இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 03, 2017

அக்டோபர் தேர்வு எழுதியோருக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்


கடந்த அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர், நவ., 3 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அவர்களே, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் மற்றும் ஜூனில் நடந்த தேர்வுகளில், தேர்ச்சி பெறாதோர், அக்டோபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பர். அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், மற்றவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும். சான்றிதழை, இன்று முதல் தேர்வு மையத்தில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்லாஸ்' தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வகம், நுாலகம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மாணவர்களின் கல்வி யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை, 'ஸ்லாஸ்' தேர்வின் மூலம், பள்ளி கல்வித்துறை முடிவு செய்கிறது. ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, இந்த ஆண்டுக்கான, 'ஸ்லாஸ்' தேர்வு, டிசம்பரில் முடிந்து விட்டது. தமிழகம் முழுவதும், 6,200 பள்ளிகளில், தலா, 30 மாணவர்கள் என, 3.72 லட்சம் பேரிடம் இத்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் இரு வாரங்களில், இதன் முடிவுகள் வெளியாகின்றன.

இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: சாதனை கணக்கெடுப்பான, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவுகளின்படி, திறன் படைத்த மாணவர்கள் எந்த பள்ளியில் உள்ளனர்; அவர்களுக்கு, பிரச்னையாக உள்ள பாடப்பகுதி எது என்பதை, அறிய முடியும். அதற்கேற்ப, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

15 வயது நிறைவடைந்தோருக்கு இன்றுமுதல் மீண்டும் ஆதார் பதிவு!


ஆதார் எண் பெற்று 15 வயது நிறைவடைந்தவர்கள் மீண்டும் தங்களது பயோ-மெட்ரிக் தகவல்களை புதன்கிழமை முதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 545 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 9,91,924 பேருக்கு ஆதார் எண்ணுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது பயோ-மெட்ரிக் தகவல்களை, வயது பூர்த்தியான நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்குச் சென்று விவரங்களை அளிக்க வேண்டும். இதற்காக புதன்கிழமை முதல் தகவல்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

413 உதவி தொடக்ககல்வி அலுவலர்களுக்கு கணினி உபகரணங்கள் பெற்றுக்கொள்ளுதல் சார்பு



posted from Bloggeroid

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் 3.1.2017


posted from Bloggeroid

IGNOU - B.Ed. Entrance Test October, 2016 Results held on 23.10.2016 Published

Click below

https://studentservices.ignou.ac.in/Openmat/BED2016/BEd_Entrance_Res2016.asp

Monday, January 02, 2017

வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு


தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் 30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காக அளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. புதிதாக 15 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு

பத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன.

இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, மத்திய அரசு சார்பில், 60 சதவீத நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, 540 கோடி ரூபாய் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, முதற்கட்டமாக, 89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதில், 550 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

TNPTF மாநில செயற்குழு கூட்டம்


posted from Bloggeroid

Sunday, January 01, 2017

Central gov leave list -2017


posted from Bloggeroid

இன்று பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம்  பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், 9ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டுத்  தேர்வு தொடங்கியது. கீழ் வகுப்புகளுக்கும் 7ம் தேதி மூன்றாம் பருவத் தேர்வுகள் தொடங்கின. 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்தன.  இதையடுத்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்பட  தொடங்குகின்றன.

முன்னதாக, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 3ம்  பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பள்ளி திறக்கும் நாளில் அனைத்து  மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் போய்சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்களும் இலவசப் பாடப்புத்தகங்களை பெற்று, அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும்  நேற்றே அனுப்பி வைத்தனர்.  இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

6 சதவீத வட்டியில் வீட்டு கடன்


நடுத்தர வகுப்பினருக்கு, 6 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளதால், கட்டுமான துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், ரொக்க பண பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத பணத்தை பயன்படுத்த முடியாததால், ரியல் எஸ்டேட் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய வீடு கட்டும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் முடங்கியுள்ளன. அத்துடன் கட்டப்பட்ட வீடுகள் விற்பனையும் மந்தமாக உள்ளது. இந்த பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வீடு கட்ட, ஒன்பது லட்சம் ரூபாய் கடன் பெற்றால், 4 சதவீதமும், 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அதற்கான வட்டியில், 3 சதவீதமும் விலக்கு அளிக்கப்படும் என, தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனுக்கு, பொதுத் துறை வங்கிகளில், 10 சதவீதம் வரை, வட்டி வசூலிக்கப் படுகிறது.

பிரதமர் அறிவிப்பின்படி, ஒன்பது லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு, 5 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படும்.அதேநேரத்தில், 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், 6 சதவீத வட்டி கணக்கிடப்படும். இந்த வட்டி விகிதங்கள் அடிப்படையில், அவர்களுக்கான மாத தவணை தொகையும் நிர்ணயிக்கப்படும். இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது:பிரதமர் அறிவிப்பால், நகரங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், சிறிய நகரங்கள், புறநகர், ஊரக பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களும் பயன் பெறலாம்.

அடிப்படை வசதிகளுடன் கூடிய, 600 சதுர அடி வீடு போதும் என, கருதும், சாதாரண மக்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். அதேநேரம், கொஞ்சம் நவீன வசதிகளுடன் கூடிய வீடு வாங்குவதானால், அவர்களுக்கு இந்த திட்டத்தின் வரம்புகள், தடை கல்லாக அமையும். சலுகை பெற, ஒன்பது லட்சம்; 12 லட்சம் ரூபாய் என்பதை, 12 லட்சம்; 15 லட்சம் ரூபாய் என, மாற்றினால் அதிகம் பேர் பயன்பெறுவர்

மத்திய அரசின் குரூப் பி பணிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு


posted from Bloggeroid

Saturday, December 31, 2016

கல்வி துறையில் 'மாபியா' கும்பல் நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்


கல்வி உட்பட, பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், 'மாபியா' கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்த நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கறுப்புப் பணத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி வரும், மாபியா கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யில், கல்வி மற்றும் எழுத்தறிவு பிரிவு செயலர், அனில் ஸ்வரூப், டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:கல்வித் துறை செயலராக பொறுப்பேற்றுள்ள நான், ஒரு மாதமாக, இந்த துறை குறித்து அலசி ஆராய்ந்த போது, மாபியா கும்பல்களின் ஆதிக்கம் இருப்பதை அறிய முடிந்தது. இந்த கும்பல்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி, கல்வித் துறையை துாய்மையாக்க வேண்டும் என, விரும்புகிறோம். கல்வித் துறையில், மாபெரும் புரட்சி நிகழ்ந்து வருகிறது.

நாட்டில், எழுத்தறிவு விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கல்வியின் தரத்தை உயர்த்துவதில், கவனம் செலுத்தப்பட வேண்டும். சமூகத்தில், விளிம்பு நிலையில் உள்ளோரை, தேசிய நீரோட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSA - மாவட்டம்தோறும் 2000 மாணவர்களுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா - இயக்குனர் செயல்முறைகள்



posted from Bloggeroid

PRIMARY - 3 rd TERM FA(a) & FA(b) ACTIVITIES, DICTATION WORDS & TAMIL MEANINGS

Click below

http://www.kalvikural.net/2016/12/primary-3-rd-term-faa-fab-activities.html

Friday, December 30, 2016

இந்த வார குங்குமத்தில் வெளிவந்துள்ள எனது கவிதை "தீட்டு"!


posted from Bloggeroid

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு


பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. பள்ளிகள் மூலம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதால் முன்னதாக செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செய்முறைத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுகள் காலையிலும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மாலையிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அறிவியல் பிரிவில் மாணவர்கள் எடுத்துள்ள விருப்ப பாடங்களின்படி மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு குழு வீதம் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதியத்துக்கு பிறகு குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, செய்முறைத் தேர்வுகளை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 25ம் தேதிக்குள் முடிக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை மாவட்ட வாரியாக வெளியிடப்படும்

2017 -RL- MAHALAYA AMAVASAI- 19/9/2017-Tuesday



posted from Bloggeroid

28-12-16 TNPTF மாநில செயற்குழு முடிவுகள்



posted from Bloggeroid

Thursday, December 29, 2016

January crc



posted from Bloggeroid

செல்லிடப்பேசியில் பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை எப்படி? மத்திய வருவாய்த் துறை முன்னாள் செயலர் விளக்கம்


செல்லிடப்பேசியில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு செல்லிடப்பேசியில் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது எவ்வாறு என்பது குறித்து பயிற்சிகள் அளிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டியது அவசியம்.

செல்லிடப்பேசிகள் தயாரிப்பில் வெளிநாட்டினரே முன்னணியில் இருப்பதால் அவை பெரும்பாலும் ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்டே அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறு அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

செல்லிடப்பேசிகளில் வாட்ஸ் அப், முகநூல்கள் மூலமாக வரும் லிங்க்குகளை (வலைதள முகவரிகள்) நேரடியாகத் திறந்து பார்ப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படாதவாறு பாதுகாக்க முடியும்.

ஏடிஎம் அட்டைகளுக்கான கடவுச் சொற்களை ஏதாவது ஒரு இடத்தில் எழுதி வைக்கும்போது அதை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்த கடவுச்சொல் நமக்கும் மட்டுமே புரியும் வகையிலான குறியீட்டை மட்டும் எழுதி வைக்கலாம்.

குழந்தைகள்- மனைவியின் பிறந்த தினம், நெருங்கிய நண்பரின் பெயர் போன்றவற்றை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இணைய வழி வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) மேற்கொள்ளும்போது கடினமான கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆல்ஃபா நியூமரிக் எனப்படும் ஆங்கில எழுத்துகள்- எண்களுடன் கூடிய கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது சிறந்தது. எந்தவொரு இணையப் பரிவர்த்தனைக்கும் பற்று அட்டையைக் (டெபிட் கார்டு) காட்டிலும், கடன் அட்டையைப் (கிரடிட் கார்டு) பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும். ஏனெனில் கடன் அட்டைகள் காப்பீடு பெற்றிருப்பதுடன் அந்த அட்டையைப் பயன்படுத்தும்போது ரகசியக் குறியீடுகள் களவாடப்படாத பொறுப்பை வங்கிகளும் கண்காணிக்கின்றன.

அமெரிக்காவில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் கடன் அட்டையால் மேற்கொள்ளப்படுவதே இதற்கு சான்றாகும்.

அதேபோன்று வங்கிப் பரிவர்த்தனைகளை அதிகளவில் மேற்கொள்வோர் இரு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது சிறப்பான ஒன்று. இதைத் தொடர்ந்து பரிவர்த்தனைகளை பிரதான அல்லது அதிக பணமிருக்கும் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ளாமல் கூடுதல் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

பி.ஓ.எஸ். எனப்படும் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் பற்று, கடன் அட்டைகளை ஸ்வைப் செய்யும்போது அதில் நமது வங்கிக் கணக்கின் ஐ.எஃப்.எஸ். குறியீடு காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடைகள், பெட்ரோல் நிலையங்கள் என எந்தப் பரிவர்த்தனைக்கு அட்டைகளைப் பயன்படுத்தினாலும் அதற்குரிய கடவுச் சொல்லை நாம் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொகுப்பூதியம்-மதிப்பூதியம் பெறுவோருக்கு தனி உயர்வு


அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.20 முதல் ரூ.40 வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

மாதத்துக்கு ரூ.600 வரை தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக மாதம் ரூ.20 அளிக்கப் படும். ரூ.600-க்கு மேலாக தொகுப்பூதியம்-நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.40-ம் வழங்கப்படும். இந்த தனி உயர்வானது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற பிரிவினருக்கு தனி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

PRIMARY - 3 rd TERM FA(a) & FA(b) ACTIVITIES, DICTATION WORDS & TAMIL MEANINGS

Click below

http://www.asiriyar.com/2016/12/primary-3-rd-term-faa-fab-activities.html?m=1

Tuesday, December 27, 2016

கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது, பிளஸ்-2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் கடும் நடவடிக்கை


கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேறு பள்ளிக்கு மாற்ற சான்றிதழ் 2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய (பெயிலாகும் நிலையில் உள்ள) மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் இவ்வியக்கத்தில் பெறப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை

எனவே இக்கல்வி ஆண்டு (2016-17) வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.