இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 08, 2019

9-1-19 Morning prayer

9-1-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி:

God stays long but strikes at last

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்
உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

-ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) .இ.பி.எப் என்றால் என்ன?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

2)வி.பி.எப் என்றால் என்ன?

வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்

நீதிக்கதை :

சூடு பட்ட புரோகிதர்கள்

தெனாலி ராமன் கதைகள் – சூடு பட்ட புரோகிதர்கள்
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது” என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் “மாம்பழம் தான் வேண்டும்” என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்
வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் “மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்” என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். “என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்” என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் “ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்” என்று கேட்டார்.

“மன்னாதி மன்னா….. என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு” என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு “என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே” என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்” என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே…… அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே………………….”

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

இன்றைய செய்தி துளிகள் : 

1) ஜனவரி 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

2) சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

3) தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

4) தமிழகத்தில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

5) 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக் குழு  அறிவிப்பு!

மாசு இல்லாப் போகி

போகிப்பண்டிகைக்கு (14.01.2019) தமிழக அரசு ஈடு செய்யும் விடுமுறை அறிவிப்பு. அவ்விடுமுறையை 09.02.2019 சனிக்கிழமை ஈடு செய்ய வேண்டும்.


Monday, January 07, 2019

2,381 அங்கன்வாடி மையங்களில் உபரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு


தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில், தொடக்கப்பள்ளிகளில் உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நியமிக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை மக்களின் குழந்தைகளும் மழலையர் வகுப்புகளில் படிக்க வேண்டும். எனவே தனியார் பள்ளிகளைப் போன்று அரசு தொடக்கப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல் கட்டமாக 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அதில் 52,933 குழந்தைகள் சேர்க்கப்படுவர் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், இவர்களுக்கு பாடம் கற்பிக்க தமிழகம் முழுவதும் ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியைகள் விவரங்களைக் கேட்டு தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பாடம் போதிக்க ஒரு பெண் ஆசிரியையை ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். ஏற்கெனவே, அந்தந்த மாவட்டங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உபரியாக உள்ள ஆசிரியர்களில் ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியை வீதம் ஒதுக்கீடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்போது, அந்தந்த ஒன்றியங்களிலிருந்தும் ஆசிரியைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அருகிலுள்ள ஒன்றியங்களில் பணிமூப்பு (சீனியாரிட்டி) மாறாதவாறு ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து நியமிக்கப்படவுள்ள ஆசிரியைகள் அங்கன்வாடி மையங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார்கள் என்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு


அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில், எல்.கே.ஜி., வகுப்புகள், 21ம் தேதி துவங்கப்பட உள்ளன.பல மாநிலங்களில், அரசு பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், சில அரசு பள்ளிகளில் மட்டும், ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. அதனால், பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர்.

நடவடிக்கை

இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், ஆங்கில வழி கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. ஏற்கனவே, மாதிரி பள்ளிகளில், இந்த வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இதையடுத்து, தொடக்கப் பள்ளிகளிலும் துவங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளிகளின் அருகில் உள்ள, 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இவற்றில், 59 ஆயிரம் குழந்தைகள் படிக்கலாம்.2 மணி நேரம்தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், அங்கன்வாடி களுக்கு சென்று, தினமும், இரண்டு மணி நேரம் பாடம் எடுக்க உள்ளனர். இந்த திட்டம், 21ம் தேதி துவங்கப்படவுள்ளது.

செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக விளையாடுத்துறை

பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா ஏற்பு: கூடுதல் பொறுப்பாக செங்கோட்டையனுக்கு விளையாட்டுத் துறை

பாலகிருஷ்ணா ரெட்டி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக வகிப்பார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

1998-ஆம் ஆண்டு விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து, தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதால், அதுவரை தண்டனையை நிறுத்திவைக்குமாறும் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, தண்டனையை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

இதையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலர் மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அதன்பிறகு, பாலகிருஷ்ணா ரெட்டி முதல்வர் பழனிசாமி வாயிலாக அமைச்சர் பதவியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.

இந்த ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார். மேலும், முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று பாலகிருஷ்ணா ரெட்டி வகித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

8-1-19 morning prayer

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

பழமொழி:

God is love

அன்பே கடவுள்

பொன்மொழி:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்.

-பெர்னார்ட்ஷா.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?

ஆனைமுடி

2) தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?

14.01.1969

நீதிக்கதை :

பிறந்த நாள் பரிசு

தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

இன்றைய செய்தி துளிகள் :

1) பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2) கல்வி நிறுவனங்களுக்கு கட்டட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்

3) பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி ஜன., 12க்குள் பொருத்த உத்தரவு

4) 4-வது முறையாக வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு

5) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது.

Sunday, January 06, 2019

ஆசிரியருக்கு ஆங்கில பயிற்சி

7-1-19 morning prayer

7-1-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

பழமொழி:

Forgive and forget

மன்னிப்போம், மறப்போம்

பொன்மொழி:

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது.

-ஜேம்ஸ் ஆலன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?

தேசிய விழா

2)ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?

டாக்டர்.இராதாகிருஷ்ணன்

நீதிக்கதை :

நட்புக்குத் துரோகம் 

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, "மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

"நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

நரி பதறிப் போய், "மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.

நீதி: கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1) 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து!

2) கேட் நுழைவுத் தேர்வில் 11 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு : தமிழகத்தில் 2 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை

3) பிளஸ் 1ல் இடைநின்ற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத கட்டுப்பாடு

4) கல்வித் தொலைக்காட்சி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

5) இந்தியன் புரோ கபடி லீக் : சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

Friday, January 04, 2019

கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்பட்டடது! - பள்ளிகளில் இனி கட்டாய பாஸ் இல்லை

கடந்த 2009-ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளின் கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயில் செய்வதற்குத் தடை விதித்தது. தற்போது அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும் என்கிற விதியை நீக்கியுள்ளது. மேலும், மாநிலங்கள் விருப்பப்பட்டால் கட்டாய பாஸ் விதியைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் வியாழக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எட்டாம் வகுப்பு வரை எந்தவொரு மாணவரையும் பள்ளி நிர்வாகம் ஃபெயில் செய்ய இயலாது.

தற்போது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் தோல்வியுற்றால் உரிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படலாம். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் மாணவர்களை ஃபெயில் செய்யலாம் எனச் சட்டத்திருத்தம் தெரிவிக்கிறது.

புதிய சட்டதிருத்தம் பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், “கட்டாய பாஸ் என்பது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே கற்றுக்கொண்டுதானே வளர்ந்து வந்திருக்கிறது. திடீரென்று ஒரு குழந்தையால் எவ்வாறு கற்க முடியாமல் போகிறது. முறையாக கற்றுக்கொடுப்பதற்கான ஆசிரியர்கள் இருந்தார்களா, கற்றுக்கொள்வதற்கான சரிசமமான வாய்ப்புகள் இருந்துள்ளதா என்கிற எதையுமே ஆராயாமல் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். அடிப்படை சிக்கல்கள் பலவும் ஆராயப்படாமலே இருக்கையில் மாணவர்கள் ஃபெயில் ஆக்குவது என்பது சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பைக் கைவிடுவதைத்தான் அதிகரிக்கும். கற்றல் குறைபாடுகளைக் கண்டறியாமல் குழந்தைகளின் மீது பழிபோட்டு ஃபெயில் செய்வது என்பது கல்வி மறுப்புதான். கல்வியைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், குழந்தை எவ்வாறு கற்கிறது, குழந்தை கற்பதற்கான வாய்ப்புகள் சரியாக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா என்பதைக்கூட அறியாமல் எடுக்கப்பட்ட முடிவு இது. இதற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறது என்றால் சரியான புரிதல் இல்லாமல்தான் செய்திருக்கின்றனர்” என்றார்.

மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எம்.பி டி.ராஜா பேசுகையில், “கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகையாக இல்லாமல் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில் அனைவருக்கும் சரியான வாய்ப்பு, பொதுவான, தரமான கல்விமுறை என்பது பொதுவானதாக இல்லை. அடிப்படையான விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யாமல் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது சரியாக இருக்காது. இதைப்பற்றி கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் விவாதிக்க வேண்டும். இப்போது அவசரப்பட வேண்டாம் எனக் கூறினேன். குழந்தைகள் ஃபெயில் ஆகிறார்கள் எனப் பொதுவாகக் கூறிவிடலாம் அவர்கள் மட்டுமா அதற்கு காரணம். அவர்களுக்குச் சரியான வசதிகள், படிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாக்கித் தரப்படாமல் இருக்கின்றன. அதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதை அமல்படுத்துவதை மாநிலங்களின் கைகளில் விட்டுவிட்டதால் அவர்கள்தான் இதில் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறும் போது இனி 5% பங்குத் தொகை கட்டினால் போதும் என்பதற்கான உத்தரவு...

Thursday, January 03, 2019

பள்ளிக்கல்வி துறை 'டிவி' ஜன.21 முதல் ஒளிபரப்பு


தமிழக பள்ளி கல்வி துறையின் 'டிவி' சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், 'டிவி' பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தொலைக்காட்சிக்கான, 'ஸ்டுடியோ' அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்படிப்பு கருவிகள், ஆளில்லாவிமானம் ஆகிய வசதிகளுடன், படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.தினமும், 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், எட்டு மணி நேரம் ஒளிபரப்பாகும். தினமும், இரண்டு முறை மறு ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிகள், 'யூ டியூப்'பிலும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், சிறந்த திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவி தொகை விபரம், அரசு திட்டங்கள், கல்வி செய்திகள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும், 21ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுஉள்ளது.