☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*நாளை புதுகையில் 12-வது மாநிலத் தேர்தல்*
https://tnptfvizhudhugal.blogspot.in/2018/03/12.html?m=1
*உரிமையது பறிபோனால் குரலெழுப்பத் தயங்காதே!*
*உரியதை மீட்கும்வரை கரமுயர்த்த மறவாதே!*
என்று ஆசிரிய இயக்க வரலாற்றில் தனிப்பெரும் உரிமை மீட்புப் போராளிப் பாசறையாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது,
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!*
*☀மாஸ்டர்.வா.ராமுண்ணி*யின் வழியில், சமரசமற்ற போராளிகளால் உதித்தபோதே போராட்டக் களத்தில் குதித்திட்ட பேரியக்கத்தின் இயக்கமானது,
☀அன்றிலிருந்து இன்று வரை ஆசிரியர் நலன் - மாணவர் நலன் - சமூக நலன் சார்ந்த உரிமைகளை மீட்டெடுக்கும் களத்தில் அதிகார மமதைகளை உடைத்தெறிந்து, ஆணவச் செருக்குகளைத் தகர்த்தெறிந்து, தேவையெனில் கூட்டியக்கங்களையும் கட்டமைத்து கோரிக்கைகளை வென்றெடுத்தே வந்துள்ளது.
*☀இயங்கும் இயக்கத்தின் தனிப்பெரும் இயக்குவிசை என்பது உறுப்பினர்களின் உணர்வு வேட்கையை அடிப்படையாகக் கொண்டதே.*
☀ஆம்! *வரலாறு என்றும் தனியொருவனுக்கு உரியதல்ல!*
☀தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாறும் அத்தகைய சீர்மை மிகுந்ததே!
☀அச்சீர்மையைக் குலையவிடாது கொண்டு சென்றுகொண்டிருக்கும் தலையாயப் பொறுப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளாக பணியமர்த்தப்படும் பொறுப்பாளர்களுக்கு உண்டு.
☀பணிக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளாவோர், பணியில் உள்ள வீர வேங்கைகளேயாம்!
☀'தானைத் தலைவன்!', 'அழியும் வரை அரசன்!', 'நானே ராஜா! நானே மந்திரி!' என்பன போன்ற ஏகாதிபத்திய ஏகத்தலைமைத்துவம் ஏதுமின்றியே, இங்கு தலைமைப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
☀இத்தகைய இலக்கணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் தான் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* என்பது அன்றிலிருந்து இன்றுவரை தலைமையால் அடையாளப்படுத்தப்படாது *TNPTF* என்று தனக்குத் தான் மட்டுமே அடையாளமென இயங்கிக் கொண்டிருக்கிறது.
_⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய உரிமைப் பறிப்பு!_
_⚡ஓய்வூதிய உரிமைப் பறிப்பு!_
_⚡பொதுக் கல்விக்கான மாநிலப் பொறுப்புத் துறப்பு!_
_⚡கல்வியை வணிகமாக்கி காவி நிறமேற்றும் வஞ்சகக் கொதிப்பு!_
உள்ளிட்ட இன்னல்கள் சூழ்ந்துள்ள காலகட்டத்தில்,
☀இயக்க உறுப்பினர்களை வலுவூட்டி, இயக்கத்தின் இயக்கத்தை மெருகேற்றி, பறித்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் உரிமைகளைப் பறிக்கவிடாது காக்கவும் வல்ல அடுத்த கட்ட தொடர் இயக்கத்திற்கான தலைமைப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தல்கள் வட்டார - நகர - மாவட்டக் கிளைகளைத் தொடர்ந்து உச்ச நிலையான மாநிலத் தேர்தலை எட்டியுள்ளது.
☀ஆம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான தலைமைப் பொறுப்புகளை உடனேற்று தன் இயக்கப் பயணத்தைத் தொடரவுள்ள போராளிகளின் உறுதியேற்பு முழக்கம் கேட்க நாளைய விடியலும் காத்துக்கிடக்கிறது.
*🔰02.08.84 : (சென்னை)*
ந.வீரையன் - ச.அப்துல்மஜீத் - பெ.முத்தையா
*🔰24.05.87 : (திருவாரூர்)*
ந.வீரையன் - ச.அப்துல்மஜீத் - பெ.முத்தையா
*🔰06.10.1990 : (மதுரை)*
கே.ஏ.தேவராசன் - செ.நடேசன் - மா.ச.முனுசாமி
*🔰28.05.1993 : (அவிநாசி)*
கே.ஏ.தேவராசன் - செ.நடேசன் - மா.ச.முனுசாமி
*🔰06.10.1996 : (திண்டுக்கல்)*
மா.ச.முனுசாமி - செ.நடேசன் - நா.நாகப்பன்
*🔰28.11.1999 : (மதுரை)*
மா.ச.முனுசாமி - செ.நடேசன் - ந.பர்வதராஜன்
*🔰12.10.2002 : (கன்னியாகுமரி)*
சா.தோ.அந்தோணிசாமி - ந.பர்வதராஜன் - கோ.முரளீதரன்
*🔰03.12.2005 : (திருப்பத்தூர்)*
கோ.முரளீதரன் - ந.பர்வதராஜன் - தி.கண்ணன்
*🔰25.01.2009 : (கரூர்)*
தி.கண்ணன் - செ.போத்திலிங்கம் - ச.மோசஸ்
*🔰11.03.2012 : (திண்டுக்கல்)*
தி.கண்ணன் - முருக.செல்வராஜன் - ச.மோசஸ்
*🔰18.01.2015 : (திருப்பூர்)*
ச.மோசஸ் - செ.பாலசந்தர் - ச.ஜீவானந்தம்
☀போன்ற தலைமைப் போர்த்தளபதிகளின் ஒப்பற்ற முதன்மைப் போராளிகளைத் தொடர்ந்து,
☀போராளிப் பாசறையின் அடுத்த கட்ட போர்த்தளபதிகள் & முதன்மைப் போராளிகள் யார் என்பதை மக்களாட்சி மாண்போடு தேர்வு செய்திட வருகைதரும் தோழர்கள் அனைவரையும்
☀ஒருங்கிணைந்த இந்தியத் துணைக்கண்டத்தின் தனிப்பெரும் சமஸ்தானங்களில் ஒன்றாகத் திகழ்ந்திட்ட,
☀நூற்றாண்டு கண்ட நகராட்சியாம்,
☀புதுக்கோட்டை மாநகருக்குத் தோழமையுடன் அழைக்கிறோம்.
🕙காலம் : 04.03.2018 முற்பகல் 10மணி
🏢களம் : கிரீன் பேலஸ், பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை.
_அழைப்பின் மகிழ்வில்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*பொன்னமராவதி வட்டாரக்கிளை*
*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*