இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 29, 2017

38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு


பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்வித்துறையில், வருவாய் மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகளும், ஒன்றியம் வாரியாக, மாவட்ட கல்வி அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். இதில், ௩௮ மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன. உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்கி, இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான உத்தரவு, சில தினங்களில் வெளியாக உள்ளது. அப்போது, மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர், மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் இன்று வெளியீடு


இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் இடம் பெற்ற, அதிகாரப்பூர்வ அறிக்கையை, அண்ணா பல்கலை இன்று வெளியிடுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்குகிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விதிகள், இன்று வெளியாகின்றன. தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவிக்கும் விதிகளின்படி, மாணவர் சேர்க்கை நடக்கும்.

2017-18 ல் உயர்/மேல் நிலைப்பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு முறைகள்


AEEO post vacant list :RTI:as on 31-5-17

TET PAPER :1Answer key



தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. விலங்கியல் பாடத்தில் 16-வது வினாவுக்கு பதில் அளித்த அனைவருக்கும் ஒருமதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2-5-17 கல்வியமைச்சரை சந்திக்க அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கான அழைப்பு

Friday, April 28, 2017

முந்தைய தகுதி தேர்வு மூலம் 1,114 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்

முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

தமிழ்-133

ஆங்கிலம்-99

கணிதம்-80

இயற்பியல்-40

வேதியியல்-39

தாவரவியல்-60

விலங்கியல்-22

வரலாறு-213

புவியியல்-428

# பட்டியல் www.trb.tn.nic.in ல் உள்ளது

# முன்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையில் சேராதோர் மே-10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேயம் பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய–மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2018–ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018–ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30–ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. 7–ந்தேதி நுழைவுத்தேர்வு நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர்.

மாணவ–மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத்தேர்வை மே 7–ந்தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.saidais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 5–ந்தேதி. அனுமதி சீட்டு ஏற்கனவே நுழைவுத்தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை www.saidais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறவேண்டும்.

அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தவிகடன் நொடிக்கதையில் எனது கதை 4-5-17

நாளையும், நாளை மறுநாளும் ஆசிரியர் தகுதி தேர்வு : தேர்வர்கள் காலை 8.30க்கு தேர்வு மையத்திற்கு வரவேண்டும்


தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் காலை 8.30க்கு தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 நாளையும், தாள் 2 நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது.

தேர்வு மைய நடவடிக்கைகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கும். காலை 8.30: தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவர். காலை 9.30: தேர்வர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டு வருகையை பதிவு செய்தல். காலை 9.40: ஓஎம்ஆர் விடைத்தாள் விநியோகம் மற்றும் பெயர், பதிவு எண், வினாத்தாள் வரிசை எண் ஆகியவற்றை எழுதுதல். காலை 9.50: வினாத்தாள் கட்டுகள் தேர்வர் முன்னிலையில் திறக்கப்படுதல்.
காலை 9.55: வினாத்தாள் விநியோகம்; வினாத்தாள் வரிசை எழுத்து (ஏ,பி,சி,டி) ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிவு செய்தல்.

காலை 10: நீண்ட மணி அடித்ததும் தேர்வு தொடங்கும். தேர்வர் வினாத்தாள் மீதுள்ள சீல் உடைத்து தேர்வு எழுத தொடங்கலாம். காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் என ஐந்துமுறை மணிகள் ஒலிக்கும். பகல் 12.55: முன்னெச்சரிக்கை மணி ஒலிக்கப்படும்; அதன் பிறகு 5 நிமிடங்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி. பகல் 1: நீண்ட மணி ஒலிக்கும். தேர்வு முடிவுக்கு வந்து ஓஎம்ஆர் ஷீட் கார்பன் நகல் தேர்வரிடம் வழங்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை தேர்வு கூட அதிகாரிகள் நடவடிக்கைகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thursday, April 27, 2017

மருத்துவ சிகிச்சைக்காக பி.எப்.பில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சர்டிபிகேட் தேவையில்லை


மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும், உடல் ஊனமுற்றோர் கருவிகள் வாங்குவதற்கும் டாக்டர் சர்டிபிகேட் இல்லாமல் பிஎப்பில் இருந்து பணம் எடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதில் இருந்து வீடு வாங்க, மருத்துவ சிகிச்சை, திருமண செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை பெறுவோர், இதற்கான பிஎப் திட்டம் பத்தி 68ஜெ-யின் படி ஒரு மாதம் அல்லது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது, பெரிய அறுவை சிகிச்சைகள், டி.பி, பக்கவாதம், புற்றுநோய், இதய சிகிச்சை போன்றவற்றுக்கு மருத்துவர் சான்று சமர்ப்பித்து பணம் பெறலாம்.

இதுபோல் உடல் ஊனம் அடைந்தவர்கள் பத்தி 68என் விதியின்படி சான்று சமர்ப்பித்து அதற்கான கருவிகள் வாங்க பிஎப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்போது பிஎப் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவே, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு பிஎப் நிதியில் இருந்து பணம் பெற விரும்பும் ஊழியர்கள் சான்று சமர்ப்பிக்க தேவையில்லை. இதற்கான திருத்தங்கள் பிஎப் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் இந்த மாதம் 25ம் தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது என பிஎப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் ஊனத்துக்கான உபகரணம் வாங்க ஊழியர்கள் 6 மாத அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏவுக்கு மிகாமல் பெற்றுக்கொள்ள முடியும்.

1,953 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.


குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 1,953 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளங்களின் வழியே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

கல்வி அதிகாரிகளுக்கு கோடை கொண்டாட்டம்


மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும்.

அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட ஆளுமை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மே, 3 முதல், 6 வரை, மதுரையில் சிறப்பு புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன், டாக்டர் அமுதா ஹரி, ஒடிசா அரசின் கூடுதல் தலைமை செயலர், ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர், ச.மாடசாமி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த மூன்று நாள் பயிற்சியில் அதிகாரிகளுக்கு, அறுசுவை விருந்து, கலந்துரையாடல், விவாதம், நகைச்சுவை சொற்பொழிவு, சிலம்பம், கராத்தே, புத்தாக்க விளையாட்டுகள் போன்றவை இடம் பெற உள்ளன. பயிற்சி நிறைவு விழாவில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்களும், அதிகாரிகளும் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும். 'நீட்' போன்ற பல போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பணிக்கு அவகாசம்


அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு பள்ளிகளில், 1,114 பட்டதாரி ஆசிரியர் இடங்கள், ஏற்கனவே, 'டெட்' தகுதித் தேர்வு முடித்தவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேராதவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து, மே, 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பதவிக்கு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்கள் மற்றும் சுயவிபரங்கள் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அவர்கள், மீண்டும் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாமதமாக விண்ணப்பித்தவர்களை நீட் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தாமதமாக விண்ணப்பித்தவர்களை நீட் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு எனப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. தளத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தேர்வுக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து 38 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி 38 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்றும் அனுமதி வழங்கவில்லை என்றால்,சி.பி.எஸ்.இ. இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அகவிலைப்படி உயர்வு அரசாணை -4%

Click below

https://app.box.com/s/i5ugh3el9weq6s8dbf2uqrwb9zh5y6q9

Wednesday, April 26, 2017

TNPSC GROUP-2A NOTIFICATION


உத்தரவை மீறி விடுப்பில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளி ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்


மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 21ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் செயல்படாது.

இது குறித்து ஏற்கெனவே அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 20ம் தேதிக்கு பிறகும் இயங்குவதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. மேலும் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றை தவிர்த்து பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனுப்பிய சுற்றறிக்கை ஆகியவற்றை மீறி மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதையும் மீறி பள்ளிகள் செயல்பட்டால் அது தொர்பாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லை என்பதை காட்டுவதாக இருக்கும். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் 'கிரேஸ்' மார்க் கிடையாது : உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு


தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்தோ, கடினமாகவோ, கேள்விகள் இடம் பெற்றால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, சி.பி.எஸ்.இ.,யின் கேரளா, ஆந்திரா மாநில பாடத்திட்டங்களில், போனஸ் மதிப்பெண் என்ற, 'மாடரேட்' முறை பின்பற்றப்படுகிறது. இதில், சில மாணவர்களுக்கு, ௧5 சதவீதம் வரை மதிப்பெண்ணை அதிகரித்து, சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநிலங்கள் தோறும் மதிப்பிடும் முறை மாறுவதால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், 'கிரேஸ் மார்க்' என்ற கருணை மதிப்பெண் முறையை, இந்த ஆண்டே நீக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின், பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளின் கூட்டம், டில்லியில், சமீபத்தில் நடந்தது. அதில், கருணை மதிப்பெண் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு, தமிழகம் உட்பட, 32 பாட வாரியங்கள், ஒப்புதல் தெரிவித்துள்ளன. பள்ளி கல்வி சொல்வது என்ன? : இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறுகையில்,

''தமிழகத்தில், பொதுவாக போனஸ் மதிப்பெண், கருணை மதிப்பெண் போடும் முறை இல்லை. விடைத்தாள் திருத்தம் பல கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது,'' என்றார். சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினரும், பவன்ஸ் ராஜாஜி பள்ளி முதல்வருமான, அஜீத் பிரசாத் ஜெயின் கூறுகையில், ''பல மாநிலங்களில், அதிகப்படியான மதிப்பெண்கள் வழங்குவதால், அந்த மாநில மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடி, மற்ற மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

D.A

Tuesday, April 25, 2017

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பருவ மழை பொய்த்தது மட்டும் காரணமா?260 டிஎம்சி மழைநீர் வீணானதற்கு தடுப்பணை கட்டாத அரசே காரணம் : பொதுப்பணித்துறை அறிக்கையில் அம்பலம்


தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 அணைகளில் 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதே போன்று தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் ஏரிகளில் 10 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. இதனால், பாசனம் மற்றும் குடிநீர் தட்டுபாட்டு தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. இதற்கு பருவமழை பொய்த்தது முக்கிய காரணம் என்றும், கர்நாடக, ஆந்திர, கேரள அரசுகள் காரணம் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால் முக்கியமான காரணம் தமிழக அரசுதான் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2015ல் தமிழகம் முழுவதும் சராசரி மழையை காட்டிலும் 190 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. இந்த மழை நீரை ஆற்றில் குறுக்கே தடுப்பணை மூலம் தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தண்ணீர் நிலத்தில் ஊறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தே இருந்து இருக்கும். ஆனால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக தூங்கி வருகிறது. இதனால், கடந்த 2015ல் பெய்த மழையில் 260 டிஎம்சி வரை வெள்ள நீர் வீணாக கடலில் கலந்தது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2015ல் வடகிழக் பருவமழையை 1120 மி.மீ அதாவது சராசரியை காட்டிலும் 190 சதவீதம் பெய்தது. ஆனால், இந்த மழை நீரை சேமிப்பதற்கு தடுப்பணை கட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், 260 டிஎம்சி வெள்ள நீர் கடலில் கலந்தது. குறிப்பாக, 5524 சதுர கி.மீ பரபரப்பளவை கொண்ட கொசஸ்தலையற்று படுகையில் சராசரியாக 1215 மீ.மீ சராசரி மழை அளவு ெபய்தால் 31.4 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இதில், 6.4 டிஎம்சி உபரியாக கடலில் கலக்கிறது. இதே போன்று 10.656 சதுர கி.மீ பரபப்பு கொண்ட பாலாற்று படுகையில் 1165 மி.மீ மழை பெய்தால் 76 டிஎம்சி வரை கிடைக்கிறது. இதில், 24.4 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது.

இதே போன்று 5969 சதுர கி.மீ பரபரப்பளவு கொண்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 889 மி.மீ மழை பெய்தால் 60 டிஎம்சி வரை கிடைக்கிறது. இதில் 24 டிஎம்சி வீணாகிறது. 44,016 சதுர கி.மீ பரபரப்புளவு கொண்ட காவிரி ஆற்றுப்படுகையில் சராசரியாக 1000 மி.மீ மழை பெய்தால் 249 டிஎம்சி கிடைக்கிறது. இதில் 103 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வி துறை சந்திக்கும் சவால்கள்!


பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக, இளங்கோவன் இன்று பொறுப்பு ஏற்கிறார். பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் ஆக்கப்பூர்வமான வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இளங்கோவன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துறையில், பல சவால்கள் காத்திருக்கின்றன. அதன் விபரம்:

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் உட்பட, ஆசிரியர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும்

* பல ஆசிரியர்கள், வகுப்பில் பெயருக்கு பாடம் நடத்திவிட்டு, தாங்கள் நடத்தும் அல்லது பணியாற்றும், 'டியூஷன்' மையத்துக்கு மாணவர்களை வரவழைக்கும் நிலையை மாற்ற வேண்டும்

* தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* குறுநில மன்னர்கள் போல் செயல்படும், முதன்மை கல்வி அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும்

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுடன், ஆசிரியர்களுக்கு, செயல்திறன் அறிதல் திட்டம் கொண்டு வர வேண்டும்

* புதிய பாடத்திட்டம் தயாரிக்கவும், வெளி மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படும் கற்பித்தல் முறைகளை, தமிழகத்தில் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.