இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 10, 2015

வாக்காளர் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் ஒரே படிவம்

வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா பேசினார். ''வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.இதற்காக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.இதற்கான பயிற்சிக் கையேடுகள் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் தொடர்பாக மார்ச் 13 -ல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாட இருக்கிறேன். இதைத் தொடர்ந்து மார்ச் 19-ல் மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.'' என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

Monday, March 09, 2015

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

'குரூப் - 2' தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நேற்றிரவு, வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், 'குரூப் - 2' பதவிக்கான, 'மெயின்' தேர்வு நடந்தது. துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட, 1,130 பதவிகளுக்கு, மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின், தேர்வு எண்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வரும், 26ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு தேர்வருக்கும், தேதி மற்றும் நேரம் குறித்து, தனித்தனியாக, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

www.TNNHIS2012.com என்ற வலைத்தளம் சென்று employee login என்பதை கிளிக் செய்து உங்கள் பழைய அட்டை எண்னை user name மற்றும் உங்கள் பிறந்த தேதியை password ஆக உள்ளீடு செய்தால் உங்கள் புதிய மருத்துவ காப்பீடு அட்டை விபரம் காணலாம். அதே பக்கத்தில் ecard என்பதை கிளிக் செய்தால் புதிய அட்டை கிடைக்கும். அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம் .

NHIS வலைதளம்

Click below

https://tnnhis2012.com/TnHome.aspx

Saturday, March 07, 2015

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி16ல் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்கியது. தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு விஷயத்தில் தேர்வுத்துறை முன்னேற்பாடுகளை கவனத்துடன் செயல்படுத்தி வருகிறது. தேர்வு மையத்தில், தேர்வர்களின் விடைத்தாள் கட்டப்பட்டு, தனித்தனி பண்டலாக, விடைத்தாள் கட்டி, காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே, விடைத்தாள் கட்டு வைக்கும் வளாகத்தில், முன் அனுமதிபெற்ற நபர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட்டனர். இரண்டு கண்காணிப்பு கேமராக்கள், விடைத்தாள் கட்டு காப்பகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக பிரித்து, தரையில் பெயின்ட்டால் கட்டம் கட்டப்பட்ட பகுதியில், தனித்தனி கட்டுகளாக அடுக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து, தரைதளத்தின் வரையப்பட்ட கட்டங்களில் வைப்பது போலவே, விடைத்தாள் கட்டுகளும் வைக்கப்பட்டன. அடுத்து வரும் தேர்வின் விடைத்தாளும், இதே முறையில் பின்பற்றப்பட்டு, அடுக்கி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு தேர்வு மையத்தின் விடைத்தாள் கட்டுகளும், எவ்வித குழப்பமும் இல்லாமல், பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

கேமரா: தேர்வுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் கட்டு காப்பகத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தேர்தல் கமிஷன் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்பது போல, விடைத்தாளையும் பாதுகாத்து வருகிறோம். வரும், 16ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும். கட்டு காப்பகத்தில் இருந்து, பார்சல் வேன் மூலமாக, மாநில தேர்வுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கட்டுகள் மற்ற சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையத்தில், தேர்வு முடிந்த பின், தேர்வரின் விவரம் அடங்கிய, 'டாப்சீட்' 'ஏ' பார்ட்டை கிழித்து, தேர்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டு, விடைபகுதி மட்டும் அனுப்படுவதால், எந்த மாணவர் என்ற விவரத்தை அறிய முடியாது.

வரும், 16ம் தேதி முதல், ஏப்ரல், முதல் வாரம் வரை, விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Friday, March 06, 2015

தகுதித்தேர்வை கைவிட வேண்டும்-ஜி.கே வாசன்

தகுதித் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 16,549 பேர் கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போட்டித் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டித் தேர்வு மூலம் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டித் தேர்வில் கேள்விகள் சரியாக இல்லை எனக் கூறி அவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டனர். இப்போது அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு விலையில்லாமல் வழங்கும் மடிக் கணினி, புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் போன்ற பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும்; அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்தி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜாக்டோவுக்கு போட்டியாக ஜாக்டா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.

'ஜாக்டோ' அமைப்பு, 28 ஆசிரியர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், 18 ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான - ஜாக்டா அமைப்பு சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், தனியே மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசில் பணிபுரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல், தமிழக அரசின் கீழ் பணிபுரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, நடைமுறைப்படுத்திட வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, அனைத்து நிலை ஆசிரியர்களையும், பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை, மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 'கோரிக்கை தொடர்பாக, நல்ல முடிவை அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எங்கள் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான கூட்டம், வரும் 22ம் தேதி, சென்னையில் நடைபெறும்' என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Department exam december 2014 results


Click below

http://tnpsc.gov.in/Resultget-dec2k14.html

Wednesday, March 04, 2015

மாணவர்கள் ஆதார் எண் சேகரிப்பு

கல்வி உதவித்தொகை, சீருடை, லேப் - டாப் போன்ற அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின், ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.
மத்திய, மாநில அரசு கள் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால், மாணவர்களின் மொத்த எண்ணிக்கையும், நலத்திட்டங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கையும், பல நேரங்களில் முரண்படுகின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, மாணவர் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வேறு பள்ளி களில் சேரும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புறப் பள்ளி மாணவர்களில் பலர், வேறு ஊருக்கு குடும்பத்துடன் செல்லும் போது, அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்காமல், வேறு பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். முந்தைய பள்ளியில், அந்த மாணவரின் பெயர் நீக்கப்படாமல், 'ஆப்சென்ட்' அல்லது இடைநிற்றலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், அரசின் திட்டங்களைத் திட்டமிடுவதில், பள்ளிக்கல்வித் துறைக்கு பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் ஆதார் எண்களை, பள்ளி யின் பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 'கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், மாணவர் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஊர், தாலுகா, மாவட்டம், தொடக்கக் கல்வி அல்லது ஏற்கனவே படித்த பள்ளி, தற்போது படிக்கும் பள்ளி, வகுப்பு ஆகிய விவரங்களுடன், மாணவனின் ஆதார் எண்ணும் இணைத்து, கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மாணவர் பெயர் இருப்பதை, தனி மென்பொருள் மூலம் கண்டுபிடித்து நீக்கி விட முடியும்.

மாணவர் நலத்திட்டங்கள் என்ன?

* 1 - 10ம் வகுப்பு வரை சத்துணவு, இலவச காலணி

* ஒன்றாம் வகுப்புக்கு இலவச சிலேட்

* பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

* சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு, 1 - 8ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

* எட்டாம் வகுப்பு வரை இலவச சீருடை

* பிளஸ் 1, பிளஸ் 2 பட்டியலின மாணவியருக்கு இலவச சைக்கிள்

* இடைநிற்றல் மாணவர்களுக்கு, பள்ளிமுறை இல்லாக் கல்வி

* பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப்

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை

* மலைப் பகுதி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்

* 1 - 10ம் வகுப்பு வரை இலவச நோட்டுப் புத்தகம்

* பிளஸ் 2 வரை புத்தகப்பை, ஜாமெட்ரி பெட்டி, கலர் பென்சில், மெழுகு பென்சில், உலக வரைபடப் புத்தகம்.

குரூப் -2 மெயின் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியீடு

குரூப்–2 மெயின்தேர்வு முடிவு குருப்–2 (நேர்முகத்தேர்வு கொண்டது) தேர்வு வணிகவரி துணை அதிகாரி, சப்–ரிஜிஸ்டர் –நிலை 2, உதவி தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சிறப்பு உதவியாளர், ஆடிட் ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் காலியாக உள்ள 1064 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது.

அதன் முடிவு வெளியிடப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை கடந்த நவம்பர் மாதம் எழுதினார்கள். மெயின்தேர்வு முடிவுவெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன எப்படியும் ஒருவாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் முடிவு வெளியிடப்படும். பிறகு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

45 நாட்களில் வெளியீடு குரூப் 4– தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 22–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 10 லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதினார்கள்.

தற்போது விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடந்துவருகிறது. முடிவு வெளியிட 45 நாட்கள் ஆகும். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

SSLC&ப்ளஸ் 2 தேர்வுகள் குறித்து புகார் தெரிவிக்க

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் குறித்து புகார் மற்றும் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்க காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை 12 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– தேர்வுக் கட்டுப்பாட்டு அறை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறவுள்ள பிளஸ்–2 தேர்வுகள் மற்றும் 19–ந் தேதி முதல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 4 செல்போன் நம்பர்கள் பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையினை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தெரிவித்து, தொடர்பு கொண்டு பயன்பெறலாம். தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு கொள்ள செல்போன் நம்பர்கள் 8012594101, 8012594116, 8012594120, 8012594125 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NRDW&SW campaign form

Click below

https://app.box.com/s/bpogoef0x30gae0qj27495q0pdo797jl

NRDW&SW campaign corporation form

Click below

https://app.box.com/s/2kfewz6o1p2vm7vdx6urwhzquwhvwc4i

Tuesday, March 03, 2015

ஆதார் விபரத்தை தெரிவிக்க

ஆதார் விவரத்தைத் தெரிவிக்க... ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு வசதியாக, ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்பது கட்டாயமில்லை. ஆதார் எண்ணை தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலமும், 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல், செல்லிடப்பேசி அப்ளிகேஷன், 1950 என்ற எண்ணுக்கு தொலைபேசி வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் தனியான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தும் கொடுக்கலாம் என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

ஆதார் இல்லாவிட்டால்... வாக்காளர் பட்டியலை பிழையின்றி செம்மைப்படுத்தவே ஆதார் விவரங்களைப் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று கட்டாயப்படுத்தவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ், வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணைக் குறிப்பிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

தமிழகத்தில் 50 சதவீதம் பேர் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளனர். எனவே, அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பெற்று அப்படியே சேர்த்துக் கொள்ளும். அதேசமயம், மற்றவர்களும் ஆதார் எண்ணைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியுடன் இந்தப் பணியையும் ஒருங்கிணைத்துச் செயல்பட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆதார் இல்லாவிட்டாலும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெரும்பாலான மக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த விவரங்களைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

VOTERS camp

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் திட்டம்: 4 நாட்கள் முகாம் நடைபெறுகிறது

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கான முகாம்கள் ஏப்ரல் 12 மற்றும் 26, மே 10 மற்றும் 24 ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இந்த பணிகள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிடப்பட்ட 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

Monday, March 02, 2015

மார்ச் மாத குறுவள மையப்பயிற்சி 14-3-2015

ஆங்கில வழிக்கல்வி முடங்கும் அபாயம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடந்தால், வரும் கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி முறை முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தல்; பள்ளிகள் மீது பெற்றோருக்கு ஆர்வம் உண்டாக்குதல்; கல்வித்தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கில வழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு, துவக்கப்பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.கடந்தாண்டு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், இம்முறையை வெற்றிகரமாக செயல்படுத்த, ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்ற கோரிக்கைக்கு கல்வித்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இக்கல்வி முறையை செயல்படுத்துவதில் ஆசிரியர்கள் மத்தியில் ஆர்வம் குறையும் நிலை உருவாகியுள்ளது.

ஆங்கில வழியில் பாடம் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்து பாடங்களையும், இரண்டு மொழிகளிலும் எடுக்க வேண்டிய கட்டாயத்தால் குழப்பம் அடைகின்றனர். தவிர, சில பள்ளிகளில், ஆங்கில வழி பாடத்தையும் தமிழில் நடத்தி விடுகின்றனர். இதனால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆங்கில வழிக்கல்வியை சிறப்பாக செயல்படுத்தும் பல பள்ளிகளும், ஆசிரியர் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்டு வரு கின்றன. அதனால், வரும் கல்வியாண்டில், ஆங்கில கல்வி முறையை செயல்படுத்த, திட்டமிட்ட பள்ளி நிர்வாகத்தினர், தற்போது தயக்கம் காட்டுகின்றனர்.

கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தால், ஆங்கில கல்வி முறை வரவேற்கப்பட்டது. அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியை மட்டுமே கொண்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், மாணவர்களுக்கு முழுமையான ஆங்கிலத்திறன் கிடைப்பதில்லை. வரும் கல்வியாண்டிலும், ஆங்கில வழி கல்விக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்காவிட்டால், அத்திட்டம் முடங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது,' என்றனர்.

TNPSC department exam.may 2015

Click below

http://tnpsconline.tn.nic.in/

Sunday, March 01, 2015

ப்ளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது

'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.

* முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.

* அடுத்த, ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.

* காலை, 10:15 மணி முதல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்.

* மாணவர்களுக்கு சாதகமாக, தேர்வு அறை கண்காணிப்பாளர் அவர்களை காப்பிஅடிக்கவோ, 'பிட்' அடிக்கவோ உதவாத வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் படி,

* இந்த ஆண்டு தேர்வு அறைக் கண்காணிப்பாளருக்கு தேர்வு அறையில், நாற்காலி போடக் கூடாது.

* தேர்வு அறையில், மாணவர்களின், 'பெஞ்சில்' கூட கண்காணிப்பாளர் அமரக் கூடாது.

* தேர்வு துவங்கும், 10:00 மணி முதல் தேர்வு முடியும், 1:15 மணி வரை கண்காணிப் பாளர் நின்று கொண்டோ, தேர்வு அறையில் நடமாடிக் கொண்டோ, விழிப்புடன் இருக்க வேண்டும்.

* மாணவரிடமோ, அரு கில் உள்ள தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடமோ அனாவசியமாக பேசவோ, கலந்துரையாடவோ கூடாது.

* மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனத்தை யும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக் கூடாது.

* மாணவர்களிடம் தேவை யின்றி பேசுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது.

* கண்காணிப்பாளராக பணி யாற்றும் ஆசிரியர் தன் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.

* தேர்வு மையம் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளி யில், தேர்வு நாளில் பணியாற்றக் கூடாது. அதிரடி மாற்றம்:இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனரகம் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறை இயக்குனரக உத்தரவுப்படி, வேறு மண்டலத்துக்கோ, மாவட்டங்களுக்கோ தேர்வுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துறைத்தேர்வு அறிவிக்கை

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை நாள் : 1.03.2015

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.

மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
இணைய தளத்தைப் பார்க்கவும். www. tnpsc.gov.in