இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 09, 2018

டெட்' தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி வினாத்தாள்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது.

உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, நமது நாளிதழில், இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம் நடத்த முடியும்.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைஇது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தி மற்றும் உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment