இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 14, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு 2 முறை நடத்தப்பட்டது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் தவிர மீதம் உள்ள நபர்களும் தகுதி இருந்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதுபோல 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் பணிக்கு தகுதி இருந்தால் தேர்ச்சி பெற உள்ளனர்.

அதாவது 2012 முதல் இதுவரை நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண், பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டும் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று எடுத்த மதிப்பெண்ணை கூட்டி அதை 100-க்கு கொண்டு வரப்படுகிறது. 100-க்கு எத்தனை மதிப்பெண் என்று கணக்கிட்டு அதை வெயிட்டேஜ் மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது.

வெயிட்டேஜ்மதிப்பெண் வெளியீடு

அந்த வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பட்டதாரிகளும் பார்க்கலாம். பார்த்துவிட்டு மதிப்பெண் குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு குறிப்பிட்டுள்ள தேதிகளில் சென்று சரிபார்க்க வேண்டும். அப்போது எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழி படித்திருந்தால் (தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் படிக்காதவர்கள்) கல்வி நிறுவன தலைவரிடம் இருந்து பட்டப்படிப்பு தமிழ்வழியில் படித்ததற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான மருத்துவ குழுவினரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். அப்படி வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்கள், இரு சான்றொப்பம் இட்ட நகல்கள் கொண்டுவர வேண்டும்.

கடைசி வாய்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏற்கனவே வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது. அந்த தேதியும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மதிப்பெண் சரிபார்த்தல் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 495 பேர் தகுதி தேர்வு எழுதினார்கள். அதில் 52 ஆயிரத்து 631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 ஆயிரத்து 726 பேர் நியமனம்

தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 10 ஆயிரத்து 726 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் பாடவாரியாக தேர்ச்சி பெறுவோர் விவரம் வருமாறு:-

தமிழ் - 772

ஆங்கிலம் - 2,822

கணிதம் - 911

இயற்பியல் - 605

வேதியியல் - 605

தாவரவியல் - 260

விலங்கியல் - 260

வரலாறு - 3,592

புவியியல் - 899

இந்த வருடம் வரலாறு பாடம் படித்த பட்டதாரிகள் அதிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோல புவியியல் படித்தவர்கள் குறைவாகத்தான் எப்போதும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 899 பேர் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள்.

30-ந் தேதி பட்டியல் வெளியீடு

இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்ட உடன் வருகிற 30-ந் தேதி பி.எட். படித்த பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முன்பாக அவர்களுக்கும் இதே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிட முகவரிக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013

10,726 பட்டதாரி ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

10,726 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனையடுத்து, ஆசிரியர் தேர்வுவாரியம் காலிப்பணியிடம் தொடர்பான விபரங்கள் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழ்- 782 இடங்களும், ஆங்கிலம்-2822 இடங்களும், கணிதம்-911 இடங்களும், இயற்பியல்-605 இடங்களும் வேதியியல்- 605, தாவரவியல்- 260 இடங்களும், விலங்கியல்-260 இடங்களும், வரலாறு-2592 இடங்களும், புவியியல் -899 இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 13, 2014

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் இடங்கள் காலி

் தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,600 இடங்கள், 454 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான 10 ஆயிரம் இடங்கள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,600 இடங்கள் என 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இருந்தன. ஆனால், இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 4,520 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 2,400 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். சுமார் 2,200 பேர் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாவட்ட மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையே தேர்ந்தெடுத்தனர். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,176 பேர் சேர்ந்துள்ளனர். 424 இடங்கள் மட்டுமே இதில் காலியாக உள்ளன. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. வட மாவட்டங்களில் சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கலந்தாய்வின் மூலம் 50 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது ஊர்களுக்கு அருகில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலான மாணவர்கள் இவற்றில் சேருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்ன?: தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும். தமிழகம் முழுவதும் ஏற்கெனவே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த டிப்ளமோ படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் காலியிடங்கள் அதிகமாக இப்போது ஏற்படுவதில்லை. அரசு வேலைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இதுவரை மாநில அளவிலான பதிவு மூப்பின் அடிப்படையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இனி வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நடைபெற உள்ளது.

அனுமதி பெறாமல் படிப்பு:முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்


     கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், எம்.பில்., படித்து வருகின்றனர். இதை, இவர்களது பணி பதிவேட்டில் சேர்ப்பதிலும், அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதம் உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது.புகாரை அடுத்து, இவர்களது பெயர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படி, தொழிற்கல்வி இயக்குனர் தர்ம ராஜேந்திரன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவில், 'முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர் எம்.பில்., படிக்க வேண்டுமானால், அவர் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெறாமல், எம்.பில்., படிப்பவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To know your TET weightage mark Paper II

To know your TET weightage mark paper I

Saturday, July 12, 2014

ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம-dinamani


      மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது

. கடந்த பிப்ரவரியில் குழுவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இக்குழு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இக் குழுவின் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்ட அசோக் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் அது சம்பிரதாய அளவில் இருக்கும் என்றும் குழுவின் செயல் திட்டம், பணிகள் தொடர்பாக அதில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்கள், அகில இந்திய அரசுப் பணி, யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவோர், இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, பாரத ரிசர்வ் வங்கி நீங்கலாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர்பான ஊதியம், படிகள் போன்றவை குறித்து ஏழாவது ஊதியக் குழு ஆய்வு செய்யவுள்ளது

. தற்போது அமலில் உள்ள சம்பள படிகள், சலுகைகள், பாதுகாப்புத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய காலப் பலன்கள், அரசுப் பணியில் திறமையை ஊக்குவித்தும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பது, சமூக-பொருளாதார-தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது, அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப சலுகைத் திட்டங்களை அறிவிப்பது, 1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கும் பணி ஏழாவது ஊதியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது ஆய்வின் தேவைக்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள், தொழிற்துறை, அரசுத் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ள இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனது பணியை 23-ஆம் தேதி தொடங்கும் ஊதியக் குழு பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த்ன. கருத்துகளை வரவேற்க மே 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதியக் குழுவிடம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி: செயலர், ஏழாவது ஊதியக் குழு, அஞ்சல் குறீயிட்டு எண் 4599, ஹோஸ் காஸ் அஞ்சலகம், புது தில்லி-110 016.

தஞ்சை தமிழ் பல்கலைகழகம் M.ed அறிவிப்பு

*விண்ணப்ப விநியோகம்
14-7-14

*கட்டணம் 600ரூ,
எஸ்.சி,எஸ்.டி ரூ300

*அஞ்சல் வழியில் பெற ரூ 650,350

*கடைசி தேதி 14-8-14

*www.tamiluniversity.in

PH:04362-227782,226720

*No entrance

+2 supplementary exam result released

: பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு உடனடி துணைத்தேர்வு ஜூன் மாதம் நடந்தது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என தேர்வு துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ பெற்றவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரும் 14 முதல் 16ம் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு ரூ.550, பகுதி 2 (ஆங்கிலம்) ரூ.550, பிற பாடங்களுக்கு ரூ.275 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுகூட்டலுக்கு பகுதி 1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்) ரூ.305 கட்டணமும், உயிரியல் (ஒவ்வொன்றுக்கும்), ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) ரூ.205ம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விரைவில் பயோமெட்ரிக் அட்டைகள்

விரைவில் பயோமெட்ரிக் அட்டைகள் வழங்கப்பட உள்ள நிலையில், இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளை அடுத்த ஆண்டுக்கும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அனைத்து அட்டைகளுக்கும் உள்தாள் ஒட்டுவதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 83 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன.

அவற்றில் 10 லட்சம் குடும்பங்களைத் தவிர, மற்ற ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் அரிசி பெறுபவர்கள் ஆவர். இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளில் போலிகளைக் களையவும், உண்மையான பயனாளிகளைக் கண்டறியவும் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு குடும்பத்தினரின் கருவிழி மற்றும் கைவிரல் ரேகை பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் பயோமெட்ரிக் ரேஷன் அட்டைகளைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றாலும், இந்த ஆண்டுக்குள் பயோமெட்ரிக் அடிப்படையிலான ரேஷன் அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாது என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உள்தாளே ஒட்டப்படும்: பயோமெட்ரிக் அட்டைகள் இல்லை என்பதால், வரும் ஆண்டிலும் (2015) இப்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளையே நீட்டிக்க உணவுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த அட்டைகளின் காலத்தை நீட்டிக்க வகை செய்திட அதனுள் உள்தாள்கள் ஒட்டப்படும். இதற்கான முடிவுகளை உணவுத் துறை அதிகாரிகள் எடுத்துள்ள நிலையிலும் விரைவில் அதற்கான அரசு உத்தரவு வெளியிடப்படும் என்று தெரிகிறது. மானியக் கோரிக்கையில் தகவல்: கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப் பேரவையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.

அப்போது, இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், பயோமெட்ரிக் வழியிலான ரேஷன் அட்டைகள் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்தும் அரசின் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறத

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.
*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
*புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

கேள்விக்குறி:

இவர்களுக்கான காலக்கெடு, அடுத்த ஆண்டுடன் முடிவதால், இவர்கள், தொடர்ந்து பணியில் நீடிக்க முடியுமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதிக்குப் பின், அரசு பள்ளிகளில் நியமனம் ஆன ஆசிரியர் அனைவருமே, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். 2012 டி.இ.டி., தேர்வில், 2,448 பேர், அதே ஆண்டின் இறுதி யில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வில், 21 ஆயிரம் பேர், அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றதற்குப் பின்னரே, பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். எனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பிரச்னை இல்லை.தனியார் பள்ளிகளில், மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின், எத்தனை ஆசிரியர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரம், மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும்.இவர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்றால், கண்டிப்பாக, கால அவகாசம் நீட்டிப்பாகும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

10ம் வகுப்பு செய்முறை பயிற்சி: மாணவர்கள் முன் செய்துகாட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு

'10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி எண்ணிக்கை, 16ல் இருந்து 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பாட ஆசிரியர்கள், மாணவர்கள் கண் முன், 10 செய்முறைகளை செய்து காட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களும், 'வீட்டுப்பாடம்' செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த, 2011 - 12ல், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு திட்டம் அமல்படுத்தப்பட்டது. பொது தேர்வில், எழுத்து தேர்வுக்கு, 75 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, பிரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அறிவியல் ஆசிரியர்கள், செய்முறை பயிற்சி குறித்து, மாணவர்களிடையே விளக்குவர். ஆனால், அவர்களே, செய்முறை பயிற்சியில் ஈடுபடுவது, மிகவும் குறைவு. மாணவர்களுக்கு, 16 வகையான செய்முறை பயிற்சி திட்டங்கள், அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல், மொத்த செய்முறை பயிற்சி எண்ணிக்கை, 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கல்வித்துறை அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது

: பத்தாம் வகுப்பு, அறிவியல் செயல்முறையை மேம்படுத்தும் வகையில், மொத்த பயிற்சிகளின் எண்ணிக்கை, 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த, 16 செய்முறைகளை, மாணவர்கள் செய்கின்றனர். தற்போது, கூடுதலாக, 10 செய்முறை பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதை, மாணவர்கள் கண் முன், அறிவியல் பாட ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.கல்வித்துறையின் இந்த உத்தரவு காரணமாக, மாணவர்களைப் போல், ஆசிரியர்களும், 'வீட்டுப்பாடம்' செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுஉள்ளது. மாணவர்கள் முன், 10 செய்முறை பயிற்சிகளையும், எவ்வித தவறும் இல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுஉள்ளது

.ஆசிரியர் செய்ய வேண்டியதுஉயிரியல் - தாவரவியலில்- 2 உயிரியல் - விலங்கியலில்- 2 வேதியியலில்- 4 இயற்பியலில்- 2 என, 10 செய்முறைகளை, மாணவர்கள் முன் செய்துகாட்ட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது

கற்றல் - கற்பித்தல் நாள் பள்ளிகளுக்கு உயர்வு

;கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலை நாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல் நாள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம் செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2014 - 15ம் கல்வி ஆண்டுக்கான துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான, பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மொத்த வேலை நாள் 220, அதில், மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 205, தேர்வு நாள் 15, உள்ளூர் விடுமுறை, மூன்று நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மொத்த வேலை நாள், 210, அதில், மொத்த கற்றல், கற்பித்தல் நாள் 186, தேர்வு நாள் 24, உள்ளூர் விடுமுறை, மூன்று நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 183, என இருந்தது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவை, மொத்த வேலை நாள் மற்றும் விடுமுறை நாட்களை அடிப்படையாக வைத்து, கற்றல் கற்பித்தல் நாளாக, மூன்று நாள் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதில், சனிக்கிழமையில், தெலுங்கு வருட பிறப்பு, உழவர் திருநாள், மிலாடி நபி, ஞாயிற்றுக் கிழமையில், பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய, ஐந்து விடுமுறை நாள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.