இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 09, 2015

ஜூன் 19ல் மாணவர் தர வரிசைப்படி கல்லூரி பட்டியல் வெளியீடு

'கவுன்சிலிங்கில் முடிவெடுக்க வசதியாக, கடந்த ஆண்டில் மாணவர் தர வரிசைப்படியான கல்லூரிகள் பட்டியல், ஜூன், 19ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

'ரேண்டம்' எண்: சென்னை, தி.நகரில் நடந்த, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

* கணிதம் - 100, இயற்பியல் - 50, வேதியியல் - 50 என, 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடுவோம். ஒரே, 'கட் - ஆப்' என்றால், கணிதத்தில் அதிக மதிப்பெண் பார்க்கப்படும். அதில் சமம் என்றால், இயற்பியலில் அதிக மதிப்பெண் பார்ப்போம். அதுவும் சமம் என்றால், நான்காவது, 'ஆப்ஷனல்' பாட மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சரியாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவரைப் பார்ப்போம்.

அதிலும் சமம் என்றால், 'ரேண்டம்' எண்ணில், அதிக மதிப்புக்கு முன்னுரிமை. கடந்த ஆண்டு வெறும், 20 பேருக்குத் தான், 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்பட்டது.

* இறுதியாக ஒவ்வொரு மாணவருக்கும், ஜூன், 19ல், 'ரேங்க்' என்ற தரவரிசை பட்டியல் வெளியாகும். இந்த எண்ணும், 'கோடிங் ஷீட்' எண்ணும் தான், கவுன்சிலிங்கில் முக்கிய இடம் பெறும். ஜூன், 19ம் தேதி கடந்த ஆண்டு மாணவர்களின் தர வரிசைப் படி, கல்லூரிப் பட்டியல் வெளியாகும்.

* விண்ணப்பங்களை நேரில் அல்லது தபாலில் அனுப்பலாம். விண்ணப்பம் வந்ததும், 'பார்கோடை' சரி பார்த்து, விண்ணப்பம் வந்ததற்கான தகவல், இணையதளத்தில் உடனே பதிவாகும். தினமும், எட்டு முறைக்கு மேல் இணையத்தள தகவல், 'அப்டேட்' ஆகும். கவுன்சிலிங் வரை காலியிடப் பட்டியல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* விண்ணப்பங்களில் தவறு இருந்தால் தகவல் அனுப்புவோம். உடனே பதற்றப்பட வேண்டாம்; கூடுதல் தகவல்களை மெயிலில் அனுப்புங்கள். 'கால் லெட்டர்' கிடைக்காவிட்டாலும், பயப்பட வேண்டாம். ஆன் - லைனில் உங்கள் விண்ணப்ப எண்ணுக்கு, கவுன்சிலிங் தேதி தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு, இரண்டு, மூன்று மணி நேரம் முன் வந்து, அண்ணா பல்கலையில், 'கால் லெட்டர்' நகல் பெற்றுக் கொள்ளலாம்.

* மாணவர்களுடன் பெற்றோர் வருவது சிறந்த வழி. கவுன்சிலிங்கில் முடிவெடுக்கும் அறையிலும், மாணவருடன் நண்பர்களை விட, பெற்றோர் இருப்பது தான் நல்லது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மாணவர்களோ, நமக்கு எதுவும் தெரியாது என்று பெற்றோரோ நினைக்க வேண்டாம்.

* கவுன்சிலிங் வரும் முன் உங்கள், 'கட் - ஆப்' கணக்கிட்டு, அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலுள்ள கல்லூரிப் பட்டியலில் உங்கள் மதிப்பெண்ணுக்கான குறைந்தது, இருபது கல்லூரிகள் மற்றும் பல பாடப்பிரிவுகள் தேர்வு செய்து கொண்டு வாருங்கள். கவுன்சிலிங் அறையில், நீங்கள் காலியிடத்துக்கு ஏற்ப கல்லூரியைத் தேர்வு செய்ய எளிதாக இருக்கும். அதற்கு முன் உங்கள் பட்டியலில் உள்ள கல்லூரிகளுக்கு பெற்றோருடன் சென்று நேரில் பார்த்து, ஆய்வக வசதி உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* கவுன்சிலிங் வரும்போது, முதல் கட்ட டிபாசிட், பட்டியலின், பழங்குடியினருக்கு 1,000 ரூபாய்; மற்ற பிரிவினருக்கு, 5,000 ரூபாய் வங்கி, 'டிடி' அல்லது ரொக்கப் பணமாகவோ கொண்டு வாருங்கள். பல்கலை வளாகத்தில் வங்கி உள்ளது. அங்கே,'டிடி' எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கட்டணம் கல்லூரிக்குச் சென்றதும், கல்விக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்.

வெளிப்படையாக...: கவுன்சிலிங் மையம் அல்லது அண்ணா பல்கலை அருகில், போலியான ஆட்கள் சுற்றித் திரிய வாய்ப்புண்டு. நீங்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போது, தெரியாத, அங்கீகாரம் இல்லாத ஆட்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளுக்கு இடம் தர வேண்டாம். சில தனியார் கல்லூரிகள் அல்லது வேறு ஏஜன்ட்களின் தகவல்களுக்கு மயங்காதீர்கள். அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர முறையில், நூற்றுக்கு நூறு சதவீதம் வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

9,10.ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச அட்லஸ்

தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதில், 'அட்லஸ்' புத்தகம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால், 'அட்லஸ்' புத்தகத்தை மாற்ற வேண்டி இருந்தது. திருத்தப்பட்ட புத்தக தயாரிப்பு தாமதமானதால், கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தவுடன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமின்றி, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கும் இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது ஆதார்

பள்ளிகள் மூலம், 'ஆதார்' எண் பதிவு செய்வதை, கட்டாயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர், 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதுகுறித்து, 'ஆதார்' திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது: 'ஆதார்' எண்ணை உருவாக்க, நிரந்தர மையம், பகுதி வாரியாக முகாம்கள் நடத்துவதோடு, சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியினருக்கு, 'ஆதார்' எண்ணை உருவாக்க, பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கும், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிலாளர் அதிகம் உள்ள அலுவலகங்களில், 'ஆதார்' எண் பதிவு செய்ய, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரிடம், மாணவர் எண்ணிக்கை விவரம், அதில் ஆதார் எண் இல்லாதோரின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு உள்ளோம். இந்த, விவரங்களைப் பெற்றவுடன், பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். நூறு சதவீத மக்களுக்கும், 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தனித் தனியாக, முகாம்கள் நடத்தப்படுகின்றன.

'ஆதார்' எண் அளித்தால் மட்டுமே, கல்வியைத் தொடர முடியும் என்ற, நிர்பந்தம் எதுவுமில்லை. 'ஆதார்' எண்ணை அடிப்படையாகக் கொண்டு, கல்வி சலுகைகள் அளிக்கப்படுவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Annamalai University may 2015 exam hall ticket

Click below

http://www.annamalaiuniversity.ac.in/dde/coe_hallticket.php

Friday, May 08, 2015

அண்ணாமலை பல்கலை.பேராசிரியர் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், முதல் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.மணியனை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வியாழக்கிழமை நியமனம் செய்து உத்தரவிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, முறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டது. அந்தக் குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகியாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழக அரசு நியமனம் செய்தது. அப்போதிருந்த துணைவேந்தர் எம்.ராமநாதன் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பேரவையில் தீர்மானம்: பின்னர், தமிழக அரசு உயர் கல்வித் துறை மூலம் தமிழக சட்டப் பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

துணைவேந்தர் நியமனம்: இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு குழு ஒன்றை நியமித்தது. அந்தக் குழுவினர் மூவரை பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறைப் பேராசிரியர் எஸ்.மணியனை துணைவேந்தராக நியமனம் செய்து தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர் விரைவில் பொறுப்பேற்பார் என பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு மே 14முதல் விண்ணப்ப விற்பனை

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி: தொடக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 14-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் (சிஇஒ) ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசித் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பில், 'மே மாதம் நடக்கும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஆன் - லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், மே 8ம் தேதி (நேற்று) முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பெறலாம்' என, கூறப்பட்டுள்ளது.

நில கையகப்படுத்தல் மசோதா

நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

கையகப்படுத்தும் நிலத்திற்கு கிராமப் பகுதியாக இருந்தால் சந்தை விலையில் 4 மடங்கும், நகர்ப்புறங்களில் 2 மடங்கு விலையும் வழங்கப்படும்

நிலத்தின் விலை முழுவதும் கொடுத்து முடியும் வரை நில உரிமையாளருக்கு நிலத்தின் உரிமை உண்டு

பொதுத்துறை மற்றும் தனியார் துறை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களின் 70 சதவீத ஒப்புதல் அவசியம்

தனியார் திட்டங்களுக்கு கையகப்படுத்தும்போது 80சதவீத ஒப்புதல் அவசியம்.

மறுகுடியேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,இழப்பீடும் வழங்கப்பட்ட பின்னர்தான் நிலம் கையகப்படுத்தும் பகுதியில் வசிப்போர் வெளியேற்றப்படுவர்

விவசாயப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் போது வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்கமுடியும்

பொதுமக்கள் நலனுக்கான செயல்பாட்டிற்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும்

எதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நிலத்தை மாநில அரசுகள் திருப்பி அளிக்கலாம்.

வாக்காளர் தகவல் பதிவு செய்ய டாப்லெட் பயன்படுத்த முடிவு

தேர்தல் அதிகாரி தகவல்

வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் தகவல்களை பதிவு செய்ய "டாப்லெட்" கருவியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இதற்கான முன்னோடித் திட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஜிபிஆர்எஸ் இணைப்புக் கொண்ட டாப்லெட் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
. இதன்படி, வீடுகளில் வாக்காளர்களிடம் பெறப்படும் தகவல்கள் அங்கேயே சரிபார்க்கப்படும் என சக்சேனா தெரிவித்துள்ளார். பிழையின்றி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்தின்படி, தமிழகத்தில் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சேகரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமுள்ள வாக்காளர்களில் 4 கோடியே 26 லட்சம் பேரிடம் இந்த தகவல்கள் பெறப்பட்டு, 3 கோடியே 15 லட்சம் பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக சந்தீப் சக்சேனா தெரிவித்திருக்கிறார்.

Thursday, May 07, 2015

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் உள்பட மூன்று பேர் இருக்க வேண்டும். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பிரம்மா மட்டுமே இருக்கிறார். மற்ற இரண்டு ஆணையர்களின் இடங்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் ஆச்சல் குமார் ஜோதி, இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சட்டத்துறை வெளியிட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.

விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு வெள்ளிக்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் மே 8 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ.550-ம், பிற பாடங்களுக்கு ரூ.275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பக் கட்டணத்தை பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ இயலும்.

சிறப்புத் துணைத்தேர்வுக்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 15 முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்களது பெயரைப் பதிவு செய்யலாம்.

சிறப்புத் துணைத் தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதரக் கட்டணமாக ரூ.35-ம், பதிவுக் கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மே 14 முதல் தற்காலிக மதிப்பெண் சான்று

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல்முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் மே 14 முதல் தங்களது பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாகத் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசுப் பள்ளியில் 84.26% பேர் தேர்ச்சி

அரசுப் பள்ளிகளில் 84.26 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 97.67 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.42 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி நிர்வாகம் வாரியாக தேர்ச்சி விகிதம்:

ஓரியன்டல் பள்ளிகள் 100 கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகள் 99.20 மாநிலப் பாடத்திட்ட தனியார் பள்ளிகள் 97.89 மெட்ரிக் பள்ளிகள் 97.67 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 97.35 பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.02 அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.42 ரயில்வே பள்ளிகள் 89.74 அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் 88.50 கள்ளர் பள்ளிகள் 87.70 மாநகராட்சிப் பள்ளிகள் 87.09 பழங்குடியினர்நலத் துறைப் பள்ளிகள் 86.76 நகராட்சிப் பள்ளிகள் 85.01 சமூகநலத் துறைப் பள்ளிகள் 83.46 வனத் துறைப் பள்ளிகள் 82.58 ஆதிதிராவிடர்நலத் துறைப் பள்ளிகள் 82.43 பிற பள்ளிகள் 97.57

மே 19முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பம்

தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள். ஜூன் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். கடந்த ஆண்டு போல் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன; அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 இடங்கள் கிடைக்கும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.ஓமந்தூரர் அரசு மருத்துக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் - எம்.சி.ஐ., அனுமதி 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும்.

இன்ஜி கட் ஆப் அதிகரிக்க வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்' அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், 'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கணிதத்தில் 3,882 பேர் 'சென்டம்' எடுத்தனர்; இது இந்த ஆண்டு இரண்டரை மடங்கு அதிகரித்து 9,710 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாக குறைந்து உள்ளது. எனவே இந்த ஆண்டு பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான 'கட் - ஆப்' மதிப்பெண்; மருத்துவப் படிப்புக்கு 'கட் - ஆப்' குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த பலஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். இதே போல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.இதனால் இந்த ஆண்டு இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.அதனால் கடந்த ஆண்டு 'கட் - ஆப்' மதிப்பெண்ணை விட அதிகம் இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜி., கல்லூரிகளில் சேர முடியும்.

இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் 'சென்டம்' எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.உதாரணமாக கடந்த ஆண்டு 198.25 என்றால் இந்த ஆண்டு 197.75 என்று மாறலாம். ஆனால் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று 'கட் - ஆப்' வைத்திருப்போர் 800 பேர் வரை உள்ளனர்.இவர்கள் எந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகின்றனர் என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு 'சீட்' கிடைக்கும்.இந்த ஆண்டு இன்னொரு முக்கிய பாடமாக இயற்பியல் வந்துள்ளது. இதில் கடந்த ஆண்டை விட பெரிய அளவில் 'சென்டம்' எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இயற்பியல் - கணிதம், இயற்பியல் - உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். எனவே இந்த ஆண்டு இயற்பியல் மதிப்பெண் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும், என்றார்.-

மொபைலில் தூர்தர்ஷன் செய்தி

'பிரசார் பாரதி, துார்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம், அதிக அளவில் செய்திகள் சேகரிக்கப்பட்டு, மக்களுக்கு தரப்பட வேண்டும்; இதுவே, மூன்று நிறுவனங்களின் செயல்திட்டமாகும்,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

துார்தர்ஷன் செய்திகளை, மொபைல் போன் மூலமாக தரும் வசதியை, டில்லியில் நேற்று துவக்கி வைத்த, அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: நாட்டில் ஏராளமான செய்தி சேனல்கள், பத்திரிகைகள் இருந்தாலும், சேனல்கள் அல்லது பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எதை விரும்புகின்றனரோ, அவையே செய்திகளாக வெளியாகின்றன. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சம்பவங்கள் நிகழ்கின்றன; அவை எல்லாம், செய்திகளாக ஒளிபரப்பாவதில்லை.

போட்டி அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் சர்ச்சையை கிளப்பும் செய்திகளுக்கே, தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், உண்மையான செய்திகளுக்கு எப்போதும், பற்றாக்குறையே உள்ளது. எனவே, உண்மையான செய்திகள் ஒளிபரப்பாவது, ஒரு போதும் தடைபடக் கூடாது. செய்திகளை பார்ப்போரும், டில்லியை மையமாகக் கொண்ட செய்திகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உலகளாவிய செய்திகள், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான செய்திகளை அறிந்து கொள்வதில், அதிக அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.

மாவட்ட வாரி தேர்ச்சி சதவீதம்

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் :
விருதுநகர் - 97.46

பெரம்பலூர் - 97.25

ஈரோடு - 96.06

நாமக்கல் - 95.75

தூத்துக்குடி - 95.5

திருச்சி - 95.36

கன்னியாகுமரி - 95.21

துபாய் - 95

ராமநாதபுரம் - 94.66

கோவை - 94.36

திருப்பூர் - 94.31

சிவகங்கை - 94.71

திருநெல்வேலி - 93.91

தேனி - 93.8

மதுரை - 92.87

தர்மபுரி - 92.31

கரூர் - 91.71

சென்னை - 91.54

சேலம் - 90.69

காஞ்சிபுரம் - 90.68

தஞ்சாவூர் - 90.26

திண்டுக்கல் - 90.22

புதுக்கோட்டை - 89.56

புதுச்சேரி - 88.15

திருவள்ளூர் - 87.32

ஊட்டி - 86.74

கிருஷ்ணகிரி - 86.48

நாகப்பட்டினம் - 86.45

கூடலூர் - 84.69

விழுப்புரம் - 83.96

திருவண்ணாமலை - 83.43

திருவாரூர் - 83.08

வேலூர் - 81.39

அரியலூர் - 80.92

சிவப்பு கட்டெறும்பு சாதிப்பது எப்படி?

சிவப்புக் கட்டெறும்பு சாதிப்பது எப்படி?

உலகளவில் மிகவும் வேகமாக ஊடுறுவும் எறும்பு வகையொன்று, எப்படி அதைச் செய்கிறது என்பது குறித்த உண்மை இப்போது வெளியாகியுள்ளது.

இருக்கும் இடத்துக்கு ஏற்றவகையில் செயல்படும் வல்லமை கொண்டவை இந்த சிவப்புக் கட்டெறும்புகள்
அப்படியான அந்தச் சிவப்புச் கட்டெறும்புகள் எப்படிப்பட்ட நிலப்பரப்பிலும் உட்புகுந்து, தமது கூடுகளைக் கட்டும் உத்திகளை வகுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவை என்று அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டெறிந்துள்ளனர்.
இதற்காக அவர்கள் அந்தக் கட்டெறும்புகள் நிலத்துக்கு கீழே அமைத்துள்ள பாதைகளை எக்ஸ்-ரே கதிர்களைக் கொண்டு படம்பிடித்தனர்.
அதில் அவை பெருமணற் துளிகளில் வேகமாக பணியாற்றுவது கண்டறியப்பட்டது.

இந்த எறும்புகள் குறித்த ஆய்வு புதிய வகையான இயந்திர மனிதனை உருவாக்க உதவும் என நம்பிக்கை
நுண்மணற் துளிகளில் அவை எப்படி செயல்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, அவை அந்த மணற்துளிகளை முதலில் இறுக்கி, கையாளக் கூடிய வகையில் பெரிய அளவிலான கட்டிகளாக மாற்றி தமது தொழில் உத்திகளை வடிவமைத்து முன்னேறி வருவது தெரிய வந்தது.
இதன்மூலம் எப்பேற்பட்ட நிலப்பரப்பிலும் அந்தச் சிவப்புக் கட்டெறும்புகளால் வாழ முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஸ்திரமற்ற சுற்றுச்சூழலில் எறும்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதன் மூலம், மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தக் கூடிய வகையிலான இயந்திர மனிதர்களை வடிவமைப்பதில் உதவக் கூடும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.