இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 28, 2018

பிறந்த தேதி தவறாக இருந்தால் பணி நீக்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதார மாக பயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், கூறப்பட்டுள்ள தாவது:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும்.பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, பத்தாம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும்.வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக்கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :ஆசிரியர் தினத்தில் வழங்கப்படும்


ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

TNPSC GROUP-2 VACANCY POSITION #TNPSC


MORNING PRAYER -29-9-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பழமொழி :

Ass loaded with gold still eats thistles

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

பொன்மொழி:

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.

-அன்னை தெரசா.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?
மும்பை

2.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்

நீதிக்கதை :

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.இந்தியாவுக்கு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2.காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு....... முக்கொம்பு பணிகள் பாதிக்கும் அபாயம் உடைப்பை அடைக்க தீவிரம்

3.வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

4.2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

5.ஆசிய விளையாட்டு: 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இந்தியா

Monday, August 27, 2018

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதிய பிடித்தம் பற்றிய அரசாணை வெளியீடு #KeralaFloods


https://drive.google.com/file/d/1SezPQSOuo1mXWtC4PDwxbyXjl7tk6KaN/view?usp=drivesdk

ஆசிரியர்களுக்கு அறிவுரை


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இணையதளம் : இதைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, ஆக., 23 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 50 ரூபாய். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

MORNING prayer 28-8-18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.18
திருக்குறள்

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

விளக்கம்:

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாது.

பழமொழி

Be a Roman when you are in Rome

உலகத்தோடு ஒத்து வாழ்

இரண்டொழுக்க பண்பாடு

1.  எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.

2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

பொன்மொழி

சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்திற்கு நாம் தரக்கூடிய ஒரே இலக்கணம்.

            - விவேகானந்தர்

பொது அறிவு

1.மாரத்தான் ஓட்டம் என்பது எவ்வளவு தூரம்?

  42.195கிலோமீட்டர்

2.2018 காமன்வெல்த் போட்டிகள் எங்கு நடைபெற்றன ? 
   
ஆஸ்திரேலியா

English words and. Meanings

Religion.          மதம்
Recommend  பரிந்துரை
Release.        விடுவித்தல்
Radiation.        கதிர்வீச்சு
Reminder.      ஞாபகப்படுத்துதல்

நீதிக்கதை

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.

சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.

யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.

உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.

“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.

நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.

“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.

நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.

சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.

சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.

“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.

“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.

“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.

“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.


அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.

நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.

கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.

சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?” என்று சிங்கத்திடம் நரி கூறியது.

சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.

நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.

குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே இல்லையே?” என்று சிங்கம் கேட்டது.

“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.

சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.

“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.

நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.

இன்றைய செய்திகள்

28.08.18

* சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள 15 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

*  இருசக்கர வாகன பயணத்தின் போது, வாகன ஓட்டியும், பின்னால் பயணிப்போரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

* இந்தியாவில் முதல்முறையாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று உயிரி (பயோ) எரிபொருள் மூலம்  திங்கள்கிழமையன்று இயக்கப்பட்டுள்ளது.

* ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

பருவமழை குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் பாதுகாப்பு செயல்முறைகள்



Sunday, August 26, 2018

சிப்' பொருத்திய, 'டெபிட்' கார்டு பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு


நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., வரும், டிச., 31க்குள், 'இ.எம்.வி., - சிப்' உடன் கூடிய புதிய, 'டெபிட்' கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை வலியுறுத்தி உள்ளது. சமீப காலமாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நிகழ்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இ.எம்.வி., எனப்படும், 'ஈரோபே மாஸ்டர் கார்டு விசா' சிப் பொருத்தப்பட்ட புதிய, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், புதிய டெபிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிகேட்டுக் கொண்டுள்ளது.இந்த வகை டெபிட் கார்டுகளும், அதனுடன் அளிக்கப்படும், 'பின்' எனப்படும், தனித்துவ அடை யாள எண்ணும், 'ஸ்கிம்மிங்' கருவி மூலம் மோசடி செய்ய முடியாதவை.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட அறிக்கை:புதிய மாற்றத்துக்கான நேரம் வந்துள்ளது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், 'இ.எம்.வி., - சிப்' பொருத்தப்பட்ட புதிய டெபிட் கார்டுகளை, வரும், டிச., 31க்குள் மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு, 28.9 கோடி டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்


அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, மாணவர் வருகை அடிப்படையில், அரசின் கல்வி உபகரண பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை படிக்கும், 72 லட்சத்து, 55 ஆயிரம் மாணவ - மாணவி யருக்கு புத்தகப்பை; 1 - 10ம் வகுப்பு படிக்கும், 58 லட்சம் பேருக்கு காலணி; 3 - 5ம் வகுப்பு படிக்கும், 15 லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு, கலர் பென்சில்; 6 - 10 வரை படிக்கும், 16 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்க, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவி யருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி, அடுத்த இரு மாதங்களில் துவங்கும்' என்றனர்

Morning prayer 27-8-18


27-8-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

உரை:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

பழமொழி :

As rare as hen’s teeth

அத்தி பூத்தார் போல்

பொன்மொழி:

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.

-சிம்மன்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?
44%

2.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?
மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்

நீதிக்கதை :

உதவி:-

கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.

கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.பள்ளிகளுக்கு சேவை செய்திட முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு!

2.PTA மூலம் அரசு பள்ளிகளில் 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

3.விவசாய இணைப்புகளுக்கு 1,000 மெ.வா. மின்சாரம் விநியோகம்: மின் துறை அமைச்சர் தகவல்

4.அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து: பாட்மிண்டனில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி