இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 13, 2017

காலாண்டு தேர்வு விடுமுறையில் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு


ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் நடக்கிறது. அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று உள்ளனர்.

குறிப்பாக, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு லட்சம் பேர் வரை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதனால், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பிளஸ் 2 மாணவர்கள், வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு எழுத வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். ஆனால், அரசு பள்ளிகளில், வழக்கமாக நடக்கும் வகுப்புகளும் போராட்டத்தால் முடங்கி உள்ளன.

தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எனவே, இதே நிலை தொடர்ந்தால், அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வில் மட்டும் அல்ல; பிளஸ் 2 தேர்விலும் பின்தங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காலாண்டு தேர்வு விடுமுறையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.செப்., 11ல் துவங்கிய காலாண்டு தேர்வு, 22ல் முடிகிறது; 23 - அக்.,1 வரை, விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், அக்., 3ல் பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை, பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், தினமும் அரை நாள் சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tuesday, September 12, 2017

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு


3375 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதற்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல்,வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல், அறிவியல், உயிரிவேதியியல், நுண்உயிரியல், மனை அறிவியல், தெலுங்கு, உடற் பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு - 1) ஆகிய 17 பாடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. http://www.trb.tn.nic.in -ல் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்றும் பணி நியமனம் குறித்த அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு


அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன் படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது.

எனவே, தற்காலிக பணியில் உள்ள, 15 ஆயிரத்து, 500பகுதி நேர ஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை, விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர். இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு பட்டியல் வெளியீடு


அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான, முதற்கட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவிகளில், 3,325 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 2ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28 மற்றும் 29ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தேர்வானவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, trb.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு


நாடு முழுவதும் உள்ள, 1.1 கோடி மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏழாவது சம்பள கமிஷன் அறிமுகத்துக்கு பின், அகவிலைப் படி நிர்ணயம் செய்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. இதை அடிப்படையாக வைத்து, இந்தாண்டு மார்ச்சில், 2 சதவீதத்தில் இருந்து, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படியை, 1 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தாண்டு, ஜூலை, 1 முதல் கணக்கிட்டு, இது வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள, 49.26 லட்சம் அரசு ஊழியர், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர் பயனடைவர்.

Monday, September 11, 2017

விபரம் கோருதல்

ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் கல்வி உதவித் தொகைக்கான நிதி ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை


ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தென் மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறை அதிகாரிகளும், செயலர்களும் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் பங்கேற்றார். இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதா கிருஷ்ண ராவ், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்


மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர். இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில் டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால் வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்' (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது.

இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில் சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு, 'கெடு'


வேலை நிறுத்தம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, தமிழக அரசு கெடு விதித்துள்ளது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், செப்., ௭ முதல், காலவரையற்ற போராட்டம் துவங்கியுள்ளது.

'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், போராட்டத்தில் குதித்து உள்ளனர். தேர்வு பாதிப்பு அதனால், பள்ளி, கல்லுாரிகளில் வகுப்புகளும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை தடுப்பது குறித்து, தமிழக தலைமை செயலர், கிரிஜாவைத்தியநாதன் தலைமையில், உயர் அதிகாரிகள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். 'எஸ்மா' எனப்படும், அத்தியாவசிய பணிகள் சட்டத்தின், ஒரு பகுதியை மட்டும் அமலுக்கு கொண்டு வரலாமா; அதற்கு முன் விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கலாமா என, விவாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, முதல் கட்ட எச்சரிக்கை விடுக்க முடிவானது.

இதன்படி, பள்ளிக் கல்வி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, சங்க நிர்வாகிகளிடம் தனித்தனியாக பேச்சுநடத்தப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள, 95 சங்கங்களின் மாநில தலைவர்கள், பொதுச்செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சங்கத்திற்கும், அரசு தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் பணிக்கு திரும்பாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.' நோட்டீஸ் போராட்டம் குறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும். ''எஸ்மா போன்ற சட்டங்களை பார்த்து, நாங்கள் பயப்படப் போவதில்லை. ஜனநாயக ரீதியில் முறையாக, 'நோட்டீஸ்' கொடுத்து, போராட்டத்தை நடத்துகிறோம்,'' என்றார்.

Sunday, September 10, 2017

நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்


போஸ்ட் பேசிக் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. தமிழக அரசின் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, ‘நீட்’ அடிப்படையில் நிறைவு பெற்று, முதலாமாண்டு வகுப்புகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்கிடையே சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் நிறைவு பெற்றது.

பிஎஸ்சி நர்சிங் விண்ணப்ப விநியோகமும் முடிந்த நிலையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், லேட்டரல் என்ட்ரி மற்றும் டிப்ளமோ இன் பார்மசி ஆகிய படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பெற முடியும். மருத்துவக் கல்வித்துறை இணையதளங்களான www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு எந்த விடுமுறையும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை ஏற்பட்டதால் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள பல சங்கங்கள் போராட்டத்தை தள்ளிவைத்தது. இதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ அமைப்பில் விரிசல் ஏற்பட்டது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அவர்கள் தலைமையில் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் கூறியதாவது:- நீதிமன்ற உத்தரவை மீறியும், அரசின் உத்தரவை மீறியும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடத்தி வருகிறார்கள். கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கம் பெற்ற உடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் யாருக்கும் விடுமுறை கொடுக்கக்கூடாது என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கத்தின்படி அவர்களுக்கு லேசான தண்டனை வழங்கப்படும் அல்லது பெரிய தண்டனையாக தற்காலிக பணி நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட வாய்ப்பு உண்டு.

Saturday, September 09, 2017

தடையை மீறி போராட்டம் ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் கட்


தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 2 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை வெளியிட்டார். ஆனாலும், கோர்ட் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து 7, 8ம் தேதிகளில் வேலைக்கு வராத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் யார், யார் என்று அலுவலகம் வாரியாக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அன்றைய தினங்களில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து அதற்கான அறிக்கையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்கும் ஆசிரியர் மீது அரசு பணியாளர் நன்னடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்டோ ஜியோ செய்தியறிக்கை


மீண்டும் ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்

*ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம்*

📌11.9. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

📌12.9 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்

📌13.9 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்

____ஜாக்டோ_ ஜியோ__ உயர் மட்டகுழு

பணியாளர் விதி



Friday, September 08, 2017

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: செப்.11 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல் செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை செப்.8) வெளியிடப்பட்ட அறிவிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி முதல் கட்டமாக கடந்த மே 31-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது.

தேர்வு செய்யப்பட்ட சிலர் வராததால் காலியிடங்களுக்குச் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நேரடியாகச் சேர்க்கை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஜூலை 29 -இல் குழந்தைகளைத் தெரிவு செய்யும்பணி நடைபெற்றது. இதன் மூலம் 82,909 குழந்தைகள் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். காலியாக உள்ள 41, 832 இடங்கள்: சேர்க்கைக்குப் பின் காலியாக உள்ள 41,832 இடங்களில் இணைய வழியாக விண்ணப்பிக்க செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றப்பட்ட விவரம், பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 10,000-த்திற்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நெட்: விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி


கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான 'நெட்' தேர்வு நவம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கு சி.பி.எஸ்.இ. இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே ஆதார் வைத்திருப்பவர்கள் ஆன்-லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளளாம்.

JACTO-GEO TIRUPUR-8-9-17






Thursday, September 07, 2017

திருப்பூரில் 4000 பேர் கைது



ஜாக்டோ - ஜியோ போராட்டம் - திருப்பூரில் 4000 பேர் கைது-*விகடன்
தி.ஜெயப்பிரகாஷ்



புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதனடிப்படையில் திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தில் 8 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.