இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 06, 2013

கவுன்சிலிங் முன்னேற்பாடுகளில் அண்ணா பல்கலை தீவிரம் : 22ம் தேதி முதல் விண்ணப்பங்கள

   வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள இந்த தேர்வின் முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மே 10ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் வெளியிடப்படுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும், வழக்கத்திற்கு மாறாக, மே 22ம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, எல்லாமே தள்ளிப்போயின. இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மே 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிட்டுவிடுவோம் என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், செப்டம்பர் முதல் தேதி தான், வகுப்புகள் துவங்குகின்றன. ஜூலை இறுதி வரை, கலந்தாய்வு நடப்பது தான், இதற்கு காரணம்.

ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு, ஆகஸ்ட் 1ம் தேதியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும், முன்கூட்டியே எடுக்கப்பட உள்ளன.

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்பாமல், அதிகாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கும் போக்கு, கல்வித்துறையில், அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன், நூலகத்துறை இணை இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். இயக்குனர் நிலையில், பாடநூல் கழக செயலர் பணியில் உள்ள பிச்சை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்குள், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு, பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

அண்ணாமலை பல்கலை.,துணைவேந்தர் நீக்கம-dinamalar

் அண்ணாமலை பல்கலை.,துணைவேந்தர் ராமநாதன் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை கவர்னர் ரோசையா பிறப்பித்தார். நிர்வாக ரீதியாக பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Friday, April 05, 2013

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம

்  இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. ஜரியன்ஜெயா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதன் சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசின் நேரடி பணபரிமாற்ற திட்டம் : ஜூலை 1 முதல் 78 மாவட்டங்களில் விரிகிறது

  அரசின் மானிய திட்ட பலன்கள், பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும், நேரடி பணபரிமாற்ற திட்டம், வரும் ஜூலை முதல் மேலும், 78 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது. அரசின் மானிய திட்ட உதவிகள், அதன் பலன்கள், மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் கொண்டு வரப்பட்ட, மத்திய அரசின் நேரடி பணபரிமாற்ற திட்டம் குறித்த தேசிய கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று டில்லியில் நடந்தது.

் இக்கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: "ஆதார்' அடையாள அட்டை அடிப்படையில், செயல்படுத்தப்படும் இந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் பரவலாக்கப்படும்.முதல் கட்டமாக, 43 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி முதல், 78 மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதில், ஒடிசா, மேற்கு வங்கம், உ.பி., உத்தரகண்ட், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின், குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. சமையல் காஸ் சிலிண்டர்களுக்காகன மானியம், பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் வரும் மே, 15ம் தேதி முதல், 20 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு, ஆண்டுதோறும், 4,000 கோடி ரூபாய் மானியம் அளிக்கிறது மொத்தம், 9 சிலிண்டர்கள் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. ஆதார் அடையாள அட்டை முழமையாக வழங்கப்பட்ட மாவட்டங்களில், இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

பின், படிப்படியாக மற்ற இடங்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சமையல் காஸ் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. வங்கிகள் மட்டுமல்லாது, மானிய தொகை, தபால் அலுவலக கணக்குகளில் வரவு வைக்கும் வகையில், அக்., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.பயனாளிகளின் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களை, முழுமையாக மின்னணு முறையில் மாற்றுவதற்கும், அனைவருக்கும், "ஆதார்' அடையாள அட்டை கிடைப்பதற்கும் தேவையான முயற்சிகள், இரட்டிப்பு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும்.

Thursday, April 04, 2013

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மாநாடு


TNPTF KORIKKAI MAANAADU CHENNAI


வி.ஏ.ஒ. தேர்வு : 5ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

   வி.ஏ.ஒ. காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங், வரும்,16ம் தேதி நடக்க உள்ளது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பு: வி.ஏ.ஒ. தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்ட, 1,781 விண்ணப்பதாரர்களுக்கு, நான்கு கட்ட கவுன்சிலிங் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 89 காலி பணியிடங்களை, நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும், 16ம் தேதி, காலை, 8:30 மணி முதல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்க உள்ளது.

கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள, விண்ணப்பாதாரர் விவரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங் வருவோர், உரிய சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேரடி தேர்வு, சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது தேர்வு மையங்களில், வரும், 7ம் தேதி காலை மற்றும் மதியம் நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள், ஹால் டிக்கெட்டை, தேர்வாணைய வலைதளங்களான, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net லிருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில், சந்தேகம் இருப்பின், தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண், 18004251002 மூலம் தொடர்பு கொள்ளலாம். உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணி,மீன் வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆராய்ச்சியாளர் பணிக்கான இறுதி தேர்வு பட்டியல், 3ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவங்கி, 30க்குள் முடிகிறது

   "பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில், வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும்' என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 27ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கின. 3,012 மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதி வருகின்றனர். இது வரை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாட தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த இரு தேர்வுகளுமே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன. தமிழ் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்களுக்குரிய, வங்கி சலானை வழங்கவில்லை. விருத்தாசலம் அருகே, தமிழ், இரண்டாம் தாள் விடைத்தாள் கட்டு, ரயிலில் இருந்து விழுந்து சேதம் அடைந்தது. ஆங்கிலம் முதற்தாள் தேர்விலும், செஞ்சி அருகே பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஒரு பார்சலை, பஸ்சில் தவற விட்ட விவகாரத்தில், இன்னமும், விடைத்தாளை, தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, இன்று கணித தேர்வு நடக்கிறது. 8ம் தேதி, அறிவியல் தேர்வும், 12ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுடன், 10ம் வகுப்பு தேர்வுகள், முடிகின்றன. விடைத்தாள் திருத்தும் பணியை, 15ம் தேதி துவக்கி, 30ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 66 மையங்களில், இந்தப் பணிகள் நடக்கின்றன.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். வரும், 12ம் தேதி, விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள் (டி.இ.ஓ.,), பொறுப்பை ஏற்று, விடைத்தாள் எண்ணிக்கை குறித்த விவரங்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடுவர் என்றும், 15ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுவர் என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதன் முடிவு, மே மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.

புதிதாக 530 உதவி பேராசிரியர்கள் நியமனம்

  தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது, அரசு ‌கலை மற்றும் பன்முக கல்லூரிகளில் 530 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 351 விரிவுரையாளர்கள், 61 உதவிப்பேராசியர்கள் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். தமிழகத்தில் திறந்தவெளி பல்கலை மூலம் இந்தாண்டு 4.5 லட்சம் பேர் கல்வி பெறுவர்என்றார். மேலும் தரம் உயர்த்தவே அண்ணா பல்கலை. ஒருங்கிணைக்கப்பட்டது என்றார்.

Wednesday, April 03, 2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 இடங்களும், ஆங்கில வழியில் 500 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 5-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு மையங்களிலும், பி.எட். கல்வி மையங்களிலும் ரூ. 500 கட்டணம் செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577 அண்ணா சாலை, சென்னை - 600015 என்ற முகவரிக்கு ரூ. 550-க்கான வரைவோலையை அனுப்பி அஞ்சல் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 8 நகரங்களில் ஆகஸ்ட் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் முதல் தொடங்கும். வகுப்புகள் 2014 ஜனவரியில் தொடங்க உள்ளது. மேலும் விவரங்களை அறிய 044 - 24306658, 24306657 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு தானிய வகை நொறுக்குத் தீனிகள அமைச்சர் பா.வளர்மதி ்:

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு தானியங்கள் அடங்கிய நொறுக்குத் தீனிகள் வழங்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி அறிவித்தார். தினமும் வழங்கப்படும் இந்த நொறுக்குத் தீனிகளில் லட்டு, அல்வா மற்றும் கார வகைகள் இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இத் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

சட்டப் பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்ட அறிவிப்புகள்: பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும், புரதச் சத்தினை அதிகரிக்க கொண்டைக்கடலை, பாசிப்பயறு சுண்டல் ஆகியன வாரத்துக்கு இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றைவிட சிறு தானியங்களில் தாதுச்சத்துகள் மிக அதிகமாக உள்ளன. எனவே, ஒரு முன்னோடித் திட்டமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை சதவீதம் அதிகமுள்ள அரியலூர் மாவட்டத்தில் சிறு தானியங்களின் கலோரி மதிப்புக் குறையாமல் குழந்தைகள் விரும்பும் வகையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் 50 கிராம் அளவில் சுவையான லட்டு, அல்வா மற்றும் கார வகைகள் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு ரூ.1.29 கோடி நிதி ஒதுக்கப்படும். சேவை இல்லங்கள்: தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் பயனடையும் வகையில் சேவை இல்லங்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, பெரம்பலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.1.38 கோடியில் புதிதாக இரண்டு சேவை இல்லங்கள் தொடங்கப்படும். அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதுடன், அவர்களின் மனம், உடல் மற்றும் சமூக ரீதியான வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்படுகிறது. குழந்தைகள் தன் சுத்தம் பேணி, சுகாதார நிலையை மேம்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் தன் சுத்தம் பேண சுகாதாரப் பைகள் ரூ.2.72 கோடி செலவில் வழங்கப்படும்.

ஜூன் மாதம் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்

  வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய போட்டோக்களை மாற்ற ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான வாக்காளர் இறுதி பட்டியலின்படி, மாநில அளவில் 5 கோடி யே 4 லட்சத்து 61 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 22,07,364 புதிய வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இதுவரை 21,98,936 பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

மாநில அளவில், 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர்.ஆனால், அடையாள அட்டையில் பல்வேறு குளறுபடி நீடிக்கிறது. சில அடையாள அட்டைகள் பழைய முகவரியில் இருக்கிறது. ஆண், பெண் புகைப்படம் மாறியிருப்பதும், பெயர், முகவரியில் பிழை இருப்பதும் அதிகமாக இருக்கிறது. கடந்த 1995ம் ஆண்டில் வாக்காளர் அடையாள அட்டை முதல் முறையாக வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட அடையாள அட்டையை பல வாக்காளர்கள் இன்னும் வைத்துள்ளனர். 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இளம் வயதில் எடுத்த போட்டோக்களை முதுமை அடைந்தும் மாற்றம் செய்யாமல் வைத்துள்ளனர்.

இதனால் அடையாள அட்டையை வைத்து வாக்காளர்களை அடையாளம் காண்பது இயலாத காரியமாக இருக்கிறது. எனவே அடையாள அட்டையில் உள்ள போட்டோக்களை மாற்றும் வகையில் தனி சாப்ட்வேர் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் மாநில அளவில் பழைய போட்டோக்களை அகற்றி விட்டு புதிய போட்டோக்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவ

ு இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிக் கூடங்களில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மே 2 முதல் 14 வரை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசு ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.  

அதில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை தமிழ்நாடு சட்டம் 2011 விதிகள் 8 மற்றும் 9 ஆகியவற்றின் கீழ் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்பட) தொடக்க வகுப்புகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும். இவற்றை கண்காணிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

. இந்த மாணவர்கள் சேர்க்கை குறித்த மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆம் தேதி பள்ளிகள் வெளியிட வேண்டும். மே 3 ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9 ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

National Talent Search Examination-november 2012 selected Results

G.O Ms.No. 60.25% Reservation for disadvantaged group/weaker section in all Private/Non minority schools.Guidlines order issued

Tuesday, April 02, 2013

AEEO MEETING  MINITES -மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்

தகுதிகாணும் பருவத்திற்கு ஆணை வேண்டி அணுகப்படும் கருத்துருவில் இணைக்ககப்படு;ம் ஆவணம

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு

்:ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய துவக்கப்பள்ளிகளுக்கும் முதல் கட்டமாக கழிப்பறை வசதியை செய்துகொடுக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் தனியாக குடிநீர்திட்டம் செயல்படுத்த முடிவு செய்து இதற்கென மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒரு ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியாக போர்வெல் அமைத்தல், குடிநீர் தொட்டி, குழாய்கள் பதித்து குடிநீருக்கு மற்றும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஆகியவை செய்துதர பள்ளி வாரியாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கவுள்ளது

.சில ஊராட்சிகளில் குடிநீர் வசதி போதுமான அளவு இருக்கும்பட்சத்தில் ஊராட்சிகள் மூலம் குடிநீர் குழாய்கள் அமைத்துதரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு மாவட்ட வாரியாக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.குறைந்தபட்சமாக சிறிய மாவட்டங்களுக்கு ரூபாய் 3 கோடி முதல் அதிகபட்சமாக 5 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்களை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்த அரசு, பின் இதை கைவிட்டு தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு துவக்கத்தில் அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் வசதி பெறும் நிலை இத்திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவ

ு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன் களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் உள்ள பதிவுகள்  கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013,14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு

    CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.