புதிய பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது குறித்து, 50 ஆயிரம்ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டம், 14 ஆண்டு களுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018ல், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம்அமலுக்கு வந்தது.
வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், மற்ற வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் அடங்கும்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தப்படுவதால், இந்த வகுப்புகளுக்கு மட்டும், புதிய பாடத்திட்ட பாடங்களை, விரைந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக, 10ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஜூனில், பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகம் தயாரித்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வாயிலாக, மாவட்ட வாரியாக, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகளின் ஆசிரி யர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்ட பயிற்சியில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அடுத்த கட்டங்களில், தனியார் மெட்ரிக் பள்ளிஆசிரியர்களும் பயிற்சி பெற உள்ளனர்
No comments:
Post a Comment