அரசூழியர்களை இருபதாண்டுக்காலம் அணுக்கமாக அறிந்தவன் நான். என்று பணிக்கு சேர்கிறார்களோ அன்றோடு அவர்கள் எதையும் கவனிப்பதை, கற்றுக்கொள்வதை முழுமையாகவே விட்டுவிடுவார்கள். மெல்லமெல்ல மூளை அதற்கேற்ப தளர்வடைந்து கற்றுக்கொள்ளவே முடியாமலாகிவிடும். மிகமிகச் சாதாரணமான விஷயங்கள்கூட நினைவில் நிற்காது
நீங்கள் வங்கிகளில் இப்போது பார்ப்பீர்கள். ஒவ்வொரு நாளும் வேலைசெய்யும் கணிப்பொறியையே தொட்டுத்தொட்டு பார்த்துப்பார்த்து டைப் செய்வார்கள் பெண்கள். பக்கத்து ஊழியரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் உலகம் மிகமிகச்சிறிது. திரும்பத்திரும்ப அலுவலக விஷயங்கள், ஊதியப்பிரச்சினைகள் மட்டுமே பேசப்படும். வருடக்கணக்கில் அதையே பேசி அதிலேயே உழன்று அப்படியே அதில் மூழ்கி மறைவார்கள். ஓய்வுபெற்று இருபதாண்டுகளானாலும் அதே அரசூழியர்களாக அதே வேலையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்
அன்றாடச்சவால் உள்ள வேலைகள் உண்டு. அவை பெரும்பாலும் சீருடைப்பணிகள். காவல்துறை போல. அங்குள்ளவர்கள் அதற்கான புத்திசாலித்தனத்தை அடைந்திருப்பார்கள். நான் பேசிக்கொண்டிருப்பது வெள்ளைக்காலர் ஊழியர்களைப்பற்றி. அவர்களின் கண்களே ஒருமாதிரி மங்கலடைந்துவிட்டிருப்பதைப் பார்க்கலாம். அறுபது வயதுக்குள் நம்பமுடியாத ஒரு மானசீக முதுமையை அடைந்துவிட்டிருப்பார்கள். அது அவர்களின் விதி. மிகமிகச் சிலரே அதை மீறி முன்னகர முடியும்.
ஏனென்றால் உயிர்கள் வேட்டையாடி வாழப் படைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் வேட்டையாடவும் வேட்டையாடப்படவும் அவர்களின் சூழல் அமைந்தாகவேண்டும். கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு சாகத் தொடங்குகிறது. அரசுப்பணி ஒரு பெரிய கூண்டு
- ஜெயமோகன்
Tuesday, November 15, 2016
அரசுப்பணி-ஜெயமோகன்
பணம் எடுப்போர் விரலில் மை.பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பணம் எடுப்பவர்கள் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில் பணப் புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப் பட்டது.
இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.
வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி:
1. பழைய ரூ.1000, 500 மாற்றுவோரின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும்
2. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று கூட்ட நெரிசலை ஏற்படுத்துவதை தடுக்கப்படும்.
3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.
4. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
5. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம் செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
6. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும் ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.
7. கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
8. ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட பயன்படுத்தப்படும் மை. சாயம் போனால் அது நல்ல நோட்டு. போகாவிட்டால் அது கள்ள நோட்டு. புதிய ரூ.100 நோட்டுகளைக்கூட ஈரமாக்கப்பட்ட பஞ்சு கொண்டு தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டும்.
இவ்வாறு சக்திகாந்த் தெரிவித்தார்.
விரலில் மை
வங்கிகளில் இனி பணம் எடுக்கச் செல்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்றும் இதன் மூலம் கறுப்பு பணத்தை ஒருவரே மாற்றி மாற்றி டெபாசிட் செய்வதை தடுக்க முடியும் என்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாயை கைகளில் வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் ஏழை மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஏடிஎம் வாசலிலும் சாமானிய மக்கள்தான் காத்திருக்கின்றனர்.
தினசரி ஒரு அறிவிப்பு, புதிய புதிய கெடுபிடிகளை விதித்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது சாமான்ய மக்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall
வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.
Monday, November 14, 2016
டெட்' தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை.
தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசு பொது விடுமுறை தினங்கள்
*2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது*
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு அறிவித்திருக்கும் 22 அரசு விடுமுறை தினங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தகவல் வந்துள்ளது...
தமிழக ஆளுநரின் ஆணைப்படி அரசு தலைமை செயலாளர் ராம மோகன ராவ் பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மொத்தமுள்ள 22 விடுமுறை தினங்களில் 8 விடுமுறை தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.
2017-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் பட்டியல்:
ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16- உழவர் திருநாள்
ஜனவரி 26- குடியரசு தினம்
மார்ச் 3 - தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1- வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு
ஏப்ரல் 9-மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு
மே 1 - உழைப்பாளர் தினம்
ஜூன் 6- ரம்ஜான்
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 25- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 2- பக்ரீத்
செப்டம்பர் 29- ஆயுத பூஜை
செப்டம்பர் 30-விஜய தசமி
அக்டோபர் 1- மொகரம்
அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி
அக்டோபர் 18- தீபாவளி
டிசம்பர் 1 - மிலாதுன் நபி
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ்
Sunday, November 13, 2016
மத்திய அரசு புதிய சலுகை அறிவிப்பு
ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்:
1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
2. காஸ் சிலிண்டர் வாங்கலாம்.
3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம்.
4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
6. நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் தொடங்க ஏற்பாடு.
சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 24 வரை செல்லும் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மேலும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "அரசு பொது மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் ரூ.500, 1000 நோட்டுகள் இம்மாதம் 24 வரை செல்லும்" என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் தலைமையிலான கூட்டத்துக்குப் பின்னர் வங்கிகளில் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,000 மாற்றி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல ஏடிஎம் மையங்களில் தற்போது ரூ.2,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.
வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெருகும் மக்கள் அதிருப்தியால் சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவ. 24 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கி விடுமுறையால் பாதிப்பு:
குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் இன்று (திங்கள்கிழமை) இயங்கவில்லை. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பெருமளவில் குவிந்துள்ளனர். பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம் மையங்களில் விரைவாக பணம் காலியாகிவிடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டு நாட்களில் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள்:
இன்னும் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2000 நோட்டு வழங்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் பணத் தேவையை கருத்தில் கொண்டு 'மைக்ரோ ஏடிஎம்கள் தொடங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
அதேபோல் நாடு முழுவதும் உள்ள 1.3 லட்ச தபால் அலுவலகங்களுக்கான பணப் பட்டுவாடா விரைவில் மேம்படுத்தப்படும். பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் கிடைப்பதற்கான அமைப்புகள் அத்தனையும் தடையின்றி இயங்க வழிவகை செய்யப்படும் என்றார்.
வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்:
ரொக்கக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சக்திகாந்த தாஸ் நிலைமை வெகு விரைவில் சீராகும் என்றார்.
69 ஆண்டுகளுக்கு பின் இன்று சூப்பர் பவுர்ணமி
இயற்கை நிகழ்த்தும் அதிசயங்களில் ஒன்றாக, 69 ஆண்டுகளுக்கு பின், 30 சதவீதம் அதிக ஒளியை உமிழும், சூப்பர் புவுர்ணமி நிலா, இன்று வானில் தோன்றுகிறது; இதை, வெறுங்கண்களால் பார்க்கலாம்.
ஆண்டு தோறும், சூப்பர் நிலா காட்சி தோன்றினாலும், இதன் ஒளி உமிழும் தன்மை வெவ்வேறாக இருக்கும். அதிகபட்சமாக, 30 சதவீத ஒளியை உமிழும் வகையில், சூப்பர் நிலா, 1948 ஜனவரியில் தோன்றியது. 69 ஆண்டுகளுக்கு பின், அதே பிரகாசத்துடன், சூப்பர் பவுர்ணமி நிலா இன்று தோன்றுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் கூறியதாவது:பூமியிலிருந்து, நான்கு லட்சத்து, 2,600 கி.மீ., துாரத்தில், நிலா சுற்றி வரும்.
ஆண்டுதோறும், சூப்பர் பவுர்ணமி நிலா நாள் வரும் போது, துாரம் குறைவாக இருப்பதால், நிலா சற்று அருகில் தெரியும். இந்த ஆண்டு மூன்று, சூப்பர் நிலா நாட்கள் உள்ளன. ஏப்ரலில், முதல் சூப்பர் நிலா தெரிந்தது. இரண்டாவது நாளாக இன்று தோன்றுகிறது. அடுத்த சூப்பர் நிலா, டிச., 14ல் தெரியும். இன்று தோன்றும் நிலா, பூமியிலிருந்து, மூன்று லட்சத்து, 56 ஆயிரத்து, 511 கி.மீ., துாரத்தில் வருகிறது. இது, வழக்கமான தன்மையை விட, 30 சதவீதம் அதிக ஒளியை உமிழும். இதை வெறுங்கண்ணால் பார்க்கலாம்; எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.'இதுபோன்ற சூப்பர் பவுர்ணமி நிலாவை, அடுத்ததாக, 2034ல் தான் பார்க்க முடியும்' என, சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா தெரிவித்துள்ளது
Saturday, November 12, 2016
ஆரம்ப பள்ளி ஆசிரியர் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் முத்துப்புதூர் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்; மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்களை, செயலாளர் கிருஷ்ணசாமி முன்மொழிந்தார்.
இதில், தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை, உடனடியாக அறிவிக்க வேண்டும். தினசரி கேட்கப்படும் புள்ளி விவரங்களால், பள்ளியின் கற்பித்தல் சூழல் பாதிக்கிறது. இயக்கத்தின் முதல் கட்ட, வட்டார ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தவும், கடந்த ஊதியக்குழுவில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை சரி செய்யவும், புதிய கல்வி கொள்கையின் பாதகமான அம்சங்களை களையவும், தகுந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு ஊக்க ஊதிய வழங்க வேண்டும்' என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மாநில தழுவிய அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மூன்றாம் கட்டமாக, டிச., 28ல், நடைபெறும் கோரிக்கை முழக்க தொடர் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஆசிரியர்கள் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் கனகராஜா நன்றி கூறினார்.
'லைசென்ஸ்' எடுத்து செல்ல தேவையில்லை : 'ஆதார்' போதும்; வருகிறது புதிய நடைமுறை
'ஆதார்' இருந்தால், ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்ல மறந்தாலும், போலீசில் சிக்கி விடுவோமா என்ற பயமின்றி, வாகனத்தில் செல்லலாம். புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. வாகனத்தில் செல்வோர், பல நேரங்களில், ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்ல மறந்து விடுவதுண்டு. இவர்கள், யாரேனும் சிக்குவரா என, போலீசார் வலை விரித்து காத்திருக்கும் நிலையில், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து, உரிய இடத்தை சென்றடைவது பெரிய விஷயம். அது போன்றவர்களுக்கு, ஆறுதல் தரும் வகையில், மத்திய அரசு, புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது.
புதிய திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகங்கள் இணைந்து வடிவமைத்து உள்ளன. 'டிஜி லாக்கர்' என்ற அத்திட்டத்தில், கோடிக் கணக்கான ஆவணங்களை, இணையத்தில் பொதுமக்கள் சேமித்து வைக்க முடியும். அதில், முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன சான்றுகளை சேமித்து வைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பயன் பெற, ஆதார் அட்டை அவசியம். ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் மையங்களில், அதை செய்யலாம். இணைக்கப்பட்ட இந்த விபரங்கள், 'டிஜி லாக்கர்' உடன் ஒருங்கிணைக்கப்படும்.
பிரத்யேக, 'மொபைல் ஆப்'பை, போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக, 'டிஜி லாக்கர்' உள்ளே நுழைந்து, வாகனம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின், உரிமத்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றாலும் பரவாயில்லை. போக்குவரத்து போலீசார் பிடித்தால், மொபைல் போன் வழியாக அந்த, 'ஆப்'பில் உள்ள விபரங்களை, அவருக்கு காட்டலாம். அதை சரி பார்க்க, போலீசாருக்கு, பிரத்யேக, 'ஆப்' தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை வைத்து அவர் சரிபார்ப்பர். எனவே, ஓட்டுனர் உரிமத்தை மறந்தாலும், இனி, கவலையின்றி பயணத்தை தொடரலாம்.
Friday, November 11, 2016
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு டிசம்பர் 3–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடக்கிறது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் நடத்துகிறது.
இந்த வருடம் 1,079 பணிகளுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு கடந்த செப்டம்பர் மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மட்டுமே எழுதினார்கள். இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வை எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர் ) 3–ந்தேதி தொடங்குகிறது. அந்த தேர்வு டிசம்பர் 9–ந்தேதி வரை நடக்கிறது. ஹால் டிக்கெட் இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.