வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , நீக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இன்று கடைசி நாள் என்ற போதிலும்,இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும்.
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய திருத்தப் பணி இன்றுடன் முடிவடைகிறது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி மாதம் இருபத்தைந்தாம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தன்று வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் இணையதளம் மூலமாக பெயர்களை சேர்க்கவோ ,நீக்கவோ அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ விண்ணப்பிக்க முடியும்.
Monday, November 10, 2014
வாக்காளர் பட்டியல் ஜன 5ல் வெளியீடு
கல்விச் சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்: கல்வித்துறை
பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில், சமீபத்தில் கல்விச் சுற்றுலாவின்போது அதிகரித்து வரும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மாநில அரசுகள், தகுந்த விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டது.
தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைக்கான தொகுப்புகளை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், கலைத் திட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்தல்; மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அவர்கள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற மாணவர்கள் மட்டுமே கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க இயலும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.
பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், சுற்றுலாவில் பங்கேற்கும்போது, உள்ளூர் சுற்றுலா முகவரின் துணையை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள், ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே இருக்கவேண்டியது அவசியம். மாணவர்களின் ஒப்புதல் கடிதம் மற்றும் உடன் செல்லும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் அவசர பாதுகாப்பு நடவடிக்கையில் உதவுவோம் என்ற ஒப்புதல் கடிதமும் பெற வேண்டும். கோவை மாவட்ட பள்ளிகளுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை தொடக்க கல்வி அலுவலகத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை பின்பற்றாமல் கல்விச் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Saturday, November 08, 2014
தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதானத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 8 மாவட்டங்களில் 44 மையங்களில் நடைபெற்ற தேர்வை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் மட்டும் 12 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1,264 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இணையதளம் மூலம் தேர்வு:
குரூப் 2 பிரதானத் தேர்வு, முதல் முறையாக இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை தேர்வாணையத் தலைவர் பாலசுப்பிரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதன்பின், தேர்வாணையத் தலைவர் கூறுகையில், ""வரும் தேர்வுகளையும் இணையதளம் மூலமே நடத்த ஏற்பாடு செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.,) கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்துக்குள் முடிவு வெளியாகும்'' என்றார்.
இணையதளக் கோளாறு: சில இடங்களில் இணையதளக் கோளாறு காரணமாக, தேர்வு நிறுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 300 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 270 பேர் தேர்வு எழுதினர். இணையதளக் கோளாறு காரணமாக 42 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 42 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதே இடத்தில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.
28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்
திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள், அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் (ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.அதன்படி, சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெறப்பட்ட, ஓய்வூதியதாரர்களின் கோப்புகள் மீதான, தேவையான ெதளிவுரைகள், தமிழக அரசிடம் இருந்து கிடைத்ததும், திருத்திய ஓய்வூதியத்தை வழங்க உத்தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசு, ஒரு நபர் பரிந்துரை யின் பேரில், 100 உத்தரவுகளை, கடந்த ஆண்டு, ஜூலை, 23ம் தேதி ெவளி யிட்டது. இதன் மூலமும். திருத்திய ஓய்வூதியம் தெடார்பான கோப்புகள் வந்து குவிகின்றன.இதனால், அதிக வேலைப்பளு ஏற்பட்ட போதும், சிரமத்திற்கிடையில், ஓய்வூதிய தாரர்கள், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 28,889 ஓய்வூதியதாரர்களுக்கு, திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட விவரங்கள் வேண்டி, 2192 கோப்புகள், சம்பந்தப்பட்ட துறை அலுலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே, தங்கள் கோப்புககளை திரும்ப பெற்றவர்கள்;
இனி கோப்புகளை அனுப்புபவர்கள், ஓய்வூதிய கொடுப்பு ஆணை எண், பணிப்பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்திற்கான முகாந்திரம், பணிப்பதிவேடு கிடைக்காவிட்டால், நான்காவது ஊதியக்குழு அடிப்படையிலான, ஊதிய அட்டவணை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.மேலும், ஓய்வூதியதாரர்களின் விருப்பப்படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும், கருவூலம் அல்லது சார் கருவூலத்தின் பெயர் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், சென்னை, அண்ணாசாலையில் உள்ள, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், துணை மாநில கணக்காயரை (ஓய்வூதியம்) தொடர்பு கொள்ளலாம்.
Friday, November 07, 2014
தமிழகத்தில் புதிய பள்ளிகள் தொடங்க 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் வரும் 2015-16ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தொடங்குவதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொடக்க கல்வி இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில்,
''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2015-16ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி விபர வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் மற்றும் உயர் தொடக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பகுதிகளில் புதியதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கும், தற்போது தொடக்கப் பள்ளிகளாக இயங்கி வரும் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான விண்ணப்பங்களை வரும் 10ஆம் தேதிக்குள் தனி நபர் மூலம் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் 26 வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விவரம்:
தமிழ்ப் பாடத்தில் 277 பேர், ஆங்கிலப் பாடத்தில் 209 பேர், கணிதப் பாடத்தில் 222 பேர், இயற்பியல், வேதியியலில் தலா 189 பேர், உயிரியலில் 95 பேர், விலங்கியலில் 89 பேர், வரலாறு பாடத்தில் 1989 பேர், பொருளாதாரத்தில் 177 பேர், வணிகவியலில் 135 பேர், உடற்கல்வி இயக்குநர்களாக 27 பேர் என மொத்தம் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்போடு, பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு ஆண்டுப் பட்டப் படிப்பை முடித்திருந்தாலோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான படிப்புகளைப் படித்திருந்தாலோ அவர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
எனினும், வேறு பிரிவில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அவர்களது படிப்பு, அறிவிப்பாணையில் உள்ள பாடங்களுக்கு இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் போட்டித் தேர்வு எழுதலாம். இந்த அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பே இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்த இடத்தில் விண்ணப்பத்தை வாங்கினாரோ அதே இடத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். பிரதான பாடம், கல்வி முறை, பொது அறிவு ஆகியவை தொடர்பாக 150 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
பதிவு மூப்புக்கு 4 மதிப்பெண்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புக்காக மொத்தம் 4 தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வரை வழங்கப்படும். ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை 1 மதிப்பெண், 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண், 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண் என வழங்கப்படும்.
பணி அனுபவத்துக்கு 3 மதிப்பெண்: அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்றியிருந்தால் பணி அனுபவத்துக்கு 3 தகுதிகாண் மதிப்பெண் வரை வழங்கப்படும்.
1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
செஸ் இறுதிப்போட்டிசென்னையில் நடக்கிறது A
:பள்ளி மாணவ, மாணவியரிடையே, மாநில அளவிலான, செஸ் இறுதிப் போட்டி, வரும், 13ம் தேதி, சென்னையில் நடக்கிறது.கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் நினைவுத்திறனை வளர்க்கும் வகையில், செஸ் போட்டி நடத்தப்படுகிறது.ஏற்கனவே, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மண்டலம் என, பல நிலைகளில், போட்டி நடந்தது.இதையடுத்து, மாநில அளவிலான இறுதிப் போட்டி, வரும், 13ம் தேதி, சென்னை, வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, 360 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, மறுநாள், 14ம் தேதி, சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் குழந்தைகள் தின விழாவில், பரிசு வழங்கப்படும்.
பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு
வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம்: தனித் தேர்வர்கள், தேர்வுக்கு பதிவு செய்ய வசதியாக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது.
இதன் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீது நடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை
“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது:
பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளி களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.
Thursday, November 06, 2014
TRB PG EXAM notification
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB
விண்ணப்ப விநியோகம் 10.11.2014 கடைசி தேதி 26.11.2014
எழுத்துத் தேர்வு 10.1.2015
மொத்த பணியிடம் 1807
தமிழ்-227,
ஆங்கிலம்-209,
கணிதம்-222,
இயற்பியல்-189,
வேதியியல்-189,
தாவரவியல்-95,
விலங்கியல்-89,
வரலாறு-198,
பொருளியல்-177,
வணிகவியல்-135,
உடற்கல்வி இயக்குநர்-27
பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை?
பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.
பிளஸ் 1 வகுப்புக்கு 2014-15-ஆம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு 2015-16-ஆம் கல்வியாண்டிலும் பாடத் திட்டங்களை மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போனது. பிறகு, பிளஸ் 1 வகுப்புக்கு 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கு 2016-17-ஆம் ஆண்டிலிருந்தும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், புதிய பாடத் திட்டம் அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு ஓராண்டாகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொழில் பிரிவுப் படிப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவே தடுமாறுகின்றனர். இதை மனதில் வைத்தே கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்களில் இந்த முறை பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
புதிய பாடத் திட்டத்துக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டாலும்கூட, பாடப் புத்தகங்களை எழுதுதல், பிழை திருத்துதல், வடிவமைப்பில் மாறுதல் என புத்தகம் எழுதும் பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.
அதன் பிறகு, புத்தகங்களை அச்சிட வழங்க வேண்டும். எனவே, அடுத்த கல்வியாண்டில் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது மிகவும் கடினம் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போதுள்ள பிளஸ் 1 பாடத் திட்டம் 2004-05 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழையப் பாடத் திட்டமே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தகம் எப்போது? முப்பருவ முறையின் கீழ் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாவது பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்தில் பிளஸ் 2 புத்தகங்களை அச்சிடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அவற்றை அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
துணைக் குழு: இதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 24 பாடங்களுக்கான பாடத் திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷண ராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக 24 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத் திட்டத்துக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பொறுப்பை அப்போது கூடுதலாக வகித்த அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, அந்தக் குழுவின் ஆலோசனைகளின்படி, புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்டது.
10ம்வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அனிமேஷன் பயிற்சி : சென்னையில் நவ.,10, 11ல் நடக்கிறது
மாவட்டங்களில் சிறப்பாக பாடம் நடத்தும் 10ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சென்னையில் நவ.,10, 11ல் கம்ப்யூட்டர் அனிமேஷன் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 96 பேர் கலந்து கொள்கின்றனர். 10ம் வகுப்பில் கணித பாடத்தை சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அனிமேஷன் தொடர்பான பயிற்சி சென்னையில் நவ.,10, 11 ஆகிய இரு நாட்கள் அளிக்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.
இதில் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலவழிப்பிரிவு ஆசிரியர்கள் 3 பேர் என 96 பேர் கலந்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்புமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் பொருட்டும், பாடம் தொடர்பாகவும் முதற்கட்டமாக இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பின்னர் இவர்கள் மாவட்டங்களில் மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதுகுறித்து பயிற்சியளிப்பர்,” என்றார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு விண்ணப்பம் : நவ.,10 முதல் விற்பனை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நவ., 10 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. அதன் அறிவிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான(2013--14, 2014--15) போட்டி எழுத்துத்தேர்வு அடுத்தாண்டு ஜன., 10ல் நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் அத்தேர்விற்கான விண்ணப்பங்கள் நவ.,10 காலை 10 மணி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். தேர்வுக் கட்டணம் 500 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி.,க்கு 250 ரூபாய். விண்ணப்பங்கள் பெற மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் நவ.,25 மாலை 5.30 மணி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது
விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது I இதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது I ஆசிரியர் தேர்வு வாரியம்
ந.க.எண்.9287/ அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மர்றும் 2014-15) போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 09.11.2014க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் உரிய மையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கை ஆசிர்யர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது.