தமிழக பள்ளி கல்வியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரோவில், 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் எண்ணங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் விஞ்ஞானி என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' அறிமுகம் செய்கிறது.இது குறித்து, இஸ்ரோ தலைவர், சிவன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு முடித்த மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரோவில், இரண்டு மாத பயிற்சி திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து, இஸ்ரோவுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் பாட பிரிவுகளில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த திட்டத்தில் பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். மாநில அளவில் திறமையான மூன்று மாணவர்களுக்கு, இஸ்ரோவில், இரண்டு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment