இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 07, 2019

திருப்பூர்,கோவை உள்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தமிழகத்தில் கோவை உள்பட 4 இடங்களில் புதிதாக கேந்திர வித்யாலய பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழகம், புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலய பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன.

இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதால், இங்கு கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவீத இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவீத இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு பிரிவினர் சேர்ந்ததுபோக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும் விண்ணப்பித்துச் சேரலாம். இதனால், நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலாய பள்ளிகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக கேந்திரியா வித்யாலாய பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.

Sunday, March 03, 2019

பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மையம்


பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பி உள்ள சுற்றிக்கை:

தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். தொடக்க பள்ளிகளில், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, மூன்று பெற்றோர், வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், இந்த மையத்தில், உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள், மூன்று பெற்றோர், ஒரு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மையத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.இந்த உத்தரவை பின்பற்றி, குழந்தைகள்உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு மையம் அமைத்தது குறித்து, இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, March 02, 2019

கணினி ஆசிரியர் தேர்வு டி.ஆர்.பி., அறிவிப்பு


:அரசு பள்ளி, கணினி ஆசிரியர் பணிக்கு, ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள். தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என, தமிழக பள்ளி கல்வி துறை, சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

Thursday, February 28, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிக்கை (Notification)ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வி ய ôழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்களும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு


ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' நுழைவு தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முறைகேடுஒன்று முதல், ஐந்தாம் வகுப்புக்கு, டெட் முதல் தாளும்; ஆறு முதல், எட்டாம் வகுப்புக்கு, இரண்டாம் தாளும் தேர்ச்சி பெற வேண்டும்.கடைசியாக, டெட் நுழைவு தேர்வு, 2017 ஏப்ரலில் நடத்தப்பட்டது.

இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே, 2018ல், தேர்வு நடத்துவது தள்ளி போனது.ஆன்லைன் பதிவுஇந்நிலையில், இந்த ஆண்டு, டெட் தேர்வு அறிவிப்பு நேற்று வெளியானது. தேர்வு விதிகள், பாடங்கள், 'ஆன்லைன்' பதிவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், வரும், 15ம் தேதி முதல், ஏப்., 5 வரை ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, February 26, 2019

தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை


பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்கின்றன. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம்: பொது தேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணு சாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வர அனுமதியில்லை மாற்று திறனாளி மாணவர்களுக்கு, அரசின் விதிப்படி, உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன

தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ் போன்ற, வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதி இல்லை தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை தேர்வு விதிகளை மீறும் செயல் தேர்வர்கள், தாங்கள் எழுதிய விடைகளை, தாங்களே அடித்தல் போன்ற நிகழ்வுகள், ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 25, 2019

9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்


வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது.தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது. அப்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாட திட்டம் மற்றும் தொடர் செயல்முறை திறன் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, காலாண்டு வரையில், முதல் பருவம்;

அரையாண்டில், இரண்டாம் பருவம் மற்றும் ஆண்டு இறுதியில், மூன்றாம் பருவத்துக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு பருவத்துக்கான தேர்வை எழுதிய பின், அந்த பாட புத்தகங்களை, மீண்டும் மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அடுத்த பருவத்துக்கான பாடங்களை மட்டும் படித்து, தேர்வு எழுதினால் போதும். இந்த முப்பருவ முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை படிப்போருக்கு, 10ம் வகுப்பில், ஆண்டு முழுவதுக்குமான பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும், அரசு பள்ளி மாணவர்கள், தேர்ச்சி பெறவும் திணறும் நிலை உள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, ஒன்பதாம் வகுப்புக்கான, முப்பருவ பாட முறையை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. இதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மூன்று பருவ புத்தகங்களுக்கு பதில், ஒவ்வொரு பாடத்திற்கும், ஆண்டு முழுவதற்குமான ஒரே புத்தகத்தை தயார் செய்துள்ளது.எனவே, வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானி பயிற்சி


தமிழக பள்ளி கல்வியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரோவில், 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் எண்ணங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் விஞ்ஞானி என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' அறிமுகம் செய்கிறது.இது குறித்து, இஸ்ரோ தலைவர், சிவன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தமிழக பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு முடித்த மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரோவில், இரண்டு மாத பயிற்சி திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து, இஸ்ரோவுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் பாட பிரிவுகளில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த திட்டத்தில் பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். மாநில அளவில் திறமையான மூன்று மாணவர்களுக்கு, இஸ்ரோவில், இரண்டு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Sunday, February 24, 2019

ஓய்வூதியம் வட்டி விகிதம் அறிவிப்பு


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2003, ஏப்., 1ம் தேதிக்கு பின், மாநில அரசுப் பணியில் சேர்ந்துள்ள பணியாளர்கள், பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பாக, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது.அதற்கு சமமான பங்குத் தொகையை, அரசு செலுத்துகிறது. பங்களிப்பு வைப்புத் தொகை பிடித்தத்துக்கு உண்டான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.

இதன்படி, 2018 - 19ம் நிதியாண்டில், முதல் இரு காலாண்டுக்கான வட்டி விகிதம், 7.6 சதவீதமாக இருந்தது. மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம், 8 சதவீதமாக இருந்த நிலையில், ஜன., 1 முதல், மார்ச், 31ம் தேதி வரையிலான, நான்காவது காலாண்டு வட்டி விகிதத்தை, 8 சதவீதமாகவே பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மார்ச், 1ம் தேதி முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை


அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மார்ச், 1ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.இதையடுத்து, தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு, இந்த வாரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட வாரியான கூட்டங்களில், இணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் பங்கேற்று, விதிகளை விவரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுரைகள்:அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பொது தேர்வு கண்காணிப்பு, ஏற்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும். தேர்வு முன்னேற்பாட்டு கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் ஒதுக்கும் இடங்களில், தேர்வு பணிக்கு செல்ல வேண்டும்.தேர்வு பணியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு போன்றவற்றை எடுக்கக் கூடாது.

மார்ச், 1 முதல், தேர்வு பணி முடியும் வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது. மருத்துவ விடுப்பு என்ற பெயரில், போலியான காரணங்கள் கூறி, கடிதம் எடுத்து வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

தேர்தலுக்கு பின் ஆசிரியர் பணி தேர்வு


ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில், 148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.தேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும் தள்ளி போகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Tuesday, February 19, 2019

பள்ளி கல்வி 'டிவி' சேனல்


தமிழக பள்ளி கல்வியின் சார்பில், கல்வி தகவல்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, கல்வி சேனல் துவக்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு தளம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், கல்வி சேனலுக்கு படப்பிடிப்பு நடத்துவதை ஒருங்கிணைக்க, மாவட்ட வாரியாக, குறைந்த பட்சம், இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, தலா, இரண்டு ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Monday, February 18, 2019

Morning prayer 19-2-19

19-2-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

பழமொழி:

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்

பொன்மொழி:

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.

- புத்தர்

இரண்டொழுக்க பண்பாடு :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொது அறிவு :

1) காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
தேனிரும்பு

2) இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
உத்திரபிரதேசம்

நீதிக்கதை :

சொர்க்கத்தீவு

சொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று
பலருக்கும் ஆசை...
ஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும்கூட...

தீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன்,  சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது  புறப்பட்டது...

பயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..!

இனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்... அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத்தொடங்கியது...


நாட்கள் சென்றது... அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும்  அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது...
யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது.  களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக  கவ்விக்கொண்டது.
கடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது...

மறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது...

ஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்! கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..!
கேக்கும்திறன் குறைந்துவிட்ட  அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரித்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை.  அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று...
உயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று...
எதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள்.
அதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது... அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது...

படகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது.  கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது!
படகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.

அவர்கள், இவர்களை 
தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்..
இயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின்  அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது...

கடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும்  அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது...

இறுதியாக அவர்களையும்  உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல்  பேரிரைச்சலோடு எக்காலமிட்டது...

இன்றைய செய்தி துளிகள் :

1) உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர்

2) நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை

3) வரும் கல்வியாண்டு முதல், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் - அமைச்சர் செங்கோட்டையன்

4) ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை..... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

5) புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு