Tuesday, December 03, 2019
Monday, December 02, 2019
Sunday, December 01, 2019
mobile phone tariff hiked
மொபைல் போன் சேவை கட்டணம் விர்ர்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் அதிரடி
ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. நாளை(டிச.,3) முதல், புதிய திட்டங்களுக்கான கட்டணம் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6 ல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், 'அன்லிமிடெட்' பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவீதம் உயர்ந்து, 458லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோல, தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை, 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும்.
ஜியோ நிறுவனமும், தொலைதொடர்பு சேவை கட்டணத்தை, 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. அதேசமயம், 'பிற நிறுவனங்களை விட, கூடுதல் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்' என, ஜியோ தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6ல் அமலுக்கு வருகிறது.தனியார் நிறுவனங்களை பின்பற்றி, பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் தொலைதொடர்பு சேவைக் கட்டணத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, November 27, 2019
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: தனியாக பாடவேளைகள் ஒதுக்க உத்தரவு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (Spoken English) நிகழ் கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ளதாக பெரும்பாலான பெற்றோா் நினைக்கின்றனா். இதனால் தனியாா் பள்ளிகளை நோக்கி செல்கின்றனா். இந்நிலையில் அந்த நம்பிக்கையை மாற்றும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை கடந்த அக்டோபா் மாதம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, இந்தப் பயிற்சிக்காக வாரத்துக்கு ஒரு பாடவேளையை ஒதுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சிக் கையேடுகள் தயாா்: இதன் அடிப்படையில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு 2-ஆம் பருவத்துக்கு ஒரு கட்டகமும் (பயிற்சிக் கையேடு), 6 முதல் 9 வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சோ்த்து வகுப்பு வாரியாக 4 கட்டகங்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறத்தக்க வகையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்தக் கட்டகங்களில் 30 வாரங்களுக்கான பாடப்பகுதிகள் மற்றும் காணொலிகள் தயாரிக்கப்பட்டு, டிஎன்டிபி எனப்படும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், அரசு கல்வித் தொலைக்காட்சியில் ‘ஆங்கிலம் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆங்கில பேச்சுத் திறன் சாா்ந்த மாணவா்களுக்கான செயல்பாடுகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
பள்ளிகளுக்கு எவ்வளவு பிரதிகள்?: இந்தக் கட்டகங்கள் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புக்கு 24 ஆயிரத்து 321 தொடக்கப் பள்ளிகளுக்கு 50,742 பிரதிகளும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள 13,138 நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 85,128 பிரதிகளும், 9-ஆம் வகுப்பு உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக 6,172 பள்ளிகளுக்கு 14,444 பிரதிகளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சடிக்கப்பட்டு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள் தங்கள் மாவட்டங்களில் செயல்படும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு கட்டகப் பிரதிகளை பிரித்து வழங்குவா்.
பயிற்சிக்கான நேரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிஷங்களுக்கு 2 பாடவேளைகளும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது 10 நிமிஷங்கள் காணொலியும், 40 நிமிஷங்கள் மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியும் நடத்த வேண்டும். ஆங்கிலப் பாட ஆசிரியா்கள், மாணவா்களுக்கான பயிற்சி கட்டகத்தை பூா்த்தி செய்து அந்தந்த பருவ இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்புக்கு வாரத்துக்கு 45 நிமிஷங்களுக்கான ஒரு பாடவேளையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும். ஆங்கில பயிற்சி கற்பித்தல் வகுப்புகளை அந்தந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியா்களுக்கான கையேடுகள் வெளியீடு: இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சிக்கான கையேடுகளை வெளியிட்டாா். இதில் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tuesday, November 26, 2019
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். அதனை குறைத்து அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.
தொடக்க நிலை வகுப்புகளுக்கு 2-ம் பருவத்துக்கு 12 பாட வேளைகளும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 30 பாட வேளைகளும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் கற்பிக்கப்பட உள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கான பாடவேளையிலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான பாடவேளையிலும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.
கல்வி தொலைக்காட்சி வாயிலான காணொலி உதவியுடனும், ஆங்கில பேச்சுத்திறன் பட்டியலில் உள்ள செயல்பாடுகள் வாயிலாகவும் அனைத்து ஆசிரியர்களும் கற்பிக்கும் வகையில் தங்களை தயார் செய்து பாடப்பொருளை கற்பித்தல் வேண்டும். இந்த வகுப்புகள் இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Saturday, November 23, 2019
Thursday, November 21, 2019
TN govt announced shoe&sacks for 6-8th students
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தனியார் பள்ளிகளின் சீருடையைப் போன்ற தோற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடை, நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம், அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்துவது மற்றும் சத்துணவு மட்டுமன்றி, புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 20, 2019
3 லட்சம் ஆசிரியா்களுக்கு ‘ஸ்மாா்ட்’ அடையாள அட்டைகள்: தகவல்களைப் பதிவேற்ற உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 3.2 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.
இந்நிலையில் மாணவா்களைப் போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ‘க்யூஆா் கோடு’ உடன் கூடிய ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தாா். அதன்படி தற்போது ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு ‘க்யூஆா் கோடு’ வசதி கொண்ட ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் பெயா், முகவரி, செல்போன் எண், ரத்தப் பிரிவு உட்பட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை (‘எமிஸ்)’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை செய்ய தவறும் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, November 19, 2019
அரசுப் பள்ளிகளில் 12,109 உபரி ஆசிரியா்கள்: கல்வித்துறை தகவல்
பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 உபரி ஆசிரியா்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதற்கிடையே, கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலையில் கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியா்கள் பணிநிரவல் செய்யப்பட்டனா்.
மேலும், சிலருக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.தொடா்ந்து பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் 12,109 பட்டதாரி ஆசிரியா்கள் உபரியாக இருப்பது தெரியவந்துள்ளது. 1996 முதல் 2014-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களில் உபரியானவா்களின் விவரப்பட்டியலை கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக வெளியிட்டுள்ளது. இவா்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட இருப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Sunday, November 17, 2019
Saturday, November 16, 2019
Friday, November 15, 2019
Thursday, November 14, 2019
Tuesday, November 12, 2019
*_ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல் படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்படுகிறது_*
Monday, November 11, 2019
Sunday, November 10, 2019
தமிழகத்தில் 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்
தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1000 பள்ளி, கல்லூரிகளில் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக்ததில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதுமான காலியிடம் இருந்தால் அங்கு தோட்டமும், இல்லாவிட்டால் அந்த கட்டிடங்களின் மொட்டை மாடியில் தோட்டமும் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்து பணிகளை தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் சதுர அடியில் மாடித்தோட்டம் அமைக்க தலா ஒரு பள்ளி, கல்லூரிக்கு தோட்டக்கலைத்துறையால் தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ₹5 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாடித்தோட்டம் அமைக்க விதை, உரம், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் ஆழ்துளை கிணறு அமைக்கவும், சொட்டுநீர் பாசன கட்டமைப்பும், நிழல்வலைக்கூடம் அமைக்கவும் உதவி செய்யப்படும்.
மேலும் தோட்டத்தில் தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தவரங்காய், மிளகாய், பீர்க்கன், பாகற்காய், அவரை, பூசணிக்காய், அகத்திக்கீரை அரைக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை, கருவேப்பிலை ஆகியவை உற்பத்தி செய்யப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்ட விதைகளும் தோட்டக்கலைத்துறையால் வழங்கப்படும்.
இப்பணிக்காக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், துறை அலுவலர், மாணவர் பிரதிநிதி ஒருவர் என 5 பேர் கொண்ட தோட்டக்கலைக்குழு ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
Saturday, November 09, 2019
Subscribe to:
Posts (Atom)