இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 23, 2018

ஆசிரியர் விபரங்களை டிஜிட்டலில் பதிய உத்தரவு


ஆசிரியர்களின் பணி விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த உதவிகளை பெற, பல பள்ளிகளில், போலியாக கூடுதல் மாணவர் களின் எண்ணிக்கையை காட்டுகின்றனர்.அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடங்களை தக்க வைப்பதற்காக, மாணவர்கள் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரித்து காட்டுகின்றனர்.இதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கும், அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.இந்த பிரச்னைகளை தீர்க்க, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் விபரங்களை, டிஜிட்டலில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், மாணவர்களின் பெயர், பெற்றோர்கள் பெயர், முகவரி, ரத்தப்பிரிவு, மொபைல் போன் எண், படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.மாணவர்கள், ஆண்டுதோறும் வகுப்புகள் மற்றும் பள்ளிகள் மாறும் போதும், விபரங்கள் புதுப்பிக்கப்படும். இதனால், போலி மாணவர்கள்எண்ணிக்கை குறைந்துஉள்ளது.இந்நிலையில், ஆசிரியர் களின் விபரங்களையும், டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுஉள்ளார்.

வருங்காலங்களில், ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் விபரம் போன்றவற்றை, துல்லியமாக தெரிந்து கொள்ள, டிஜிட்டலில் பதிவு செய்ய வேண்டும்.மேலும், ஆசிரியர்கள் இடம்மாறும் போது, புதிய பணியிடத்தை குறிப்பிட்டு, டிஜிட்டல் விபரங்களை புதுப்பிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இந்த விபரங்கள் அடிப்படையில், ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆன்லைனில் குழப்பமின்றி நடத்த முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment