இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 14, 2013

இன்று கல்வி வளர்ச்சி தினம

தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.

கல்வியே முதல் பணி:

காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்யாகிரகம் நடைபெற்ற போது காமராஜரும் கலந்து கொண்டார். இதற்காக சிறைக்கும் சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலளராக நியமிக்கப்பட்டார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1954ல், பதவியேற்ற இவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

பிரதமராகும் வாய்ப்பு:

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர் களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில் செயல்படுத்த விரும்பினார். அது "கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் "காமராஜர்' என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

எதிரிகளும் பாராட்டும் தலைவராக:

காமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்த எம்.ஜிஆர், பின், காமராஜர் என் தலைவர் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமன்று மதுரை பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டினார்.

கடைசிவரை ஏழையாக:

காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.

காமராஜர் வாழ்க்கை மற்றும் சாதனைகள்

பெட்ரோல் விலை உயர்வு

ி: பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.55 பைசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 1.55 பைசா அதிகரிக்கிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Saturday, July 13, 2013

முதல்வர் தகுதி பரிசுக்கான "கட்-ஆப்' மதிப்பெண் வெளியீடு  

பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், "முதல்வர் தகுதி பரிசு'க்காக விண்ணப்பிக்க, நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களில், முதல், 1,000 பேருக்கு, ஆண்டுதோறும், "முதல்வர் தகுதி பரிசு' வழக்கப்படும். மேல்படிப்பை தொடர்வதற்காக, மாதந்தோறும், 3,000 வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு, இப்பரிசு வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, இந்நிதியாண்டில், 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த, 2012ல் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,069 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1,082 மதிப்பெண் பெற்ற மாணவியர்; 2013 பொதுத் தேர்வில், 1,074 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1,085 மதிப்பெண் பெற்ற மாணவியரும், சிறப்பு பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, மேல்படிப்பு பயில்பவர்கள், தாங்கள் பயிலும், கல்வி நிறுவனத்திலிருந்து, படித்ததற்கான சான்றுகளுடன், அந்தந்த மாவட்ட நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட விண்ணப்பங்களில், வரையறுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில், முதல், 1,000 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்.

கல்வித்துறையின் அனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

4 மாணவர்கள் பலி

மதுரை திருநகர் சி.எஸ்.ராமாச்சாரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றனர். தூத்துக்குடி கடற்கரைக்கு சென்ற அவர்களில் சில மாணவர்கள் கடலுக்குள் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அதில், விஷ்ணுதரன், தேவ் ஆனந்த், சதீஷ்குமார், பரமேசுவரன் ஆகிய 4 மாணவர்கள் அலைக்குள் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர். சிலரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரணையில், பள்ளியில் இருந்து சுற்றுலா செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

பள்ளி மீது நடவடிக்கை இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அமுதவல்லி கூறியதாவது:– பள்ளிகளில் இருந்து கல்விச்சுற்றுலா செல்வதற்கு பள்ளி கல்வித்துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி திருநகர் பள்ளியில் இருந்து சுற்றுலா சென்று உள்ளனர். மேலும் சுற்றுலா செல்ல இருப்பது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. கடற்கரை, நீர்நிலைகள், வனப்பகுதிகள், பாதுகாப்பு இல்லாத பகுதிகள் போன்ற இடங்களுக்கு மாணவ–மாணவிகளை அழைத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. பொதுவாக சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்த பின்னரே சுற்றுலாவிற்கு அனுமதி வழங்குகிறோம்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதால் அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதில்லை. எச்சரிக்கை ஆனால் அதிலும் இந்த பள்ளி நிர்வாகம் விதியை மீறி உள்ளது. இறந்த மாணவர்கள் 4 பேரும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 படிப்பவர்கள். அத்துடன் 113 மாணவ–மாணவிகளுக்கு 4 ஆசிரிய–ஆசியைகள் மட்டுமே உடன் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. துறை ரீதியாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் எந்த பள்ளியும் அனுமதியின்றி சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நள்ளிரவு வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

5,566 காலி இடங்கள்  
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர் நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5566 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. காலி பணி இடங்களில் 3,469 இளநிலை உதவியாளர் இடங்களும், 1,738 தட்டச்சர் இடங்களும் அடங்கும்.குரூப்–4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 30. பி.சி. எம்.பி.சி., வகுப்பினருக்கு 32. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால், ஆதரவற்ற விதவைகள் உள்பட அனைத்து பிரிவினருக்கும் (பொதுப்பிரிவினர் தவிர) உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. நாளை கடைசி நாள் தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் () ஆன்லைனில் விவரங்களை பதிவுசெய்துவிட்டு (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்ப கட்டணம் ரூ.50, தேர்வு கட்டணம் ரூ.75 (மொத்தம் ரூ.125) ஆகியவற்றை ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலமாகவோ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம். மேலும் செலான் மூலமாக தபால் அலுவலகங்களிலும், இந்தியன் வங்கி கிளைகளிலும் கட்டணத்தை கட்டலாம். இதற்கான செலான் எடுக்க வசதியாக, விண்ணப்பத்தில் விவரங்களை குறிப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலகம் மற்றும் இந்தியன் வங்கியில் கட்டணம் செலுத்த விருப்பம் தெரிவித்தோருக்கு அதற்குரிய செலானில் 17–ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும் என்று டி.என்.பி.,எஸ்.சி. அறிவித்துள்ளது. எழுத்து தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25–ந் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற உள்ளது. ஏறத்தாழ 10 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

TNPTF திருப்பூர் ஆர்ப்பாட்டம்





Friday, July 12, 2013

15.7.2013 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

Tamil Nadu Rural Students Talent Search Scheme Examination ( TRUST ), September 2013 - Application Form

9–வது முதல் 12–வது வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக திறனாய்வுத்தேர்வு நடக்க உள்ளது. அதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்டு 2–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஊரகப் பகுதியிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்வில் 2012–13 கல்வி ஆண்டில் 50 சதவீத மொத்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ–மாணவர்களிடையே திறமை மிக்கவரைத் தேர்ந்தெடுத்து, 9–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரையிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கான படிப்புதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியருக்கு (மொத்தம் 100 பேர்) வருவாய் மாவட்டம் தோறும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

அந்த மாணவ –மாணவியரை தேர்ந்தெடுக்க மாநகராட்சி மற்றும் நகராட்சிப்பகுதியில் அமைந்த பள்ளிகளைத் தவிர்த்து, மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதியில் அமைந்துள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் 22–ந்தேதி நடைபெற உள்ளது. மாணவ–மாணவிகள் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிகள் தற்போது 2013–2014 கல்வி ஆண்டில் தொடர்ந்து 9–ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத்தேர்வு திட்டத்திற்கு தகுதி படைத்தவராவார்கள்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வருவாய்த்துறையிலிருந்து பெற்றோரின் வருமானச்சான்று பெற்று அளித்தல் வேண்டும். 9–வது வகுப்பில் படிக்கும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தினை www.peps.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருவாய் சான்றிதழுடன், அன்னார் பயிலும் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று ஆகஸ்டு மாதம் 2–ந்தேதிக்குள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தேர்வுக்கட்டணம் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் ரூ.5 சேவைக் கட்டணம் ரூ.5 சேர்த்து ரூ.10–ஐ பள்ளித்தலைமை ஆசிரியர் மூலமாக பணமாக உரிய முதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்தவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

University of Madras - UG Exam Results

Thursday, July 11, 2013

இரண்டாம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள் : பாடநூல் கழகம் ஏற்பாடு  

   வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது. ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் முதல், செப்டம்பர் வரை, முதல் பருவம்; அக்டோபர் முதல், டிசம்பர் வரை, இரண்டாம் பருவம்; ஜனவரி முதல், ஏப்ரல் வரை, மூன்றாம் பருவம் அமல்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, பாடப் புத்தகங்கள், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியே அச்சடிக்கப்பட்டு, மாணவருக்கு வழங்கப்படுகின்றன.

இரண்டாம் பருவத்திற்காக, 2.29 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 100 அச்சகங்களில் நடந்து வருகின்றன. பல அச்சகங்களில் இருந்து, பாடப் புத்தகங்கள் தயாராகி, வெளிவர ஆரம்பித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சகங்களில் இருந்து, நேரடியாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, செப்டம்பர், கடைசி வாரத்தில், மாணவர்களுக்கு, புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகத்தில் புதிய வாசகம் : நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக வழங்கப்பட்ட, பிளஸ் 1 புத்தகங்களின் பின்பக்க அட்டையில், மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள், அச்சடிக்கப்பட்டுள்ளன. "காணாமல் போகும் குழந்தைகள், கொடுமைக்கு இரையாகும் குழந்தைகள், வீட்டிலிருந்து ஓடிப்போன குழந்தைகள், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள், கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள், "1098' என்ற எண் மூலம், "சைல்டு லைன்' அமைப்பை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்' என, அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகம், அடுத்த கல்வி ஆண்டில், மேலும் சில வகுப்பு புத்தகங்களில் அச்சடிக்கப்படும் என, பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்

மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், பஸ்பாஸ், கலர்பென்சில்கள், கிரையான்ஸ், புத்தகப்பை முதலியவை வழங்கப்பட்டு வருகிறது.  பிளஸ்–1 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிளும் வழங்கப்படுகிறது. பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.  இப்படிப்பட்ட திட்டங்களால் பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  இதுபற்றி தொடக்கப்பள்ளி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:–

1 லட்சம் மாணவர்கள் அதிகம் அரசு மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், புத்தகங்கள், பை, காலணி, பஸ்பாஸ், கலர் பென்சில்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், அட்லஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விலை இன்றி அரசு வழங்கி வருகிறது. அதுவும் பள்ளிகள் திறந்தஅன்றே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள் முதலியவற்றை வழங்கி வருகிறோம். மேலும் ஆங்கில பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் உள்ள 837 உதவி தொடக்க கல்வி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்சேர்க்கையை அதிகரிக்க தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதன்காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அரசு தொடக்கப்பள்ளியில் 1–வது வகுப்பில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 947 மாணவ–மாணவிகள் இருந்தனர். இந்த ஆண்டு 4 லட்சத்து 14 ஆயிரத்து 567பேர் சேர்ந்துள்ளனர். மேலும் அதிகரிக்க நடவடிக்கை இது மகிழ்ச்சிகரமாக உள்ளது. வருகிற ஆண்டுகளிலும் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் விலைஇல்லா திட்டங்கள் மாணவர்களையும், பெற்றோர்களையும் சரியாக சென்றடைந்துள்ளது. இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

Wednesday, July 10, 2013

தலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடுகட்ட வேண்டுமாம்:dinamalar news

தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த, மாவட்ட கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அனைத்து பள்ளிகளிலும், அரசு மற்றும் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டிய தொகை, சிறப்பு கட்டணம், வரவு - செலவு கணக்குகள் பராமரித்தல், முறையாக இல்லை, என புகார் வந்ததால், கடும் நிபந்தனைகளை, பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் ஏப்., 1 முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31 க்குள், மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினங்கள் சார்பாக, வரவு- செலவு திட்டம் தயாரித்தல் வேண்டும். அப்போது,மேற்கொள்ளப்பட வேண்டிய தொகை, அதிகப்படியாக மிகாமல் தயாரித்திட வேண்டும். வங்கி வட்டித்தொகை முழுவதும், அவ்வப்பொழுது அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். பள்ளியில் பதவி ஏற்கும் புதிய தலைமை ஆசிரியர், முந்தைய தொகை, அரசு, பள்ளி கணக்கில், முந்தைய தலைமை ஆசிரியரால் செலுத்தப்படாமல் உள்ளதா? என கண்டறிந்து, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கையை, மாநில கணக்காயருக்கு பரிந்துரைக்கும் முன்னர், அவர்கள் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்த அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்த காலங்களில், நிதி இழப்பு ஏதும் இல்லை, என்பதை உறுதி செய்த பின்னரே, ஓய்வூதிய கருத்துருவை பரிந்துரை செய்ய வேண்டும். பின்னொரு காலங்களில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியர் சார்பாக, நிதி இழப்பு கண்டறியப்பட்டால், அந்த தலைமை ஆசிரியரின் ஓய்வூதிய அறிக்கையை பரிந்துரை செய்த, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரே முழுப் பொறுப்பாவார், என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பி.இ. முதலாம்ஆண்டு வகுப்பு ஆகஸ்டு 1–ந்தேதி தொடங்குகிறது

பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு ஆகஸ்டு 1–ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 2013–2014–ம் ஆண்டுக்கான பி.இ.மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்சேர்க்கை நேரடியாக கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது. பொது கலந்தாய்வு கடந்த மாதம் 21–ந்தேதி தொடங்கியது.

கலந்தாய்வில் முதலில் இடங்கள் நிரம்பிய கல்லூரிகள் விரைவில் பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளைதொடங்க உள்ளன. அண்ணாபல்கலைக்கழக கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி வருகிற 19–ந்தேதி பி.இ. முதலாம்ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குகிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளும் ஆகஸ்டு 1–ந்தேதி பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க உள்ளன.