இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 04, 2012

ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?

ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

Social science syllabus

Science syllabus

Maths syllabus

English syllabus

Tamil 2nd term syllabus

Wednesday, October 03, 2012

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: "தத்கால்' திட்டம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தை, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தேர்வுத் துறை அறிவிப்பு:

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவியர், "தத்கால்' திட்டத்தின் கீழ், 5ம் தேதி முதல், 8ம் தேதி, பகல் 1 மணி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.nic.in), பதிவு செய்து, 625 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், மற்றொரு புகைப்படம் ஒட்டி, தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, உரிய இணைப்புகளுடன், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், 9ம் தேதி வரை, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தத்காலில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர், 12, 13 ஆகிய தேதிகளில், குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்று, "ஹால் டிக்கெட்' பெறலாம். முழுமையான விவரங்களுக்கு, இணையதளத்தைப் பார்க்கலாம்.

இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, பிளஸ் 2 தனித்தேர்வு, இன்று துவங்குகிறது. 50 ஆயிரம் மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதுகின்றனர்.

பள்ளி விபரம் சேகரிக்க உத்தரவு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார், சுயநிதி, மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், கட்டடங்கள், கருவிகள், பள்ளி அமைவிடம் என, அடிப்படை விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி இயக்கம், உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்கம் சார்பில் சேகரிக்கப்பட உள்ளது. அடுத்த வாரத்தில் துவங்க உள்ள, இந்தபணிகளின் தகவல்கள் அனைத்தும், ஒரு மாதத்திற்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொகுப்பு திரட்டும் படிவமும் வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறப்பு

கடந்த மாதம், பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. தேர்வுக்குப் பின்,செப்., 25ம் தேதியில் இருந்து, விடுமுறை விடப்பட்டது.

ஒன்பது நாள் விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, இன்று, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு வசதியாக, கடந்த மாதமே, அனைத்துப் பள்ளிகளுக்கும், பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை: அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

  ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போதுள்ள முறையின்படி, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறையின் கீழ் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றும், தகுதியான பலரும் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இதில் பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மற்றும் உத்தேச தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறி தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் 50-க்கும் மேற்பட்ட விடைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது. நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் புதன்கிழமை கூறியது:

ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் வகையில், முதன்முதலாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதை வெளியிடும்போதே அதில் சில பிரச்னைகள் எழலாம் என்றும் எதிர்பார்த்தோம். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஆசிரியர் நியமனம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக அரசு 2009-ல் வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களிலும் 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது (முன்னதாக, இடஒதுக்கீட்டு முறையில் 100 புள்ளி ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு, அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்குவதற்காக 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டது). அரசாணையின்படியே, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றியுள்ளது. அதில் உள்ள பிரச்னைகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்தபிறகு, தமிழகம் அரசிடம் இதுகுறித்து விளக்கம் பெறப்படும். அரசாணையில் திருத்தம் கொண்டுவராத வரை இந்த இடஒதுக்கீட்டு முறையை மாற்றுவது மிகவும் கடினமானது.

50 முக்கிய விடைகள் தவறு: முக்கிய விடைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பங்கு எதுவும் இல்லை. அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு முக்கிய விடைகள் முடிவு செய்யப்பட்டு, அவர்களின் கையெழுத்தும் பெறப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறியுள்ளது. இனிவரும் காலங்களில் முக்கிய விடைகளுக்கு துறை நிபுணர்களையே பொறுப்பேற்கச் செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். விரைவில் மறுமதிப்பீடு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து விடைத்தாள்களும் விரைவில் மறுமதிப்பீடு செய்யப்படும். விடைத்தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட முக்கிய விடைகளைக் கொண்டு கம்ப்யூட்டரில் மறுமதிப்பீடு செய்யப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் சில நாள்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளில் அடிப்படை வசதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

  பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வந்தபோது சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்தது.

Tuesday, October 02, 2012

முதுநிலை ஆசிரியர் தேர்வை ரத்து செய்தது ஐகோர்ட

்இட ஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை ஐகோர்ட், ரத்து செய்துள்ளது.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது.

இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர்.

இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு:

பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது. எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது டி.ஆர்.பி.,: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, "கீ ஆன்சர்' தவறு என்று, ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறு மதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்காளர்களை கவர "ஸ்வீப்' திட்டம்: தேர்தல் கமிஷன் புது முயற்சி

வரும் 2013 ஜனவரியை தகுதி நாளாக கொண்டு (18 வயது), அக்.,1 முதல் 31 வரை, வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடக்க உள்ளன. சிறப்பு கிராம சபை கூட்டம், வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது.

புதிய திட்டம்: பட்டியலில், 18 வயது பூர்த்தியானவர்களை முழுமையாக சேர்க்கும் விதமாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, "சீரான வாக்காளர் கல்வி, ஜனநாயக பங்களிப்பு (ஸ்வீப்)' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி, விளம்பர பலகை வைத்தல். கல்லூரி, பள்ளி மாணவர்கள் மூலம் ஓவியம், கட்டுரை, இசை போட்டி; மகளிர் குழு, தன்னார்வ நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி நடத்துதல்; "எஸ்.எம்.எஸ்.,' அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குடியிருப்போர் நலச்சங்கத்தினரை அணுகி, வரைவு பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்யவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க அனுமதி: ஒன்றரை ஆண்டில் மாற்றம்

மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளில், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை, மொழிப்பாடமாக கற்பதற்கு, வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், அதற்கு வழியில்லை.

இந்தி மொழியை, மொழிப் பாடமாக கற்க முடியாது. அதை, ஒரு விருப்பப் பாடமாகத் தான் கற்க முடியும். தொடர் அங்கீகாரம் வழங்குவதில் அலைகழிப்பு, எதிர்பார்த்த கட்டணம் நிர்ணயிக்காதது, பெற்றோர்-பள்ளி நிர்வாகிகளிடையே, அவ்வப்போது வெடிக்கும் பிரச்னை, பெற்றோர், மாணவர் விரும்பும் பாடத் திட்டங்களை வழங்க முடியாத நிலை போன்ற காரணங்களால், சி.பி.எஸ்.இ., பக்கம் தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களது பார்வையை திருப்பியுள்ளனர்.

தமிழகத்தில், ஏற்கனவே 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித் துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. பெரிய இட வசதியுள்ள, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள், பக்கத்திலேயே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, விண்ணப்பித்து வருகின்றனர். மெட்ரிக் பள்ளிகளை அப்படியே மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆரம்பிப்பதற்கு, சட்டத்தில் வழிவகை இல்லை.

இதனால், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, ஒரு கட்டத்தில் பள்ளியை மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கவும், சில பள்ளி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, தனியார் பள்ளி ஒன்றின், தாளாளர் ராம சுப்பிரமணியன் கூறியதாவது:

* தமிழகத்தில், கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள், இங்குள்ள பள்ளிகளில் மொழிப்பாடமாக இருக்க வேண்டும் என, பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், அதுபோல் வாய்ப்பு இல்லை.

* சி.பி.எஸ்.இ., போர்டு, தரமான கல்வி திட்டம் வழங்குவதுடன், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, தற்போது சீன மொழியை கற்பிக்கவும் வழிவகை செய்கிறது. ஒருமுறை அங்கீகாரம் பெற்றுவிட்டால், அதன்பின் தொடர் பிரச்னைகள் கிடையாது. இதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்குவதில், பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு ராம சுப்பிரமணியன் கூறினார். சோடை போகவில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகளின் கருத்து குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில்,

"தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்து, விண்ணப்பிப்பவர்களுக்கு, தடையில்லா சான்று வழங்குகிறோம். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புதிதாக வருவதால், மாநில பாடத் திட்டம் சோடை போனதாக அர்த்தம் கிடையாது' என்று தெரிவித்தன.

"ஸ்பீடு போஸ்ட்' கட்டணம் அறிவிப்பின்றி உயர்வு

முன் அறிவிப்பின்றி, விரைவு தபால் கட்டணத்தை, ஐந்து ரூபாய் முதல், 30 ரூபாய் வரை, தபால் துறை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தபால் துறைக்கு, வருவாய் ஈட்டித் தரும் சேவைகளில், "விரைவுத் தபால்' சேவையும் ஒன்று. தனியார் கூரியர் நிறுவனங்கள், புற்றீசல் போல் பெருகினாலும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடிதம் மற்றும் ஆவணங்களை அனுப்ப, தபால் துறையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விரைவுத் தபால் சேவைக்கான கட்டணத்தை, தபால் துறை, பல மடங்கு உயர்த்தியுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு, தபால் சேவையை அளிக்க வேண்டிய சூழலில், அதிரடியாகக் கட்டணத்தை உயர்த்தியது வருவாயை இழக்கும் செயல் என, தபால் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதிகரிக்கப்பட்ட கட்டணத்திற்கு, கல்வி மற்றும் சேவை வரியை விதிப்பதால், கட்டண உயர்வு மேலும் அதிகரிக்கிறது.

இது குறித்து, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி கூறியதாவது: பட்டாபிராம் போஸ்ட் ஆபிசிலிருந்து, சென்னை தலைமைச் செயலகத்திற்கு கடிதம் ஒன்றை, விரைவுத் தபாலில் அனுப்பினேன். அந்த கடிதத்தின் எடை, 30 கிராம். மாநகர எல்லைக்குள், 50 கிராம் எடை வரை அனுப்பப்படும் கடிதத்திற்கு, 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடிதத்தை அனுப்ப, 12 ரூபாய் செலுத்தினேன். கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், 17 ரூபாய் கட்டணமாகத் தர வேண்டும் என்று, அங்குள்ள ஊழியர் கூறினார். கட்டண உயர்வு பற்றி, தபால் துறை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இது குறித்து கேட்டால், அக்., 1முதல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்கின்றனர். இவ்வாறு பாலாஜி கூறினார். கட்டண உயர்வு பற்றி தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""விரைவுத் தபாலுக்கான கட்டண உயர்வு அறிவிப்பு, காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது. கட்டண உயர்வு பற்றி, பொதுமக்களுக்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும்.

விரைவுத் தபால் மூலம் பொருட்கள் அனுப்ப வரும் வாடிக்கையாளர்களிடம், கட்டணத்தைக் கூடுதலாகக் கேட்டால், தகராறு ஏற்படுகிறது,'' என்கிறார்.

Monday, October 01, 2012

பிரீபெய்டு "டாப்- அப்' : டிராய் புதிய உத்தரவு

  மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.

இந்த வகையில், 20 ரூபாய்க்கும் கீழாக, "டாப்-அப்' செய்யும் பயனீட்டாளர்கள் பயன் அடைவர். தற்போது, 20 ரூபாய்க்கு மேல் வாங்கும், "டாப்- அப்' கூப்பன்களுக்கு நிர்வாகக் கட்டணமாக, மூன்று ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. "டிராய்' உத்தரவையடுத்து, 20 ரூபாய்க்கு, "டாப்-அப்' கார்டு வாங்கினால், இனிமேல் இரண்டு ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.

VAO Exam General English Answer key

VAO Exam Answer key General tamil

VAO Exam GK answer Key

Sunday, September 30, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு

ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

இனி முறைகேடு நடக்காது: நட்ராஜ் உறுதி

  வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 1,807 பணியிடங்களை நிரப்புவதற்கான வி.ஏ.ஓ.தேர்வுகள் இன்றுதமிழகம் முழவதும் நடந்துவருகிறது. 9.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,

இன்று நடக்கும் வி.ஏ.ஓ. தேர்வு வினாத்தாள் குறித்த விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும். முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்-2 தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இனி எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காது. அதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Saturday, September 29, 2012

டி.இ.டி., மறுதேர்வு : 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்

டி.இ.டி., மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.டி.இ.டி., மறுதேர்வு, அக்., 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும், மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது.

இதையடுத்து, "புதிய விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.

அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

SSLC / Matric - Special Supplementary Examination June 2012 - Retotal-Result ( I Spell