இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 20, 2017

8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்


அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பள்ளிகளில் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் என, பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.

இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், புதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் இறங்கிஉள்ளது. முதல் கட்டமாக, 800 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளுடன், கணினி வழி தேர்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், வினாத்தாளில் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையிலான, கேள்விகளும், பதிலுக்கான குறிப்புகளும் இடம்பெறும்.

கேள்விகளுடன், படங்கள், வண்ண குறிப்புகள் இருக்கும். இந்த வினாத்தாள், 'ஸ்மார்ட்' வகுப்பில் கணினி வழியாக வெளியிடப்பட்டு, அதற்கான பதில்களை தேர்வு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்படுவர். மேலும், மாணவர்களின் விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, கணினி மூலமாக திருத்தவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு, ௨௦௧௮ மார்ச்சில் நடக்கும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் - தமிழக அரசு


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பதிவாளரின் கருத்துருவினை ஆய்வு செய்த பின் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம் அல்லது பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்கள், அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 19, 2017

டிஜிட்டல் முறையில் தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலமாக டிசம்பர் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

நேரடி தனித் தேர்வர்கள்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை முதல் மொழிப் பாடமாக தேர்வெழுதுவது கட்டாயம். மேலும், இவர்கள் 1-3-2018 அன்று பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஏற்கெனவே பதிவு செய்து, பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே, பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள்... ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், தோல்வியடைந்த பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத் திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை, செய்முறைத் தேர்வுக்குப் பின்னரே, எழுத்துத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். எனவே, ஏற்கெனவே அறிவியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருத்தல் வேண்டும். இல்லையெனில், இப்போது வழங்கப்படும் சலுகையைப் பயன்படுத்தி, அறிவியல் செய்முறை வகுப்பில் பதிவு செய்யவேண்டும். தேர்வுக் கட்டணம்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 125 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 175 கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.

பார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாய்ப்பு: இயக்குநர் அலுவலகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித் தேர்வர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரூ. 125 கட்டணம் செலுத்தி, செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து டிசம்பர் 22 முதல் 29 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை: மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தின்படி, அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

கொள்குறி தேர்வு முறை, விரிவாக விடை எழுதும் முறை மற்றும் கொள்குறியுடன் விரிவாக விடை எழுதும் முறை என மூன்று வகைகளில் மொத்தம் 147 தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட OMR தாள் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், கால அட்டவணை, நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் ஆகிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNOU Mphil, PhD Regular -ல் படித்தால் மட்டுமே பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் 👆


https://app.box.com/s/1hjf0i11ggbu8no2uvdhnplb4zvgf1n0

Sunday, December 17, 2017

பணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் வேதனை


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள் வேதனையடைந்துள்ளனர்.நடப்பு கல்வியாண்டில், ஏப்., மாதம் 29ம் தேதி, இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான, 'ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நடந்தது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இதுவரை, அரசு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தாமல் உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் -2, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இப்பணிகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றும் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கும், முறையாக விடை இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தொடக்கக்கல்வி இயக்ககம், காலிப்பணியிடங்களை தெரிவிக்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியமும், ஆசிரியர் தேர்வு வாரியமே இது குறித்து முடிவு செய்யும் என, தொடக்கக் கல்வி இயக்ககமும், மாறி மாறி தெரிவித்துள்ளதால், தேர்ச்சி பெற்றவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை அரசு தாமதப்படுத்துகிறது என புகார் தெரிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கனகமணி கூறுகையில்,

''பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். அதை ஒழுங்குபடுத்திய பின், சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள், அவ்வப்போது தொடர்ந்து அனுப்புகிறோம்,'' என்றார்.

Saturday, December 16, 2017

மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு


தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'எமிஸ்' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.

மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 'எமிஸ்' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 'எமிஸ்' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'எமிஸ்' எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'எமிஸ்' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'எமிஸ்' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.

Friday, December 15, 2017

HSC MARCH-2018-TIMETABLE

Click below

https://app.box.com/s/b82tueovodor9u82qp7xm1p3rcdwc1dc

TNPSC GROUP.IV விண்ணப்பிக்க காலக்கெடுப்பு நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018 ஆம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018ல் எவ்வித மாற்றமுல் இல்லை'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்

Thursday, December 14, 2017

ஊக்க ஊதிய உயர்வு

பேராசிரியர் தகுதிக்கான 'செட்' தேர்வு அறிவிப்பு


பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது தமிழக அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழக 'செட்' தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வை, தெரசா பல்கலையே நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு, தெரசா பல்கலையின்,www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, செட் தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்க உள்ளது.இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. பிப்.,9க்குள் விண்ணப்பிக்க, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கூடுதல் விபரங்களை, தெரசா பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஜன.,18ல் திருப்புதல் தேர்வு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுக்கு தயாராகும் வகையில், பல்வேறு வகை பயிற்சிகள் மற்றும் தயார்படுத்தும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு வரும், 23ல், முடிகிறது. பின், விடுமுறை முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஜன., 18ல் திருப்புதல் தேர்வை துவங்கி, 31க்குள் முடிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்களை தயார்படுத்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

Wednesday, December 13, 2017

புதிய ஊதியப்படி பி.எப்., சந்தா


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, 2009ல், ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், பி.எப்., மாதாந்திர சந்தாவாக, சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு, 'அலுவலர் குழு - 2017' பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய ஊதியத்தில் அடிப்படை ஊதியம், சிறப்பு ஊதியம், தனி ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்த தொகையில், 12 சதவீதத்தை, வருங்கால வைப்பு நிதியின் மாதாந்திர சந்தாவாக, தொடர்ந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும், பொது வருங்கால வைப்பு நிதியில், 12 சதவீதத்திற்கும் மேலாக, மாதச்சந்தா செலுத்திட, தடையேதுமில்லை என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் பயிற்றுனர்கள் இடமாற்றம்


பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 350 ஆசிரியர்கள் பாடவாரியாக, மாவட்டம் விட்டு மாவட்டம்; ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டுதலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், வழங்கி உள்ளார்.

GO 751-350 BRT பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் ஆணை

Click below

https://app.box.com/s/vd61gddx8ct78tak9a2qighvbzzdndq0

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம். அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன் வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது? வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம். உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.

அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது. பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது. டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லது யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.

இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும். அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.

மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும். யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினை ரீபிரிண்ட் செய்திட முடியும்.

Tuesday, December 12, 2017

*DEE PROCEEDINGS-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி உத்தரவு

SSA-VIDEO CONFERENCE

1993க்கு முன்பு எம்.எட் முடித்தால் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்பு

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டம்


பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 8 லட்சத்து 91 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 7ம் தேதி தொடங்க உள்ளது.

இதையடுத்து மாவட்ட வாரியாக அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள் தயாரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பள்ளி அமைந்த இடம் உள்ளிட்ட விவரங்களை தயார் செய்து, தேர்வுத்துறைக்கு அனுப்பி வைத்தனர். அதில் உள்ள குறைகள் திருத்தும் பணிகள் முடிந்து திரும்ப மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது இரண்டாம்கட்ட பணி நடந்தது. அதில் உயிரியல் பாடப் பிரிவில் 3 லட்சத்து 38 ஆயிரம் பேரும், கணினி அறிவியல் பிரிவில் 2 லட்சத்து 58 ஆயிரம் பேரும், கலைப் பிரிவில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளதாக தெரிய வருகிறது. இந்த பட்டியல் மீண்டும் திருத்தம் செய்வதற்காக மாவட்டங்களுக்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. டிசம்பர் மாத கடைசியில் இறுதி வடிவம் பெறும். அதற்கு பிறகு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வு நடப்பதால், ஜனவரி 30ம் தேதிக்கு பிறகு ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. தனித் தேர்வர் பட்டியல் ஜனவரியில் வெளியிடப்படும்.