click below
Sunday, August 18, 2013
Saturday, August 17, 2013
லட்சக்கணக்கானோர் பாதிப்பு குரூப் 4 தேர்வு ஹால்டிக்கெட் கிடைப்பதில் சிக்கல்
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு வரும் 25ம் தேதி நடக்கிறது. 17லட்சத்து 6, 552 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஹால்டிக்கெட் கடந்த 13ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியாகவில்லை. விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்தாததால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்டணம் செலுத்தியவர்களுக்கும் ஹால்டிக்கெட் இதுவரை கிடைக்காததால் விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து தேர்வர்கள் சிலர் கூறுகையில், ‘விண்ணப்பித்த பிறகு ஒவ்வொருவரின் இமெயில் முகவரிக்கும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து தகவல் வந்தது. அதில் கட்டணம் செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், ‘
கட்டணம் செலுத்தியதற்கான தகவல் அஞ்சலகம் மற்றும் வங்கியிலிருந்து டிஎன்பிஸ்சிக்கு வரவில்லை. கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்கான படிவத்தை ஸ்கேன் செய்து அனுப்புங்கள்‘ என்றனர். அனுப்பிய பிறகும் இதுவரை கிடைக்கவில்லை” என்றனர்.
Friday, August 16, 2013
இன்று ஆசிரியர் தகுதித் தேர்வ
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது. மொத்தம் 677 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 937 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் என 29 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
இந்தத் தேர்வுக்காக சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வர்களில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 897 ஆகும். ஆண்களின் எண்ணிக்கை 65,040. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகள் சனி (ஆக.17), ஞாயிறு (ஆக.18) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். சென்னையில் 27 தேர்வு மையங்களில் 9 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் ஆயிரம் பேர் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி
நேர்முகத்தேர்வுடன் கூடிய 1,059 சார்நிலை பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:– மெயின் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அடுத்த வாரம் அறிவிப்பு அனைத்து தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்டவை. மெயின் தேர்வு முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். அரசு பணிகளில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன் பேரில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.குரூப்–2 தேர்வை பொருத்தவரையில், தற்போது நேர்காணல் பதவிகள் கொண்ட தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகளை உள்ளடக்கிய தேர்வு என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் நேர்காணல் பதவிகள் கொண்ட (நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சார்–பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் உதவியாளர் போன்றவை) குரூப்–2 தேர்வின் கீழ் 1,059 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.
ஆன்லைன் தேர்வு முடிவு அதேபோல், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு இதுவரை 757 காலி இடங்கள் வந்து இருக்கின்றன. இந்த தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும். இந்து சமய அறநிலை ஆட்சித்துறை உதவி கமிஷனர், நிர்வாக அதிகாரி (கிரேடு–1) ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.
அரசு பள்ளிகளில் திணறும் "செஸ் கிளப்': மாவட்ட போட்டியில் பங்கேற்க தயக்கம் dinamalar
தமிழக பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள, "செஸ் கிளப்' நிதியின்றி திணறுவதால், ஆக.,23ம் தேதி, மாவட்டம்தோறும், நடைபெற உள்ள செஸ் போட்டியில், மாணவர்களை பங்கேற்க வைக்க, விளையாட்டு அலுவலர்கள் தயக்கத்தில் உள்ளனர். மாவட்டம்தோறும், அரசு பள்ளிகளில், செஸ் கிளப் துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது;
ஒரு பள்ளியில், சராசரியாக, 1000 மாணவர்கள் உள்ள நிலையில், செஸ் போர்டு வாங்க, 2011-12ல், 900 ரூபாய் வழங்கப்பட்டது. இதில், ஆறு அல்லது ஏழு போர்டுகள் மட்டுமே வாங்கப்பட்டதால், அனைவருக்கும் கற்றுத்தர முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, உடனடியாக, அனைத்து மாவட்டங்களிலும், வட்டார அளவில் செஸ் போட்டி நடத்த வேண்டும். மாவட்ட அளவில், ஆக., 23ம்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், வட்டார அளவில், போட்டிக்கு செல்லவே நிதியின்றி, பங்கேற்க முடியாத நிலையில், போதிய பயிற்சியின்றி, பெயரளவில் மாவட்ட விளையாட்டு போட்டிக்கு சிலரை மட்டும் அழைத்து செல்ல வேண்டி உள்ளது என, உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு
குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். 25 இடங்களுக்கு 1391 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவி ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. பிப் 16ல் நடந்த முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது என கூறினார்.
Thursday, August 15, 2013
மண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்
"பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது
:தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றுக்கான தேர்வு மே மாதம் நடந்தது. இத்தேர்வை, 68, 800 பேர் எழுதினர்.இதில்,, 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்ச்சி சான்றிதழ்களை, நாளை (17ம் தேதி) மண்டல மையங்களில் பெற்று கொள்ளலாம்.
ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட கல்லூரிகள், கோவை, என்.ஜி.டி., கல்வியியல் கல்லூரியிலும்; நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகள், திருச்சி, ஜமால் முகமது கல்வியியல் கல்லூரியிலும் பெற்று கொள்ளலாம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்ட கல்லூரிகள், சேலம், பத்மாவதி கல்வியியல் கல்லூரியிலும்; திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை மாவட்ட கல்லூரிகள், மதுரை, தூய செயின்ட் ஜெஸ்டின் கல்வியியல் கல்லூரியிலும் பெற்று கொள்ளலாம்.கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்ட கல்லூரிகள், நெல்லை, செயின்ட் இனிஷியேஸ் கல்வியியல் கல்லூரியிலும்; திருவள்ளூர், காஞ்புரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை மாவட்ட கல்லூரிகள்,
சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.
பி.எட்., படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி
பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை, இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, இப்படிப்பிற்கு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும், கடந்த, 9ம் தேதி துவங்கியது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிப்பவர்களுக்கு, உடனடியாக ஆசிரியர் வேலை கிடைப்பதால், பி.எட்., சேர்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படிப்பிற்கு இதுவரை, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.இது குறித்து, பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் பரமேஸ்வரி கூறுகையில், ""இந்தாண்டு, பி.எட்., படிப்பிற்கு, 13 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, 10,800 விண்ணப்பங்கள் விற்பனையானது. இந்தாண்டு, 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
Wednesday, August 14, 2013
டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள் நடவடிக்கை
. அரசு நெறிமுறைக்கு ஏற்ப உரிய முறையில் பணிகளை ஒதுக்கி அறிவித்து உள்ளது. இதை முதுகலை ஆசிரியர்கள் புறக்கணித்தால், அவர்களுக்கும் சேர்ந்து அப்பணிகளை பட்டதாரி ஆசிரியர்களே முழுமையாக ஈடுபட்டு, தேர்வுகளை நடத்தி முடிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். உயர்நிலை தலைமை ஆசிரியர், தமிழாசிரியர், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகங்களில் நிர்வாகிகள் பால்தாஸ், கிறிஸ்டோபர் ஜெயசீலன், ஜெயக்கொடி, நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷன் ஆகியோர் கூட்டறிக்கை:
அரசு விதிப்படி, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களை, துறை அலுவலர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களை, கூடுதல் துறை அலுவலர்களாகவும் நியமித்து உள்ளனர். தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது சரியான முடிவே. கடைசி நேரத்தில், முதுகலை ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்தால் பட்டதாரி ஆசிரியர்கள் அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
Tuesday, August 13, 2013
ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற 17, 18–ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. இந்த தேர்வை 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 17–ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 18–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடக்கிறது.
பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வசதியாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது.இந்த விடுமுறைக்கு பதிலாக 31–ந் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.
குரூப்-4 தேர்வில் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு : 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில், குரூப் - 4 நிலையில் உள்ள, 5,566 காலி பணியிடங்களை நிரப்ப, வரும், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, விண்ணப்ப கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், 3 லட்சம் விண்ணப்பங்களும், உரிய தகுதியின்மை காரணமாக, 458 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. "
ஹால் டிக்கெட்' வெளியீடு : இறுதியாக, 14 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். 4,755 தேர்வு கூடங்களில், தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnscexams.net ஆகிய இணைய தளங்களில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு மையத்தின் அமைவிடத்தை, தேர்வர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்வு மைய முகவரியுடன், தொலைபேசி எண் மற்றும் பக்கத்தில் உள்ள முக்கியமான,"லேண்ட் மார்க்' இடத்தையும் குறிப்பிட்டுள்ளோம். சரியான முறையில் விண்ணப்பித்தும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன், contacttnpsc@gmail.com என்ற, "இ-மெயில்' முகவரிக்கு, 19ம் தேதிக்கு முன், தகவல் தெரிவிக்கலாம்.
பதட்டமான தேர்வு மையங்கள், "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தேர்வாணைய தலைமை அலுவலகத்திலும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர்வு மையத்திற்கு, மொபைல் உள்ளிட்ட எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்ல, அனுமதி இல்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.
Monday, August 12, 2013
கண்காணிப்பு கேமரா பொருத்த மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவு
"அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவன் சூர்யாவை, சில தினங்களுக்கு முன், ஒரு கும்பல் கடத்திச் சென்றது. போலீசார், தீவிர நடவடிக்கைக்குப் பின், சிறுவன் மீட்கப்பட்டான்.
இந்த சம்பவம், பெற்றோர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறுகையில், ""பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னணி தனியார் பள்ளிகளில், அனைத்து இடங்களிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேமராக்கள் பொருத்தாத பள்ளிகளில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது,'' என, தெரிவித்தார்.