இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 09, 2014

அரசு பள்ளிகளில் 'தூய்மை' : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

"பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அக்.2ல் 'கிளீன் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். மோடியின் இத்திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளத

ு. 'தூய்மை பள்ளி' திட்டம்: இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில், அக்.,9 முதல் 2015 ஆக.,15 வரை 'தூய்மை பள்ளி' திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். அதில், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுத்தமாக வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியில் 'குளோரினேஷன்' செய்ய வேண்டும். சத்துணவு மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடல் வேண்டும். தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் ஒட்டடை அடித்து தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி வளாக கதவுகள், ஜன்னல்கள், பேன், நாற்காலிகள், மாணவர் இருக்கைகள், அலமாரி, கம்ப்யூட்டர், டிவி.,க்கள், லேப்-டாப் போன்றவற்றில் படிகிற தூசிகளை அன்றாடம் துடைத்து, தூய்மையாக வைத்திடல் வேண்டும்.

பள்ளி கட்டடங்களை பழுதுபார்த்து, வெள்ளை அடிக்கவேண்டும். விழிப்புணர்வு: மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தர வேண்டும். தினமும் நடக்கும் காலை வழிபாட்டில் மகாத்மா காந்தியின் சுத்தம், சுகாதாரம் சார்ந்த கூற்றுக்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு போட்டிகள் நடத்தி, 'தூய்மையான பள்ளி' என, அறிய செய்தல் வேண்டும். மேலும், தினமும் மாணவர்கள் பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், சுத்தமான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன் சோப்பால் கை கழுவுதல் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம், அந்தந்த பள்ளிகளை, 'தூய்மை பள்ளி'களாக வைத்திருக்கவேண்டும், என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது” என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. 

வரைவு வாக்காளர் பட்டியல் 15ல் வெளியீடு: வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள


   இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 2015 ஐ மைய நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், வரும் ஜன. 2015 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது ஜன. 1997க்கு முன் பிறந்துள்ளவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து சேர்க்கலாம். பெயர்கள் நீக்கம் தொடர்பாக, படிவம் 7ஐ பூர்த்தி செய்து நீக்கலாம். பதிவுகளில் திருத்தம் தொடர்பாகவும், மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளவர்கள், புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஐ பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகலினை சேர்த்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது வாக்குச்சாவடி மையங்களிலோ வரும் 15 முதல் நவம்பர் 10 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வலைதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம். ஜனநாயகத்தை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் - சலுகையா, உரிமையா? “- theekkathir


   நீங்கள் வேலை செய்த காலத்தில் உங் களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற பிறகு இப்போது எந்த வேலையும் செய்வதில்லை. பிறகு ஏன் உங்களுக்கு இப்போதும் சம்பளம் (ஓய்வூதியம்) கொடுக்க வேண்டும்?”இப்படி ஒரு கேள்வி ஒரு சிலரால் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும், அதற்குமுந்தைய பாஜக 2 அரசும், தற்போதைய பாஜகஅரசும், ஓய்வூதியத் திட்டத்தைச் சீரழிப்பதற் குச் சொல்லிவரும் புள்ளுகளைக் கேட்டுக்கேட்டுத் தான் ஒரு சிலர் இப்படிப் பேசி வருகிறார்கள்.“ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அர சுக்கு நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, எதிர்காலத்தில் ஓய்வூதியர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்“ என்று முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திருவாய் மலர்ந் தருளினார்.இதே காரணங்களைச் சொல்லி, இதற்கு முந்தைய பாஜக 2 அரசின் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹாவும் ஜஸ்வந்த் சிங்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தனர்.

தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் மோடி அரசு, ஓய்வூதியச் சட்டத்தில் பல்வேறு நாசகரமான திருத்தங்களைச் செய்து முடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.தங்களின் செயல்களை நியாயப்படுத்துவதற் காக, இவர்கள் அவிழ்த்துவிடும் பொய்யுரைகளை ஊடகங்கள் வழியாக அறியும் பொதுமக்களுக்கு - ஏன், நமக்கே கூட, ஓய்வூதியம் என்பது அரசின் கருணையால் தரப்படும் சலுகைதானோ என்றுசந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த அள வுக்கு, ஓய்வூதியம் என்பது சலுகையாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.ஓய்வூதியம் என்பது உழைப்பாளிகளின் உரி மையே, சலுகையல்ல என்பதுதான் உண்மை.எப்படி? ஓய்வூதியம் பிறந்த கதை ஓய்வூதியம் என்பது போராட்ட நெருப்பில் விளைந்த உழைப்பாளர்களின் உரிமையாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னால், 1789-99களில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது, அந்நாட்டுத் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முதன்மை யானது ஓய்வூதியக் கோரிக்கை. உலகில் ஓய்வூதி யத்திற்காக எழுப்பப்பட்ட முதல் குரல். எனினும், அந்த வேளையில் இந்தக் கோரிக்கை வெற்றி பெறவில்லை.

தொழிற்சங்கங்கள் மீண்டும் இக்கோரிக்கையை 1890ல் முன்வைத்துப் போரா டியதன் விளைவாக 1908ல் ஓய்வூதியக் கோரிக்கை யை வென்றெடுத்தார்கள்.மேலும், ஜெர்மனியில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த சோஷலிஸ்ட்டுகளின் (கம்யூனிஸ்ட்டு களின்) தொடர்ந்த நிர்ப்பந்தங்களின் விளைவாக, ஓய்வூதியம் வழங்குவதற்கான சட்டத்தை ஜெர்மனி அரசு 1889ல் நிறைவேற்றியது. உலகில் முதன்முதலாக ஓய்வூதியத்திற்கென சட்டம் இயற்றிய நிகழ்ச்சி இதுதான்.இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனிலும், மெல்ல மெல்ல ஏனைய பிற நாடு களிலும் ஓய்வூதியம் சட்டமாக்கப்பட்டது.நமது இந்தியாவில், பிரிட்டிஸ்ஷார் ஆட்சிக்காலத்தில் 1881ல் முதன்முறையாக அரசு ஊழியர் களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது.இப்போதைக்கு இந்த வரலாறு போதும். விஷயத்திற்கு வருவோமா! கொடுத்ததைத் திரும்பப் பெறுவதே ஓய்வூதியம் எடுத்துக்காட்டாக, நமது இந்திய நாட்டை எடுத்துக் கொள்வோம். நீர், நிலம், காற்று ஆகியவை தவிர, ஏனைய அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கியது நமது நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்கள்தான்.செல்வங்கள் என்றால்...

இதோ, மார்க்ஸ் கூறுகிறார்.“முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களின் செல்வம், `சரக்குகளின் பெருந்திரட்டலாகக் காட்சியளிக்கிறது’....”அதாவது, உழைப்பாளி மக்கள் உற்பத்தி செய்து குவித்த சரக்குகள்தான் நமது நாட்டின் செல்வங்கள் ஆகும். விற்பனைக்காக உற்பத்தி செய்யப் படும் பொருட்களே சரக்குகள் எனப்படும். உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே சரக்குகள் தான். இவைதான் இந்திய நாட்டின் செல்வங்கள். இவற்றின் பண மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இந்தச் செல்வங்களை உற்பத்தி செய்வ தில், உழைப்பாளி மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஈடுபடுகிறார்கள். ஆலைகளில், தொழிற் சாலைகளில், விளைநிலங்களில் உழைப்பாளிகள் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். சுமைப்பணித் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் உள் ளிட்ட ஏனைய உழைப்பாளிகள் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்.உற்பத்தியில் ஈடுபடும் இவர்கள், தங்களின் உழைப்புக்காக ஊதியம் பெறுகிறார்கள்.

ஆனால், உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடு படாத - உழைக்க இயலாத ஒரு பகுதியினரும் மக்கள் திரளில் உண்டு. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகளே அந்தப் பகுதியினர்.உழைக்க இயலாத, ஊதியம் பெற வாய்ப்பு இல்லாத இவர்களைப் பராமரித்து வருவது யார்?உழைக்கும் மக்கள் உருவாக்கித் தந்த ஒட்டு மொத்தச் செல்வத்தின் ஒரு பகுதிதான், உழைக்க இயலாத இந்த மக்களை பராமரித்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு உழைப்பாளியும் தனக்காக உழைப்பதோடு, உழைக்க இயலாத பகுதி யினரின் பராமரிப்புக்காகவும் அன்றாடம் உழைத்து வருகிறார்.உழைப்பாளிகள் தாங்கள் உழைத்த காலத்தில், உழைக்க இயலாத பகுதியினருக்குக் கொடுத்த பங்கை, தங்களின் வயோதிக காலத்தில், அடுத்ததலைமுறை உழைப்பாளிகளிடமிருந்து (பண மதிப்பாக) திரும்பப் பெறுகிறார்கள். இதுதான் ஓய்வூதியம்.இப்போது சொல்லுங்கள்,கொடுத்ததைத் திரும்பப் பெறுவது சலுகையா, உரிமையா?உரிமைதானே!

Wednesday, October 08, 2014

Toilet Facility Format

cleaniliness pledge


வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார். தற்போது, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், பள்ளி தலைமையாசிரியை பிரமிளா, அறிவியல் ஆசிரியர் சுந்தரம் ஆகியோரின் வழி காட்டுதலுடன், டில்லியில் நேற்று நடந்த '4வது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி 2014' போட்டியில் தென் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

தற்போது டில்லியில் உள்ள மாணவனின் வழிகாட்டியான ஆசிரியர் சுந்தரம் 'நமது நிருபரிடம்' தொலைபேசியின் மூலம் கூறியதாவது: மாணவன் கோகுல், வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். வாகன ஓட்டிகள், 2 வினாடி கண் அயர்ந்து துாங்கிவிட்டால், சென்சார் தொழில்நுட்பத்தில், அவரது இருக்கை அதிர்ந்து, அவரது துாக்கத்கை கலைத்து விடும்.வேகத்தடையால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க, ரேடியோ அலைவரிசை மூலம், வேகத்தடை வருவதற்கு, 10 அடிக்கு முன்பே, டிரைவரை 'அலர்ட்' செய்யும் தொழில்நுட்பம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க 'ஆல்கஹால் சென்சார்', மொபைல் போன் சென்சார் தொழில்நுட்பங்களும், இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த படைப்புக்கு, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி என, 6 மாநிலங்களை உள்ளடக்கிய, தென் மாநில அளவில், 2ம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவன் கோகுலின் அம்மாவின் பெயர் தங்கமணி, தந்தை மணி, காபி துாள் கடையில் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் இறந்தால் நிவாரணம் ரூ.10 லட்சம்

தேர்தல் பணியின்போது, இறப்போருக்கு வழங்கப் படும் நிவாரணத் தொகை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், லட்சக்கணக்கான ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் தேர்தல் பணியில் இருக்கும்போது இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, தமிழக அரசு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க, அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியின்போது, இறப்போரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இறந்தோரின் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதம், 5 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும், என்றார்.

பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்

மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.

 மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம். http://attendance.gov.in/

மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உத்தரவு


   அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கை விவரம்:

பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்று திரும்புகின்றனர். அவ்வாறு, சுற்றுலா செல்கையில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநரின் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுலா அழைத்துச் செல்வது என்பது மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாகவும், வகுப்புகளுகுரிய பாடப்பொருள் சார்ந்தாகவும் அமையுமாறு தலைமையாசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உடன் வரும் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பெற்றோர், அலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் இருக்க வேண்டும். அதோடு, பாதுகாப்பு அடையாள அட்டையை ஒவ்வொருவரும் அணிந்திருக்கிறார்களா என்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், முக்கியமாக மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியரும், மாணவிகளுக்கு முதுநிலை ஆசிரியை ஆகியோரும் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். அணைக்கட்டுக்கள், மின்சக்தி நிலையங்கள், கடற்கரைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் முன்பு ஆட்சியரிடமும், உரிய கல்வித்துறை அலுவலர்களிடம் அனுமதியும் பெற வேண்டும். சுற்றுலா செல்லும் போது அனைத்து விதிமுறைகளுக்கும் உள்பட்டு நடந்து கொள்வேன் என்றும், இதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோரிடம் இருந்து மாணவர் அனுமதி கடிதம் முன்னதாகவே அளித்துள்ளனரா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்த பின்னர் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

. இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உடனே ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்றுலா தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தான தகவலை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கும் உடனே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் சுற்றரிக்கையில் தெரிவித்துள்ளார்.   

Tuesday, October 07, 2014

12-இல் ஊரக திறனாய்வுத் தேர்வு


பள்ளிப் படிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு அரசு  ஊரக திறனாய்வுத் தேர்வு வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கடந்த 2012-13-ஆம் ஆண்டில் 8-ஆம் வகுப்புத் தேர்வில் 50 சதவீத மொத்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் படிப்பு உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும்.

 இதில், திருப்பூர் மாவட்டத்தில் 50  மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 100 பேருக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு வரும் 12-ஆம் தேதி கீழ்க்கண்ட தேர்வு மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 337 பேர், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 332 பேர், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 179 பேர், உடுமலை எஸ்.வி.ஜி. மேல்நிலைப் பள்ளியில் 422 பேர், தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 260 பேர், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 127 பேர் என மொத்தம் 1,657 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தம் மற்றும் சுகாதாரம் காக்க "தூய்மையான பள்ளி' திட்டம்


மாணவர் மத்தியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், "தூய்மையான பள்ளி' திட்டம், ஒன்பதாம் தேதி அறிமுகமாகிறது. அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகமாகும் இத்திட்டத்தின் முக்கிய அம்சம், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவது, பள்ளி சூழ்நிலையை ஆரோக்கியமாக மாற்றுவதாகும். முதற்கட்டமாக, காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மாணவர் உறுதிமொழி வாசிப்பது, பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் தனிநடிப்பு போட்டி நடத்துவது, மாணவர் பங்கேற்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படும்.

அடுத்ததாக பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்துதல், விளையாட்டு மைதானம் பராமரித்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்தல், சத்துணவு கூடம், சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரங்களை தூய்மையாக வைத்திருத்தல், தலைமை ஆசிரிய அறை மற்றும் வகுப்பறைகளை தூய்மைபடுத்தப்படும். நூலகம், ஆய்வகத்தில் ஒட்டடை அகற்றுதல், பழுதடைந்த மேஜை, நாற்காலிகளை புதுப்பித்தல், பயன்பாடற்ற பொருட்களை அகற்றுதல், பள்ளி கட்டிடங்களின் பழுதை சரிசெய்தல், சுவர்களுக்கு வெள்ளையடித்தல், கட்டிட ஜன்னல், கதவுகள் மற்றும் மின்விசிறி, மாணவர் இருக்கை, அலமாரி, "டிவி', கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் போன்றவற்றை தூசி படியாமல் தூய்மைபடுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமும் பல் துலக்குதல், விரல்களில் நகம் வெட்டுதல், தூய்மையான ஆடை அணிதல், சாப்பிடும் முன் கைகளை கழுவுதல், சுகாதாரமான முறையில் உணவு சாப்பிடுதல், குப்பை தொட்டியில் வீசுதல் போன்ற நல்ல பழக்கங்களை மாணவர் மத்தியில் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஒன்பதாம் தேதி பள்ளிகளில் துவங்கப்படும் இத்திட்டத்தை, வரும், 2015 ஜூன், 15 வரை, அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் செயல்படுத்துமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. "தூய்மையான பள்ளி' திட்டத்தின் செயல்பாடு குறித்து, பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.