இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 12, 2014

தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட சுற்றறிக்கை: கடந்த ஜூலையில் 110விதியின் கீழ் 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பணி நிரவல் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்: மதுரை கள்ளிக்குடி வடக்கம்பட்டி பள்ளி, திண்டுக்கல் தொட்டம்பட்டி மேல்கரைபட்டி பள்ளி, நத்தம் புரளிபுத்தூர் பள்ளி, தேனி போடி நாயக்கனூர் ராசிங்கபுரம் பள்ளி, ராமநாதபுரம் திருவாடானை ரெகுநாதபுரம் பள்ளி, சிவகங்கை முடிகண்டம் பள்ளி, விருதுநகர் சாத்தூர் என்.ஜி.ஓ.,காலனி பள்ளி, சிவகாசி கோப்பை நாயக்கன்பட்டி பள்ளி, வெம்பக்கோட்டை முத்தாண்டியாபுரம் பள்ளி ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறு' ஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

TNPSC : GROUP IIA RESULT PUBLISHED - EXAM DATE : 29/06/2014

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-G2A2014.html

TNPSC : GROUP IV HALL-TICKET PUBLISHED

Click below

http://tnpscexams.net/callletter/tnpsc_182014/index.php

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_60473_2014.pdf

Thursday, December 11, 2014

Teachers particular form 1.6.88-31.12.1995 ele hm

Click below

https://app.box.com/s/94zctx21cjn6w5fmircr

1.6.88 முதல் 31.12.1995 வரை துவக்க பள்ளி தலைமையாசிரியர் விபரம்

Click below

https://app.box.com/s/tmluq1sh4fdka8i1rj61

அரையாண்டு, பொதுத் தேர்வுகளால் பள்ளி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது - அரசு உத்தரவு

அரை யாண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடப்பதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு பிறகு மே அல்லது ஜூன் மாதங்களில் தொடக்கப்பள்ளி, பள்ளி கல்வித்துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணியிட மாற்றம், பதவி உயர்வு அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

அதில், மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றி யம் விட்டு ஒன்றியம் உள்ளிட்ட பணியிட மாற்றங்களுக்கான கவுன்சலிங் சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றம் கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பல குளறுபடிகள் நடந்ததை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளரு க்கு பல புகார்கள் வந்தன. இதன் பேரில் தற்போதைக்கு பணியிட மாற்ற உத்தரவுகள் ஏதும் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கின.

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றன. இந்த நேரத்தில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டால் தேர்வுகளை சரியாக நடத்த முடியாது. அதேபோல, பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. அதனால் ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்பட்டால் தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கருதுகிறது. எனவே, பணியிட மாறுதல்களை மே மாதம் வரை செய்யக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

TNPSC DEPARTMNETAL EXAM 2015 TIME TABLE

Click below

https://app.box.com/s/5udgfkf42fhuaqtlsdkm

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

    வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் உத்தரவு

    ''கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார்.

இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி பங்கேற்றனர். சபீதா பேசியது குறித்து கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பணப்பலன், பணி மூப்பு உட்பட பல காரணங்களுக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை உட்பட 10 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் உள்ளன. இவற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். முடிந்தளவு மனுதாரர்களை அழைத்து பேச வேண்டும்.

கோர்ட் உத்தரவுப்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவதை ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கழிப்பறைகள் இல்லாத அரசு பள்ளிகள் என்ற சூழ்நிலை ஏற்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டதாக தெரிவித்தனர்.இன்று (டிச.,12) சென்னையில் அனைத்து மாவட்ட ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம் நடக்கிறது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

10-ஆம் வகுப்பு தனி தேர்வர்களாக செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நாளை (டிசம்பர் 12) விண்ணப்பிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச், ஏப்ரல் 2015ம் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத விரும்பும் நேரடி தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற 11.6.2014 முதல் 30.6.14 வரையிலும் 29.10.14 முதல் 7.11.14 வரையிலும் அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கூறிய தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாமல் விடுபட்ட தனி தேர்வர்கள், இ.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற தனி தேர்வர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் 12ம்தேதிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் சேவை மையங்களிலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாத தனி தேர்வர்கள் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 10, 2014

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய மேலும் 3 மாத கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் சம்பளம் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏதும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:

கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் இணைந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் போது அதற்கான முகப்பு எண் வழங்கப்படுவது வழக்கம். இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு தரவு மையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூயத் திட்டத்தில் இணைந்து அதற்கான முகப்பு எண்ணை ஒவ்வொரு ஊழியர்களும் பெற்றுள்ளார்களா? என்பதை அவர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரியிடம் தெரிவிப்பது அவசியம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஒவ்வொரு துறையிடம் இருந்து பெற்று விண்ணப்பதாரர்களுக்கு உரிய முகப்பு எண்ணை (இன்டெக்ஸ் நம்பர்) அளிக்கும் பணியை மாநில தரவு மையம் மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பணியில் எந்தத் தாமதமும் ஏற்படாமல் உரிய நேரத்தில் முகப்பு எண்ணை வழங்க வேண்டும். முகப்பு எண் வழங்கப்படாமல் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனாலும், உரிய முறையில் விண்ணப்பித்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான முகப்பு எண்ணைப் பெறுவதற்கு வரும் பிப்ரவரி மாதம் வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ளாத, அதற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், அந்த காலத்துக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, மூன்று மாத காலத்துக்குள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து அதற்கான முகப்பு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் நிதித் துறை செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்துத் துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், சட்டப் பேரவைச் செயலகம், துறை ஆணையாளர்கள், முதன்மை கணக்காயர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் அனைத்து மண்டல அலுவலகங்கள், உயர் நீதிமன்ற பதிவாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், அரசு சார்பிலான வாரியங்கள், கழகங்கள், மாநகராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்

  முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. முப்பருவ முறையின் கீழ் ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

இந்த வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் தொடர்பாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் கூறியது: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்துப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் பருவத்துக்கு சுமார் 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த வட்டார விற்பனைக் கிடங்குகளிலிருந்து டிசம்பர் 22-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் முதல் நாளில் புத்தகங்கள் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரையாண்டுத் தேர்வுகள் தொடக்கம் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்வும் டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. பிற வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு, 63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

.Plz furnish the details

Click below

https://app.box.com/s/5kv5ubievzusfmiho3h2

Tuesday, December 09, 2014

TPF-தணிக்கை ஆவணங்கள் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ள 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 26.12.14 குள் கண்டிப்பாக முடிக்க வேண்டும்

Click below

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0M1VVQmRxcjRjME0/view?usp=sharing

ஓய்வூதிய பலன் இல்லைஅதிருப்தியில் ஊழியர்கள்

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.இந்தியாவில் மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலத்தை தவிர்த்து அனைத்து மாநிலத்திலும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசால் 2004 ஜன., யில் கொண்டு வரப்பட்டாலும், தமிழகத்தில் 2003 ஏப்ரலில் முன் தேதியிட்டு அறிமுகப்படுத்தினர்.மத்திய அரசு பணிக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிநியமனம் பெற்றோரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதியதிட்டத்தின் கீழ் பணிக்கு சேர்ந்தவர்களில் 2000 பேர் ஓய்வு பெற்று விட்டனர், 1000 பேர் இறந்து விட்டனர். இவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறுகையில், "

புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என தமிழக அரசு கூறுகிறது. தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,” என்றார்.

50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளார். தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும், ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பணி நிரவல் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்புகள் தொடக்கப் பள்ளியாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்தப் பள்ளிகளுக்கு ஒரு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை:

காஞ்சிபுரம் - 4, திருவள்ளூர்-2, விழுப்புரம்-2, கடலூர் -1, வேலூர் - 7, திருவண்ணாமலை - 2, தருமபுரி - 2, கிருஷ்ணகிரி -1, சேலம் -1, நாமக்கல்-1, ஈரோடு-2, திருப்பூர்-1, கோவை -1, திருச்சி-3, பெரம்பலூர் -1, அரியலூர்-1, கரூர்-1, புதுக்கோட்டை-2, தஞ்சாவூர்-2, திருவாரூர்-2, நாகப்பட்டினம்-1, மதுரை -1, திண்டுக்கல் -2, தேனி -1, சிவகங்கை -1, ராமநாதபுரம் -1, விருதுநகர் -3, திருநெல்வேலி -1.

பி.எப். கணக்குகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை: மத்திய அரசு

பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே பி.எப் கணக்கு எண்ணாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க வேண்டுமா? என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா, பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க தேவையில்லை என்று கூறினார்.

Monday, December 08, 2014

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Click below

https://docs.google.com/uc?export=download&id=0B5Op1AjDFZGcVEFCRzlJZjdCLXc

50 SCHOOL upgradation list

CLICK below

https://app.box.com/s/xcbh78wn353xlp1kyt58

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21NHZZRDY2Ny1KWVE/view?usp=sharing

அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21aDdQYTBlWFBqMEk/view?usp=sharing

NMMS - 2014 - APPLICATION - UPLOAD - Extended Upto (09/12/2014)

Click below

http://www.tndge.in/login.aspx