இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, October 28, 2013

ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டதால், தமிழ் பேசும் மாணவர்கள் குறைந்து போவார்களோ என்ற கவலை உள்ளது. தமிழ் மொழி அதன் செல்வாக்கை இழந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது என்றார். அப்போது அமைச்சர் பி.பழனியப்பன் கூறியது:

ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்புக்கு என்று செல்லும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் ஆங்கில வழிக் கல்விக்காகவே தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளையும் தவிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் 1.21 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது.

இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும்.

நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

Saturday, October 26, 2013

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் மறுப்பு: முதல்வர் தலையிட கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணம், 5,000 ரூபாய் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் பாலசுப்பிரமணியன், ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதன் அடிப்படையில், பல பண்டிகைகளுக்கு, ஏற்கனவே, 5,000 ரூபாய், முன் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, போதுமான பணம் ஒதுக்கீடு இல்லை என, காரணம் கூறி, கருவூலகங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு, முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அரசுத் துறைகளின், தலைமை அலுவலர்களை, தொடர்பு கொண்டால், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால், அரசு ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன் பணத்திற்கு, போதுமான நிதி வழங்க வேண்டியது, அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம்

. எனவே, தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும், முன் பணம் வழங்கிட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Friday, October 25, 2013

"செஸ்' விளையாட்டை ஊக்கவிக்கும், மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசு, பள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது; முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக, மாவட்டந்தோறும், கல்வி மாவட்ட, மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன; மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள், 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவ, மாணவியர் வீதம், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை பின்னுக்கு தள்ளி, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் ஆதங்கம்:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:"பணக்கார விளையாட்டு' எனப்படும் செஸ் விளையாட்டை, மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் வீடுகளிலேயே விளையாடுகின்றனர்; பல மாணவர்கள் ஆங்காங்கே உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று, அதிகபட்சம் மாதம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, பயிற்சி பெறுகின்றனர். விளையாடும் போது, "டைமர்' உபகரணம் வைத்து, சர்வதேச விதிகளுக்கு உட்பட்டுவிளையாடுகின்றனர்.

மாறாக, கிராமப்புற அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, செஸ் விளையாட்டு என்பது புதிது; அவர்களில் பலர் செஸ் விளையாடினாலும், "டைமர்' இல்லாமல், விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவு இல்லாமல் தான் விளையாடுகின்றனர். சமீபத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள், மெட்ரிக்., பள்ளி மாணவர்களுடன் மோதினர். மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர் "டைமர்' வைத்து, நுட்பத்துடன் விளையாடிதை பார்த்து, அரசு பள்ளி மாணவர்கள் பயந்து, நிலை குலைந்து போயினர். மெட்ரிக்., மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையான திறமையை அரசு பள்ளி மாணவ, மாணவியரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட மாநில அரசின் சிறப்பு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு பயனைஅளிக்கவில்லை.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.

செஸ் போர்டு எங்கே?"மாநில அரசின் இச்சிறப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசு, ஊராட்சி ஒன்றிய, உதவி பெறும் பள்ளிகளுக்கு, தலா 900 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு, அதில் 9 செஸ் பலகைகள் வாங்கப்பட வேண்டும்; பள்ளிகள் தோறும் "செஸ் கிளப்' உருவாக்கப்பட வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரே ஒரு செஸ் பலகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; பல பள்ளிகளில் செஸ் கிளப்புகள் துவங்கப்படவில்லை. எனவே, இச்சிறப்பு திட்டத்தில் உள்ள குறைகளை களைய, மாநில அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை முறையாக நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விபரங்களை தொகுக்கும் நடவடிக்கையில் அரசு தேர்வு துறை ஈடுபட்டுள்ளது. இந்த விபரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளே ஆன்-லைனில் பதிவு செய்யும் வகையில் தேர்வு துறை பள்ளிக் கல்வித் துறை வெப்சைட்டில் வசதி செய்துள்ளது.

இந்த விபரங்களை அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 28ம் தேதிக்குள் இந்த விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.தேசிய திறனாய்வு தேர்வுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டு மற்றும் யூசர் ஐ.டியை பயன்படுத்த வேண்டும். இப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு

தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, அவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரைப் பற்றிய, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. மாநிலத்தில், பிளஸ் 2 வரை, 1.3 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இதுவரை, 1.2 கோடி மாணவ, மாணவியரின் விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார். இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது:

இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, படிப்படியாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்கள் குறித்த விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மாணவர், ஒரு பள்ளியை விட்டு, வேறொரு பள்ளியில் சேர, "ஸ்மார்ட் கார்டை' பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், ஒரு மாணவர், தற்போது என்ன வகுப்பு படிக்கிறார்; படிக்கிறாரா, இல்லையா; படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாரா என்பது உட்பட, அனைத்து தகவல்களையும், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு முறை மூலம் அறிய முடியும். அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பணிகளையும், இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்க முடியும். இவ்வாறு, செயலர் தெரிவித்தார்.

"பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறையில் தணிக்கை தடைகள் ஏற்படாமலும், நிர்வாக ரீதியாகவும் தலைமையாசிரியர்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தணிக்கை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

. குறிப்பாக, பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சிறப்பு "கவுன்சிலிங்' அளிப்பதற்காக, 10 "மொபைல்' வேன்கள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த "கவுன்சி லிங்' முறையால் தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு திட்டம்: காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் (ஸ்லோ லேனர்ஸ்) பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாடவாரியாக சிறப்பு கையேடுகள் தயாரித்து வழங்கவும், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் குழு ஏற்படுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு ஆசிரியர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படவு உள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான நலத்திட்ட பொருட்களை வைப்பதற்கு மாவட்டங்கள் தோறும் அரசு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்.

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், ஆண் ஆசிரியர்களும், மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில், ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு, நடப்பாண்டு முதல் தீவிரமாக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். மாநிலம் முழுவதும் 650 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட் உத்தரவிற்கு பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, சென்னை, கோவை, மதுரை ஆகிய மண்டலங்களின் தணிக்கை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

குரூப் -1 தேர்வமுடிவு 3மாதத்தில் வெளியீடு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்-1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1372 பேர்களுக்கு மெயின் தேர்வு நடத்த அழைப்பு அனுப்பப்பட்டது.

இன்று  அந்த தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடக்கும் இந்த தேர்வு பொதுஅறிவை சோதிக்கும் தேர்வு ஆகும். கேள்விகள் அனைத்தும் கட்டுரை எழுதும்படி இருக்கும். தேர்வு  நாளையும் நாளை மறுநாள் தேர்வு நடக்கிறது. தேர்வு நடப்பதை பார்வையிட அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன்  திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி உள்பட சில மையங்களை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 16 சதவீதத்தினர் வரவில்லை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எந்த தவறும் இன்றி நேர்மையான முறையில் நடத்தி வருகிறோம். அதுபோலத்தான் குரூப்-1 தேர்வை நடத்துகிறோம்.

இநத தேர்வை 1372 பேர்கள் எழுத தகுதி உடையவர்கள். ஆனால் அவர்களில் 84 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்துள்ளனர். 16 சதவீதத்தினர் வரவில்லை. தேர்வு அறைகளில் பட்டதாரிகள் தேர்வு எழுதும்போது வீடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் முடிவு வெளியீடு பட்டதாரிகள் எழுதிய விடைத்தாள்கள், சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்வார்கள். தேர்வு முடிவை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம்.அதாவது 3 மாதத்திற்குள் வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம். குரூப்-2 தேர்வு டிசம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.

அப்போது தான் ஐ.ஏ.எஸ். தேர்வு நடக்கிறது. இரு தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் குரூப்-2 தேர்வை வேறு ஒரு தேதியில் தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது குறைந்தது 15 பேர்களாவது இரு தேர்வையும் எழுதுகிறோம் என்று கூறி இரு தேர்வுகளுக்கு உரிய ஹால் டிக்கெட்டுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்¬வாணையத்தின் இணையதளத்திற்கு அனுப்பிவைத்தால் தேர்வு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

Text Books Online - Standard IX - Term II Books

Government of Tamil Nadu, India - Textbooks Online
click below

http://www.textbooksonline.tn.nic.in/

Thursday, October 24, 2013

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Click here for Additional Provisional List for Certificate Verification

புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.

பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒரு கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெயிலாகக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர். அதற்காக சிறப்பு வகுப்புகள் காலை அல்லது மாலையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படுகிறது. கல்வித்துறையை மேம்படுத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தற்போது ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அதன்படி மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்தால் மாணவர்கள் மனதில் நிலைத்து நிற்கும்? புரிந்து படிக்க என்ன செய்யலாம்? புதிய தொழில்நுட்பத்தில் எப்படி பாடம் நடத்தலாம்? ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் எப்படி பேச வைக்கலாம்? இலக்கணம் இன்றி பேச்சு வழக்கில் எப்படி பேச வைக்கலாம்? என்பது குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ.வளாகத்தில்  தொடங்கியது.

இந்த பயிற்சி முகாமில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 90 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி  (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பயிற்சி பெறும் இவர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி பெற்ற பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிப்பார்கள்.  

IGNOU B.ed TERM END EXAM 2013-DECEMBER EXAM

Es 331-9.12.13
332_ 10/12
333 _11/12
341 _12/12
342 _13/12
343 _14/12
344 _16/12
345 _18/12
334- 19/12
046_ 20/12
335 _21/12
065 _23/12
361 _24/12
066_26/12
362_27/12
363 _28/12
364_30/12

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும். பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது. தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது.

நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

பழுதான கட்டடத்தில் வகுப்பு வேண்டாம் : பள்ளி கல்வி துறை உத்தரவு

"மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். மின்ஒயர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில், மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. சுகாதாரம் குறித்து இறைவணக்க வேளையின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏதாவது பிரச்னை இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் சுற்றறிக்கை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இரட்டைப்பட்ட வழக்கு வழக்கம் போல் வருகிற (30.10.2013)புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்குவந்த இரட்டைப்பட்டம் வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது.  அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Wednesday, October 23, 2013

இரட்டைப்பட்டம் விசாரணை Serial No - 33 இல் வருகிறது

இன்று (24.10.2013 ) விசாரணை serial no 33 இல்  வருகிறது. பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு நீயரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால் எந்த பணியிடமும் நிரப்ப முடியாத நிலை உள்ளது. TET RESULT விரைவில்  வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு முடிந்தால் அல்லது தடை உத்தரவை  நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும் எனவே இன்று விசாரணைக்கு  வரும் என்ற ஆவலோடு  இருப்போம்...