தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வின் அனைத்துப் பிரிவு செயல்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் வழக்கம்போல் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதேபோல் CECRI மற்றும் CIPET போன்ற கல்வி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 1 இடம் மட்டுமே காலியாக உள்ளது. CATEGORY OVER ALL INTAKE OVER ALL ALLOTTED OVER ALL VACANCY ANNA UNIVERSITY 2175 2175 0 UNIVERSITY COLLEGES 5520 4890 630 GOVERNMENT COLLEGES 2860 2860 0 GOVERNMENT AIDED COLLEGES 2121 2120 1 CECRI AND CIPET 155 155 0 SELF FINANCING COLLEGES 169628 115204 54424 OVER ALL TOTAL 182459 127404 55055 புதிதாக 32 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், அவற்றில் பல கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை என்ற நிலையே இந்தாண்டு நிலவுகிறது. கடந்த 2011ம் ஆண்டு, கலந்தாய்வு முடிவில், சுமார் 44000 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், இந்தாண்டு பல புதிய கல்லூரிகளின் வரவால், அந்த இடங்களையும் சேர்த்து, சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியிட நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், பெரிய மாறுதல் இல்லை என்றே கூறலாம்.
Thursday, August 23, 2012
பள்ளிக் கல்வி அமைச்சர், இயக்குநருக்கு இயக்ககத்தின் கடிதம்
CLICK DOWNLOAD
Check out this file on Box: https://www.box.com/shared/77e579b94121fe71af8d
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கடிதம்
Check out this file on Box: https://www.box.com/shared/a8d7978fdc1ab68cf24c
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு கடிதம்
Check out this file on Box: https://www.box.com/shared/a8d7978fdc1ab68cf24c
Wednesday, August 22, 2012
தமிழகத்தில் நடந்த ஜாதி, பொருளாதாரக் கணக்கெடுப்பில், ஜாதி தவிர, மற்ற விவரங்களை வெளியிட, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
தமிழகத்தில் நடந்த ஜாதி, பொருளாதாரக் கணக்கெடுப்பில், ஜாதி தவிர, மற்ற விவரங்களை வெளியிட, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜாதி, பொருளாதாரக் கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும், அவர்களது ஜாதி, வருமானம், வேலை, வாகனங்கள், வீடு, மொபைல், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விடுபட்டவர்களும், இதில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் விவரங்கள் அனைத்தும், மாவட்டம் தோறும், "டேப்லட்' கம்ப்யூட்டரில் பதிவு செய்து, ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்களும், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதை விரைந்து முடிக்கவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, சேகரிக்கப்பட்ட விவரங்களில், ஜாதி தவிர மற்ற விவரங்களை, வெளியிடலாமா என, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதற்கென, பிரத்யேக விண்ணப்பங்களும், அரசால் வழங்கப்பட்டு உள்ளன. ஆட்சேபனைகளை, 15 நாட்களுக்குள் பெற்று, செப்., 10க்குள் வெளியிடவும், அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு உள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
. நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 1 முதல், இந்தாண்டு ஜூன் 30 வரை நடந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றோர் மட்டுமே, இதற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள், இந்திய விளையாட்டுக் குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும், வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரிடம், 10 ரூபாயை செலுத்தி, இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இம்மாதம், 31ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன், விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் குறித்த விவரங்களை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் குறித்த விவரங்களை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் கமிஷனர் பிரவீண் குமார், நேற்று வீடியோ "கான்பரன்சிங்' மூலம் மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் தனி தாசில்தார்கள் உள்ளிட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் விவரங்கள் சரி பார்க்கும் பணி குறித்து ஆய்வு நடத்தினார். கடந்த தேர்தலின்போது, அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச் சாவடி வாரியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பூத் லெவல் ஆபீசர்ஸ்) நியமிக்கப்பட்டனர். அவர்கள், தேர்தல் கமிஷன் அளித்த ஓட்டுச் சீட்டுகளை (பூத் ஸ்லிப்) வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்கும் பணியை மேற்கொண்டனர். இப்பணியில், அந்தந்தப் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்குபின், தேர்தல் குறித்த பணியில் பி.எல்.ஓ.,க்கள் ஆண்டு முழுவதும் ஈடுபடும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அண்மையில், தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடிகளில் மாற்றங்கள் கொண்டு வந்தது. அதனடிப்படையில், ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் பாகம் அடிப்படையில் மாற்றப்பட்டது. ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு பி.எல்.ஓ., நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், பணி செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக, அவர்களை அடையாளம் காட்டும் வகையில், அவர்கள் வீட்டுக்கு முன் பெயர் பலகை மற்றும் அவர் கண்காணிக்கும் வாக்காளர் பட்டியல் பாகம் குறித்த விவரங்களும் அமைக்க யோசனை தெரிவிக்கப்பட்டது. நேற்று வீடியோ "கான்பரன்சிங்'கில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பி.எல்.ஓ.,க்கள் குறித்த விவரங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவில் பள்ளிகளின் தகவல் தொகுப்புகள் சேகரிக்கும் பயிற்சி முகாம்
மதுரையில் பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவில் பள்ளிகளின் தகவல் தொகுப்புகள் சேகரிக்கும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவின்படி மாவட்ட முதன்மை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, அரசு நலத்திட்டங்களால் பயனடைந்த மாணவர்கள், அரசு திட்டங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இலங்கை அகதிகள், மொழி, இனம், ஜாதி அடிப்படையில் கல்வி உதவி தொகை பெறும் மாணவர்கள் விவரங்கள், மாவட்டங்கள் வாரியாக தொகுக்கப்பட்டன. சி.இ.ஓ., நாகராஜமுருகன் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த ஒட்டுமொத்த விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள், பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும். இதன் மூலம் கல்வி துறையில் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் எளிதாகும். மாவட்டங்கள் வாரியாக இந்த விவரங்கள் இணையதளத்திலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளத
தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன. கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.
எஸ்.சி.,-எஸ்.டி.,மாணவிகளுக்குவங்கிகள் மூலம் உதவித்தொகை:
ஒன்பதாம் வகுப்பு எஸ்.சி.,-எஸ்.டி., மாணவிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை, வங்கிகளில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும் இடைநிற்றல் கல்வியை தடுக்கவும்,குறைந்த பட்சம் 10ம் வகுப்பாவது கட்டாயம் படிக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, எஸ்.சி., -எஸ்.டி., மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதோடு, மேல்படிப்பை தொடரும் வகையில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 2000 ரூபாய் கல்வித் உதவித்தொகை வழங்குகிறது. அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு கண்டறியப்பட்டதால், இவ்வாண்டு முதல் உதவித்தொகை தேசிய வங்கி கிளைகள் மூலம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவியின் வங்கிக்கணக்கு எண், கிளையின் பெயர், குறியீட்டு எண் போன்ற தகவல்களை முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் சேகரித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்புகின்றனர். கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி.,- எஸ்.டி.,மாணவிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் உதவித்தொகையை கடந்த 2009 முதல் வழங்குகிறது. இத்தொகையை 2 ஆண்டுக்கு எடுக்க முடியாது. 11ம் வகுப்பு சேரும்போது, எடுக்கலாம். மேல் படிப்புக்காகவே இத்தொகை வழங்கப்படுகிறது. முறைகேடுகளை தவிர்க்க, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் இனி வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் : தமிழக அரசுக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் :
தமிழக அரசுக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருவாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பு பிளீடர் வெங்கடேசன் கூறுகையில் : பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. அமைச்சரவையில் ஒப்புதல் பெற்ற பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய 1 வாரம் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது.
Tuesday, August 21, 2012
வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்:பணிகள் முடங்கும்?
:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் மீது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, மத்திய தொழிலாளர் கமிஷனர் முன், இந்திய வங்கிகள் சங்கம் ஒப்பு கொண்டது. பிறகு அதை ஏற்க மறுத்தது. இதையடுத்து, வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம், ஆக., 22, 23 ஆகிய இரண்டு நாள், அகில இந்திய வங்கி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இதுகுறித்து, வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றத்தின் தமிழக அமைப்பாளர் பாஸ்கரன், தமிழக வங்கி ஊழியர் சம்மேளனம் பொது செயலர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:நாடு முழுவதும் நடைபெறும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழக வங்கி ஊழியர் சம்மேளனம் உட்பட, ஒன்பது சங்கங்கள் பங்கேற்கின்றன. வேலை நிறுத்த போராட்டத்தில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என, மொத்தம், 10 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். "வங்கி சீர்திருத்தம்' என்ற பெயரில், வங்கி ஒழுங்குமுறை சட்டம், வங்கி தேசிய மயமாக்கப்பட்ட சட்டம் என, இரண்டு சட்ட திருத்த மசோதாக்களை, மத்திய அரசு, இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்கிறது.அதில், தனியார் நிறுவனங்கள் வங்கி சேவைகளைத் துவக்க, உரிமம் வழங்குவது, வங்கிகளின் பங்குதாரர்களுக்கு உள்ள ஓட்டுரிமையை அதிகரிப்பது, வங்கிகளில் காலியாக உள்ள இரண்டு லட்சம் நிரந்தர பணியிடங்களில், ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது போன்றவை இடம்பெற்றுள்ளன. இதை கைவிட வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் செயல்படும் வங்கி கிளைகளை மூடுவதை நிறுத்த வேண்டும். ஊழியர்களுக்கு சமமான ஊதியத்தை தராமல், நபர், பணிகளுக்கு ஏற்ப, மாறுபாடான ஊதியத்தை தருவது போன்றவை, காண்டேவால் கமிட்டி பரிந்துரையில் இடம் பெற்றுள்ளன. இதையும் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள் போராட்டம் நடைபெறும்.தமிழகம் முழுவதும், 7,600 வங்கி கிளைகளும், சென்னையில், 1,400 வங்கி கிளைகளும் மூடப்படும். வங்கி ஊழியர்களின் சிறு, சிறு கோரிக்கைகள் கூட, தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு கைவிட வேண்டும். அதேபோல், கருணை அடிப்படையிலான பணி நியமன முறையை, மீண்டும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
எஸ்சி., எஸ்டி., ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு : பிரதமர் உறுதி
எஸ்சி., எஸ்டி., ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் சாதகமான தீர்வு காண, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் இதனை தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை எட்டுவதற்கு அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும் கேட்டுக்கொண்டார். அரசுப் பணிகளில் எஸ்சி.,-எஸ்டி ஊழியர்களின் நலனை காக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், அதற்காக சட்டப்படி செல்லத்தக்க அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்தார். எனினும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எஸ்சி., எஸ்டி., பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க உத்திரபிரதேச அரசு மேற்கொண்ட முடிவுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
நாளையும் நாளை மறுநாளும் வங்கி வேலைநிறுத்தம்
மத்திய அரசின் வங்கி சீர்திருத்த சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளையும் நாளை மறுநாளும் (ஆக.22.,23) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஐக்கிய வங்கி பணியாளர் சங்கங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.
வங்கி சீர்திருத்தம் தொடர்பான வேலைகளில், மத்திய அரசு ஈடுபடத் தொடங்கியதில் இருந்தே, அதன் பல்வேறு முயற்சிகளுக்கு வங்கிப் பணியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில், இவர்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளையும் நாளை மறுநாளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இந்த சங்கத்தின் கோரிக்கை பட்டியல் நீளமானது.
அதில், வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியாருக்கு வழங்கக் கூடாது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் கிராமப்புற வங்கிக் கிளைகளை மூடிவிடும் அரசின் கொள்கையை கைவிட வேண்டும். வங்கிப் பணியாளர் தொடர்பான கந்தேல்வால் கமிட்டி பரிந்துரையை தன்னிச்சையாக முடிவெடுத்து அமலாக்க கூடாது என்பனவும் அடங்கும்.
1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி:
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும் கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா? என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர். எந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Cut off date by Employment ofice
Click below
Check out this file on Box: https://www.box.com/shared/27c1c6c938cb4d3e5eff
Monday, August 20, 2012
டி.ஆர்.பி.,யில் தேர்வான ஆசிரியர்களுக்கு வடக்கு மாவட்டத்தில் அதிக பணி வாய்ப்ப
டி.ஆர்.பி., மூலம் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தான், அதிக பணி வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய டி.ஆர்.பி.,தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தலை, முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கும் 35 பேர் தகுதி பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, காலியிடங்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இரு கல்வி மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதிகாரி ஒருவர் கூறுகையில்,""டி.ஆர்.பி.,யில் தேர்வு பெற்றவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தென் மாவட்டங்களில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு காலியிடங்கள் குறøவாக உள்ளன. திருச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இயற்பியல்,வேதியியல் பாடங்களுக்கு தென் பகுதியில் இருந்து தேர்வான பலருக்கு வடக்கு, மத்திய மாவட்டங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது,'' என்றார்.
டி.ஆர்.பி., நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.
டி.ஆர்.பி., நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன. பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது. தேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்' விளம்பரம் வெளியிட்டுள்ளது. "ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும். அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும். ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தனி இடத்தில் அமைகிறது: டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது. இந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, "டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவை தெரிவித்தன.