இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 21, 2017

வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி


வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது தொடர்பான உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இந்த விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசு கெஜட்டில் வெளியிடப்பட்ட, 2017ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் 2ஆவது திருத்த விதிகளின்படி, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கிறது. இந்த விதிகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிவுரைகளுக்காக காத்திருக்காமல், வங்கிகள் இதை செயல்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், தனி நபர்கள் பல்வேறு நிரந்தர கணக்கு எண் அட்டைகளை (பான்) வைத்திருப்பதை தடுக்கும் வகையில், பான் அட்டைகளுடன் ஆதாரை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதுதொடர்பாக 2005-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிக மதிப்புத் தொகையை பரிவர்த்தனை செய்வதற்கும் ஆதாரை கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோல், ஏற்கெனவே வங்கியில் கணக்குகளை வைத்திருப்போர், தங்களது கணக்குகளுடன் ஆதாரை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த வங்கி அளித்த பதிலில், வங்கிக் கணக்குடன் ஆதாரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதையே ரிசர்வ் வங்கி தற்போது மறுத்துள்ளது.

முன்னதாக, ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அதில் தனிநபர் ரகசியம் காத்தல் தொடர்பான வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது, தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் தொடர்பான இறுதி தீர்ப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுத் துறை வங்கி அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை வெளியிடும் வரையிலும், வங்கி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளின் அதிகாரிகள் சங்கம் (ஏஐபிஒசி) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறையால் வங்கிகளில் பணிபுரிவோர் நெருக்கடிக்கு ஆளாகிவரும் நிலையில், ஆதாரை வங்கி கணக்குடன் இணைக்கும் பணியை மேற்கொள்வது என்பது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தரப்பில், சில வங்கிகள், தங்களது குறிப்பிட்ட கிளைகளுக்கு ஆதாரை புதிதாக பதிவு செய்யும் வசதிகளை செய்துதரும்படி உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது.

இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, 'ஆன் - லைனில்' பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது. மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

Friday, October 20, 2017

மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' கல்விமுறை: அமைச்சர் செங்கோட்டையன்


மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' எனப்படும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார். இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்கள் 412ல் இருந்து 450 ஆக உயர்த்தப்படும் என்றும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு வருட காலம் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் இப்பயிற்சி மையங்களுக்கான அனுமதி வரும் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பரில் ஸ்மார்ட் கார்டு


தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் 35414, நடுநிலைப் பள்ளிகள் 9708, உயர் நிலைப் பள்ளிகள் 5705, மேனிலைப் பள்ளிகள் 7206 இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 1 கோடியே 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு அடையாள அட்டை போன்ற மாணவர்கள் முழு விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் அறிவித்தார்.

இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாணவர்களின் தகவல்களை திரட்டும் பணி தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நேற்று ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது. தற்போது அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்மார்ட் கார்டு அச்சிடும் இயந்திரம் வாங்கியதும் அச்சிடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்குவார்கள். அதில் 1 கோடியே 25 லட்சம் மாணவ, மாணவியர் ஸ்மார்ட் கார்டுகள் பெறுவார்கள்.

3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.

இவற்றின் மூலம் 770 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நேரடியாக கற்றல் கற்பித்தல் பெற்றுவருகின்றனர். அதேபோல 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் ஆசிரிய மாணவர்களும் கற்றல் கற்பித்தலை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 3 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததை அடுத்து தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது ரூ. லட்சம் செலவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கிளாசுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள உபகரணங்களை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் செயல்படுத்தி காட்டினர். இந்த ்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை பார்த்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த உபகரணங்களை அமைச்சர் பார்ப்பார். அதற்கு பிறகு அந்த உபகரணங்கள் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும். நவம்பர் மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கும்.

அக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு


அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள,87 ஆயிரம் பள்ளிகளில், ௪௭ லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அவர்களில், ௧௮ லட்சம் பேர், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், தனியார் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களை விட, பொதுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுகின்றனர்; தேர்ச்சி விகிதமும் குறைவாக உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, அக்., ௨௩ முதல், அனைத்து பள்ளி களிலும், சிறப்பு வகுப்பு துவக்கப்படுகிறது. மாணவர்கள் சோர்வாகாமல் இருக்க, ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினர், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் சுண்டல், பிஸ்கட் போன்ற சிற்றுணவு வழங்கப்பட உள்ளது

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம்;23ம் தேதி ஆலோசனை கூட்டம்


தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும்.
தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. எனவே, உபரியாக,  இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது.

இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

ரிசர்வ் வங்கி பதில்

வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'


வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும், டிச., 31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணையதளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்:

வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை.சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், 1 ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிதாக கணக்கு துவக்குபவர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை



Thursday, October 19, 2017

அரசு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு கட்டுப்பாடு


அரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. அரசு விழாக்களில் மாணவர்களை பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதுதொடர்பாக, விதிகள் வகுக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், இரண்டு கட்டமாக கூடி, குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசித்து, விதிகளை வகுத்துள்ளனர். மாணவர் பாதுகாப்பு, நலன், விழா நோக்கம், கல்வித் துறை அனுமதி, பெற்றோரின் விருப்பம் போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு, விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிகளை, பொது மக்கள் கருத்துகளை கேட்டு, மாற்றம் செய்யவும், பின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அரசு முடிவு செய்துள்ளது.

பொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டு தேர்வு


தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 1 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'; முதல்வரிடம் குவியும் மனுக்கள்


தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., 11ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.

இன்று விளக்க கூட்டம்

இந்த உயர்வு அறிவிப்பு, ஊதிய முரண்பாடு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள், மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகம் முன், இன்று விளக்க கூட்டம் நடத்துகின்றனர். அதன்பின், 'நீதிமன்றத்தை அணுகுவோம்; அதிலும், முடிவு கிடைக்காவிட்டால், போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

குறு மைய அளவிலான அறிவியல் கண்காட்சி(தொடக்க நிலை&உயர் தொடக்க நிலை) தொடர்பான செயல்முறைகள்.





PAY FIXATION

மிக முக்கிய செய்தி

அனைவரும் குறிப்பெடுத்துக் கொள்ளவும்.
மதுரை மு.தென்னவன்.

*How to Do Pay Fixation - Full Details!*

The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது. பக்கம் 9 - ல் 3 (1) ல் existing Basic Pay பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் does not include any other type of pay like Spl pay , personal pay etc என உள்ளது.

எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்தாக Pay matrix*

2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay matrix table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில் அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal to or next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும்.

*Increment கணக்கிடுதல்*

அடுத்ததாக Increment கணக்கிடுதலில் புதிய அடிப்படை ஊதியத்தை 3% ஆல் பெருக்கி increment கணக்கிடக் கூடாது. *Increment கணக்கிடும் போது Pay matrix table - ஐ தான் பார்க்க வேண்டும்.* பக்கம் 14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் *The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix.*
(Illustration - III - See schedule - V) என உள்ளது.
*அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது.* (Vertically down along the applicable level by one cell).
எனவே increment - க்கும் Pay matrix இவ்வாறாக பார்த்து increment தொகையுடன் கூடிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக அடுத்த increment - க்கு அடுத்த cell - க்கு கீழே வந்து அதனை increment உடன் கூடிய ஊதியமாக கொள்ள வேண்டும்.
*Increment தொகை 3% தொகையளவு இருந்தாலும் ஆறாவது ஊதிய குழு போல 3% ஆல் வகுத்து கணக்கிட தற்போதைய குழுவில் விதிகளில் இடமில்லை, pay matrix தான் increment - க்கும் பார்க்க வேண்டும்.*

*தேர்வுநிலை/சிறப்புநிலை கணக்கிடல்*

தேர்வுநிலை/சிறப்புநிலைகளில் 3% + 3% என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

*பக்கம் 3-ல் 10- ல் இவைகளை குறிப்பிடும் போது two increment என்றே உள்ளது.*

எனவே increment கணக்கிட கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின்படியே தே.நி/சி.நி கணக்கிடும்போது two increments - க்காக pay matrix - ல் two cell கீழே வந்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

*Personal Pay*

தனி ஊதியமான 750 - ஐ 2.57 ஆல் பெருக்கி தற்போது தனி ஊதியம் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 10 - ல் 3(VIII) - ல் basic pay in the revised pay structure means எனக் குறிப்பிட்டு basic pay என்பது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை எனக் குறிப்பிட்டு அதில் special pay/ Personal pay etc சேராது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே 1.1.16 - ல் 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் தனி ஊதியம் 2000 - த்தை கூட்டி Pay matrix - ல் பார்க்க கூடாது.

*ஏழாவது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்க கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றலாம்*

1. 01.01.2016 அல்லது

2. 01.01.2016 க்கு பிறகு ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம் அல்லது தற்போது பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது எனில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டு அதே தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அல்லது

3. 01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவி உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

Source : G.O.Ms.No.303, Dated : 11.10.2017 - point No. 8 (a,b,c).

மதுரை மு.தென்னவன் ஜனநாயக வகுப்பறை

Wednesday, October 18, 2017

ஜியோ கட்டண விகிதங்களில் இன்று முதல் மாற்றம்


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டண விகிதங்களை உயர்த்தியுள்ளது. 84 நாட்கள் திட்டத்திற்கான கட்டணம் இன்று முதல் 459 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 509 ரூபாய் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகளும் குறைக்கப்படுவதாக ஜியோ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 149 ரூபாய் திட்டத்தில் உள்ளவர்களுக்கு 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா இரட்டிப்பாக்கப்பட்டு 4 ஜிபி ஆக்கப்பட்டுள்ளது.

32 மாவட்டங்களில் நாளை ஜாக்டோ - ஜியோ கூட்டம்


தமிழக அரசின் ஊதிய உயர்வு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, ஜாக்டோ - ஜியோ சார்பில், நாளை தமிழகம் முழுவதும், ௩௨ மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் விளக்க கூட்டம் நடக்கிறது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு கேட்டு, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு நடத்திய காலவரையற்ற ஸ்டிரைக்கால், தமிழக பள்ளி - கல்லுாரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசின் சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, ஆசிரியர், அரசு ஊழியர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ௨௦௧௬ ஜன., முதல், அரசு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகை வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், தமிழக அரசு நீக்கவில்லை என, ஜாக்டோ - ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவின் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் கூடி, ஆலோசனை நடத்தியது. இதன்படி, முதற்கட்டமாக, நாளை, 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. 'ஊதிய உயர்வு ஏமாற்றம்' என்ற தலைப்பில், இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ''இதையடுத்து, வரும் 23ம் தேதி நீதிமன்றத்தில் ஊதிய உயர்வின் குளறுபடிகள் மற்றும் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை குறித்து முறையிடப்படும். அதன் பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்.