இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 10, 2012

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?

்   மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன?
ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...

  கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.  

"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.

கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி? "மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்?

அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர். கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி.

ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. "சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள்  வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர். சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக்  குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான். "இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.

GO 309 Comitte formed to monitor the Quality of NHIS

GO 306 dt 13.8.12 TN govt Pensioners for NHIS add hospitals

Sunday, September 09, 2012

24 ஆயிரம் தபால் நிலையங்களை ஒருங்கிணைக்க முடிவு

  பொதுமக்களின் வசதிக்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 ஆயிரம் தபால்அலுவலகங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைக்க, தபால் துறை முடிவு செய்துள் ளது.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக வட் டாரங்கள் கூறியதாவது:

நாடு முழுவதும், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான அலுவலகங்கள், பகுதி நேரமாகவும், ஒப்பந்த பணியாளர்கள் மூலமும் செயல்படுகின்றன. பொதுமக்களுக்கு, மேலும் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, 24 ஆயிரம் தபால் அலுவலகங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, 122 தபால் அலுவலகங்கள் இணைக்கப்படவுள்ளன. ஆறு மாதங்களுக்கு பின், மீதமுள்ள தபால் அலுவலகங்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதன்மூலம், இந்த தபால் அலு வலகங்களில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த பட்டியலில் உள்ள எந்த அலுவலகத்திலிருந்தும், தங்களின் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். ஏ.டி.எம்., வசதியையும் பயன்படுத்தலாம்.

இது தொடர்பான தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்துவதற்காக, ஐந்து பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, தொலைத் தொடர்பு அமைச்சக வட்டாரங்கள் கூறின.

IGNOU December 2012 B.ed tentative time table

Saturday, September 08, 2012

அங்கன்வாடிகளில் "பேபி டாய்லெட்': தமிழகம் முழுவதும் பணி தீவிரம்  

  அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து அங்கன்வாடிகளிலும், "பேபி டாய்லெட்' அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், பல அங்கன்வாடி மையங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. இங்கு விட்டுச் செல்லப்படும் குழந்தைகள், தெரு ஓரங்களில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். பள்ளிகளுடன் இணைந்து செயல்படும், சில அங்கன்வாடி மையங்களில் மட்டும், கழிப்பறைகள் உள்ளன.

முறையான பராமரிப்பு இல்லாமல் இவை உள்ளதால், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. எனவே, குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக, "பேபி டாய்லெட்' அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் நவம்பர் மாதத்துக்குள், கழிப்பறை அமைக்கும் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மேலாளர், மணிமேகலை கூறியதாவது:

ஒவ்வொரு கழிப்பறையும், 18 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகள் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, தாழ்வான கதவு; குழந்தைகள், உட்புறமாகக் கதவு பூட்டிக் கொண்டாலும், வெளியில் இருந்து எளிதில் திறக்கும் வகையிலான தாழ்ப்பாள்கள் அமைக்கப்பட உள்ளன.

கழிப்பறையின் உட்பகுதியில், வண்ண கார்ட்டூன்கள் வரையவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, மணிமேகலை கூறினார்.

அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி: பள்ளிக் கல்விச் செயலர் டி.சபீதா தகவல்

     தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா தெரிவித்தார். தொடக்கக் கல்வித் துறையின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டி.சபீதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:

பள்ளிக் கல்வித் துறையில் தகவல் சார்ந்த மேலாண்மை முறைமை (Education Management Information System) என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அலுவலர்கள், பள்ளிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரின் விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவர்களுக்குத் தேவையான கூடுதல் விவரங்களும் இதில் உள்ளன.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் ஆசிரியர்களின் வருகையையும் குறுஞ்செய்தி மூலம் கண்காணிக்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை கணக்கெடுப்புகளை தயார் செய்து விரைவாக வழங்க  வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வர பயன்படுத்தப்படும். ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரும் போது மற்ற தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  

மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளையும் கணக்கெடுத்து அவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

அட்டகாசமாக தயாராகுது அரசு பள்ளிகளுக்கான அட்லஸ

   அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, அக்டோபர் மாத இறுதியில், தகவல் குவியல்களுடன் கூடிய, 90 பக்கங்கள் கொண்ட இலவச, அட்லஸ் வினியோகிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, பாடநூல் கழக வட்டாரம் கூறியதாவது:

மொத்தம், 90 பக்கங்கள் கொண்டதாக, அட்லஸ் இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் பயன்படும் வகையில், உயர்ந்த தரத்தில், அதிக தகவல்கள், புள்ளி விவரங்கள், அதிக படங்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.

அட்லஸ் தயாரிப்பதற்கு, டேராடூனில் உள்ள, இந்திய சர்வேயர் ஜெனரலிடம், அனுமதி பெற வேண்டும். கடந்த, 6ம் தேதி, அனுமதி கிடைத்து விட்டது. சென்னையைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடம், "அட்லஸ்&' தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவில், இந்த நிறுவனங்கள், அச்சடிப்பு பணியை துவங்கும்.

அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்.தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வது குறித்து, எந்த யோசனையும் இப்போது இல்லை. கோரிக்கைகள் வந்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை இல்லை:முன்னாள் எம்.எல்.சி. சி.ஆர்.லட்சுமிகாந்தன

    ஆசிரியர் நியமனத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு செய்யும் உரிமை மட்டுமே உண்டு. தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை அதற்கு இல்லை என முன்னாள் மேலவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநில கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து கட்டாய இலவசக்கல்வி சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. ஆசிரியர்களுக்கு பருவந்தோறும் அல்லது ஆண்டு தோறும் மாறி வரும் பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான் பலன் தருமே ஒழிய, தகுதித் தேர்வுகளால் நிச்சயம் பலன் ஏற்படாது.

மத்தியஅரசு சட்டத்தின்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மட்டுமே, ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்த முறையான அமைப்பாகும்.  மத்தியஅரசு சட்டத்தின்படி ஆசிரியர் கல்வி நிறுவனமும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே உரிமை பெற்றவை.

மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தனியே அரசுப் போக்குவரத்துக்கழகம் தொடங்கி மாணவர்களுக்காக தனி பேருந்து, மற்றும் வேன் வசதிகளை தமிழகஅரசு செய்து தருவதுதான் வாகன பிரச்னைக்கு உண்மையான தீர்வாகும்.   சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச திட்டங்கள் தனியார் சுயநிதிப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதால் மாணவர் உரிமைகளில் பாகுபாடுகள் தோன்றியுள்ளன.  

எனவே அனைத்து மாணவர்களுக்கு அரசின் சலுகைகள் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் பெற்றோர்களின் பணச்செலவு குறையும் என தெரிவித்துள்ளார்.

Friday, September 07, 2012

HSC June 2012- Retotal List

வகுப்பறை வழிபாடுகளைகண்காணிக்க அரசு உத்தரவு

     மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், நடத்தப்படும் வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன், அனைத்து மாணவர்களின் கூட்டு வழிபாடு நடைபெறும். இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனால், மாணவர்களின் தனித்திறன் வளர வாய்ப்பில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக தெரிவதும் இல்லை, என்ற குறைபாடு உள்ளது.

இதை போக்கும் வகையில், வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் கூட்டு வழிபாடு நடத்தவும், மற்ற நாட்களில் வகுப்பறை வழிபாடு நடத்தவும், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூலை 7 முதல் வகுப்பறை வழிபாடு நடத்தப்படுகிறது.

இதில், தினமும் காலையில் ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் தலைமையில், ஐந்து மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு மாணவன் தமிழ்தாய் வாழ்த்து படித்தும், அடுத்த மாணவன் திருக்குறள் படித்தும், மற்ற இரு மாணவர்கள் பழமொழி, நன்னெறி விளக்கம் படித்தும், ஐந்தாவது மாணவன் அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்தும் வருகின்றனர்.

இதே போல், தினமும் வகுப்றை வழிபாடு நடைபெறுகிறதா, என கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் 150 ஆண்டு நிறைவு விழா: காலனை வென்ற நீதிமன்றம்!

    ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பலின் பீரங்கி குண்டு வீச்சில் தப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காலனை வென்று இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண காலனான எமதர்ம ராஜனின் பாசக் கயிற்றை சிவ பெருமான் மீதான அதீத பக்தியால் பக்தன் "என்றும் பதினாறு' மார்க்கண்டேயன் வென்றது புராணம்.

ஆங்கிலேய கப்பல் படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பலின் பீரங்கி குண்டு வீச்சில் தப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காலனை வென்று இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண்டிருப்பது வரலாறு. சென்னையில் நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் என்ற பெயரில் 1801-ம் ஆண்டு தொடங்கியது. முதல் தலைமை நீதிபதி சர் தாமஸ் ஆண்ட்ரூ ஸ்ட்ரேஞ்ச். இதுதான் பின்னர் உயர் நீதிமன்றமாக்கப்பட்டது.

1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. துறைமுகத்துக்கு எதிரே உள்ள ஒரு கட்டடத்தில் இது இயங்கியது. முதல் தலைமை நீதிபதி சவால்டர் ஹார்மென் ஸ்காட்லேண்ட் என்ற ஆங்கிலேயர். பிற நீதிபதிகளும் வெள்ளையரே. பாரிமுனையில் ஓங்கி உயர்ந்து நிற்கும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி 1888-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1892 ஜூலை 12-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதியாக சர் ஆர்தர் காலின்ஸ் இருந்தார்.

"இந்தோ}சராசனிக்' எனும் கட்டடக் கலை நுட்பத்தை பயன்படுத்தி இக் கட்டடம் உருவானது. கலைநுணுக்கங்களுடன் கருங்கல்லில் அமைக்கப்பட்ட வளைவுகள், வட்ட வடிவில் கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கும்ப கோபுரங்கள் காண்போரை இன்றும் வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய அழகான கட்டடத்தை கட்ட அந்தக் காலத்தில் ஆன செலவு ரூ.13 லட்சம் மட்டுமே என்பது மூக்கில் விரலை வைக்கச் செய்யும் செய்தி. இன்று ரூ.500 கோடிக்கு மேல் இதற்குச் செலவாகும் என்று கட்டட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் கட்டடம் 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருப்பினும், வெயில், மழை, குளிர் என காலம் எதுவாக இருந்தாலும் பழைய கட்டடத்தில் இருப்பதுபோல் இல்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதுவே பழைய கட்டடத்தின் கட்டுமானச் சிறப்புக்குச் சான்றாகும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமையை அடைந்தவர் திருவாரூர் முத்துசாமி ஐயர். வசதியற்ற குடும்பத்தில் பிறந்த இவர் தெரு விளக்கில் படித்து வாழ்க்கையில் உயரிய இடத்தைப் பிடித்தவர். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்தியர் வரும் வாய்ப்பு நாடு சுதந்திரம் பெற்ற பின்புதான் கிடைத்தது. 1948-ம் ஆண்டு பி.வி.ராஜமன்னார் இந்த முதல் மரியாதையைப் பெற்றார். உயர் நீதிமன்ற வளாகத்தின் கிழக்குப் பகுதியில் 1844-ல் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் புராதன சின்னமாக இன்றும் உள்ளது.

இதனை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. முதல் உலகப் போரின்போது சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு வந்த ஆபத்து "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று' என்பது போல் விலகியது. எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு உயர் நீதிமன்ற வளாக கிழக்குப் பகுதி காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை தகர்த்து சேதப்படுத்தியது. குண்டு 500 அடி உள்ளே தள்ளி விழுந்திருந்தால் உயர் நீதிமன்றமே உருக்குலைந்து போயிருக்கும்.

இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்த 1942-43ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் சில காலம் தியாகராய நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் இயங்கியது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1992-ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த காந்தகுமாரி பட்நாகர் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பெண் இவர் ஒருவரே.

சென்னை உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர் பத்மினி ஜேசுதுரை. 1962-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தனது 100 வயதை எட்டியது. அப்போது நடைபெற்ற விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 1988-ல் 125-ம் ஆண்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன் கலந்து கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விழாவில் பங்கேற்கிறார். வழக்கு மொழியாக தமிழ் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் பல்லாண்டு நீதி வழங்க வாழ்த்துகிறோம். இந்த நல்ல நேரத்தில் நமது ஆதங்கம் ஒன்றையும் வெளியிடாது இருக்க முடியவில்லை. கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு விழாக்களின்போது சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. சென்னைக்கு ஏனோ அந்த மரியாதை தரப்படவில்லை.

பொதுநல வழக்கு தொடரப்பட்ட பின்னரே சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு உத்தரவிட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விஷயத்திலேயே காலதாமதமான நீதியா? இதில் வடக்கு, தெற்கு பேதம் ஏதும் இருக்காது என்று நம்புவோ

பிளஸ் 2 உடனடித் தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

     பிளஸ் 2 உடனடித்தேர்வு தொடர்பான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித்தேர்வில் பங்கேற்று, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில் (தீதீதீ.ஞீஞ்ஞு. tண.ணடிஞி.டிண), இன்று வெளியிடப்படும்.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வருக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.

முப்பருவ கல்வி திட்டத்தில் 15ம் தேதி முதல் 9.5 கோடி புத்தகங்கள் வினியோகம்  

    ""அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும்,'' என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவம்;முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.இவை, 15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

அவர், மேலும் கூறியதாவது:மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு, மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர். ஒன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170 பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.30

சதவீதம் விற்பனை:தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில் இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும்.இவ்வாறு, கோபால் தெரிவித்தார்.

IGNOU Online Application for Term End Examination December 2012

பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு பதிவு செய்த நாள் -

     பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய நுழைவுத் தேர்வு நடத்தும் பல் மருத்துவக் கவுன்சிலின் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிடிஎஸ். , மற்றும் எம்டிஎஸ். படிப்புகளுக்கு தேசியத் தகுதி நுழைவுத் நடத்துவதாக வெளியாகியிருக்கும் மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால், தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 30.7.2012 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் முதல்வர், பல் மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பால், மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். அதனால், பல்மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

Annamalai University UG Result release now

Online Application for HSC Supplementary Exam Oct 2012 - Direct Private (HP) / Private (H) Candidates

Click below online Application
http://dge.tn.nic.in/hscprivate

அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள்

அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள்