இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 27, 2012

ஜாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த மாதம் மாதிரி பட்டியல

் மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மாதிரி பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக, அடுத்த மாதம் வைக்கப்படுகிறது. அவற்றில், தவறுகள், ஆட்சேபம் ஏதேனும் இருப்பின், 30 நாட்களுக்குள், அவற்றை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

மக்களின் பொருளாதார நிலை மற்றும் ஜாதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி, டிசம்பர், 2011ல் துவங்கி, கடந்த இரு மாதங்களுக்கு முன் முடிந்தது. மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்படும், இக்கணக்கெடுப்பை, கணினியில் பதிவு செய்ய, புதிய மென்பொருளை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த மென்பொருளை, முழு வடிவத்தில் மாநில அரசுகளுக்கு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவு செய்யப்படவில்லை. தற்போது, மத்திய அரசின் மென்பொருள் பெறப்பட்டு, கணினியில் பதிவு செய்யும் பணிகளை, மாநில அரசு துவங்கியுள்ளது. இப்பணிகளை, அடுத்த மாத இறுதியில் முடிக்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின், வார்டு வாரியாக, கணக்கெடுப்பின் மாதிரி பட்டியல், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என, உள்ளாட்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மாதிரி பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, கருத்துக்கள் பெறப்படுகின்றன. இக்கருத்துக்களைக் கொண்டு, கணக்கெடுப்பில் திருத்தங்கள் செய்த பின், இறுதிப் பட்டியல், அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார். சமூக பொருளாதார கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் முடிந்துள்ளது.

இந்நிலையில், கணக்கெடுப்பு மாதிரிப் பட்டியலில், ஜாதிகள் இடம்பெறாது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள், ஜாதியை சொல்வது, அவர்களின் விருப்பத்துக்குட்பட்டது. அவர் கூறும் ஜாதிகளை ஆதாரம் மூலம் நிரூபிக்கவில்லை . கணக்கெடுப்பில் சேர்க்கபப்பட்ட ஒருவர் என்ன ஜாதியை சார்ந்தவர் என்பதை, ஒப்பிட்டு சீர் செய்ய, அரசிடம் உரிய ஆதாரங்கள் இல்லை. ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பில் கூறப்பட்ட ஜாதிகள், மாதிரிப் பட்டியிலில் இடம் பெறாது. மத்திய அரசின் கவனத்துக்கு மட்டும், அது கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மாதிரி பட்டியலில் உள்ள விவரங்கள், தவறாக இருந்தால், அதை திருத்தவும், தகவல்களை நீக்கவும், தகவல்களை சேர்க்கவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்படவுள்ளன. அதற்காக, பட்டியலில் வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்த தகவல்கள் தவறாக இருந்தால், அதைத் திருத்த, படிவம் - ஏ, குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான தகவல்களை திருத்த, படிவம் - பி, விடுபட்ட வீட்டு உபயோகப் பொருள்களை சேர்க்க, படிவம் - சி, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய, கூடுதல் தகவல்களை சேர்க்க, படிவம் - டி ஆகியவை அளிக்கப்படுகின்றன. மாதிரிப் பட்டியல் வெளியிட்ட, 30 நாள்களுக்குள், ஆட்சேபனைகளை அளிக்க வேண்டும். அடுத்த, 22 நாள்களில், திருத்தங்களை செய்து முடிக்க வேண்டும். மாதிரி பட்டியல் வெளியிட்ட, 52 நாள்களில் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Monday, November 26, 2012

பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி

் சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் நலன் கருதி 13 வகையான கலவை சாதங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வெஜிடபிள் பிரியாணி போன்ற புதிய உணவுகளை தயாரிக்க சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்களுக்கு பிரபல சமையல் கலைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி இந்த வாரத்தில் முடிகிறது. எனவே அடுத்த வாரத்தில் புதிய சத்துணவு முறை அமலுக்கு வருகிறது. முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தில் மட்டும் புதிய சத்துணவு வழங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்தே மற்ற பள்ளிகளுக்கு  விரிவுபடுத்தப்படும்.

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும், ஸ்ரீரங்கத்தில் உள்ள அந்தநல்லூர் பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகமாகிறது.

Directorate of School Education 3rd term common syllubus III- VIII

Saturday, November 24, 2012

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' ஜெயலலிதா வழங்கினார

் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சிறப்பு ஊக்கத் தொகை, நிரந்தர வைப்பு நிதி, "ஸ்மார்ட் கார்டு' ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கான, கல்வி தகவல் மேலாண்மை முறை, இந்தாண்டு செப்டம்பர் மாதம் துவக்கப்பட்டது. இதில், நான்கு இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் இணையதளம் உள்ளது. இதில், அனைத்து விவரங்களும் பதிவேற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு ' வழங்க முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டுகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டில், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, அவர்கள் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இடம் பெயரும் மாணவ, மாணவியர், வேறு பள்ளிகளில், இதன் மூலம் எளிதில் சேரலாம். இந்த திட்டத்தின் மூலம், 92 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

மேலும், அவர்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் பதியப்படும், "ஹெல்த் கார்டு' உடன், "ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைக்கப்படும். இக்கார்டு படிப்படியாக அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படுகிறது. "ஸ்மார்ட் கார்டு' திட்டம் தவிர, 2011-12ம் கல்வியாண்டில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, 4.60 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இதில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 படிப்பவர்களுக்கு, 2,000 ரூபாயும், அவர்கள் பெயரில், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, பிளஸ் 2 முடிக்கும் போது, வட்டியுடன் வழங்கப்படும்.
இந்த கல்வியாண்டில், 21.52 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், 353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாணவ, மாணவியரின் தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்பு செலவிற்காக, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்த வைப்பு நிதியாக வழங்கப்படும் என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடந்த மற்றும் இந்த கல்வியாண்டுகளில், 720 மாணவ, மாணவியருக்கு, 3.60 கோடி ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரங்களையும், தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.

உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது

. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது. அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது.

சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. "மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Smard card for govt/aided school children

Friday, November 23, 2012

ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் டிச.,1ம் தேதி முதல்பயணத்தின் போது, ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்

"ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது, வரும் டிச.,1ம் தேதி முதல், ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில், "ஏசி'முதல் வகுப்பு, "ஏசி' 2ம் வகுப்பு, "ஏசி., மூன்றாம் வகுப்பு, "ஏசி' சேர்கார் வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்பவர்கள் ஒரிஜினல் அடையாள அட்டை தேவையில்லை.ரயில் டிக்கெட் முன்பதிவுகளில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில், பயணிகள் முறைகேடாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது என, ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததால், வரும் டிச.,1ம் தேதி முதல், அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும், பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்ட, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வங்கி கிரடிட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய தேசிய வங்கிகளின் அடையாள அட்டை, பாஸ்போர்ட், போட்டோவுடன் கூடிய மாணவர்கள் அடையாள அட்டை, பொதுதுறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை இவைகளில் ஒன்றினை, ரயில் பயணத்தின் போது, பயணிகள் கொண்டு வரவேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

.ரயிலில் பயணம் செய்ய இ.டிக்கெட், ஐ.டிக்கெட், தத்கால் டிக்கெட், மற்றும் ரயில் டிக்கெட் மையங்களில் ,டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,

  "அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை.

ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது

Thursday, November 22, 2012

24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல

் :இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்' குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது.

கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது: மனித வளத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், நிறுவனங்களில் உள்ள மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின் குறைகளை மட்டும் கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை பார்ப்பவர்களோடு சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக திறமையுடன் செயல்படுவர்களாக இருக்கும் பட்சத்தில், வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், இம்மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ., 4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், வரும் டிச., 15க்குள் வெளியிடப்படும். அரசு பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக, ஓராண்டுக்குள், 24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை செயலர் ஸ்ரீதர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோடீஸ்வர பிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டி.இ.ஓ., காலியிடங்கள் 70 ஆக உயர்வு : பதவி உயர்வு அறிவிப்பு எப்போது -Dinamalar news

தமிழகத்தில் 70 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பு தாமதமாவது குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

அரசு திட்டங்களை செயல்படுத்துவது, கல்வி பணிகளை ஆய்வு செய்வது மற்றும் களப்பணிகள் ஆற்றுவது என, டி.இ.ஓ.,க்கள் பங்கு அதிகம். மாநிலத்தில் 70 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. 35 சி.இ.ஓ., பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், டி.இ.ஓ., பணிமூப்பு பட்டியலும், பள்ளி கல்வி துறையில் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது. பள்ளி கல்வி துறை இயக்குனராக தேவராஜ் பொறுப்பேற்றதும், காலி சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பியது, "ஆன்லைன்' கவுன்சிலிங் மூலம் ஆசிரியர்களுக்கு அலைச்சலை தவிர்த்தது போன்ற நடவடிக்கைகள் எடுத்தது, வரவேற்பை பெற்றது.

டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை அறிவிப்பதில் மட்டும் "தொய்வு' நீடிக்கிறது. பதவி உயர்வு மூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: டி.இ.ஓ.,க் கள் பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் 25 சதவீதம், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 40 சதவீதம், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 35 சதவீதம் அடிப்படையில் ஒதுக்கப்படும். தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடு (எஸ்.ஆர்.,) மற்றும் "கான்பிடன்ஷியல்' சான்று பரிசீலிக்கப்படும். தலைமையாசிரியர்கள் ரகசிய அறிக்கைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது.

தலைமையாசிரியர் ஒருவர் பணிக்காலத்தில் எத்தனை டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் பணியாற்றினாரோ அவர்களின் ரகசிய அறிக்கைகளையும் பெற்று, இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பல அதிகாரிகள் ஓய்வு மற்றும் காலமானதையடுத்து, அந்த அறிக்கைகள் பெறமுடியவில்லை. இதனால், பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஆகிறது. பணிமூப்பு பட்டியலில் உள்ள தலைமையாசிரியர், கடைசியாக அதிகாரியிடம் பணியாற்றியவரின் ரகசிய அறிக்கையை மட்டும் பெற்றால் போதும், என விதியை தளர்த்த வேண்டும், என்றார்.

அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்

  தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.

இதற்கு முன்பு அரையாண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நாள்கள் மொத்தமாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12-வது மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வருகிற 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் முதல் கட்டமாக மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பின்னர் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் திட்டம் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி கூறியது: இந்த விடுமுறை நாள்களை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பயன்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மற்ற பாடங்களை புரிந்து படித்து பயிற்சி பெறமுடியும். அதனால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதையடுத்து, மற்ற பாடங்களின் தேர்வு டிச-2ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், 6,7,8,9, 11-வது வகுப்புகளுக்கு எப்போதும் போல் பழைய முறையே பின்பற்றப்பட இருப்பதாக பகவதி தெரிவித்தார்.

Wednesday, November 21, 2012

இணைய வழியில் 6,500 பேர் பணி நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, 25 முதுகலை ஆசிரியர், வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை, பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில் சம்பந்தப்பட்டவர்கள் பங்@கற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில் நடக்கும்.

இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து, அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர் இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Tuesday, November 20, 2012

பள்ளிகளில் ஆய்வு நடத்த வருகிறது "அன்னையர் குழு'

  "அனைத்து பள்ளிகளிலும், "அன்னையர் பள்ளி பார்வை குழு' ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்' என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அன்னையரை, ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும். இந்த குழு, வாரம் ஒரு நாள், பள்ளி வேலை நாட்களில் ஆய்வு மேற்கொள்வர். வாரந்தோறும் இக்குழுவினர் மாறிக் கொண்டே இருப்பர். பள்ளியில் வகுப்பறை வசதி உள்ளதா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்வர்.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிப்பர். அன்னையர் கூறும் குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். இக்குழுவில், அனைத்து மாணவர்களின் அன்னையரும், இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது. குறைகளை சரி செய்தது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவர்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

வரும், 2013ம் ஆண்டில், 24 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
விடுமுறை நாள் தேதி கிழமை

ஆங்கில புத்தாண்டு ஜன.1 செவ்வாய் பொங்கல் ஜன.14 திங்கள் திருவள்ளுவர் தினம் ஜன.15 செவ்வாய் உழவர் திருநாள் ஜன.16 புதன் மிலாது நபி ஜன.25 வெள்ளி குடியரசு தினம் ஜன.26 சனி புனித வெள்ளி மார்ச் 29 வெள்ளி ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்) ஏப்.1 திங்கள் தெலுங்கு புத்தாண்டு ஏப்.11 வியாழன் தமிழ் புத்தாண்டு/அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்.14 ஞாயிறு மகாவீர் ஜெயந்தி ஏப்.24 புதன் மே தினம் மே 1 புதன் ரம்ஜான் ஆக.9 வெள்ளி சுதந்திர தினம் ஆக.15 வியாழன் கிருஷ்ண ஜெயந்தி ஆக.28 புதன் விநாயகர் சதுர்த்தி செப்.9 திங்கள் அரையாண்டு வங்கி கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்) செப்.30 திங்கள் காந்தி ஜெயந்தி அக்.2 புதன் ஆயுதபூஜை அக்.13 ஞாயிறு விஜயதசமி அக்.14 திங்கள் பக்ரீத் அக்.16 புதன் தீபாவளி நவ.2 சனி மொகரம் நவ.14 வியாழன் கிறிஸ்துமஸ் டிச.25 புதன் மொத்தம், 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் விடுமுறை, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அரசு தெரிவித்துள்ளது.

Ignou B.ed hall ticket

TN Govt Public holidays G.O 981

Monday, November 19, 2012

டி.இ.ஓ.,க்கள் 7 பேருக்கு சி.இ.ஓ., "புரமோஷன்'

:மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஏழு பேர், முதன்மைக் கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.பள்ளி கல்வி துறை முதன்மை செயலர் சபிதா பிறப்பித்த, பதவி உயர்வு உத்தரவு: பெயர் தற்போதைய

-1. தனபாலன் டி.இ.இ.ஓ., - திருவள்ளூர் துணை இயக்குனர், மாற்றுத் திறனாளிகள் நல துறை, சென்னை.

2. முருகன் டி.இ.ஓ., - சேரன்மாதேவி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - திண்டுக்கல

்3. சண்முகம் டி.இ.ஓ., - செய்யாறு கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - ராமநாதபுரம

்4. அருண்பிரசாத் டி.இ.ஓ., - ஈரோடு சி.இ.ஓ., - திருவண்ணாமலை

5. சாந்தமூர்த்தி டி.இ.ஓ., - உசிலம்பட்டி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., கரூர

்6. விஜயன் டி.இ.ஓ., - பழனி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - தூத்துக்குட

ி7. மகாலிங்கம் டி.இ.ஓ., - தருமபுரி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - வேலூர் திண்டுக்கல் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., சுகுமார் தேவதாஸ், திண்டுக்கல் சி.இ.ஓ.,வாகவும், ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., சிவகாமசுந்தரி, ராமநாதபுரம் சி.இ.ஓ.,வாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

அரசாணை எண் 290 நபார்டு வங்கியின் கட்டமைப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 131 மேல்நிலைப்பள்ளியின் பட்டியல்

Saturday, November 17, 2012

குரூப்-1 போட்டி தேர்வு டிசம்பர் 30ல் நடக்கிறது

இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.