங்கப்பட உள்ளதாக இபிஎஃப் அமைப்பின் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார
பிளஸ் 2 பொதுத்தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி தேர்வுகளுடன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21 முதல் நடைபெற்று வருகின்றன. சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 2,242 மையங்களில் பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வை எழுதி வருகின்றனர்.
விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்த மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டது. அதேபோல், தேர்வு முடிந்த பிறகு பிரத்யேகமாக அமர்த்தப்பட்ட வாகனங்களில் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. விடைத்தாள்கள் தொலைதல் போன்ற எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள், கூடுதல் பக்கங்கள், டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இந்தத் தேர்வில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
வாக்குப் பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பே வாக்குச் சாவடி சீட்டுகளை (பூத் சிலிப்) வழங்கிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: புகைப்படத்துடன்கூடிய வாக்குச்சாவடி சீட்டுகள் தரமான காகிதத்தில் அச்சிடப்பட வேண்டும். அதில் வாக்காளர் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வாக்குச்சாவடி சீட்டில் உள்ள புகைப்படமும் விவரங்களும் சரிதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். சீட்டுகளை விநியோகிக்கும் அலுவலர் சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளரிடம் அளிக்கலாம்.
யாராக இருந்தாலும் வாக்குச்சாவடி சீட்டை பெற்றுக் கொண்டவரிடம் கண்டிப்பாக அத்தாட்சி கையெழுத்துப் பெற வேண்டும். வாக்காளர் இல்லாமல் வீடு பூட்டி இருந்தாலோ, வேறு வீட்டுக்கு மாறி இருந்தாலோ, இறந்துவிட்டாலோ அவரது வாக்குச்சாவடி சீட்டில் “ஏ.எஸ்.டி.” என்று முத்திரையிட வேண்டும். வாக்குப் பதிவு நாளில் சம்பந்தப்பட்ட நபர் தனது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வாக்குச் சாவடி அதிகாரி அதனை சரிபார்த்த பின்னர் அவரை வாக்களிக்க அனுமதிக்கலாம். விநியோகிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு விவரங்களை தேர்தல் அலுவலர், அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி சீட்டை விநியோகிக்கும் அலுவலர் நடுநிலைமையோடு செயல்படுகிறாரா என்பதை உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அந்தந்த தொகுதியில் வாக்குச்சாவடி சீட்டுகள் முறையாக விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி சீட்டுகளை மொத்தமாக தனிநபரிடம் அளித்து விநியோகிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக வரும் புகார்களை அதிகாரிகள் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குப் பதிவுக்கு 5 நாள்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடி சீட்டுகள் அனைத்தும் விநியோகிக்கப்பட வேண்டும். சீட்டை நகல் எடுக்கக்கூடாது. வாக்குப் பதிவின்போது நகல் சீட்டுகள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. வாக்குச் சாவடிக்குள் கேமரா, செல்போன் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது போன்ற முழுமையான விவரங்கள் சீட்டின் பின்புறம் அச்சிடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழக மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல லட்சம் பேர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்துள்ளதால் தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்கும் என்று தேர்தல் துறையினர் தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. அதன்பிறகு தமிழகத்தில் 23.49 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.37 கோடியாக அதிகரித்தது. முதல்முறையாக வாய்ப்பு இந்நிலையில், முதல்முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் இப்போது அளித்துள்ளது
. அதன்படி, மார்ச் 25 (நாளை) வரை பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் நடந்தன. அதில் மட்டும் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நாளை கடைசி நாள் இதுதவிர, மற்ற நாட்களிலும் ஏராளமானோர் தாலுகா மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். மேலும் தேர்தல் துறையின் இணையதளத்தில் ஆன்லைனிலும் தொடர்ந்து மனு செய்து வருகின்றனர். மனு செய்வதற்கான வாய்ப்பு, நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிகிறது. பட்டியலில் பெயர் சேர்க்க மக்களிடம் அதிக ஆர்வம் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த ஜனவரியில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 6-ம் தேதி வரை சுமார் 50 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்திருந்தனர். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் மட்டும் சுமார் 9.5 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். அதன்பிறகு, மேலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நேரிலும், ஆன்லைனிலும் வந்துள்ளன. தமிழகத்தில் தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.37 கோடியாக உள்ளது. பல லட்சம் மனுக்கள் வந்திருப்பதால் இந்த எண்ணிக்கை 5.50 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம். வாக்காளர் அடையாள அட்டை புதிதாக மனு செய்தவர்களின் பெயர், தேர்தலுக்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அவர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை தரமுடியாத பட்சத்தில் புகைப்படத்துடன் கூடிய ‘பூத் ஸ்லிப்’களை தேர்தல் ஊழியர்களே வீடுவீடாகச் சென்று வழங்குவர். அதை வைத்து அவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்.
""பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும்,'' என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும், 66 மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 21ல் துவங்கியது. மற்ற பாடங்களுக்கு, ஏப்., 3ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு, விடைத்தாள்களை சரியாக திருத்தாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன
. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தொழிற்கல்வி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளை தடுக்க, விடைத்தாள் திருத்தும் பணியில், சில மாற்றங்களை செய்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், விலங்கியல், தாவரவியல் போன்ற முக்கிய பாடங்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, சீனியர் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டாம். ஜுனியர் ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது
்
பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்து மே முதல் வாரத்தில் முடிவு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்பணி தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் 24-ந்தேதி தொடங்குகிறது.
விரைவாகவும், விவேகமாகவும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்களிடம் சொல்லி இருக்கிறோம். அவர்கள் விரைவாக மதிப்பீடு செய்தால் நல்லது. மே மாதம் முதல் வாரத்தில் எப்படியும் பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடுவோம் என்றார்.
சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.ctet.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 8.26 லட்சம் பேர் எழுதினர். தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதுபோல் தேர்வுக்கான சரியான விடைகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றில் பிழை அல்லது ஆட்சேபனை இருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. இப்போது வெளியிட்டுள்ளது. மேலும், இறுதி செய்யப்பட்ட விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன. இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 35 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 66 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்களை தயார் செய்தல், விடைத்தாள் புத்தகத்தில் கூடுதல் பக்கங்களைத் தைத்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம், வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.
வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுக்காப்பு மையங்களுக்கு காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளை எடுத்துச் செல்லவும், தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்களை எடுத்து வரவும் அரசு செலவில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நடைமுறை பத்தாம் வகுப்புத் தேர்விலும் தொடரும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், பிளஸ் 2 தேர்வில் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், பார்கோடு எண் உள்ளிட்ட அனைத்து புதிய அம்சங்களும் பத்தாம் வகுப்புத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு விநியோகிப்பதற்கான வழித்தடங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒரு கல்வி மாவட்டத்துக்கு 3 அல்லது 4 மையங்களே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு 8 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். விடைத்தாள் பக்கங்கள் 30-ஆக அதிகரிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கையும் 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகத்தில் 16 பக்கங்கள் மட்டுமே இருக்கும். 45 நிமிஷங்கள் முன்கூட்டியே தேர்வு: பத்தாம் வகுப்புத் தேர்வு வழக்கமான காலை 10 மணிக்குப் பதிலாக காலை 9.15 மணிக்கே தொடங்க உள்ளது.
தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரப்பட்டது. ஏற்கெனவே அறிவித்தபடி, 45 நிமிஷங்கள் முன்னதாக காலை 9.15 மணிக்குத் தேர்வு தொடங்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்த
ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில் (எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை, 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுத தேவையில்லை என, அப்போது அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப் பதிவேடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் பணிப் பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணி நியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான், உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், 'டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை,' என்றனர்.