இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 12, 2015

ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் -dinamalar

திருப்பூர் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அரண்மனைப்புதூர், தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது; தலைவர் பிரேமா தலைமை வகித்தார்.மூன்று ஆண்டுகளாகியும், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் நியமிக்காததை கண்டிப்பது, வருங்கால வைப்பு நிதி கணக்குகளை உடனடியாக முடித்து, கணக்கு சீட்டு தாமதமின்றி வழங்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி, தெற்கு மாநகர செயலாளர் கனகராஜ், வடக்கு வட்டார செயலாளர் ஜோசப், தலைவர் மணிகண்ட பிரபு கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொருளாளர் டேவிட் பால்ராஜ் நன்றி கூறினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. அது என்ன வென்றால் எஸ் கிரேடு முதல் இ கிரேடு வரை உள்ளது. அதில் யு கிரேடு என்றால் பெயில்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களிலும் கிரேடு முறையை அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

புதிய கிரேடு முறை

அதன்படி கிரேடு ஓ. முதல் கிரேடு பி வரை அமல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கிரேடு ஓ- மதிப்பெண் 90.1 முதல் 100 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு ஏ பிளஸ் என்பது எக்ஸலன்ட். இது 80.1 முதல் 90 வரை உள்ள மதிப்பெண் ஆகும். அதைத்தொடர்ந்து கிரேடு ஏ- மிகவும் நல்ல மதிப்பெண் அதாவது 70.1 முதல் 80 மதிப்பெண் வரை ஆகும்.

கிரேடு பி பிளஸ் என்பது நல்ல மதிப்பெண் அதாவது 60.1 முதல் 70 மதிப்பெண் வரை ஆகும். பி கிரேடு என்றால் சராசரி மதிப்பெண்ணுக்கு அதிகமாக அதாவது 50.1 மதிப்பெண் முதல் 60 மதிப்பெண்வரை. கிரேடு சி என்பது சராசரி மதிப்பெண் அதாவது 50 முதல் 55 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு பாஸ் என்பது: தேர்ச்சி மதிப்பெண் கொண்டது. அதாவது 40 மதிப்பெண முதல் 50 மதிப்பெண் வரை உள்ளது ஆகும்.

இவ்வாறு கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

  பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். 2 வருடமாக உயர்த்தப்பட்டது கல்வித்தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசும் தமிழக அரசும் குறிக்கோளாக கொண்டு அதற்கேற்றபடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முதலில் ஆசிரியர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் அதற்காக முதலில் ஆசிரியர் பயிற்சியை செம்மைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி பி.எட். படிப்பை ஒரு வருடத்தில் இருந்து, 2 வருடங்களாகவும், எம்.எட். படிப்பை ஒருவருடத்தில் இருந்து 2 வருடங்களாகவும் சமீபத்தில் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் பல்கலைக்கழக மானியக்குழு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் உடனடியாக உங்கள் கல்லூரிகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பை 2 வருடங்களாக உயர்த்துவதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதே போல மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி, உடனடியாக பி.எட்., எம்.எட். படிப்புகளை அமல்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் தமிழ்நாட்டில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்த்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் அதிகரிக்கும். வருங்கால மாணவ-மாணவிகளும் கல்வி மற்றும் கேள்விகளில் அதிக வளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். 2 ஆண்டுகளாக படிப்பை உயர்த்துவதால் அதற்கான புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. ஆனால் சிண்டிகேட் அனுமதி பெறவேண்டும்.

அதற்கு பிறகுதான் பாடம் எழுதப்படும். அடுத்த கல்வி ஆண்டில்.... அடுத்த கல்வி ஆண்டில் (2015-2016) பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளில் அமல்படுத்தப்படும். அதனால் மாணவ-மாணவிகள் புதிய பாடப்புத்தகங்கள் படிப்பார்கள். இவ்வாறு துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஜி.கே. வாசன் கோரிக்கை

    தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கிராமங்களில் செலவு குறைவு என்பதால் அங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது.
அவ்வாறு வழங்கினால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதைத் தாங்கும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளன. நகரங்களில் பணியாற்றுபவர்களைவிட கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அதிக முக்கியத்துவமும், கூடுதல் ஊதியமும் வழங்க வேண்டும். அப்போதுதான் தகுதியான ஆசிரியர்கள் கிராமங்களில் பணிபுரிய முன்வருவார்கள்.

அதிகமாக வழங்காவிட்டாலும் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியமாவது வழங்க வேண்டும். ஊதியம் வழங்குவதில் வேறுபாடுகள் தொடர்ந்தால் கிராமப்புறங்களில் கல்வி பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளிகளிலிருந்து, 'ஆன் - லைன்' மூலம் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

இப்பட்டியலில் உள்ள விவரங்கள் தான், மதிப்பெண் சான்றிதழ்களில் பதிவு செய்யப்படும் என்பதால், மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பல முறை சரிபார்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது. பணி முடிந்த நிலையில், மீண்டும் பல பள்ளிகளில் பெயர் திருத்தத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்ததால், தேர்வுத்துறை இன்று ஒருநாள் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.

'இதையும் மீறி சான்றிதழில் தவறான தகவல்கள் வந்தால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது.

ஜன., 21ல் அடைவுத்தேர்வு

தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு மாநிலம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜன., 21, 22, 23, 24 தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் கற்கும் திறன் குறித்த ஆய்வறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

TRB PG Tentative answer key-kalvisolai

Click below

http://www.smartclass.kalvisolai.com/2013/12/trb-study-materials-trb-study-materials.html?m=1

Sunday, January 11, 2015

KNOW your payment after 7th pay commission

Click below

http://www.gconnect.in/pages/2014/7th-CPC/7cpc.htm

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் அமைக்கவேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம்

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் வழியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு புதிய அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறார்கள்.

மாணவர்களின் பன்முக திறன்களை வளர்க்கும் வகையில் பள்ளிக் கூடங்களில் வகுப்பறை செயல்பாடுகள் மட்டுமின்றி களஆய்வு செயல்திட்டம், செய்துபார்த்து கற்றல், உற்றுநோக்கி கற்றல், ஆய்வு அடிப்படையில் கற்றல் போன்ற புதிய அணுகுமுறை பள்ளிகளில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

பல திறன்கள்

முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக் கூடங்களின் அனைத்து வகுப்பறைகளும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சில பள்ளிகளில் சில வகுப்பறைகளை பயன்படுத்தாது உள்ள நிலை கண்டறியப்பட்டது.

எனவே மாணவர்களின் கற்றல் திறன், எழுதும் திறன், வரையும் திறன், பாடும் திறன், மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் திறன் போன்றவற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் வகுப்பறைகளை மாற்றி அமைக்கவேண்டும்.

கணித அறை, மொழி ஆய்வகம்

பள்ளிக் கூடங்களில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள சில வகுப்பறைகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறு மாற்றி அமைத்தால் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமையும்.

ஓவிய அறை, செயல்திட்ட அறை, அறிவியல் கண்காட்சி அறை, தகவல் மற்றும் தொழில்நுட்ப அறை, படிக்கும் அறை, முதல் உதவி அறை, உள்விளையாட்டு அரங்கு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக்கு செயல்திட்டம் மற்றும் மன்ற நடவடிக்கைக்கான அறை, பெண்கள் ஓய்வு அறை, யோகா, உடற்பயிற்சி மற்றும் தியான அறை, புவியியல் ஆய்வகம், இசை பயிலும் அறை, கணித அறை, மொழி ஆய்வகம், பார்வையாளர் அறை முதலிய அறைகளை அமைக்கலாம்.

கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள குறுந்தகடுகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களின் தகுதியை மேம்படுத்தவேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தனது கடிதத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Saturday, January 10, 2015

PG TRB tentative answer keys

Click below

https://drive.google.com/file/d/0BzuERztD6lAcZnFleVJQWVNob3M/view?usp=sharing

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நேரடி மானியத் திட்ட முறை கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் வரும் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பங்களை அளித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அறிய முடிந்தது.

இந்த நிலையில், கைப்பேசி மூலம் நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:

தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்            இண்டேன்    பாரத்கேஸ்

எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை

(17 இலக்க குறியீட்டு எண்) தெரிந்துகொள்ள    INDANE LPGID    LPGID

நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா

என்பதை அறிய                                                INDANE DBTLSTATUS    DBTLSTATUS

மானிய விலையில் எரிவாயு உருளை

எண்ணிக்கை அறிய                                           INDANE LPGQUOTA      LPGQUOTA

நேரடி மானியத் திட்ட முன்வைப்பு,

மானியத்தொகை விவரங்களை அறிய                INDANE SUBSIDY    LPGSUBSIDY

பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு

  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தவர்களில் 1,90,966 பேர் (94.41 சதவீதம்) தேர்வு எழுதினர். இந்தத் தேர்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநிலம் முழுவதும் தேர்வு அமைதியாக நடைபெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும். அதன்பிறகு, அந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டு இறுதி விடைகள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

பிப்ரவரியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிழைகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளது. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்விலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், முழுமையாக இந்தத் தேர்வில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆள்மாறாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக புகைப்படங்களுடன் கூடிய விடைத்தாள்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாய்ப்பு

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம் மேற்கொள்ளலாம்,”என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவு: மார்ச்சில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம், பிறந்ததேதி, தந்தை, தாய், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் பள்ளி வாரியாக பதிவேற்றம் செய்ய ஜன.,1 முதல் 6 வரை தலைமையாசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அப்பணிகள் முடிந்த நிலையில் அதை முழுமையாக சரிபார்த்து ஆன்லைன் மூலம் நாளை மற்றும் நாளை மறுநாள் தேவைப்படும் திருத்தம் மேற்கொள்ளலாம். அதன்பின் திருத்தம் செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.

TNPTF மாநில செயற்குழு

TNPTF மாநில அமைப்பு 18-1-2015 செயற்குழுவின் முக்கிய அம்சங்கள்

*TETOJAC கூட்டத்தில் முழுமையாக பங்கேற்பு

*இரண்டு கோரிக்கை மட்டுமே நம் இயக்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.CPS& ஊதியமாற்றம்

*அரசு ஊழியர் சங்கம் மற்றும் அரசு பணியாளர் சங்கம் உடன் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவது

*உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி சங்கங்களை TETOJAC உடன் ஒருங்கிணைப்பது

*CPS&ஊதிய மாற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய அணியாக செயல்படுவது

TNPTF மாநில நிர்வாகிகள் தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்தது குறித்து

*பின்னேற்பு குறித்து வெளியிட்டுள்ள செயல்முறையில் ஒழுங்கு நடவடிக்கை குறித்து வார்த்தை திருத்தப்படுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை திருத்தி சிறு விளக்கம் மட்டும் இடம்பெறுமாறு செயல்முறை இந்த வாரம் வெளியிடப்படும்

*CRC க்கு சிறப்பு தற்செயல் விடுப்பு குறித்து சில மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தனர்

மாணவர் அடைவுத்தேர்வு

Friday, January 09, 2015

அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: சி.பி.சி.எஸ். திட்டத்தை யுஜிசி ஏற்கெனவே அறிமுகம் செய்து, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது.

அதன்படி, சில பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த 6-ஆம் தேதி கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது.

எனவே, கல்லூரிகள் வரும் 2015-16 கல்வியாண்டில் இத் திட்டத்தை அறிமுகம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

Thursday, January 08, 2015

Community certificate format

Click below

https://app.box.com/s/gb7ifqw0vf99rxp05aum

Ele director proceedings about to prepare panel as on 1-1-2015

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21VkduZV83dnVtYjA/view?usp=sharing

இலவச சீருடை திட்டம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படுமா?


பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்த, அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு, ஆலோசித்து வருகிறது.

அரசு மாணவர்களின் நலன் மற்றும் கல்வித்தரம் மேம்படுத்தும் நோக்கில், 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக மட்டும், 2,557 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு நான்கு செட் இலவச சீருடை வினியோகிக்கபடுகிறது. இதற்கு, 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. 

தமிழகத்தில், 36 ஆயிரத்து 505 அரசு தொடக்க, நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 8,266 அரசு உதவிபெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் சத்துணவு திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 40 லட்சம் மாணவர்கள் மட்டுமே, மதிய உணவு மற்றும் நான்கு செட் சீருடை போன்ற பலனை பெறுகின்றனர்.

பொதுவாக அரசு பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே, படிக்கின்றனர். இலவச சீருடை மற்றும் மதிய உணவு ஆகிய பலன்கள் கிடைக்காமல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, சில கிராம பகுதிகளிலும், மலை கிராம பகுதிகளிலும் இடைநிற்றல் ஏற்படுகிறது.இலவச சீருடை, மதிய உணவு திட்டத்தை பிளஸ்2 வகுப்பு வரை விரிவுபடுத்தவேண்டும் என, பல்வேறு கல்வி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது, அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்தும், நிதி அதிகரிப்பு குறித்தும் ஆலோசித்து வருவதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், ’அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பொருளாதார சூழல், மாணவர்களின் எண்ணிக்கை குறித்து விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டுகளில், இலவச சீருடை வினியோகம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த, ஆலோசனையில் அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது’ என்றார்.