இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 16, 2018

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு


7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும். இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.

முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தரமான தரத்தில் வருவதால் புதிய பாடப்புத்தகம் விலை ஏறுகிறது


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பாட திட்டங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இந்நிலையில் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி டிசம்பரில் முடிந்தது. இந்த புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்களை வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கும் பணி நடக்கிறது. தரமான தாள், பக்கத்துக்கு பக்கம் வண்ணம் மற்றும் படங்களுடன் பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.மேலும் புத்தக அட்டை விரைவில் கிழியாத வகையில் லேமினேஷன் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டுகளில் உள்ள புத்தகங்களை அச்சிட்ட செலவை விட இந்த ஆண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால் விலையையும் அதிகரிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் புதிய விலை ஏற்றத்தை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் செட் விலை 350 முதல் 700 வரை கிடைக்கிறது. புதிய பாடப்புத்தகங்கள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விலை ஏற்றப்படுவதால் ₹850 முதல் ₹900 வரை விலை கொடுக்க வேண்டி வரும். இது தவிர மற்ற வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 2019-2020ம் கல்வி ஆண்டில் கிடைக்கும்.

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி


கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது

பிளஸ் 1 தேர்வு நிறைவு: மே 30ல் 'ரிசல்ட்' வெளியீடு


பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன. தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 7ல் துவங்கியது. இந்தாண்டு முதன்முதலாக, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அத்துடன், இந்த ஆண்டு தேர்வில், பெரும்பாலான பாடங்களில், வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. குறிப்பாக, தமிழ் இரண்டாம் தாள், இயற்பியல் தேர்வுகள் தவிர, அனைத்து பாடங்களிலும், மாணவர்கள் முழுவதுமாக விடை எழுத தடுமாறினர். கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போன்ற, வினாக்கள் அமைந்துஇருந்தன.

இந்த பாடங்களில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, மிக சொற்பமாகவே இருக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்துஉள்ளனர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. முக்கிய பாடப் பிரிவு மாணவர்களுக்கு, ஏப்., 9ல், தேர்வுகள் முடிந்தன. மற்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நேற்று தேர்வுகள் முடிந்தன. தேர்வின் முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.

Sunday, April 15, 2018

தேர்வு முடிவு

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதன் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தனர். அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளாளபாளையம் பிரிவில் நின்றிருந்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும்படியும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர். காலை 7 மணி அளவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மண்டபத்திற்கு சென்று அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்தனர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அடுத்த மாதம்

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் கூறும்போது, “அடுத்த மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Friday, April 13, 2018

இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்


பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் ஒரே விதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்த பள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்க முடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு புதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது?


தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 2017க்கு முன் வரை, ஜூலை மற்றும் ஆகஸ்டில், இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது.

2017 முதல், கோடை விடுமுறையின் போதே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளதால், மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியும் பாதிக்கப்படாமல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த முறை, அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, கவுன்சிலிங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம்


கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை, துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, அனைத்து கல்வியும் பயிலும் வகையில், 463 கோடி ரூபாய் செலவில், இன்டர்நெட் வசதி செய்யப்படுகிறது.

வரும்,21 முதல் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்த பள்ளியாக இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.மே, 2ல் பள்ளிகளில் சேர்க்கை துவங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் மே, 1க்குள் தயாராகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்

Thursday, April 12, 2018

பொறியியல் படிப்பில் சேர மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு


அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளாக இருந்தால் அந்தகல்லூரியில் சேர இருக்கும் இடங்களில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடவேண்டும். இந்த இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படும். மீதம் உள்ள 35 சதவீத இடங்களுக்கு கல்லூரிகளே மாணவர்களை சேர்த்துக்கொள்ளாலாம். இந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

சிறுபான்மை கல்லூரிகளாக இருந்தால் 50 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கொடுக்கவேண்டும். மீதம் உள்ள 50 சதவீத இடங்களில் மாணவர்களை கல்லூரிகளே சேர்த்துக்கொள்ளலாம். இவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

கடந்த பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை அண்ணாபல் கலைக்கழகத்தில் நடத்தியது. மாணவர்கள் வெகு தூரம் வரவேண்டி உள்ளது என்று கருதி இந்த ஆண்டு (2018-2019) ஆன்லைன் மூலம் கலந்தாய்வை அண்ணா பல் கலைக்கழகம் நடத்த உள்ளது.

ஆன்லைன் மூலம் இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.ணீஸீஸீஸீ௵ஸீவீஸ்.மீபீ௵ ) விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம். ஆன்லைனில் எங்கிருந்தாலும் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் போது ‘யூசர் ஐ.டி.’ மற்றும் ‘பாஸ்வேர்டு’ கேட்கும்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் 42 மையங்களை அமைத்துள்ளது. அந்த மையங்களில் ஆன்லைன் இலவசம். மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் இல்லாமல் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறை தரும் மதிப்பெண் சி.டி.யைக்கொண்டு மாணவ-மாணவிகளின் விண்ணப்பத்தில் தாங்களே பதிந்து கொள்வோம்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மட்டும் மதிப்பெண்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

சான்றிதழ் சரிபார்த்தல்

சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு அன்று நடைபெற்றது.

இந்த வருடம் முதல் 42 மையங்களிலும் கலந்தாய்வுக்கு முன்பாகவே சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். அப்போது கலந்தாய்வு குறித்த வீடியோ 3 முறை காண்பிக்கப்படும்.

பின்னர் ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வின் போது முதலில் ரேங்க் பட்டியலில் உள்ளபடிதான் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் அழைக்கப்படுவார்கள்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்தை பல கலந்தாய்வின்போது பதிவு செய்யலாம். அவர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகு அண்ணாபல்கலைக்கழகம் அவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கும். ஒதுக்கிய கல்லூரி பிடித்திருக்கிறது என்றால் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விருப்பம் தெரிவிக்கவேண்டும். இல்லை என்றால் 2-வது சுற்றுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள்

விளையாட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும், தொழில் கல்வி மாணவர்களுக்கும் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும். அவர்களுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு கிடையாது.

பொறியியல் கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

மே முதல் வாரம்

அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றார்.

M.phil permission letter


https://drive.google.com/file/d/12WP8VQzTl01mrcIrlTW5tApcfr_2ouXj/view?usp=drivesdk

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு! அரசாணை வெளியீடு


Wednesday, April 11, 2018

தனியார் பள்ளியில் இலவச ஒதுக்கீடு சேர்க்கை வரும் 20 முதல் 'ஆன்லைன்' விண்ணப்பம்


கட்டாய கல்வி உரிமை சட்ட ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை சேர்க்க, வரும், 20 முதல் மே, 18 வரை விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சுயநிலை பள்ளிகளின் நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீதம் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

இச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தமிழக அரசு கூடுதல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு), 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர, ஏப்., 20 முதல் மே, 18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏதுவாக, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே அதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவான பின், பெற்றொரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி க்கப்படும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவிதொடக்க கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில், எவ்வித கட்டணமும் இல்லாமல், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.மாவட்டத்தில் உள்ள, 'இ--சேவை' மையங்களிலும் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை காட்டிலும், அதிக விண்ணப்பம் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு நடக்கும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், ஆதரவற்றவர், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, குலுக்கல் நடக்கும் முன்பாகவே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

அரசு வழிகாட்டுதலின்படி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : தேர்வுத்துறை திடீர் கட்டுப்பாடு


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் விடைகளுக்கு, தேர்வுத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், விடை சரியாக இருந்தாலும், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கூறியதாவது:

விடைத்தாள் திருத்துவதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கு, புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ஒரு மதிப்பெண் வினாக்களில், 'அப்ஜெக்டிவ்' என்ற, கொள்குறி வகையில், நான்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும். அந்த நான்கு குறிப்புகளில், சரியானதை மாணவர்கள் எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிரில், அதற்கான சரியான விடையை, மாணவர்கள் எழுதுவர். சிலர், சரியான விடை எது என்பதை, 'ஏ அல்லது பி' என, 'ஆப்ஷனை' மட்டும் குறிப்பிடுவர். சிலர், ஆப்ஷன் எழுதாமல், விடையை மட்டும் குறிப்பிடுவர்.ஆனால், இந்த ஆண்டில், ஆப்ஷன் குறியீட்டையும், விடையையும் சேர்த்து எழுதாவிட்டால், மதிப்பெண் வழங்க வேண்டாம் என, தேர்வுத் துறை கூறியுள்ளது.

ஆனால், பெரும்பாலான மாணவர்கள், ஏதாவது ஒன்றை தான் எழுதி உள்ளனர். அவர்களுக்கு மதிப்பெண் கிடைக்காது. இதனால், 90 சதவீத மாணவர்களுக்கு, 20 - 30 மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். இது குறித்து, அமைச்சர், செயலர், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, ஒரு மதிப்பெண் விடைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,

'ஒரு மதிப்பெண் வினாவுக்கு, ஆப்ஷன் குறியீடு மற்றும் சரியான விடை என, இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும் என, வினாத்தாளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 'வினாத்தாளை படிக்க, 10 நிமிடம், கூடுதல் நேர சலுகை வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, விதிகளை, மாணவர்கள் பின்பற்றாவிட்டால், மதிப்பெண் கிடையாது. இதில், எந்த மாற்றமும் இல்லை' என்றனர்.

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.


Monday, April 09, 2018

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை.பயிற்சி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்


தமிழகத்தில் 3 ஆயிரத்து 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 900 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த (மார்ச்) மாதம் 16-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது.

இந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த (மார்ச்) மாதம் 7-ந்தேதி முதல் தேர்வு தொடங்கியது. தேர்வு வருகிற 16-ந்தேதி முடிவடைகிறது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20-ந்தேதி பள்ளிக்கூட இறுதி வேலை நாட்களாகும். இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 32 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 19-ந்தேதிதான் இந்த கல்வி ஆண்டில் இறுதி வேலைநாள். 20-ந்தேதி முதல் இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதம் இறுதி நாள் வரை தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்படும். இந்த வருடம் தான் முதல் முதலாக ஏப்ரல் 19-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

வருகிற கல்வி (2018-2019) ஆண்டில் 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த கோடை விடுமுறை நாட்களிலா, அல்லது கோடை விடுமுறை முடிந்தா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.