இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 19, 2016

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்


மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும் 2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில் கிடைக்கிறது. ரூ.500 இதுவரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரை விற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்த போதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டு வினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டு எப்ேபாது வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்தது. இது குறித்து அந்த அதிகாரிகள் கூறுகையில்,

“ புதிய ரூ.500 நோட்டு ஒரு சில மாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்த பணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில் புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.

எமிஸ்'(EMIS) விபரங்கள் மாயம் : ஆசிரியர்கள் கோபம்

தமிழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், தனித்தனி அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதையே பொதுத் தேர்வு சான்றிதழ்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு கொண்டு வரப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, மாணவ, மாணவியரின், பெயர், முகவரி மற்றும், 'ஆதார்' எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் விடுபட்டவர்களுக்கான, ஆதார் எண்களை சேர்த்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை தர, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, இன்னும் தொலைபேசி வசதி இல்லை; இதில், தொடக்கப் பள்ளிகளின் நிலை மிக மோசம். அதேபோல், இணையதள வசதியும், பல பள்ளிகளில் இல்லை. எனவே, இணையதள மையங்களில், ஆசிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து, எமிஸ் திட்டத்தில், விபரங்களை பதிவு செய்கிறோம். இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு, இதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்கள், 'ஆன்லைனில்' திடீரென மாயமாகி விடுகின்றன. அதை தேடி எடுக்க, பல நாட்கள் ஆகின்றன. எனவே, எமிஸ் எண்ணுக்கு பதில், ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதம்


காலியிடங்களில், புதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, தமிழகம் முழுதும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் பாலச்சந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். வணிகவியல், பொருளியல் படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி காலியிடங்களை, தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, November 18, 2016

பழைய ஓய்வூதிய திட்டம் நிபுணர் குழுவின் காலம் நீட்டிப்பு


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்து ஆராய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் நபர், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளை மூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனது இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நிபுணர் குழு செயல்படும் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி


தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள் தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலை உயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போது காண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில், அனைத்து குறுவள மையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்று வழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்து அவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்கு அளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறுவள மையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள நிலையில், அதன் பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள் எனும் நிலையில் தினமும் இரு பக்கம் கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்து வழங்க ஆகும் செலவை யார் ஏற்பது எனக் கேட்கின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள் என கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள நிலையில், இரு ஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில் ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவது எப்படி எனக் கேட்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை குழுவாக அமரச் செய்து ஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள் பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.

இதனால் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களை தயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளை அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர். எனவே அரசு உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதார சுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை


பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது. 'அந்த பெட்டியை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறக்க வேண்டும்; மாணவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில், ஆசிரியர்களே திறந்து, புகார்களை படித்து விடுகின்றனர்.

இதனால், ஆசிரியர்கள் மீது புகார் கூறியிருந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான புகார்கள், இப்போது பெட்டிகளில் குவிய துவங்கி உள்ளன. இதையடுத்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: புகார் பெட்டிகளை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறந்து பார்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திறக்கக் கூடாது. பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வி அதிகாரிகள், இது குறித்து விசாரித்து, பெட்டியை வேறு யாராவது திறந்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 ம் வகுப்பு தனித்தேர்வு விண்ணப்பிக்க விபரம்


posted from Bloggeroid

Science worksheet 2

Click below

https://app.box.com/s/45txxezhlssd48nqgvk95ie8o2ka0g34

Social science worksheet 2

Click below

https://app.box.com/s/8pqoaqqt87fyf0tvbx98q0kbpv8pr67p

2nd worksheet maths

Click below

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5bmpiZTJfdGtvS0E/view?usp=drivesdk

18 Nov 2016 2nd worksheet English

Click below

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5MVhHMm82S3BxbU0/view?usp=drivesdk

2nd worksheet tamil

Click below

https://drive.google.com/file/d/0B_YeNwgt8TH5ZUt3SjhLdF9laU0/view?usp=drivesdk

OLD pention expert comitte extend



posted from Bloggeroid

Thursday, November 17, 2016

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர்களின் விவரம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும்

அந்த பட்டியலில் இடம்பெற வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடி சரியாக இருக்க வேண்டும். இதனை கல்வி தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும் இருக்கக்கூடாது.

கண்காணிக்க வேண்டும்

அனைத்தையும் வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர் கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் அறிவுரை வழங்குதல் DEE செயல்முறைகள்


posted from Bloggeroid

USEFUL info about ATM

cashnocash.com is the website where you can enter your pin code and find out which ATM near you has cash ....please let people know

Today news

பிரதமர் மோடி கடந்த வாரம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதைதொடர்ந்து பொதுமக்கள்  தங்களிடம் உள்ள பழைய  500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வங்கிகளில் போராடி வருகின்றனர். எனினும் வங்கிகளில் பழைய 500, 100 ரூபாய்  நோட்டுகளை குறிப்பிட்ட அளவே மாற்ற முடியும் என்ற அறிவிப்பையும் வெளியட்டது.

* விவசாயிகள் வாரத்திற்கு ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனை பொருளாதார விவகாரத்துறை செயலாளர்  சக்திகாந்த தாஸ் டெல்லியில் அறிவித்தார். விவசாய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வங்கயில் எடுக்கலாம் என்றும் அவர்  தெரிவித்துள்ளார். செக் மூலம் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து விவசாயிகள் இந்த அதிகபட்ச தொகையை எடுத்து கொள்ளலாம்.

* திருமணத்திற்கு வங்கி கணக்கில் இருந்து 2.5 லட்சம் வரை பணம் எடுத்து கொள்ளலாம் என்று கூறினார். திருமண நிகழ்ச்சி நடைபெறுவதற்குரிய  ஆவணங்களை வங்கியில் முறையாக காண்பித்து பணம் எடுத்து கொள்ளலாம்.

* பழைய நோட்டுகள் வங்கியில் மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்படுகிறது என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இந்த முறை  நாளை முதல் அமலுக்கு வருகிறது.

* விவசாய பொருட்களை வாங்கும் வர்த்தகர்கள் வாரம் 50,000 ரூபாய் வரை பணம் எடுத்து கொள்ளலாம்.

* பயிர்கடனை திருப்பி செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

* பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் அல்லது அதற்குரிய செல்லும் ரூபாய் நோட்டுகள் ரூ.2,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

* ரயில்வே, மத்திய பொதுத்துறை நிறுவன குரூப் சி ஊழியர்கள் சம்பள அட்வான்ஸ் ரூ.10,000 பெறலாம்.

Wednesday, November 16, 2016

9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி


போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, பல விதமான தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன.

அத்துடன், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், உயர்கல்வியில் சேர, 'ஜே.இ.இ., - நீட் - கேட்' என, பல நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதாக, கல்வியாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். அதனால், நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களை தொடக்கப் பள்ளியில் இருந்தே தயார் செய்ய, புதிய வினாத்தாள் முறையை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை, குழந்தைகள் தின விழாவிலேயே, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், புதிய வினாத்தாளை பயன்படுத்தி, சிறப்பு தேர்வுகள் துவங்கியுள்ளன. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:

மாணவர்கள் ஒவ்வொரு வினாவையும் புரிந்து, சிந்தித்து, விடையை தேர்வு செய்யும் வகையில், புதிய வினாத்தாளில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்று உள்ளன. இந்த நடைமுறை, மூன்று பருவ தேர்வுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை தேர்வு களுக்கும் பின்பற்றப்படும். இந்த வினாத்தாளுக்கு, மாணவர்கள் தொடக்கப்பள்ளி முதலே பழகிவிட்டால், உயர்கல்விக்கு வரும் போது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மை வைப்பதில் மாற்றம் இல்லை

'வங்கிகளில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றுவோருக்கு, வலது ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு, அழியாத அடையாள மையை, இந்திய வங்கி கள் அமைப்பு சப்ளை செய்யும். முதலில், சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில், இது
அறிமுகம் செய்யப்படும். பின், தேவைக்கேற்ப, மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

* ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும், ஐந்து லிட்டர் மை வழங்கப்படும். வங்கி காசாளர் அல்லது வங்கியால் நியமிக்கப்படும் அதிகாரி ஒருவர், பழைய நோட்டுகளை மாற்றுவோரின் கையில் மை வைக்கலாம்

* நோட்டுகளை மாற்றுவதற்கு முன், அந்நபரின் கை விரலில் மை வைக்க வேண்டும்.
இல்லையேல், மையை அழித்துவிட வாய்ப்பு உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காத்திருக்காத வங்கிகள்!

மத்திய அரசு அறிவித்தபடி, வங்கி கிளைகளுக்கு, அடையாள மை வழங்குவது குறித்து, நேற்று முன்தினம் இரவு வரை, அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அதனால், பஞ்சாப் நேஷனல் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி போன்றவை, கடைகளில் இருந்து அழியாத மையை வாங்கின; வாடிக்கை யாளர்கள் கைகளில், நேற்று வைக்க துவங்கின.

ரிசர்வ் வங்கி, வலது கையில் வைக்க வேண்டும் என கூறியிருந்தும், இடது ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியும்,பழைய நோட்டுகளை மாற்றித் தருவதால், அங்கு நோட்டு களை மாற்றியவர்கள் விரலில், அடையாள மை வைக்கப்பட்டது.

மை இல்லை!

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளுக்கு, நேற்று அழியாத மை வந்து சேரவில்லை. அதை எங்கு வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், அந்த வங்கிகள்வாங்க வில்லை. அதனால், அந்த வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றியவர்களுக்கு, நேற்று மை வைக்கவில்லை.

மைசூரில் தீவிரம்!

அடையாள மை தயாரிக்கும் பணி, கர்நாடக மாநிலம், மைசூரு பெயின்ட் நிறுவனத்தில் தீவிரமடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அடையாள மை, மத்திய அரசின் தேசிய பரி சோதனை அபிவிருத்தி கழகம் மூலமாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப் படுகிறது; தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப் படுகிறது.

சலவை மை!

மைசூரில் இருந்து, அழியாத மை வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால்,சலவை கூடங்க ளில், வெள்ளை வேட்டிக்கு வைக்கப்படும் மையை பயன்படுத்தும்படி, பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று, தேர்தல் துறை, வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அப்போது, தேர் தல் துறையிடமோ அல்லது மாநகராட்சி யிட மோ கைவசம் உள்ள மையை, வங்கி களுக்கு தருவது என, முடிவு செய்யப்பட்டது.

Worksheet evaluation method


posted from Bloggeroid

*தொடக்கக்கல்வி - ஆண்டுமுழுவதும் விடுப்பு எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ்* - மாண்புமிகு தமிழகமுதலமைச்சரின் ஆணைப்படி வழங்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்


posted from Bloggeroid

Tuesday, November 15, 2016

தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் டெல்லியில் இளைஞர்நலத்துறை அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் கலந்து கொண்டார்.

அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக நடக்கும். அதற்கு தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போதே பயிற்சி அளிக்கப்போகிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால் நீட் தேர்வை சட்டரீதியாக தமிழக அரசு எதிர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கல்வியாளர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. அதனால் உடனடியாக தமிழக அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகரான பாடத்திட்டத்தையும் அமல்படுத்த முடியாது.

இதனால் அடுத்த ஆண்டில் தமிழகத்தில் இருந்து டாக்டருக்கு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஐஐடி போல் பிறமாநில மாணவர்கள் இங்கு வந்து படிக்க நேரிடும்’ என்றார். அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

STUDENTPOOLல் எவரும் இல்லை, பதிவுகள் சரியானவை என்று தலைமையாசிரியர் சான்று அளித்து தரவேண்டிய படிவம்.*


posted from Bloggeroid

CCE work sheet report


posted from Bloggeroid