இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 11, 2018

12-10-18 Morning prayer

12-10-10
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

பழமொழி :

Caution is the parent of safety

முன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா

பொன்மொழி:

எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டான்.

- லெனின்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?
ஷாங்காய்

2.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
எபிகல்சர்

நீதிக்கதை

காக்கை, பாம்பைக் கொன்ற கதை

ஒரு பெரிய மரம்.

அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.
ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.
ஒருநாளா… இரண்டு நாளா பலநாள்!
காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்?
அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா?

ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.
நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.

“அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் போனதில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும்.
“போட்டால்…?”

“போடு முதலில். அப்புறம் பார்”. என்றது.
காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளை.
ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

இருந்த அரசகுமாரியின் செடிகள் – ‘ஆ’ காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது’ என்று கத்தினர்.

உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.
காக்கை மெதுவாக – அவர்களின் கண்ணில் படும்படி பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இரும்க்கும் பொந்தில் போட்டது.
உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் போந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள்.

‘அப்புறம் பார்’ என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.
சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.

இன்றைய செய்தி துளிகள்:

1.தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

2.மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல்

3.அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!

4.தமிழகத்தில் புதிய தோல் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

5.ஜொகோர் கோப்பை ஜூனியர் ஹாக்கி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: பைனலுக்கு முன்னேறி அசத்தல்

No comments:

Post a Comment