இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 17, 2013

"ஹால் டிக்கெட்' பிரச்னையா? : டி.ஆர்.பி., புதிய நடவடிக்கை  

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்வதில் இருந்த பிரச்னையை, டி.ஆர்.பி., சரி செய்துள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பு: வரும், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், நேற்று வரை, 1.32 லட்சம் பேர் மட்டுமே, டி.ஆர்.பி., இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர்.

8,000 பேர், "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்ய முயற்சித்துள்ளனர். 27,500 பேர், பதிவிறக்கம் செய்ய, முயற்சிக்கவே இல்லை. பல தேர்வர்கள், விண்ணப்பத்தில், பிறந்த தேதியை, தவறாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யும்போது, சரியான பிறந்த தேதியை பதிவு செய்கின்றனர். இதனால், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தேர்வர்களின் நலன் கருதி, பிறந்த தேதியை பதிவு செய்வதில் இருந்த விதிமுறை, தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்ப எண்களை மட்டும் சரியாக பதிவு செய்து, "டம்மி'யாக, ஏதாவது ஒரு, பிறந்த தேதியை பதிவு செய்தால் கூட, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தேர்வர்களும், "ஹால் டிக்கெட்'டை, உடனடியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

CCE FIRST TERM SYLLABUS

SSA seek human development forms

Tuesday, July 16, 2013

பாரதிதாசன் பலகலை தொலைதூர பி.எட். சேர்க்கை அறிவிப்பு

2013-14 பி.எட் சேர்க்கை

படிவ விலை- ரூ500
கடைசி தேதி- 19-8-13
தேர்வு நாள்- 29-9-13 (11am-1pm)
விண்ணப்ப விற்பனை பிற விபரங்களுக்கு www.bdu.ac.in

Coimbatore:0422-4514050/60
m:9345028545

காமராஜர் பிறந்த தினம்: சிறந்த பள்ளிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம்

  முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் (ஒரு அரசு உயர் நிலைப் பள்ளி, 2 மேல் நிலைப் பள்ளி) பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ரூ.3 லட்சம் வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூ.96 லட்சம் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களைப் பெறும் பள்ளிகள் எவை என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தேர்வு செய்யலாம் எனவும், பரிசுத் தொகையானது பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் 2,527 இடங்கள் நிரம்பின  i

ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், 2,527 இடங்கள் நிரம்பின. அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, 17 ஆயிரம் இடங்கள் உள்ளன.

இதனை நிரப்ப, கடந்த மாதம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 4,419 மாணவர் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த, 8ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 2,527 மாணவர்கள் சேர்ந்தனர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில், 90 சதவீதம் பேர், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், 10 சதவீதம் பேர், தனியார் பள்ளிகளிலும் சேர்ந்தனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, 10 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 14,473 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இடங்களில், 14.86 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. விண்ணப்பித்த மாணவர்களில், 1,892 பேர், "ஆப்சென்ட்' ஆகினர்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை  

மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார். மொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல், ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்ற நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது. இதனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமை ஆசிரியர்களாகி விடுகின்றனர்.

இந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்கால தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது. இந்நிலையில், "பணியில் சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு, அத்துறையின் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.

செப்., 22 ல் ஊரக திறனாய்வு தேர்வு

 கிராமப்புற மாணவர்களுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 22 ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, "ஆன் லைன்' ல், பெறலாம். எட்டாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு, 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு விண்ணப்பங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு முதல், www.peps.tn.nic.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பத்துடன், வருவாய் சான்று இணைத்து, ஆக., 2 க்குள், முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தேர்வு மற்றும் சேவைக்கட்டணமாக தலா 5 ரூபாய் என, 10 ரூபாயை தலைமை ஆசிரியர் மூலம், முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்."பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், "ஆன் லைன்' மூலம், தேர்வுத்துறை பெற்றுக் கொண்டால், மாணவர்களுக்கு எளிதாக இருக்கும், என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவ

தமிழ்நாட்டில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450–க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெனிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஸ்ரீரங்கம், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், ஜோலார்பேட்டை, செய்யார் உள்பட 11 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் செய்யாறு கல்லூரி நீங்கலாக எஞ்சிய 10 கல்லூரிகளுக்கும் தலா 18 விரிவுரையாளர் பணி இடங்கள் வீதம் 180 விரிவுரையாளர் பணி அடங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்து உள்ளார். மொத்தம் உள்ள காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினீயரிங் சாரா பாடப்பிரிவுகளும் அடங்கும். இந்த காலி பணி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for June 2013

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவில்லை

   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுப்பணியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ள ஆசிரியர்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது, இடைக்கால தடை நீக்க மறுப்பு தெரிவித்து அடுத்தகட்ட விசராணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த வார இறுதி அல்லது வரும் திங்கள்,செவ்வாய் வரும் எனத் தெரிகிறது

Monday, July 15, 2013

சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு  

மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, ரொக்கப்பரிசு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆட்சியில், விழாவுடன், கூடுதலாக, மாவட்ட வாரியாக, சிறந்த அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, முறையே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய் என, மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய், ரொக்கப்பரிசு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வித் துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது

: மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, மாவட்டத்தில், சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்யும். இன்னும் ஒரு மாதத்தில், சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம், பரிசுகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய், பரிசாக வழங்கப்படும். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக, செயலர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

– 16 லட்சம் பேர் விண்ணப்பம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (நேற்று) கடைசி நாள். நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இன்று (நேற்று) மாலை 4 மணி நிலவரப்படி, 16 லட்சத்து 13 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் இருப்பதால் இன்னும் விண்ணப்பங்கள் வரக்கூடும்

. இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25–ந்தேதி தமிழகம் முழுவதும் 240 மையங்களில் நடைபெற உள்ளது. யாருடைய சிபாரிசும் தேவையில்லை 5,566 காலி இடங்களுக்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் இந்த தேர்வில் கடும் போட்டி இருக்கும். குரூப்–4 தேர்வு, நேர்மையாகவும், முறையாகவும், தவறு இன்றியும் நடத்தப்படும் என்ற உறுதியை தேர்வர்களுக்கு அளிக்கிறோம். எனவே, யாரும் அச்சடப்படத் தேவையில்லை. சிபாரிசுக்காக யாரையும் அணுக வேண்டாம். கடுமையாக முயற்சி செய்து படித்தால் வெற்றிபெறலாம். முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் அரசு பணியில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு குரூப்–4 பணிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

பதற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ள தேர்வு மையங்களில், தேர்வு பணி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மெயின் தேர்வு குரூப்–1 முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு விரைவில் மெயின் தேர்வு நடத்தப்படும். குருப்–2 பணிகளுக்கு துறைவாரியாக காலி இடங்களை பெற்று வருகிறோம். அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும். ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு முடிவுகளை விரைந்து வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர். டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை அரசு பணிக்கான தேர்வு ஒன்றுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பது டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். நள்ளிரவு 11.59 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதால், இன்னும் 50 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 16½ லட்சத்தை தாண்டிவிடும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2–ம் வகுப்பு, 6–ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சீயா) பரிசோதனை விரைவில் நடத்தப்பட உள்ளது.

கற்றல் குறைபாடு ஆங்கிலத்தில் ‘டிஸ்லெக்சீயா’ என்று அழைக்கப்படும் கற்றல் குறைபாடு என்பது குறைபாடு ஆகும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சிரமப்படுவார்கள். சிலருக்கு கவனிப்பதில் சிரமம் இருக்கும். பாடங்களை மெதுவாக படித்து புரிந்துகொள்வார்கள். வார்த்தையை தப்பாக படிப்பார்கள். ஆனால், டிஸ்லெக்சீயா என்பது ஒரு நோய் அல்ல. சாதாரண ஒரு குறைபாடு. அவ்வளவுதான

். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2–ம் வகுப்பு மற்றும் 6–ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு உள்ளதாக என்பதை கண்டறிய விரைவில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு (எஸ்.எஸ்.ஏ.) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– தகவல் சேகரிப்பு கற்றல் குறைபாடு பாதிப்பை கண்டுபிடிப்பதற்கான முதல்நிலை பரிசோதனை 2–ம் வகுப்பு, 6–ம் வகுப்பு குழந்தைகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைகளை பற்றிய முழு விவரத்தையும் அதற்குரிய படிவத்தில் சேகரிக்க வேண்டும். அதில், குழந்தையின் பெயர், பிறந்த தேதி, குடும்ப பொருளாதார நிலை, அக்குழந்தையால் வகுப்பில் ஏற்படும் பிரச்சினைகள், பாடங்களில் பெற்ற மதிப்பெண், பேச்சுத்திறன், உற்றுநோக்குதிறன், பார்வை முறை, குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்த பாதிப்பு இருந்ததா? போன்ற விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட தகவலை 19–ந்தேதி எஸ்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குனரகத்திற்கு இ–மெயில் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 23.8.2010 முதல் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தகுதித்தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பாக நியமன பணிகளை மேற்கொண்டிருந்தால் அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வு 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் முதல் தகுதித்தேர்வே கடந்த 2012 ஆண்டுதான் நடத்தப்பட்டது. 

எத்தனை ஆசிரியர்கள் நியமனம்? ஆசிரியர் தகுதித்தேர்வில் யாருக்கு விதிவிலக்கு? ஏற்கனவே தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டுமா? அல்லது இந்த 5 ஆண்டு காலஅவகாசம் சுயநிதி தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கா? என்பதில் எல்லாம் ஏராளமான குளறுபடிகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் உள்பட) 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்

எத்தனை பேர்? என்பது குறித்து உடனடியாக தகவல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. இ–மெயில் மூலம் தகவல் மாநில தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவர முருகனின் இந்த உத்தரவை தொடர்ந்து இதுபற்றிய விவர பட்டியலை அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும் நேற்று மாலை இ–மெயில் மூலமாக அனுப்பினார்கள். இந்த பட்டியலை ஆய்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாமா? அல்லது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கலாமா? என்பது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்.

2013-14ஆம் கல்வி ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான (INSPIRE) மாவட்ட அளவிலான கண்காட்ட்சியினை ஜுலை மூன்றாம் வாரத்தில் நடத்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கடிதம் ›

Sunday, July 14, 2013

இன்று கல்வி வளர்ச்சி தினம

தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.

கல்வியே முதல் பணி:

காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்யாகிரகம் நடைபெற்ற போது காமராஜரும் கலந்து கொண்டார். இதற்காக சிறைக்கும் சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலளராக நியமிக்கப்பட்டார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1954ல், பதவியேற்ற இவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

பிரதமராகும் வாய்ப்பு:

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர் களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில் செயல்படுத்த விரும்பினார். அது "கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் "காமராஜர்' என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

எதிரிகளும் பாராட்டும் தலைவராக:

காமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்த எம்.ஜிஆர், பின், காமராஜர் என் தலைவர் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமன்று மதுரை பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டினார்.

கடைசிவரை ஏழையாக:

காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.

காமராஜர் வாழ்க்கை மற்றும் சாதனைகள்

பெட்ரோல் விலை உயர்வு

ி: பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.55 பைசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 1.55 பைசா அதிகரிக்கிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Saturday, July 13, 2013

முதல்வர் தகுதி பரிசுக்கான "கட்-ஆப்' மதிப்பெண் வெளியீடு  

பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், "முதல்வர் தகுதி பரிசு'க்காக விண்ணப்பிக்க, நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களில், முதல், 1,000 பேருக்கு, ஆண்டுதோறும், "முதல்வர் தகுதி பரிசு' வழக்கப்படும். மேல்படிப்பை தொடர்வதற்காக, மாதந்தோறும், 3,000 வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு, இப்பரிசு வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, இந்நிதியாண்டில், 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த, 2012ல் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,069 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1,082 மதிப்பெண் பெற்ற மாணவியர்; 2013 பொதுத் தேர்வில், 1,074 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1,085 மதிப்பெண் பெற்ற மாணவியரும், சிறப்பு பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, மேல்படிப்பு பயில்பவர்கள், தாங்கள் பயிலும், கல்வி நிறுவனத்திலிருந்து, படித்ததற்கான சான்றுகளுடன், அந்தந்த மாவட்ட நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட விண்ணப்பங்களில், வரையறுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில், முதல், 1,000 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்.