இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 07, 2018

MORNING prayer 8-9-18

8-9-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

உரை:

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

பழமொழி :

Beauty is but skin deep

புற அழகு அழகல்ல, அக அழகே அழகு

பொன்மொழி:

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.

-ஷேக்ஸ்பியர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?
கும்பகோணம்

2.ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?
ஆரல்வாய் மொழி

நீதிக்கதை :

மூன்று தலைகள்! - ஜென் கதைகள்

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

Also Read: ஜென் குருவும் ஒன்பது திருடர்களும்

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

இன்றைய செய்தி துளிகள்:

1. நீட் தேர்வு பயிற்சி
பயிற்சி மையத்தை திறந்து வைத்தரர் அமைச்சர் செங்கோட்டையன்

2.திரையரங்குகளில் உணவு பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

3.2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு ஆட்கள் ஏற்றி செல்லும் விண்கலத்தை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்

4.பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து 10ம் தேதி நடக்கும் பந்துக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்

5.சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. தென் கொரியாவில் நடைபெற்று வரும் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 16 வயது ஹரிதே ஹசாரிகா தங்கம் வென்றார்

SPD PROC - SHAALA SIDDHI - 201 8/19 ஆண்டிற்கான 42 பள்ளி தரவுகளையும் ONLINE - பதிவேற்ற இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


Thursday, September 06, 2018

MORNING PRAYER -7-9-18

7-9-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.

உரை:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.

பழமொழி :

Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

பொன்மொழி:

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
  - ஜெபர்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
புதுக்கோட்டை

2.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?
சிவகாசி

நீதிக்கதை :

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்
(The Foolish Lion and the Clever Rabbit)




அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.


சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.

இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

இன்றைய செய்தி துளிகள்:

1.இன்று  முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

2.ஒரே கார்டில் லைசன்ஸ், ஆர்.சி.புக்.,வரி, காப்பீடு
விவரங்கள் : வாகன ஓட்டிகளுக்கு வழங்க போக்குவரத்துத் துறை திட்டம்

3.பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 10-ம் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது

4.சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா அரசு கலைப்பு: காபந்து முதல்வராக சந்திரசேகரராவ்

5.உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம்

Wednesday, September 05, 2018

பள்ளிகளில் சேர ஆதார் கட்டாயமில்லை


ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்க ளின் தலைமைச் செயலாளர்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சில பள்ளிகளில் ஆதார் இல்லாததை காரணம் காட்டி மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட மறுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஆதார் இல்லாத காரணத்துக்காக மாணவர்கள் சேர்த்து கொள்ள மறுக்கப்படும் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோல், ஆதார் இல்லாததை சுட்டிக்காட்டி, பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுப்பது, சட்டத்துக்கு எதிரான செயலாகும். மேலும் விதிகளை மீறும் செயலாகும். ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் சேர்க்க எந்த மாணவர்களுக்கும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.

அதேபோல், பள்ளிகளில் வேறு சலுகைகளையும் மறுக்கக் கூடாது. மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல், ஆதார் தகவல்களை திருத்துதல் உள்ளிட்ட பணிகளில் உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், பள்ளி கல்வித் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் பள்ளிகள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் ஆதார் பதிவு செய்தல், ஆதார் திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

MORNING prayer 6-9-18

*🔶🔶School Morning Prayer Activities*

*06.09.2018*

*🔶🔶பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்*

*🔶🔶திருக்குறள்:45*

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

*🔶🔶உரை*

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

*🔶🔶பழமொழி*

Be slow to promise but quick to perform

ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று

*🔶🔶பொன்மொழி*

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை
நாம் உணர்வதில்லை.

- வோல்டன் .

*🔶🔶இரண்டொழுக்க பண்பாடு*

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

*🔶🔶பொது அறிவு*

1.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?
பராங்குசம் நாயுடு

2.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை

*🔶🔶நீதிக்கதை*

*சிங்கத் தோல் போர்த்திய கழுதை*

*(The Donkey in The Lion's Skin)*

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.

அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது.

கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.

கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.
அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது.

அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.

மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது.

நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.
“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.
கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.

*நீதி*

நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்

*🔶🔶இன்றைய செய்தி துளிகள்*

1.கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு

2.வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை சில நாட்களுக்கு தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

3.ஆசிரியா் தின விழாவில் தலைமை ஆசிரியா் காலில் விழுந்து ஆசி பெற்ற சேலம் ஆட்சியா்

4.ஜப்பானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் புயல்: 200 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய 'ஜெபி'

5.ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் மத்திய அரசு சார்பில் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Tuesday, September 04, 2018

ஆசிரியர் தினம்

கண்டு வியந்திருக்கிறேன். கேமராவுக்குள் சிக்காத அபூர்வமான ஆசிரியர்கள் பலர் எங்கெங்கோ மூலைமுடுக்குகளில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுமைப்பண்பு களத்தில் உருவாவதைப் போல பயிற்சியில் உருவாவதில்லை. மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நிகரானவர் யார்? ஒருவரும் இல்லை.

#ச.தமிழ்ச்செல்வன்

சுந்தர ராமசாமி தன்னுடைய குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் "சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று உலகில் எந்த குழந்தையும் இல்லை. நமக்கு படிப்பு வராது என்று சில குழந்தைகள் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதை வேறருப்பவர் ஆசிரியர். கல்வி முறையில் கோளாறு இருக்கும் போது ஆசிரியரை மட்டும் குற்றவாளியாக்கி பேசுவதில் நியாயம் இல்லை.மேலும் சோவியத் கதை ஒன்றை குறிப்பிடுகிறார்.

" தினமும் கதறி அழுதபடி அம்மாவைப் பிரிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை., மௌனத்தில் அமிழ்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வகுப்பில் ஆசிரியை மெல்லமெல்ல உரையாடி வீட்டில் அம்மாவிடம் பேசுவதைப் போலவே தன்னிடம் பேச வைக்கிறார். அக்குழந்தை தனக்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்துவிட்டார்கள் எனச் சொல்லி முடிகிறது கதை.

தான் பத்தாம் வகுப்பு படித்தபோது தன் அறிவியல் ஆசிரியர் சபரிமலைக்கு மாலை இட்டுச் செல்வதும் மகரஜோதியை நம்புவதும் முரண் அல்லவா? என்று அறிவியல் ஆசிரியர்களை சாடுகிறார்

#ஆயிஷா இரா.நடராசன்

வகுப்பறைச் சூழலை சிலாகித்து பதிவு செய்துள்ளார். ஒரு அறிவியல் ஆசிரியரின் பணி பாடங்களை வெறுமனே நடத்துவது அல்ல., மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விடை தேடும் மனம் ஒன்றை மாணவர்க்கு விதைத்தலே  என அவர் தன் ஆசிரியரை நினைவு கூறுகிறார். மேலும் "கற்றலுக்கான சூழலை வகுப்பில் உருவாக்கு.. ஒருபோதும் கற்பிக்காதே.. குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது. அவர்களை தானே கற்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஒரு ஆசிரியரின் பணி என்கிறார்

#எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு ஆசிரியரை ஏன் நமக்குப் பிடிக்கிறது? ஏன் வெறுக்கிறோம்? வெறும் பாடம் சொல்லித் தரும் விஷயத்தால் ஏற்படுவதில்லை.
மாணவர்களின் அறிவுத்திறனை தனித்துவத்தை மேம்படுத்துவார்கள். இனியவர்களாக இருந்தார்கள். "பொறுமைதான்" ஆசிரியர்களுக்கான அடிப்படை பண்பு. மாணவன் எவ்வளவு முறை கேட்டாலும், புரிந்துகொள்ளாமல் போனாலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் ஆசிரியர் பொறுமையாய் அணுக வேண்டும்.

அடுத்த பண்பு அக்கறை. மாணவன் எப்படி படித்தால் எனக்கு என்ன? என இருக்காமல் அவனது கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை என்பது ஒரு வழி சாலை அல்ல இரு வழிச்சாலை. மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர்களும் புதியன கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் தொடர்ந்து வாசித்து தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கலீல் ஜிப்ரான் சொல்லுவார் "உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியரிடம் அனுப்பாமல், படிக்கின்ற ஆசிரியரிடம் அனுப்புங்கள்" என்று.
மாணவரை ஒரு சமூக மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களின் கனவுகளை ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள். அதற்கு தூண்டுகோலாகவும் இருக்கிறார்கள்."கற்றுக்கொள், கற்றுக்கொடு,கற்றதைச் செயல்படுத்து.!

#இவர்கள் தவிர த.வி வெங்கடேஷ், இறையன்பு,பவா செல்லதுரை, கீரனூர் ஜாகிர்ராஜா,
துளசிதாசன் போன்றோரும் தம் பள்ளிப்பருவம் மற்றும் ஆசிரியர்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.

#உலகில் புனிதமான தொழில் இரண்டு1 மருத்துவர்,
2.ஆசிரியர்.ஒருவர் மனிதனை பிணமாகாமலும்,மற்றவர் நடைபிணமாகாமல் பார்த்துகொள்வார்
-வெ.இறையன்பு

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

அக்டோபரில் இனி தேர்வு கிடையாது


பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும்.

அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். அரசு பள்ளிகளை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இதற்காக, வட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்கள், சில தினங்களில் வெளியிடப்படும். அதன் பின், பள்ளியை தத்தெடுக்க விரும்புவோர், நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

பள்ளிகளை தத்தெடுக்கும் பணிக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும். பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட, 14417 என்ற எண்ணுக்கு, இதுவரை, 300 புகார்கள் வந்து உள்ளன. அவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.