இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 06, 2013

குரூப் 4 தேர்வு: சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு கலந்தாய்வ

குரூப் 4 தேர்வின் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தொடங்குகிறது. மூன்று நாள்கள் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி. எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2007-08 மற்றும் 2012-13 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப் 4 தொகுதியில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக கலந்தாய்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் நிரப்பப்படாத 449 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகிலுள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பதிவெண்கள் மற்றும் அவர்கள் பங்கேற்க வேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன என்று தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன் லைனில் பதிவு

   பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன் லைனில் பதிவு செய்யப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2014 மார்ச், 3ல் துவங்குகிறது. இந்தத் தேர்வை எழுதும், மாணவர்களின் பிறந்த தேதி, தமிழ், ஆங்கிலத்தில் பெயர் எழுதும் முறை, பெற்றோர் பெயர், அங்க அடையாளங்கள், உயரம், ரத்த வகை உட்பட, 20க்கும் மேற்பட்ட விவரங்கள், பள்ளிகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை, மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் வண்ண புகைப்படத்துடன், கம்ப்யூட்டரில் பதியும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது. மாணவர்கள் தங்கள் பெயரில், எழுத்து திருத்தம் உட்பட, வேறு ஏதாவது மாற்றம் இருந்தால், அவற்றை, வரும், 9ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம். சரியான விவரங்கள் அடங்கிய பட்டியல், வரும், 10ம் தேதி, ஆன் லைனில் ஏற்றப்படுகிறது. இதற்கு பின், எவ்வித திருத்தமும் செய்ய இயலாது.

English Medium proposal form 2014-15

Thursday, December 05, 2013

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

ஒருவர் படித்து பட்டம் பெற்றபின் அப்பட்டம் (Convocation /Degree Certificate) அப்பல்கலைக்கழகத்தால் தான் வழங்கியது என்றும் அப்பல்கலைக்கழகம் மூலம் பெறும் சான்றே” உண்மைத்தன்மை” (Genuous) எனப்படும், (போலியாக படித்தது போன்று பட்டம் பெறுவதை தடுக்கவே இந்த நடைமுறை)

* இந்த தபாலை தலைமையாசிரியர் வழியாக, AEEO மூலம் தான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிப்பெற வேண்டும்.

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 500

10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau Teacher Education University -350.

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

-தோழமையுடன்,
Teachers Friend Devarajan,
Thanjavur.

டி.இ.டி., சான்றிதழை பெற டி.ஆர்.பி., அறிவுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை, ஜன., 5க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு, அக்டோபரில், இரண்டாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. இதில், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த மையம் சார்ந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று, ஜன., 5க்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

ப்ளஸ் டூ தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் நடைபெறும்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 26: தமிழ் முதல் தாள்

மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 4: கணக்கு

ஏப்ரல் 7: அறிவியல்

ஏப்ரல் 9: சமூக அறிவியல்

ப்ளஸ் டூ தேர்வு அட்டவணை

மார்ச் 3: தமிழ் முதல் தாள்

மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 10: இயற்பியல், பொருளியல்

மார்ச் 13: வணிகவியல், புவியியல், மனையியல்

மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்

மார்ச் 17: வேதியியல், கணக்குப் பதிவியல்

மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்

மார்ச் 25: கணினி அறிவியல், உயிரி வேதியியல்

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும் என்றும், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது,.

இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் பாட வாரியான தேர்வு நாட்கள் குறித்து சற்று நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMMS தேர்வில்.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரம் மற்றும் படிவம்

Wednesday, December 04, 2013

2013-14 School Diary&Instractions

TNPSC Group II answer key

இனி இல்லை தனித்தேர்வு மையம

் பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு, இனி தனி தேர்வு மையம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு , தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்வு மையத்தில் ஒரு ஹாலில் அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நடைமுறையில் வரும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஹாலில் 20 பேர் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர, பள்ளிகளில் பயிலாதோர் தனித்தேர்வர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி மையம் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது. வரும் பொதுத்தேர்வில் இவர்களுக்கென தனி தேர்வு மையம் கிடையாது. பள்ளி மாணவர்களின் தேர்வு மையத்தில் இடையே, இடையே தனித்தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கி தேர்வெழுதவேண்டும், என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ""வீட்டில் படித்து பொதுத்தேர்வு எழுதுவோருக்கென தனிப்பாடம் கிடையாது. தனித்தேர்வர்கள் என்ற மனநிலையை போக்க, பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒரே ஹாலில் தேர்வெழுதும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் பின்பற்றப்படும்,'' என்றார்.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள

்* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

* 21 நாட்கள் ML போட்டா ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
நன்றி : தேவராஜன், தஞ்சாவூர்

Tuesday, December 03, 2013

10, பிளஸ் 2 தேர்விற்கு 200 புதிய மையங்கள்

அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கான 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு உள்ளது. மாணவர்களுக்கு இட நெருக்கடி போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஒரு மையத்தில் 400 மாணவர்கள் வரை மட்டுமே தேர்வு எழுத வேண்டும். 20 பேர் (20க்கு20 அளவு) எழுதும் அளவில் தேர்வறையை பிரிக்க வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 10 முதல் 20 மையங்கள் வரை அதிகரித்திருப்பது குறித்தும், அதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது பற்றி இணை இயக்குனர்கள் விவாதித்தனர். இதன்படி, மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்செயல் விடுப்பு விதிகள

்1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. மத விடுப்புடன் சேர்த்து தற்செயல்விடுப்பு எடுக்கலாம்.

5. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

6. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும்.  (அவி. இணைப்பு VI )

7. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)

8. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

9. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83

Monday, December 02, 2013

மே 4-இல் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு:  விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி

அபராதத் தொகையுடன் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது

. அதே நேரம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசு கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. இந்த 15 சதவீத இடங்களில் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுபோல் 2014-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2014 மே 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுபவராகவோ அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவோ வேண்டும். 17 வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

கடைசி தேதி:நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி தேதியாகும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அத்தாட்சியை 2014 ஜனவரி 10-ம் தேதி ஆன்-லைனில் விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் ரூ. 1,000 அபராதத் தொகையுடன் 2014 ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான அத்தாட்சியை 2014 பிப்ரவரி 5-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். ஒரே தாள்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் மட்டும் நடத்தப்படும்.

இந்த நுழைவுத் தேர்வு 180 கொள்குறி வகை கேள்விகளைக் கொண்டிருக்கும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மேலும் விவரங்களுக்கு, www.cbse.gov.in  மற்றும் www.aimpt.nic.in  ஆகிய இணையதளங்களை தொடர்புகொள்ளலாம்.

சிபிஎஸ்இ: புத்தகம் பார்த்து எழுதும் பதிலுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு

மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ), 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடை எழுதுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ.,யில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொராம் வகுப்பு படிப்புக்கு மாணவர்களுக்கு, தேர்வு முறையை எளிதாக்க புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடை எழுதும் முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு 3 மணி நேரம் மட்டும் ஒதுக்கப்படும்.

ஆனால் இந்த கல்வியாண்டு முதல் அரை மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் புத்தகத்தைப் பார்த்து எழுதும் பகுதிகளில் பெறும் மதிப்பெண்களும், எப்போதும் எழுதி பெறும் மதிப்பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படும் வகையில் திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்தத் தகவல் குறித்து அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, "கெடு!'

   கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட, 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், சராசரியாக, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில், அதிகமான பள்ளிகள், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியே பெறுகின்றன. கடந்த பொதுத்தேர்வில், 5,767 பள்ளிகளில், 329 பள்ளிகள், பத்தாம் வகுப்பில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன.

2,595 மேல்நிலைப் பள்ளிகளில், 288 பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியை பெற்றன. இந்த, 617 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக, தேர்ச்சியை உயர்த்தி காட்ட வேண்டும் என, பள்ளி கல்வித் துறை, கெடு விதித்துள்ளது. இலக்கை எட்டுவதற்காக, தலைமை ஆசிரியர் முதல், பாட ஆசிரியர் வரை, அனைவருக்கும், பேராசிரியர்களைக் கொண்டு, சிறப்பு பயிற்சியை, கல்வித் துறை அளித்து வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உதவியுடன், பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கபடுகின்றன.

இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்களும், ஈடுபடுகின்றனர். மாணவர்களுக்கு, பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், முக்கிய பாடங்கள், திரும்ப திரும்ப, கேட்கப்படும் கேள்விகள், கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறைகள் குறித்தும், விளக்கப்படுகின்றன. இவ்வளவிற்குப் பிறகும், தேர்ச்சி அதிகரிக்கவில்லை எனில், முதல்கட்டமாக, தலைமை ஆசிரியர், "பலிகடா' ஆக்கப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிகளுக்கு, மாற்றப்படுவர். இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவாவது, கடுமையாக உழைப்பதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Sunday, December 01, 2013

TNPSC GROUP II tentative answer key tamil

ரேஷன் கார்டு செல்லத்தக்க காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு : விரைவில் அரசாணை வெளியிட முடிவு

. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள், மானிய விலையில் விற்கப்படுகின்றன. இவற்றை பொது மக்கள் வாங்குவதற்கும், அரசின் நல திட்டங்களை பெறுவதற்கும், ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ரேஷன் கார்டு வழங்கும் பணியை செய்து வருகிறது. நடப்பில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2011, டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. "போலி ரேஷன் கார்டை ஒழிக்க, "ஸ்மார்ட் கார்டு' திட்டம் செயல்படுத்தப்படும்' என, சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆதார் அட்டை வழங்கும் பணி இன்னும் முடிவடையாததால், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அரசு, இதுவரை துவக்கவில்லை. மேலும், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, காலம் அவகாசம் தேவைப்படுவதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், 2013, டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதை மேலும், ஓராண்டுக்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது, ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் அட்டையில், ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களின் விவரம் சேகரிக்கப்படுவதில்லை. "ஸ்மார்ட் கார்டு' வடிவிலான ரேஷன் கார்டில், அவர்கள் விவரம் சேர்க்க வேண்டியுள்ளது. ஆதார் அட்டை பணி முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கும். ஏற்கனவே, உள் தாள் ஒட்டப்பட்ட போது, கடைசி பக்கத்தில், "2014ம் ஆண்டு' என, குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில், அரசாணை வெளியிடப்பட்டு, அதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். எத்தனை ரேஷன் கார்டுகள் உள்ளன? :

தற்போது, 1.84 கோடி அரிசி கார்டு; 10.50 லட்சம் சர்க்கரை கார்டு; 62 ஆயிரம் காவலர் கார்டு; 61 ஆயிரம், "என்' கார்டு (எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்) என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்புச்சத்து மாத்திரை : சுகாதாரத்துறை திட்டம்

""ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் உள்ளதாக,'' சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அளவில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், அரசு பள்ளிகளில் படிக்கும் வளரிளம் (14-18 வயது) மாணவ,மாணவிகள் பலருக்கு உடலில் இரும்பு சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இச்சத்து குறைவால் மாணவிகளுக்கு மாதவிடாய் பிரச்னை, திருமணத்திற்கு பின் கர்ப்பம் தரித்தலில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஆண்களுக்கு ரத்த சோகை போன்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும

். இதை தவிர்க்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறையினருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; அரசுபள்ளி மாணவர்களிடம் இரும்பு சத்தை அதிகரிக்க, சத்துணவு வழங்கப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கிறது. இந்த மாத்திரைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்குவோம். அவர்கள், மதிய உணவு முடித்த, மாணவர்களுக்கு வழங்கவேண்டும். இதற்காக, ஆசிரியர் குழுவை ஏற்படுத்தவேண்டும், என்றார்.

Saturday, November 30, 2013

தமிழ் வழியில் முதுகலையில் படித்திருந்தாலும் ஆசிரியர் பணி:ஐகோர்ட் உத்தரவு

முதுகலை பட்டம் தமிழ் வழியிலும். இளங்கலை படிப்பை ஆங்கில வழியிலும் முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி அளிக்கும் பட்சத்தில் ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது

சமையல் சிலிண்டர் விலை ரூ. 15 உயருகிறது; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தவும் ஒப்புதல்!

  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ. 15 அதிகரிக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில்,  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை  சிலிண்டர் விநியோக கட்டணத்தை திருத்தியமைத்துக்கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.

சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்கான கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இந்த கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றே  சிலிண்டர் கட்டணத்தில் 15 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் வருகிற டிசம்பர் மத்தியில் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலாண்டுக்கு ஒருமுறை உயர்வு
இதுதவிர மாதாமாதம் உயர்த்தப்படும் டீசல் விலையால், சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பதன் காரணமாக, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை சிலிண்டர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணத்தை இனி எண்ணெய் நிறுவனங்கள் தாங்களாகவே திருத்தியமைத்துக்கொள்வதற்கான உரிமையை வழங்கவும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொள்கை அளவில் நாங்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறோம். அதே சமயம் இதற்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதல் தேவையா என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.

இதுவரை பெட்ரோல், டீசல் விலையை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இனி சமையல் எரிவாயு சிலிண்டரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.