"ரேஷன் கார்டு நகலுடன், 2012ல், பொருட்கள் வாங்குவதற்கான இணைப்பு சீட்டு பதிவு நகலும் இருந்தால் மட்டுமே, சிம்கார்டு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் கம்பெனிகளின் சிம் கார்டுகளை வாங்கும் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க, ரேஷன் கார்டு நகல் இல்லாமல் சிம் கார்டுகளை தர வேண்டாம் என, விற்பனையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தி இருந்தது. ரேஷன் கார்டுகளை அடையாள அட்டையாக காட்டும் சிலர், புதுப்பிக்காத பழைய ரேஷன் கார்டுகளை காண்பித்து, சிம் கார்டுகளை வாங்குகின்றனர். இதையடுத்து, ரேஷன் கார்டு நகலுடன், இந்தாண்டு பொருட்கள் வாங்குவதற்கான உள்தாள் நகலும் வாங்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர், ரேஷன் கார்டில் பொருட்கள் தொடர்ந்து வாங்கியதற்கான பதிவும் இருந்தால் மட்டுமே, சிம்கார்டுகளை வினியோகிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
Wednesday, October 10, 2012
14ம் தேதி டி.இ.டி., மறுதேர்வு: 6.82 லட்சம் பேர் எழுதுகின்றனர
் டி.ஆர்.பி., 14ம் தேதி நடத்தும், டி.இ.டி., மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், 6.67 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், தோல்வி அடைந்த தேர்வருக்காக, இம்மாதம், 3ம் தேதி, மறுதேர்வு நடக்க இருந்தது; பின், புதிய தேர்வர்களும், தேர்வில் பங்கேற்பதற்கு வசதியாக, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக, கடந்த மாதம், 24 முதல், 28ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, 6.82 லட்சம் பேர், 14ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்கின்றனர். 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இரு தேர்வுகளும், தலா, 150 மதிப்பெண்களுக்கு நடக்கும். தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வை கண்காணிக்க, டி.ஆர்.பி., உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
முறைகேடின்றி ஆசிரியர் தகுதித் தேர்வு: வாரிய உறுப்பினர் தகவல
் "அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார். ஏற்கனவே நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, அவர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்.
சிவகங்கையில் அவர் கூறுகையில், ""ஏற்கனவே நடந்த தகுதி தேர்வில் வாய்ப்பு இழந்த, 6 லட்சத்து 55 ஆயிரத்து 243 பேர், புதிதாக விண்ணப்பித்த 20 ஆயிரத்து 43 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைபாடு, முறைகேடின்றி தேர்வை நடத்த கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்,'' என்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
Tuesday, October 09, 2012
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்
2) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் - 2 வாரங்கள்
3) அனைவருக்கும் கல்வித் திட்டம் - 3 நாட்கள்
4) அரசு ஆசிரியர் பயிற்சி மையம் - 3 நாட்கள் 5) தொடக்கப் பள்ளிகள் - 2 வாரங்கள் 6) நடுநிலைப் பள்ளிகள் - 2 வாரங்கள் 7) தொடக்கக் கல்வி இயக்ககம் - 1 வாரம்
ஆசிரியர் நியமனத்திற்கு புதிய விதிமுறைகள்: "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற்ற மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற மதிப்பெண்களை, "வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிட்டு, இனி பணி நியமனம் நடக்கும்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டப்படி, 1 முதல், 8 வகுப்பு வரை, பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலையில், டி.இ.டி., தேர்வை, டி.ஆர்.பி., நடத்தியது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தோற்றவர்களுக்கு, மறுதேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில் வெற்றி பெறுபவரை, பணி நியமனம் செய்ய, தனி வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், நான்கு பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரண்டு முறை கூடி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளை, அரசுக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, புதிய நியமன வழிமுறைகள் தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 15ம்; ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 25ம் கணக்கிட்டு வழங்கப்படும். இத்துடன், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், அதிகபட்சமாக, 60க்கு கணக்கிட்டு வழங்கப்படும். இந்த வகையில், 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
பட்டதாரி ஆசிரியர்: பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண், 10; பட்டப் படிப்பிற்கு, 15; பி.எட்.,டுக்கு, 15 மற்றும் டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் தேர்ச்சி பெறுபவர், பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
"குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை, தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடக்கிறது.
2009ல் நடந்த குரூப்-2 தேர்வில், பணியில் சேராதவர்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில், 150 காலி பணியிடங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வு வாரியம் நிரப்பியுள்ளது.அதேபோல், வி.ஏ.ஓ., தேர்வில் நிரப்பப்படாத 330 பணியிடங்களையும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டி.என்.பி.எஸ்.சி நிரப்பியுள்ளது. இந்த விவரங்களை, தேர்வாணைய இணைய தளத்தில் (தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண) பார்த்து அறிந்து கொள்ளலாம்.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி: "ரேங்க்' பட்டியல் மாறுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,' தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க்' பட்டியல், புதிய விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Monday, October 08, 2012
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
்பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்து கிறது. ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது. அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும். மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்). பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப் படுகிறது. இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
Sunday, October 07, 2012
ஆசிரியர் தகுதி தேர்வு: இன்று ஹால் டிக்கெட்
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்Œம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. புதிதாக தேர்வெழுத, 17 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல் வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் www.trb.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது
Saturday, October 06, 2012
பிற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி: ஜெ.
பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க ட உள்ளது.
இதற்காக தமிழகத்தில் 160 விடுதிகளில் 6,550 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ 2,800 வீதம் ரூ.1.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஆங்கிலப்பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மேலும் சிறுபான்மையின மாணவர்களில் 10- ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரயில்களின் இருப்பிடம் அறிய எஸ்.எம்.எஸ்., வசதி
அனைத்து ரயில்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் வசதி, விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன், சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ உட்பட, 36 முக்கிய ரயில்கள் குறித்து மட்டுமே, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளும் வசதி இருந்தது. தற்போது, அனைத்து ரயில்கள் குறித்தும் அறியும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, மொபைல்போனில், Spot என்று ஆங்கிலத்தில், "டைப்' செய்து, 139 என்ற எண்ணுக்கு, எஸ்.எம். எஸ்., அனுப்பினால், விவரங்களை அறியலாம். இதுதவிர, www.trainenquiry.com என்ற இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று விரிவுரையாளர் தகுதித்தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்,இன்று விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடக்கிறது.மொத்தம் 10 முக்கிய மையங்கள் மூலம், 76 துணைதேர்வு மையங்களில், இத்தேர்வு நடக்கிறது.பாரதியார் பல்கலை தேர்வாணையர் செந்தில்வாசன் அறிக்கை:
இத்தேர்வை, 58 ஆயிரத்து 234 பேர் தேர்வு எழுதுகின்றனர். 10 ஆயிரத்து 508 பேர் சென்னையிலும், 9,812 பேர் திருச்சியிலும், 7,344 பேர் சேலத்திலும் எழுதுகின்றனர்.மொத்தம் 31 ஆயிரத்து 498 பெண்களும், 26ஆயிரத்து 736 ஆண்களும் எழுதும் இத்தேர்வில்.பெண்களே அதிகம். இதில், 268 பார்வையற்றவர்களும், 991 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர்.இவர்களுக்கான. சிறப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குரிய தேர்வு மையங்களில் தரைதளத்தில் எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தம் 27 பாடப்பிரிவுகளில் எழுதப்படும்,இத்தேர்வில் 7,345 பேர் கம்ப்யூட்டர் சயன்ஸ்,வணிகவியலில் 6,020 பேரும், 5,516 பேர் உயிர்அறிவியலிலும் தேர்வு எழுதுகின்றனர். மிகக்குறைந்த அளவாக, தத்துவவியலில் 62 பேரும், இசைப்பாடத்தில் 93 பேரும் எழுதுகின்றனர். இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம்:எஸ்.எஸ்.ஏ. மூலம் தாற்காலிகத் தீர்வு
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தை அனைவருக்கும் கல்வித் திட்டம்(எஸ்.எஸ்.ஏ.) மூலம் தாற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆங்கிலம், கணக்கு பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் செய்வதறியாது உள்ளனர். இந்த ஆண்டு ஆசிரியர்கள் இல்லாமல் காலாண்டுத் தேர்வை மாணவர்கள் சந்தித்தனர். காலாண்டுத் தேர்வு முடிந்து அரையாண்டுத் தேர்வுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கி உள்ளன.இதற்கிடையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை தாற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடத்தில் முதுநிலை படித்து அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களைக் கொண்டு வாரத்தில் 2 நாள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ÷மாணவர்களுக்குப் பாடங்களை எப்படி நடத்துவது என்று ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதே வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களின் பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு
சமையல் எரிவாயு விலையை ரூ.11.42 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சமீபத்தில் வீட்டுக்கான சமையல் எரிவாயு எண்ணிக்கையை 6-ஆக குறைத்தது மத்திய அரசு. இதற்கு நாடுமுழுவதும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலிண்டர் எண்ணிக்கையை குறைத்ததால் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.11.42 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தியதால் தான் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Friday, October 05, 2012
ஆரம்ப பள்ளிகளில் பழைய முறையிலேயே பாடங்கள்-
ஆரம்ப பள்ளிகளில் "செயல்வழி" கற்றல் முறைக்கு குட்பை சொல்லி, பழைய முறையில் பாடங்கள் நடத்தி வருகின்றனர். செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பல்வேறு புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வி, இடைநிற்றல் கல்வி, செயல்வழி கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என பல முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பழைய முறையை தவிர்த்து, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் திறமைக்கேற்ப, எளிதாக புரிந்து படிக்கும் முறையில் மாற்றியமைக்கப்பட்டது.
முதல் ஐந்து வகுப்புகளுக்கு செயல்வழி கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகள், அட்டைகளை எடுத்து படித்துக் கொள்ளலாம். அவரவர் திறமைக்கேற்றவாறு, முடிந்த அளவு படிக்கலாம். நான்கு மாதங்களாக செயல்வி கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதனால், ஆரம்ப பள்ளிகளில் செயல்வழிகற்றல் முறையில் பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாறாக, பழைய முறையில் மீண்டும் வாசித்தல், கரும்பலகையில் எழுதி படித்தல், மனப்பாடம் செய்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி
இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது. இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் வெள்ளி்க்கிழமை கையெழுத்தானது.
நிதியமைச்சகத்தின் இணை செயலாளர் பிரமோத் சக்சேனா மற்றும் உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஓனோ ரூல் ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக வங்கி மூலம் பெறப்படும் நிதி கல்விதுறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.