இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, April 27, 2018

பள்ளி திறந்த பின் இடமாறுதல் கவுன்சிலிங்?


பள்ளிகள் திறந்த பின் ஜூன் மாதம் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

ஓராண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர், பணி மாறுதல் பெற, ஒவ்வொரு ஆண்டும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம், பட்டதாரி, முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பல பிரிவுகளில் கவுன்சிலிங் நடக்கும்.

தற்போது, 'ஆன்லைன்' மூலம் கவுன்சிலிங் நடப்பதால், முறைகேடு தவிர்க்கப்பட்டு, கல்வித்துறையின் பணி எளிதாகிறது. இருப்பினும், கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கு முன் தயாராக ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக, மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படும்.ஆனால், நடப்பாண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால், மே மாதம், 2வது வாரம் வரை ஆசிரியர்களுக்கு சரியாக இருக்கும்.

தேர்வு முடிவு வெளியீடு, அட்மிஷன், பள்ளி திறப்புக்கான பணி இருப்பதால், மீதமுள்ள நாட்களில் கவுன்சிலிங் நடத்தி முடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மே, 20ம் தேதிக்கு பின்னரும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஜூன் முதல் வாரமும் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை உயரதிகாரிகள் ஆலோசிப்பதால், ஆசிரியர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்

நாளை முதல் அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விடுமுறை


நாளை முதல் அனைத்து வங்கிகளுக்கும் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் ஏடிஎம்களில் பணத்தை முன்னதாகவே எடுத்து கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. 28-ம் தேதி இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதாலும், 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள்.

அதனை தொடர்ந்து 30-ம் தேதி புத்த பூர்ணிமாவும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினமும் வருவதால் அதனை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நான்கு நாட்களிலும் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இன்று வங்கி முழு நாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

அத்துடன், விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் ஏடிஎம்களில் மக்கள் முன்கூட்டியே பணத்தினை தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளுமாறும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பள்ளிகள் உள்கட்டமைப்பு ஆய்வு செய்ய உத்தரவு


மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்துள்ளன.

பொது தேர்வுகளின் விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. மே, மூன்றாவது வாரம் முதல், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஜூன், 1ல், புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்க உள்ளன. அதற்கு முன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்கட்டமைப்புகளை சோதனையிட, பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை, அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளதா என, சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்கள் பள்ளி வளாகத்திற்கு சென்று, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு

பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது.

'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்; அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மற்றும், https://tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Middle school HM to AEEO seniority DEE proceedings



Thursday, April 26, 2018

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி


தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் நேரடி மேற்பார்வையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் புத்தக தயாரிப்பு பணிகள், நடந்து வருகின்றன.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறையை, பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த உள்ளது. இதற்கான வழிமுறைகளை, புதிய பாடத்திட்டக்குழு தயாரித்துள்ளது. ஆன்லைன் தேர்வு முறைக்கு ஏற்ப, புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.முதல் கட்டமாக, ஐந்தாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு முறை அறிமுகமாக உள்ளது. 'ஸ்மார்ட்' வகுப்புகள் முழுமையாக துவங்கிய பின், தொடக்க பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

DEE PROCEEDINGS- 01.08.2017 நிலவரப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்தல்-ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்பு

Wednesday, April 25, 2018

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தாள்?


பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கான மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தற்போது உள்ள கல்வித்திட்டத்தின்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1, தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மொழிப்பாடங்களுக்கு 4 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதுதவிர முதன்மை பாடங்களுக்காக 4 தேர்வுகள் உள்ளன. அவற்றையும் சேர்த்து 10 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைப்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மொழிப்பாடங்களின் தாள் 1, தாள் 2 தேர்வுகள் இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 4 முக்கிய பாடங்களிண் எண்ணிக்கையை மூன்றாக குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர தில்லியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்.தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.

எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்


ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், ஒரு நபர் கமிட்டியை, பிப்., 19ல், தமிழக அரசு அமைத்தது.'

இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். எனவே, கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்கான அரசாணையில், 'ஊதிய முரண்பாடுகளுடன், சிறப்பு ஊதியம், படிகள் மற்றும் சலுகைகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான மனுக்களையும், ஒரு நபர் கமிட்டி பரிசீலிக்கும்' என, திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Monday, April 23, 2018

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம்.

அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும்.

உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும்.

இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும்.

இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிர

மே 3ல், 'ஆன் லைன்' இன்ஜி., கவுன்சிலிங் பதிவு


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 3ல் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார். இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' குறித்து, அமைச்சர் அன்பழகன் தலைமையில், சென்னையில், நேற்று அண்ணா பல்கலை வளாகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

சான்றிதழ் சரிபார்ப்பு : உயர் கல்வி துறை செயலர், சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன், அண்ணா பல்கலை பதிவாளர், கணேசன், மாணவர் சேர்க்கை கமிட்டியின் உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவகாசம் : கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில், 567 கல்லுாரிகள் உள்ளன; அவற்றில், முதலாம் ஆண்டில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறஉள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வர வேண்டாம்; கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரியை தேர்வு செய்யலாம்.

 ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கு கிறது; மே, 30 வரை பதிவு செய்யலாம் விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இதற்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும் அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.  இதற்காக, மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்ப பட்டியலில் சேர்க்கலாம்.

 ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்

ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  இந்த தொகையை, விண்ணப்ப பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவு வர தாமதமானாலும், மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு ஏற்ப, கவுன்சிலிங் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மதிப்பெண்ணை தவிர, மற்ற விபரங்களை, மாணவர்கள் முதலில் நிரப்பி கொள்ளலாம். தேர்வு முடிவு வந்த பின், மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்யலாம்.  மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில், அரசு தேர்வுத் துறையிடம், மதிப்பெண்களை பெற்று, அவற்றை விண்ணப்பங்களில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.நேரடி கவுன்சிலிங்! விளையாட்டு பிரிவினர், மாற்று திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும். தலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங்; மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும்.

இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.சந்தேகம் தீர்க்க தனி தளம்! கவுன்சிலிங்கின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையிலும், மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வழி தகவலும், இ - மெயில் வழி தகவலும் அனுப்பப்படும். கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை, www.annauniv.edu என்ற, அண்ணா பல்கலை இணையதளத்திலும், tnea.ac.in என்ற, கவுன்சிலிங் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 2235 9901 - 20 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.