இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 21, 2017

புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?


பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று முதல் பிளஸ் ௨ வரையிலான, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழு விபரமும், www.tnscert.org என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, 28க்குள் கருத்து தெரிவிக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வரைவு அறிக்கையை, பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதே நேரம், பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க, கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:

தாய் மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலம் சிறப்பாக கற்றுத்தரப்படும் என்பது நல்ல அம்சம். பாலின சமத்துவம், மதிப்பீட்டு முறை மாற்றம், வெளிநாடு வாழ் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் சேர்த்தல் போன்றவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பள்ளி மதிப்பீட்டு முறைகளில், மாற்று வழி வருவது பாராட்டத்தக்கது; இது, நல்ல துவக்கம். இதன் பயனை முழுமையாக பெற, கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை, ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, புத்தகம் எழுதும் பணிகள் துவங்கி உள்ளன.

இப்பணியில், மாநிலம் முழுவதும், பல்வேறு பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட, 350 ஆசிரியர்களும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். ஜனவரிக்குள் புத்தகங்களை இறுதி செய்தால் மட்டுமே, ஏப்ரலில் அச்சடித்து, ஜூன், 1ல், மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, இந்த பணியில், இன்னும் அதிக அளவு தனியார், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியிர்கள், கற்பித்தல் சாராத பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டால், பணிகளை விரைந்து முடித்து, இறுதி நேர தவறுகளை சரிசெய்ய முடியும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்


மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடவாரியாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும், கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில் சேர்க்கப்பட்டு, தினமும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.

'பாடத்தின் அனைத்து பகுதிகளையும், மாணவர்கள் படித்தால் தான், இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற முடியும். 'எனவே, இந்த தேர்வை அதிக அளவில் எழுதும் போது, 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளில், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகளுக்கு, மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடியும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு


பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத் திட்டங்கள் அமலில் உள்ளன. மாணவ - மாணவியர் நீண்ட நேரம், 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க, உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

தினமும் மாலை நேரங்களில், யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டமான, எஸ்.எஸ்.ஏ.,வில், மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும், ஒன்றரை மணி நேரம் கராத்தே வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, இலவச கராத்தே வகுப்புகள் துவங்கிஉள்ளன. மாவட்டங்களில், வாரத்திற்கு இரண்டு நாட்கள், மாலையில் கராத்தே பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'சில்மிஷத்தில் ஈடுபட முயற்சிக்கும் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து, தற்காத்து கொள்ள, மாணவியருக்கு கராத்தே பயிற்சி பலன் அளிக்கும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

SSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு!!!

மிலாடிநபி விடுமுறை

டிச. 2ம் தேதி மிலாதுநபி விடுமுறையாக அறிவிப்பு - தமிழக அரசு.

* ஏற்கெனவே டிச. 1ம் தேதி மிலாதுநபி விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று அரசு உத்தரவு..

TEAM VISIT கிருஷ்ணகிரி அலுவலர் செயல்முறைகள்


Monday, November 20, 2017

புத்தகங்கள் கொடையாக வழங்கல் சார்பு

இன்றைய தி இந்து வலைவிச்சில்

குரூப் 4 பணியில் வெளிமாநிலத்தவருக்கு முன்னுரிமையா?: டிஎன்பிஎஸ்சி விளக்கம்


டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: தேர்வாணையம் நடத்தும் குரூப் 4ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்த விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை.

இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் குரூப் 4ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான கடந்த 14ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 56 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளனர். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஒன்று முதல் பிளஸ் 2 வரை புதிய வரைவு பாடத் திட்டம்: முதல்வர் வெளியிட்டார்; கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்க அவகாசம்


ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய வரைவுப் பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் வரும் நவ.29-ஆம் தேதி வரை கருத்துத் தெரிவிக்கலாம்.

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க கடந்த மே 22-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதையடுத்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. "தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017' உருவாக்கம் தொடர்பாக கடந்த ஜூலை 20 முதல் 22-ஆம் தேதி வரை 3 நாள்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துச் சொல்வது எப்படி? தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் படித்துப் பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை www.tnscert.org என்ற இணையதளம் வழி பதிவேற்றம் செய்யலாம். மேலும் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும். இதர மொழிப் பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இன்னும் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், செயலாளர் த. உதயச்சந்திரன், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் எம். ஆனந்த கிருஷ்ணன் மற்றும் உயர்நிலைக் குழு மற்றும் கலைத்திட்ட குழு உறுப்பினர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க. அறிவொளி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ரெ. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயலிகள், சி.டி.க்கள் உதவியுடன்...

புதிய பாடத்திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழு வல்லுநர்கள் சிலர் கூறியது: புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஐசிடி எனப்படும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூத்திரங்கள், வரைபடங்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கணினி மென்பொருளின் உதவியுடன் அறிய முடியும். எழுத்துகள் உருவில் உள்ள பாடங்களைப் படிக்கும்போது அதன் பொருள் புரிந்து கண் முன் நிழலாடச் செய்யும் அளவுக்கு எளிமையான வரையறைகள், படங்கள், கார்ட்டூன்கள் இடம்பெற்றிருக்கும்.

இணையதளத்தில் புத்தகம் கிடைக்கும் வரும் கல்வியாண்டு முதல் இணையதளத்தில் ("பிடிஎஃப்' வடிவில்) பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலம் பெற்றோர் தங்களது செல்லிடப்பேசிகளில் கூட தங்களது குழந்தைகளின் பள்ளி புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தற்போது வெளியிடப்படும் வரைவு பாடத்திட்டம் தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், தமிழக மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'


பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது. தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்


பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ் 1 பொதுத் தேர்வு :

இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. கல்வித்துறை முடிவு : இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொது தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வையொட்டி, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி, அரையாண்டு தேர்வுக்கு பின் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு


மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது.

இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்து வகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி உட்பட, 10 பேர் கொண்ட குழு, 30ம் தேதிக்குள் ஆய்வு செய்து, இணையதளத்தில் தகவல்களைபதிவேற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை-2017

Click below

http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx

புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியீடு: நாள்: 20/11/2017



Sunday, November 19, 2017

போனில் திட்டினாலும் வன்கொடுமை சட்டம் பாயும்


போனில் பேசும் போது, வேறொரு இடத்தில் உள்ள ஒருவரை, ஜாதியின் பெயரைக் கூறி திட்டினாலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்' என, உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.

இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரைக் கூறி திட்டியதாக, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த சட்டத்தின்படி, அதிக பட்சம், ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப் படும். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அந்த நபர்மேல்முறையீடு செய்தார். 'பொது இடத்தில் ஒருவரை ஜாதியின் பெயரைக் கூறி திட்டினால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். தொலை பேசியில் பேசியது, இரு நபர்களுக்குஇடையேயான உரையாடல்; அது பொது இடமாகாது' என, அந்த நபர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்காத, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் அமர்வு, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. 'தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரில் திட்டினாலும், அது குற்றமாகும்' என, அமர்வு கூறியுள்ளது.

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி


வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.

புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை


பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய, உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான, கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது


பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. கல்லுாரிகள்,பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.

தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களை தேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, யு.ஜி.சி., மாற்ற உள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன