இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 04, 2018

ஆசிரியர் தினம்

கண்டு வியந்திருக்கிறேன். கேமராவுக்குள் சிக்காத அபூர்வமான ஆசிரியர்கள் பலர் எங்கெங்கோ மூலைமுடுக்குகளில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுமைப்பண்பு களத்தில் உருவாவதைப் போல பயிற்சியில் உருவாவதில்லை. மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நிகரானவர் யார்? ஒருவரும் இல்லை.

#ச.தமிழ்ச்செல்வன்

சுந்தர ராமசாமி தன்னுடைய குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் "சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று உலகில் எந்த குழந்தையும் இல்லை. நமக்கு படிப்பு வராது என்று சில குழந்தைகள் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதை வேறருப்பவர் ஆசிரியர். கல்வி முறையில் கோளாறு இருக்கும் போது ஆசிரியரை மட்டும் குற்றவாளியாக்கி பேசுவதில் நியாயம் இல்லை.மேலும் சோவியத் கதை ஒன்றை குறிப்பிடுகிறார்.

" தினமும் கதறி அழுதபடி அம்மாவைப் பிரிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை., மௌனத்தில் அமிழ்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வகுப்பில் ஆசிரியை மெல்லமெல்ல உரையாடி வீட்டில் அம்மாவிடம் பேசுவதைப் போலவே தன்னிடம் பேச வைக்கிறார். அக்குழந்தை தனக்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்துவிட்டார்கள் எனச் சொல்லி முடிகிறது கதை.

தான் பத்தாம் வகுப்பு படித்தபோது தன் அறிவியல் ஆசிரியர் சபரிமலைக்கு மாலை இட்டுச் செல்வதும் மகரஜோதியை நம்புவதும் முரண் அல்லவா? என்று அறிவியல் ஆசிரியர்களை சாடுகிறார்

#ஆயிஷா இரா.நடராசன்

வகுப்பறைச் சூழலை சிலாகித்து பதிவு செய்துள்ளார். ஒரு அறிவியல் ஆசிரியரின் பணி பாடங்களை வெறுமனே நடத்துவது அல்ல., மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விடை தேடும் மனம் ஒன்றை மாணவர்க்கு விதைத்தலே  என அவர் தன் ஆசிரியரை நினைவு கூறுகிறார். மேலும் "கற்றலுக்கான சூழலை வகுப்பில் உருவாக்கு.. ஒருபோதும் கற்பிக்காதே.. குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது. அவர்களை தானே கற்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஒரு ஆசிரியரின் பணி என்கிறார்

#எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு ஆசிரியரை ஏன் நமக்குப் பிடிக்கிறது? ஏன் வெறுக்கிறோம்? வெறும் பாடம் சொல்லித் தரும் விஷயத்தால் ஏற்படுவதில்லை.
மாணவர்களின் அறிவுத்திறனை தனித்துவத்தை மேம்படுத்துவார்கள். இனியவர்களாக இருந்தார்கள். "பொறுமைதான்" ஆசிரியர்களுக்கான அடிப்படை பண்பு. மாணவன் எவ்வளவு முறை கேட்டாலும், புரிந்துகொள்ளாமல் போனாலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் ஆசிரியர் பொறுமையாய் அணுக வேண்டும்.

அடுத்த பண்பு அக்கறை. மாணவன் எப்படி படித்தால் எனக்கு என்ன? என இருக்காமல் அவனது கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை என்பது ஒரு வழி சாலை அல்ல இரு வழிச்சாலை. மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர்களும் புதியன கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் தொடர்ந்து வாசித்து தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கலீல் ஜிப்ரான் சொல்லுவார் "உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியரிடம் அனுப்பாமல், படிக்கின்ற ஆசிரியரிடம் அனுப்புங்கள்" என்று.
மாணவரை ஒரு சமூக மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களின் கனவுகளை ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள். அதற்கு தூண்டுகோலாகவும் இருக்கிறார்கள்."கற்றுக்கொள், கற்றுக்கொடு,கற்றதைச் செயல்படுத்து.!

#இவர்கள் தவிர த.வி வெங்கடேஷ், இறையன்பு,பவா செல்லதுரை, கீரனூர் ஜாகிர்ராஜா,
துளசிதாசன் போன்றோரும் தம் பள்ளிப்பருவம் மற்றும் ஆசிரியர்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.

#உலகில் புனிதமான தொழில் இரண்டு1 மருத்துவர்,
2.ஆசிரியர்.ஒருவர் மனிதனை பிணமாகாமலும்,மற்றவர் நடைபிணமாகாமல் பார்த்துகொள்வார்
-வெ.இறையன்பு

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment