இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 17, 2015

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்


தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே, தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.

மாணவர்கள் தற்கொலையில் 2வது இடத்தில் தமிழகம்!


கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இப்பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது: மனஅழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால், கடந்த 2014ம் ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் அடங்குவர். தமிழகம் 2வது இடம் : இதில் முதல் மூன்று இடங்கள் முறையே மகாராஷ்டிரா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

மகாராஷ்டிராவில் 1,191 மாணவர்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 மாணவர்களும், மேற்கு வங்கத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். 2013லும் மகாராஷ்டிரா முதலிடம் : 2013ம் ஆண்டில் நாடெங்கிலும் 8,423 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்தனர். இதிலும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,141 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2012ல் 6,654 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மேற்குவங்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் விவரம் கணக்கில் இல்லை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Jacto meeting 17.12.15

ஜேக்டோ கூட்டம் முடிவுகள்

1. டிசம்பர் மாவட்ட மறியல் மழை வெள்ள பாதிப்பால் ஜனவரி 30, 31, மற்றும் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றம்.

2. மாவட்ட ஜேக்டோ கூட்டத்தை உடனடியாக கூட்டுதல்

3. மாநில உயர்மட்ட ஜேக்டோ அடுத்த கூட்டம் வருகிற ஜனவரி 10ந் தேதி திருச்சியில் கூட்டுவது என முடிவாற்றப்பட்டது.

4. ஜனவரி 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு

5. அரசு உத்தரவிடாமல் சில மாவட்டங்களில் அக்டோபர் 8 வேலை நிறுத்த ஊதியம் பிடித்ததை இயக்குநரிடம் முறையிடுவது
   
6. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனரின் ஆசிரியர் விரோதபோக்கு குறித்து நேரிடையாக இன்றே சந்தித்து முறையிடுவது  உள்ளிட்ட முடிவுகள் முடிவாற்றப்பட்டன.

தகவல்: திரு.பாலச்சந்தர், மாநிலப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

Wednesday, December 16, 2015

One day salary for c.m releif fund format

Click below

https://app.box.com/s/2ih85nlq6mhvk58irc7io5g07c2cu2p2

பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!


பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. நாட்டில், நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., அளிக்கப்பட்டு உள்ளது. இதில், இரண்டு கோடி தொழிலாளர்கள், யு.ஏ.என்., முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.மீதம் உள்ளவர்களுக்கு, யு.ஏ.என்., பயன்பாட்டு முறை பற்றி போதிய தகவல்கள் இல்லை. இவர்களும், விரைவில், யு.ஏ.என்., முறையை பயன்படுத்த கற்றுத் தரப்படுவர்.

பொது கணக்கு எண்ணுடன், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்களை இணைக்க, சந்தாதாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன்படி, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளை இணைத்த சந்தாதாரர்கள், அவர்களுடைய இருப்புத் தொகையில் இருந்து, தேவையான தொகையை, அவர்களே எடுத்துக் கொள்ளலாம். இதற்கு, வேலை அளிக்கும் நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.இத்திட்டம் மூலம், பி.எப்., தொகையை, வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியாது.

மேலும், மூன்றாம் நபர் மூலம், பி.எப்., தொகை எடுப்பதால் ஏற்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது

TNPSC DEPARTMENTAL DECEMBER EXAM HALL TICKET

Click below

http://www.tnpsc.gov.in/DEHT-get_dec2k15.html

விஏஒ தேர்வு பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) தேர்வு பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வு தேதி பிப்.28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Annamalai university december month exam.hall ticket

Click below

http://www.annamalaiuniversity.ac.in/dde/coe_hallticket.php

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைப்பு இல்லை

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் சுமார் 50 லட்சம் ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக இருக்கிறது. அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 15, 2015

அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு 14 வகை நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது. இதில், இலவச 'லேப்டாப்' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்களில்' ஓ.எஸ்., வசதியை அதிகரிக்க தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் 2015 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களில் 'விண்டோஸ் 8.1' வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மதுரை, நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர், திருச்சி உட்பட 9 தென் மாவட்டங்களில் முதற்கட்டமாக ஓ.எஸ்., வசதி மேற்கொள்ளும் பணிகளை எல்காட் உதவியுடன் மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மதுரையில் துவங்கியுள்ளனர். 'விண்டோஸ் 8.1' வசதியை அடுத்து 'விண்டோஸ் 10' வசதியை எளிதில் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மேற்கொள்ளும்பட்சத்தில் லேப்டாப்களில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) வசதி கிடைக்கும்.இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன தமிழக ஒருங்கிணைப்பாளர் பிரியா கூறியதாவது:தமிழகத்தில் 2014ம் ஆண்டில் வழங்கப்பட்ட லேப்டாப்களில் 'விண்டோஸ் 7' வசதி தான் இருந்தது. இதனால் வேகம் மற்றும் புதிய 'வெர்ஷன்' மிக குறைவாக இருந்தது. இதை அதிகரிக்கவும், உயர்கல்வியில் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள் பெறும் வகையில் கூடுதல் ஓ.எஸ்., வசதி மேற்கொள்ளும் தொழில்நுட்ப பணிகள் மைக்ரோசாப்ட் நிறுவன நிதி உதவியுடன் நடக்கிறது.

தற்போது மதுரை மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் லேப்டாப்களில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் மாநில அளவில் 1.50 லட்சம் லேப்டாப்களில் இவ்வசதி மேற்கொள்ளப்படும். 'விண்டோஸ் 10' வசதி செய்யப்படும் பட்சத்தில் சில ஆண்டுகளில் தொடுதிரை, 'ஸ்கிரீன் இமேஜ்', உட்பட 'ஆண்ட்ராய்டு' அலைபேசியில் உள்ள வசதிகளை லேப்டாப்களில் கொண்டுவரலாம், என்றார்.

புதிய பென்ஷன் திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.இதனால் 12 ஆண்டுகளில் தமிழகத்தில் ஓய்வு பெற்றோர், இறந்தோரின் குடும்பத்தினர் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி ஆனைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி காவ லாளியாக இருந்த குருசாமி 2012 ல் ஓய்வு பெற்றார். பலமுறை போராடியும் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெறமுடியாமல் 2013 ல் இறந்தார்.

அதன்பின் அவரது மனைவி மாரியம்மாள் போராடியும் பணப்பலன் கிடைக்காமல் சமீபத்தில் இறந்தார். அவர்களது மகன் குமார் பணப்பலன் கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தார். அந்த மனுவிற்கான பதிலில், 'புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத்தொகை வழங்குவது குறித்து அரசாணை, தெளிவுரை எதுவும் இல்லை. இதுகுறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் கூறியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தில் பணத்தை மட்டும் பிடிக்கின்றனர். ஆனால் பணப்பலன் வழங்குவதில்லை. இதனால் இதுவரை ஓய்வு பெற்ற 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்ற 6 பேருக்கு மட்டும் பிடித்த பணம் வழங்கப்பட்டு உள்ளது, என்றனர்

பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'


நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்:

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை கட்டாயமாக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுழற்சி முறையில், மாணவர்களின் பெற்றோர், மதிய உணவின் தரத்தை சோதித்து பார்க்கலாம்.

மதிய உணவின் தரத்தை பரிசோதிக்கும் சமயம், இத்திட்டத்தின் கீழ், எத்தனை மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்து, சான்று அளிக்க முடியும். இவ்வாறு, மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 12 கோடி மாணவர்கள் :

* நாடு முழுவதும், 12.6 லட்சம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது * இந்த உணவை, 12 கோடி மாணவர்கள் சாப்பிடுகின்றனர்

* மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது

* உலகளவில், இந்தியாவில் மட்டுமே, இத்திட்டம் பெரியளவில் நடக்கிறது * இத்திட்டத்தை, 60ம் ஆண்டுகளில், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்தார்.

Monday, December 14, 2015

அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை


வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், நேற்று முதல் செயல்பட துவங்கின.இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.

எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது. எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். ஐகோர்ட்டில் முறையீடு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுநஸ்ருல்லா, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று ஆஜராகி, மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதில் கூறியுள்ளதாவது:மழை காரணமாக, பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து, மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதை கருதி, எல்.கே.ஜி., முதல், ௮ம் வகுப்பு வரை, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றம், தாமாக விசாரணைக்கு எடுத்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை படித்த நீதிபதிகள், இது பற்றி, பிறகு முடிவெடுப்பதாக கூறினர்.

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார்.

அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை.

மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார். எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

G.O.117 Dt:13.12.15 Voluntary contribution to CM Public Relief Fund for Relief & Rehabilitation measures - Contribution of one days salary by the Govt Employees

Click below

https://app.box.com/s/767ug2h9yncchyoqnh5otrrt0iohqbtw

Sunday, December 13, 2015

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'


'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன.

இத்தேர்வுகள், முதல்நிலை, பிரதானம், நேர்முகம் என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். நாடு முழுவதும், இந்தாண்டு, 4.63 லட்சம் பேர், ஆக., 23ல் முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக, அக்., 12ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வர்கள், பிரதானத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்போருக்கு, காகிதத்திலான அனுமதி அட்டை வழங்கப்படாது.

அனைவரின் அனுமதி அட்டைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர், தங்களுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி அட்டையை, தேர்வின்போது காண்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் அனுமதி அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லாவிடில், தகுந்த அடையாள அட்டையும், புகைப்படமும், உடன் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 12, 2015

வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவது எப்படி?


வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு, காப்பீட்டு தொகை பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவன மோட்டார் இன்சூரன்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜய்குமார் கூறியதாவது:

தண்ணீரில் கார் மூழ்கி விட்டாலோ, டயர் அளவுக்கு நீரில் சிக்கி விட்டாலோ, அப்படியே நிறுத்தி விட வேண்டும். காரை, 'ஸ்டார்ட்' செய்யக் கூடாது; 'பேட்டரி' இணைப்பை துண்டிக்க வேண்டும். இன்ஜின் மற்றும் இதர பகுதிகளில் தண்ணீர் புகுந்திருந்தால், அங்கீகாரம் பெற்ற, 'டெக்னீஷியனை' வைத்து, தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இது, இருசக்கர வாகனத்துக்கும் பொருந்தும். வாகன பாதிப்பு பற்றி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்; புகைப்படம் எடுத்து வைப்பது கூடுதல் பாதுகாப்பு. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து பார்த்து பின், காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல உதவுவர்.

ஒருவேளை, முன்கூட்டியே காரை சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டால், இன்சூரன்ஸ். 'சர்வேயர்' வந்து பார்வையிடாமல், 'ரிப்பேர்' செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆவணங்கள் வெள்ளத்தில் தொலைந்தால், சர்வேயர் தரும் அறிக்கை முக்கிய ஆவணமாக இருக்கும். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள, 'மொபைல் ஆப்' வசதியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் இழப்பீடு கோரி பதிவு செய்யலாம். கார் மற்றும் இன்சூரன்ஸ் அசல் ஆவணங்களை, தவறாது கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் பழுது பார்த்தால், செலவை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கும். அப்படி இல்லையேல், செலவுக்கான ரசீதுகளை கொடுத்தால், பணம் திருப்பித் தரப்படும். முன்னதாக, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், 'கி.ௌய்ம் ரெபரன்ஸ் நம்பர்' அளிக்கப்படும்.

வெள்ளத்தில் வாகனம் சிக்கிய பின், இன்ஜினை, 'ஸ்டார்ட்' செய்ய முயற்சித்து, வாகனம் நின்று விட்டிருந்தால், மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் இழப்பீடு கிடையாது. ஆனால், 'இன்ஜின் புரொடெக்டர்' என்ற அம்சத்தை பெற்றிருந்தால், இழப்பீடு கோரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்


ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல் செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது. ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும்.

ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில் புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும் தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.